Friday, October 17, 2014

ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயங்கியது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா| கோப்புப் படம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா| கோப்புப் படம்.
ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தயக்கம் காட்டியது தெரியவந்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
இந்நிலையில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தயக்கம் காட்டியது தெரியவந்துள்ளது.
நீதித்துறை நடைமுறைப்படி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் ஆஜராகும் நீதிபதி குறித்த அறிவிப்பு முந்தைய நாள் மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும். ஆனால், வியாழக்கிழமை மாலை 7.30 மணிவளவிலேயே இன்று விசாரணைக்கு வரும் ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் நீதிபதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தயக்கம் காட்டியதாகவும், எனவே நீதிபதியை உறுதி செய்வதில் உச்ச நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் அதிக மெனக்கிட வேண்டியிந்ததும் அம்பலமாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க தயக்கம் காட்டியதால், வேறு வழியின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி மதன் பி. லோகூர் உள்பட 3 பேர் அடங்கிய அமர்வு தாமாகவே முன்வந்து மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
நீதிபதிகள் தயக்கம் ஏன்?
ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தாக இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.
மேலும், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தமிழகத்தில் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாலும் நீதிபதிகள் தயக்கம் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி:
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா நான்காண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட‌து. இதனைத் தொடர்ந்து 4 பேரும் கடந்த 21 நாட்களாக பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. 

 thanx  - the hindu 

  • இந்தியாவில் பணம் இருந்தால் போதும். அம்மா அப்பாவை தவிர எல்லோரயும் வாங்கி விடலாம்.
    about 5 hours ago ·   (8) ·   (1) ·  reply (0) · 
       
    vijayakumar · IndianTamil  Up Voted
    rama  Down Voted
  • soundarapandian  
    இந்தியாவில் பணம் இருந்தால் போதும். அம்மா அப்பாவை தவிர எல்லோரயும் வாங்கி விடலாம்.
    about 5 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
    IndianTamil  Up Voted
  • sivakumar  
    Samy jayava ethukurathu ok elangai tamilar materla no samy
    about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • M.A..ரஹ்மத் துல்லா  
    பூணைக்கு. யார். மணிகட டுவது என் று தெரியும்.
    about 6 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Anbu victor  
    தண்டனை கொடுக்கும் போதே பயப்படலை. ஜாமீன்-கு பயந்துடான்களா? நீதிமன்றத்தின் மேல் மக்களுக்கு இப்போதுதான் நம்பிக்கை வந்துகொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நீங்க வதந்திய கிளப்பாதீங்க...
    Points
    660
    about 6 hours ago ·   (9) ·   (2) ·  reply (0) · 
    IndianTamil · rama · rama  Up Voted
    vijayakumar  Down Voted
  • அஹமது  
    நீதி பாதுகாக்கப்படும்
    about 6 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) · 
    IndianTamil · rama  Up Voted
  • பாலா  
    நீதி மன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைகின்றது.
    Points
    20000
    about 6 hours ago ·   (12) ·   (5) ·  reply (0) · 
    vijayakumar · IndianTamil  Up Voted
    rama · rama  Down Voted
  • raj  
    சும்மா எதாவது எழுதாதீர்கள் , குற்றவாளியை பார்த்து நீதிபதி பயபடுவார? குன்ஹா என் பயபடல ? கர்நாடக உயர்நீதிமன்றம் ஏன் பயபடல ?
    Points
    860
    about 7 hours ago ·   (15) ·   (7) ·  reply (0) · 
    Muhilvarnan  Up Voted
    sans ·  · IndianTamil  Down Voted
  • Dorairaj Anandaraj  
    ஜெயலலிதா கட்சியையும் ஆட்சியையையும் மாபியா நிறுவனம் போலத்தான் நடத்தி வந்தார்; நடத்துகிறார்.சூது, வாது, சூழ்ச்சி, கிரிமினல் செயல்கள், அனைத்திற்கும் நிர்வாகத்தையும்,போலீசையும் பயன்படுத்தி கொடுங்கோல் ஆட்சி நடத்திவந்தார்.இதில் நீதி துறையும் பெரும் அளவில் உதவியது.தன் வழிக்கு வராதவர்களை கொடுமை படுத்தியுள்ளார். அசிட், கஞ்ச , மிரட்டல், ஆள் தூக்குதல், என் கவுண்டர், போன்றவைகள் தராளமாக பயன் படுத்தபட்டன. தடாவையும் பொடாவையும் வைத்து எதிர்ப்பாளார்களை அழித்து விட்டார்; பணத்தால் நீதியை ஜனநாயகத்தையும் விலைக்கு வாங்கி விட்டார். இன்று இவருடன் உறவு கொண்டவர்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது என்பதை நீதி மன்றம் தாமதமாக உணர்ந்துள்ளது.
