Friday, October 10, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (10 10 2014 ) 12 படங்கள் முன்னோட்ட பார்வை

முயல் ,யாவும் வசப்படும் ,பண்டுவம் ,ஆலமரம்,குபீர் ,குறையொன்றுமில்லை,ஜமாய்,புளிப்புஇனிப்பு,பொலிடிகல் ரவுடி,DRACULA, ANNABELLE,BERMUDATENTACLES

 
1 யாவும் வசப்படும் ,
முழுக்க முழுக்க லண்டனில் உருவாகி இருக்கும், படம் யாவும் வசப்படும். விஜித், தில்மிகா, பாலா, வைபவி, ரமேஷ், பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரு, கண்ணன், சந்திரன் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் லண்டனில் வசிக்கும் தமிழர்கள். என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.சுந்தர் இசை அமைத்துள்ளார். ராசய்யா இயக்கி உள்ளார். இவர்களும் லண்டன் தமிழர்கள்.


படம் பற்றி இயக்குனர் ராசய்யா கூறியதாவது: பணத்துக்காகவும், பழிவாங்குவதற்காகவும் பெண்களை கடத்துவது ஜரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. இதனை மையமாக வைத்து ஒரு படம் தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம். அதன் செயல் வடிவம்தான் யாவும் வசப்படும், லண்டனில் வசிக்கும் தமிழர்களில் திறமையானவர்களை தேர்வு செய்து பயன்டுத்தியிருக்கிறோம். முழுப் படத்தையும் லண்டனிலேயே எடுத்திருக்கிறோம். வருகிற 10ந் தேதி படம் ரிலீசாகிறது. என்கிறார்



ஏ.ஏ.ஏ. புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் யாவும் வசப்படும். இதில் நாயகனாக கனடாவை சேர்ந்த விஜித் நாயகியாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தில்மிகா அறிமுகமகாகின்றனர். இன்னொரு நாயகனாக லண்டனை சேர்ந்த பாலா நாயகியாக வைபவி நடிக்கின்றனர். ரமேஷ்பாபி, டாக்டர் விவேக், ஆண்ட்ரூ கண்ணன் சந்திரன் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதியவன் ராசய்யா டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ஈழத் தமிழர் வாழ்க்கையை வைத்து மண் என்ற படத்தை டைரக்டு செய்தவர்.

படம் பற்றி டைரக்டர் புதியவன் ராசய்யா கூறும் போது, கிரைம், திரில்லர் படமாக உருவாகிறது. பணத்துக்காகவும் பழி வாங்கலுக்காகவும் பெண்களை கடத்துவது அண்மை காலமாக ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இவ்வாறான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து யாவும் வசப்படும் படம் தயாராகிறது. யூகிக்க முடியாத திடீர் திருப்பங்களும், பல ஆச்சரியங்களும் படத்தில் இருக்கும்.


லண்டன் மற்றும் புற நகர் பகுதிகளில் அறுபது நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதுவரை படம் பிடிக்கப்படாத பிரிட்டனின் அழகு தீவுகளாக ஐப் ஒயிட், வேல்ஸ் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

என்.டி. நந்தா ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே. சுந்தர் இசை யமைக்கிறார். பாடல்: தீபச்செல்வன், நடனம்: எஸ்.எல். பாலாஜி, எடிட்டிங்: சுரேஷ்அர்ஸ், ஸ்ரீபத்பாபி.  



2 முயல்
Muyal  (2012)  (Tamil)

Director: SPS Gugan

Production Co: P & V Media Production and SPS Media Works Music Director: JV Prakash
Cast: Murali, Saranya, Rajkumar, Prabhu, Shivani, Aishwarya, Meera Krishnan, Singamuthu, Muthukaalai, Ranjani


 
3 பண்டுவம் ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக பி.குணசேகரன் தயாரிக்கும் படத்திற்கு “பண்டுவம்” என்று பெயரிட்டுள்ளனர். 'பண்டுவம்' என்றால் சுத்தத் தமிழில் ரண சிகிச்சை என்று பெயர். பண்டைய காலத்தில் ரண சிகிச்சையை பண்டுவம் என்று அழைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் சித்தேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார்.இவர் மைதானம், சாட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.


