Sunday, October 19, 2014

கத்தி ட்ரெய்லர் - காமெடி கும்மி

1  கத்தி ட்ரெய்லர் தாறுமாறு.தூள் தரணி , திருப்பாச்சி பேரரசு படம் மாதிரி படம் பட்டாசைக்கிளப்பும் போலயே?


============


2 ஹீரோ  பேரு கதிரேசன்,எல்லாரும் அவரை கத்தி கத்தி -னு கூப்பிடுவாங்க.



ஏன் கத்தி  கூப்பிடனும்? காது டமாரமா?


==============




3 கத்தி  வில்லன் = விஜய்  ஒரு வில்லாதி வில்லன்


சத்யராஜ் = யோவ் , அப்போ நான்  யாரு ?


=============




4   இன்ஸ்பெக்டர் . இளைய தளபதியைக்காணோம்.
 வாட்?’


கத்தி ல டூயல் ரோல்னாங்க, ஒரு விஜய் தான் இருக்காரு ட்ரெய்லர்ல,இன்னொரு விஜய் எங்கே?




================


5   ட்ரெய்லர்ல ஹீரோ  ஸ்லிப் ஆகி  விழறாரு.ஹீரோயின்  முன்னால . இதுல ஏதாவது குறியீடு  இருக்குமோ? ஜெ  முன்  விஜய் ;-))






===============






6 இந்த  கிராமத்தையே  நம்ம  ஹீரோ  தான் காப்பாத்தறாரு.

 ஓஹோ, அப்போ நம்ம படத்தை  யார் காப்பாத்துவா?




=================




7  சார்.டிக்கெட்  200  ரூபா.

ஹீரோ பேரு  கதி”ரேஷன்”தானே? கம்மி  ரேட்டுக்குத்தர மாட்டீங்களா?




===============






8 தமிழ் நாட்டில் மட்டும்  லைக்கா  நிறுவன  லோகோ  இல்லாமல்  போஸ்டர் ஒட்டுனா  கத்தி  சிக்கல்  தீர்ந்துடும். சும்மா இழுத்துட்டு  இருக்காங்க


==================


9   உங்க  திரைக்கதைல   நிச்சயம்  ஒரு சர்ப்பரைஸ் எலிமெண்ட்  இருக்கும்னு  மக்கள்  பேசிக்கறாங்களே?

அப்டி எதுவும்  இல்லாம எடுத்ததுதான் சர்ப்பரைஸ்


===================


10  இந்தியாவுலயே , ஏன்  இந்த  உலகத்துலயே   கதிரேசனை  சுருக்கி  கத்தி-ன்னு கூப்ட்டது  நம்மாளுங்க  தான்



=====================