    Points
    4940
    about 7 hours ago ·   (40) ·   (13) ·  reply (0) · 
    sans · kumar · vijayakumar · pamaran ·  ·  · IndianTamil  Up Voted
    rama  Down Voted
  • Tamilan Indian  
    நீதி தேவதை ஏன் கண்ணை கட்டி கொண்டு இருக்கிறாள் ?, வழக்கு யார் மீது என்பதை பார்க்காமல் , சட்டப்படி தப்பு செய்துள்ளார்களா என்று மட்டும் கவனிக்க வேண்டும் . இந்தியாவின் நீதிதுறையில் ஆட்களை வைத்து தீர்ப்பு என்ற நிலை மாறனும் . ஒரு நீதிபதி குற்றம் செய்துள்ளதாக தீர்ப்பு சொல்லி இன்னொருத்தர் ஜாமினோ அல்லது விடுதலையோ செய்தால் என்ன நியாயம் , அப்ப யார் தப்பா தீர்ப்பு கொடுத்தவர் ?????????
    Points
    1015
    about 7 hours ago ·   (19) ·   (4) ·  reply (0) · 
    sans · kumar ·   Up Voted
  • Raja Rajan  
    நீதிபதிகள் அவர்களின் பணி மற்றும் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் அப்போதுதான் குற்றம் இழைப்பவர்களுக்கு நீதித்துறையின் மேல் பயமும்,மக்களுக்கு சட்டத்தின் மேல் நம்பிக்கையும் பிறக்கும்.அரசியல் முக்கியத்துவம் மற்றும் தீர்ப்புக்கு பின்னால் வரும் சட்டச் சிக்கல் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் கவலைப்பட தேவையில்லை.அவற்றில் ஏதாவது பிசகு நேருமேயானால் தடுப்பதற்கும்,நடவடிக்கை எடுப்பதற்கும் மத்திய அரசு உள்ளது.நீங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.
    Points
    1660
    about 7 hours ago ·   (10) ·   (2) ·  reply (0) · 
    sans · pamaran  Up Voted
  • shankar  
    ஒரு வழக்கை நாம் வழக்காக பார்க்காமல் இது போல் ஹை profile thaninab
    Points
    7530
    about 7 hours ago ·   (3) ·   (1) ·  reply (0) · 
    IndianTamil  Up Voted
  • Muhilvarnan  
    இதுமாதிரி ஊக செய்திகளை வெளியிட்டு 'இந்து' வின் தரம் குறையவேண்டாமே... கர்நாடக உயர்நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது என செய்தி வெளியிட்டு விட்டு பிறகு ஜெயலலிதாவின் வழக்கறிஞரின் தவறான தகவல்தான் குழப்பத்திற்கு காரணம் என செய்தி வெளியிடவேண்டிய நிலைமை வந்தது. செய்தி வெளியிடுமுன் அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்து பத்திரிக்கையின் நம்பிக்கை காக்கப்படும்.
    Points
    1815
    about 7 hours ago ·   (13) ·   (4) ·  reply (0) · 
    vijayakumar  Up Voted
    pamaran · IndianTamil  Down Voted
  • natarajan  
    இயேசு நாதரை தண்டிக்க 'பிலேது' தயங்கியது போல இது உள்ளது.
    about 7 hours ago ·   (7) ·   (14) ·  reply (1) · 
    pamaran ·   Down Voted
    • Michael Raj Asst. Manager Sales at Technical Trading Co LLC 
      உங்கள் உதாரணம் இதற்க்கு ஒவ்வாமல் உள்ளது !!
      about 6 hours ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
      vijayakumar · pamaran  Up Voted
  • Manivannan  
    சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய ஒருவருக்கு ஜாமீன் மீதான மனுவை விசர்ரிக்க neethipathigal தயக்கம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கின்றது
    about 8 hours ago ·   (9) ·   (1) ·  reply (0) · 
    pamaran · Muhilvarnan  Up Voted
  • s.manian  
    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் மனுவை விசாரிக்க தயக்கம் காட்டுவதில் இருந்து வழக்கின் கடினத்தன்மை விளங்குகிறது. சிறப்பு நீதி மன்ற நீதிபதிஐயும் கர்நாடகா உயர் நீதி மன்ற நீதிபதிகளையும் நாம் பாராட்டியே தீர வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உள்ளது .