இவர்களுடன் இந்த படத்தின் இயக்குனர் கீட்டன் முக்கிய வேடம் ஏற்றுருக்கிறார். இவர் பிரபல நடிகர் வாகைசந்திரசேகரின் அண்ணன் பாண்டியனின் மகன். பாண்டியன் சுமார் 900 படங்களுக்கு டிசைனராக பணியாற்றியவர். அத்துடன் நடிகராகவும், படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அவரது மகனான கீட்டன் இராம நாராயணனிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார். மற்றும் ஆண்டனி, கார்த்திக்.எம், பகதூர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முத்ரா ஒளிப்பதிவு செய்ய, நீரோ இசையமைக்கிறார்.


“பண்டுவம்”படம் பற்றி இயக்குனர் கூறியது... இந்த கதை மருத்துவம் சம்மந்தப்பட்ட பின்னணியை கொண்டு உருவாகி உள்ளது. கல்லுரி மாணவர்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்கையை பதிவு செய்திருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது என்று கூறினார்.


 


ஆலமரம் -
unnamed
Peacock Motion Picture presents “Aalamaram” a film on rustic tales of horror. S.N. Duraisingam the Director of Aalamaram who was earlier associated with the ace film maker K.Bhagyaraj mantles the responsibility of story, screenplay and direction. “Aalamaram is based on a real time incident that happened to me years ago. I utilized the lessons I learnt from my guru K.Bhagyaraj sir who was the master of screenplay to set up an intriguing screen play. I have chosen the best of talents to support me as the artists and technicians. I am thankful to senior editor Mr.Palanivel .KMK. Who has plenty of successful films in his glorious career for his role as an editor in ‘Aalamaram’. Debutant music director Ram Jeevan tracks back to the glorious days of the past by doing live recording for the entire film. We felt that the soul will remain in the music by doing so. Aalamaram is shot in and around the exotic Theni” says the Director brimming with confidenc

 
5 குபீர் 


ஆர்ச்சர் சினிமாஸ் தயாரிக்கும் படம் குபீர். இதில் திலீப், ரவி ஒயிட், தமிழ், பிரதாப், பிரபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திலீப் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் ஐந்து நண்பர்கள் வீட்டில் வார இறுதி நாளில் ஒரு இரவு பார்ட்டி வைக்கிறார்கள். அந்த இரவில் என்ன நடக்கிறது என்பதே கதை. படத்தில் கதாநாயகி இல்லை. ஆபாசம், வெட்டு, குத்து, ரத்தம் என வன்முறையும் கிடையாது. காமெடி கலந்த படமாக தயாராகிறது. ஆனாலும் தணிக்கை குழுவினர் படம் பார்த்து ‘ஏ’ சான்று அளித்துள்ளனர். நல்ல கருத்துள்ள வித்தியாசமான படத்தை எடுத்துள்ளதாக தணிக்கை குழுவினர் பாராட்டினர். முழு படமும் நள்ளிரவில் படமாக்கப்பட்டு உள்ளது.

ஒளிப்பதிவு: சந்தோஷ ஸ்ரீராம், இசை: விஷால், ஆதித்யா, பாடல்: கார்த்திகேயன், எடிட்டிங்: கிரண்கேயன்.  

