Sunday, October 19, 2014

நீ நான் நிழல் -சினிமா விமர்சனம்


தினமலர் விமர்சனம்

சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து, மலேசியா பின்னணியில், மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ஒன்றின் தமிழ் தழுவல் தான் ‛‛நீ நான் நிழல்!

இந்தியாவில் இளம் இசைக்குழு ஒன்றில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித்துக்கு, மலேசியாவில் வசிக்கும் ஆஷா பிளாக்குடபன் பேஸ்புக்கில் காதல் மலருகிறது. வசதியான வீட்டு பையனானா ரோஹித், தன் அழகிய காதலியை தேடி ஒருக்கட்டத்தில் மலேசியா போகிறார். அங்கு இவர் போய் இறங்கியதும், காதலி மர்மமான முறையில் இறந்து போனது ரோஹித்திற்கு தெரியவருகிறது. ரோஹித், காதலியின் மரணத்திற்கு காரணம் கண்டுபிடிக்க முயலுகிறார். அதேநேரம் மலேசிய போலீஸ் சரத்தும், ஆஷா கொலைக்கான குற்றவாளிகளை தேடிப்பிடிக்க முயற்சிக்கிறார். ரோஹித்தின் காதலி ஆஷா, சாக யார் யாரெல்லாம் காரணம்.? அவர் சாக, பின்னணி காரணம் என்ன..? எனும் இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ‛‛நீ நான் நிழல் படத்தின் மீதிக்கதை!

புதுமுகம் ரோஹித், நாயகி ஆஷா பிளாக், மனோஜ் கே.ஜெயன், தேவன், பாத்திமா பாபு, எம்எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி உள்ளிட்டோருடன் துப்பறியும் மலேசிய போலீஸ் அதிகாரியாக சரத், ரொம்பவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

‛‛நேற்று இருந்தால் இன்று இல்லை..., ‛‛பேசி பேசி... உள்ளிட்ட பாடல்கள் தாளம் போடும் ர(ரா)கம்!

ஜான்ராபின்சனின் இயக்கத்தில், ‛‛நீ நான் நிழல்‛‛ - இன்றைய கணிப்பொறியுகத்தில் ‛‛நிகழும் நிஜம்!! 


படம் : நீ நான் நிழல்
நடிகர் : சரத்குமார் , ரோஹித்
நடிகை : , ஆஷா பிளாக்
இயக்குனர் : , ஜான்ராபின்சன்


thanx - dinamalar