    Points
    2955
    about 8 hours ago ·   (15) ·   (4) ·  reply (0) · 
    sans · vijayakumar · pamaran ·  · Muhilvarnan  Up Voted
  • ganesan  
    நீதிபதிகல் நீதிபதிகலஹ இருக்கவேண்டும் ஏன் தயங்கவேன்டும்
    about 8 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
     · Muhilvarnan  Up Voted
  • Tiruchendur Saravanai  
    மோடி அவர்களுக்கு பயபடுகிரார்களா
    about 8 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) · 
  • Johnson Ponraj  
    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க தயக்கம் காட்டியதால், வேறு வழியின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி மதன் பி. லோகூர் உள்பட 3 பேர் அடங்கிய அமர்வு தாமாகவே முன்வந்து மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
    Points
    3765
    about 8 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
    sans  Up Voted
  • pamaran  
    அதிமுக அடிமைகளின் பஸ் எரிப்பு கலவரத்திற்கு உச்ச நீதி மன்றமும் பயப்படுவது வெளிப்படையாக தெரிகிறது
    Points
    1225
    about 8 hours ago ·   (12) ·   (3) ·  reply (0) · 
    sans · kumar · vijayakumar · pamaran ·   Up Voted
  • sugumar சுகுமார்  
    'சட்டம் ஒரு இருட்டறை' என்பார்கள். அதனை உண்மை என்பதை நிரூபிகின்றார்கள் நமது நீதி அரசர்கள். இதன் மீதான விசாரணை சட்ட சிக்கலை உண்டாகும் என்றால், நமது சட்டங்கள், நீதி பரிபாலனங்கள்... எல்லாம் எதற்கு? சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற தத்துவம் என்னாவது? உச்ச நீதிமன்றத்திலேயே இந்த கதி என்றால், இதை எங்கு போய் சொல்வது? தலைகுனிவான செயல்.
    Points
    580
    about 8 hours ago ·   (6) ·   (1) ·  reply (0) · 
    kumar · vijayakumar  Up Voted
  • Shan Shan  
    ஒரு ஜாமீன் மனுவுக்கே இவ்வளவு தயக்கமா ?
    Points
    39400
    about 8 hours ago ·   (8) ·   (1) ·  reply (0) · 
    kumar  Up Voted
      Down Voted
  • venkat  
    Hope Madame Jayalalaitha will be freed in Appeal as this Judgement is said to be far away from Justice. (100 Cr Fine).
    about 8 hours ago ·   (2) ·   (7) ·  reply (0) · 
    pachaiyappan  Up Voted
      Down Voted
  • SriHari  
    Neethi thuraiyin அவலம்
    about 8 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
      Up Voted
  • THAYALAN  
    தயக்கம் காட்டுவதற்கு என்ன இருக்கிறது. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று உரக்க சொல்ல வேண்டிய கடமையில், நேரத்தில் உள்ளது உச்ச நீதிமன்றம்
    Points
    340
    about 8 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
    sans  Up Voted
  • SriHari  
    நீதி துரையின் அவலம்
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Ahamed  
    நீபதிகள் எந்தவழக்கா இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை செய்து நியாமாக தீர்ப்பு வழங்குவதில் தயக்கம் காட்டக்கூடாது அவர்களை நம்பித்தான் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.ஏற்கனவே இவர்கள் ஒரு சமூகத்திற்க்கு சொந்தமான வணக்க வழிபாட்டு இடத்தை வ்லுக்கட்டாயமாக வ்ழிபாடுகள் செய்யவிடாமல் அதையும் கூட்டு சதியாக இடித்துவிட்டு,கட்டிக்கொடுக்க வாக்குறுதியும் கொடுத்து பின்.அந்த இடத்தை சொந்தமான சமூகத்திடமிருந்து எடுத்து அச்ச்மூகத்திற்க்கு ஒருபங்கு இடித்தவர்களுக்கும்,இடையில் வந்தவர்களுக்கும் எழுத்து பூர்வமாக அனுபவ பாத்தியை எல்லாம் சட்டத்தின் அடிபடையை ஓர கட்டிவிடு பங்குவைத்த நீதி ஒரு பக்கம் இருக்கிறது.நீதி பதிகள் அரசியல் காரணம் ஏன் காட்ட வேண்டும்.என்பது பாமர் மக்களாகிய நமக்கு விழங்காத புதிராகவே உள்ளது.போறுத்திருந்து பார்ப்போம்
    Points
    120
    about 8 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
  • sivanesan Sivanesan  
    திமுகா மத்திய அமைச்சரைவையில் இல்லாதபொழுது ஏன் இந்த பயம்? நேர்மையான மத்திய அரசு இருக்கும்பொழுது, நீதிபதிகள் இருபக்க வாதத்தை கேட்டு வாதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினால் அதுவே நீதிமன்றத்தின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
    Points
    1725
    about 8 hours ago ·   (0) ·   (6) ·  reply (0) · 
    sans · kumar  Down Voted
  • P.Padmanabhan  
    "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்க தயக்கம் காட்டியதால், வேறு வழியின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, நீதிபதி மதன் பி. லோகூர் உள்பட மூன்று பேர் அடங்கிய அமர்வு தாமாகவே முன்வந்து மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது."-,தலைமை நீதியரசர் உள்ளிட்ட முதன்மை அமர்வு நீதியரசர்களை வணக்கத்துடன் பாராட்டுகிறேன். இந்த அமரவு தரும் உத்திரவுகள் இனி வெறும் வழக்குகளில் முன்னுதாரணமாக அமையும் . பார்ப்போம்.
    Points
    13950
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • SSethu  
    இந்த நிகழ்வு மக்களுக்கு நீதி மன்றத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு பின்னடைவு