6 Kuraiondrumillai-Movie-release-date-Posters

குறையொன்றுமில்லை

குறையொன்றுமில்லை சினிமா விமர்சனம்
சில படங்களை சாதாரணமாக பார்த்துவிட்டு வெளியே வந்துவிடுவோம். அதன் பிறகுதான் படத்தின் கேரக்டர்கள் ஒவ்வொன்றும் நம் மனதில் அவ்வப்போது வந்து ஊஞ்சலாடிவிட்டுப் போவார்கள். அப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்த படம் குறையொன்றுமில்லை.
படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா (கீதன்) தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற காரணத்திற்காகவே தூக்கி எறிகிறாள் அவனது காதலி. அந்த காதல் தோல்விக்குப் பிறகு, தான் வேலை பார்க்கும் கனெக்க்ஷன் சூப்பர் மார்க்கெட் நிறுவனத்தின் ஒரு ப்ராஜக்டுக்காக தனது கிராமத்துக்கு வருகிறான் கீதன். மருத்துவரான சந்தியாவும் (ஹரிதா) அந்த கிராமத்துக்கு மூன்று மாத பணிக்காக வருகிறார். ரயிலில் துவங்கும் இவர்களது நட்பு ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் காதலாக உருமாறுகிறது. காதலை இருவரும் சொல்லாமலே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கீதனின் செய்கைகள் ஏதும் பிடிக்காததால் ஹரிதா கீதனுக்கு பை சொல்கிறாள். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா? என்னும் காதல் கதைக்குள் கிராமம், விவசாய ‘டிராக்’டரை ஓட்டி சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் கதநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் கீதன். முதல் பட ஹீரோவே இப்படி எதார்த்த நடிப்பில் பின்னி பெடல் எடுத்தால் எப்படி? இவரே நடித்தாரோ… அல்லது இயக்குநர் இவரிடம் நடிப்பு வாங்கினாரோ இதற்கு காரணகர்த்தா யாராக இருந்தாலும் புதுமுகங்கள் அவரிடம் நடிப்புக்கு ட்யூசன் சேரலாம்.
கதாநாயகி சந்தியா கேரக்டரில் நடித்திருக்கும் ஹரிதா இந்த கேரக்டருக்கு ரெம்பவே பொருந்தியிருக்கிறார். பெரும்பலான காட்சிகளில் இறுக்கமான முகத்துடனேயே வருகிறார். படத்தில் இவர் சிரிக்கிற மாதிரியான காட்சிகளே இல்லை போல. இறக்கும் தருவாயில் இருக்கும் ஹரிதாவின் அம்மா, அவளைப்பார்த்து அழக் கூடாது என்று சொல்கிறார். அதனாலேயே இந்த கேரக்டரை ஒரு இறுக்கமான பெண் கேரக்டராக படைத்திருக்கிறார் இயக்குநர். ஹரிதாவிடம் சந்தியா கேரக்டர் பற்றி சொன்னதும் அந்த கேரக்டரை சாப்பிட்டுவிட்டார் போலிருக்கிறது. அந்த கதாபாத்திரமாகவே மாறிக்காட்டியிருக்கிறார். படத்திற்கு அதிக பலம் சேர்ப்பதும் ஹரிதாவின் கேரக்டரும் அவரது நடிப்பும்தான்.
கிராமத்து நண்பனாக வரும் கணேஷ் (ஹிட்லர்), இன்னொரு நண்பன், கிருஷ்ணாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் மேனேஜர் விக்ரம் (கிருஷ்ணா விஷ்வநாதன்), கிருஷ்ணாவின் பாட்டி என எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் நம்மை ஈர்த்துவிடுகிறார்கள். ஹேண்டிகேம் எப்படி இயக்குவது என்று தெரியாமலே உட்டாலக்கடி காட்டும் நண்பன் கடைசியில் அதற்கு மன்னிப்பு கேட்பது செம டச்.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் கதையின் பல காட்சிகள் நடப்பதாக இருப்பதால் முடிந்தவரை வட்டார வழக்கு மொழியை சிதைக்காமல் பயன்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்.
விவசாயியின் விளை பொருட்களுக்கு யாரோ ஒருவர் விலை நிர்ணயம் செய்வதா? விவசாயிகள் முதலாளிகளாகவும் மாற்றம் பெற உதவுவதாக வருகிறது ஹீரோவின் ப்ராஜக்ட். நல்ல ப்ராஜக்ட்தான். அதுக்காக இடைவேளைக்குப் பிறகு அதைச் சுற்றியே நிறையக் காட்சிகள் சுழல்வதைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். இசை ராமானு. கதாநாயகி கதநாயகனின் வீட்டில் பாடும் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளை இன்னும் உயிர்ப்பாய் இருக்க உதவியிருக்கிறது.
படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் ரவி. சின்ன வயதில் மூன்று கேரக்டர்களைக் காட்டி அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகு நடக்கிற கதையாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். முதலாளியின் பையன், வேலைக்காரியின் மகன், இன்னொரு பெண்மணியின் மகள் என ஒரு அச்சாரத்தைப் போட்டு அப்போதே அந்த கேரக்டர்கள் இப்படிப்பட்டவைதான் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார். காதலை ரசிகர்களுக்கு பிடித்த விதத்தில் சொன்னதற்காகவும் விவசாயம் தொடர்பாக சில நல்ல விஷயங்களை சொல்ல முயற்சித்ததற்காகவும் சற்றே கூடுதலாக இயக்குநரைப் பாராட்டலாம்.
வெறும் காதல் கதையாக இருந்திருந்தால், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற தமிழ் சினிமாவில் சாதனை படைத்த காதல் படங்களின் வரிசையில் சேர்த்திருக்கலாம். ஆனால், படத்தில் விவாசயத்தையும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டதில் தமிழ் சினிமாவின் படங்களுக்கு மத்தியில் கொஞ்சம் தனித்து தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது குறையொன்றுமில்லை.

http://tamildigitalcinema.com/?p=58183 





7  ஜமாய்.


கிளாசிக் சினி சர்க்யூட் என்ற படநிறுவனம் சார்பாக எம்.ஜெயக்குமார் தயாரிக்கும் படம் ஜமாய்.
இப்படத்தில் நவீன், உதய், வைஜெயந்தி, நிமிஷா, டி.பி.கஜேந்திரன்,ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நடிகர் ஆனந்த்பாபு ஒரே ஒரு பாடல் காட்சியில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த்பாபு கதாநாயகனாக நடித்து 250 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற “பாடும் வானம்பாடி” என்ற படத்தை இயக்கியவர் எம்.ஜெயக்குமார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சிறுவன் ஒருவனுக்கு நடனம் சொல்லி தரும் மாஸ்டர் வேடத்தில் கௌரவ வேடத்தில் நடித்து தரும்படி ஆனந்த்பாபுவிடம் கேட்டாராம் இயக்குனர்.

மறுப்பேதும் சொல்லாமல் ஆனந்த் பாபு நடித்து கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து “கண்ணுக்குள் கனவிருந்தால், நெஞ்சுக்குள் துணிவு” வரும் என்ற இந்த பாடல் காட்சி சமீபத்தில் அசோக் ராஜா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.




 8 புளிப்பு இனிப்பு  - பல்வேறு எதிர்ப்பு காரணமாக ‘மடிசர் மாமி’ படத்தின் தலைப்பை இப்போது ‘புளிப்பு இனிப்பு’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘மடிசார் மாமி’. இப்படம் சென்சார் முடிந்து வெளியாக இருந்த நிலையில், தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இப்படத்தின் தலைப்பு ‘புளிப்பு இனிப்பு’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான சுஷாந்த் கத்ரு கூறுகையில், “நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், எந்த ஒரு மனிதனின் மனதையும் பாதிப்பது நல்ல சினிமாவாகாது, என்கிற உரிய நோக்கத்தோடும் இப்படத்தின் தலைப்பை ‘புளிப்பு இனிப்பு’ என்று மாற்றி வைத்துள்ளோம். குடும்பங்கள் பார்க்ககூடிய நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம் இரண்டு மணிநேரம் காமெடி கலாட்டாவாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மடிசார் மாமி என்ற தலைப்பு வைத்ததற்காக தனது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
மிதுன், மான்சி இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தை சுஷாந்த் என்பவர் தயாரித்துள்ளார்.

 


 9  ‘பொலிடிக்கல் ரவுடி’ - தெலுங்கில் வஸ்தாது நாராஜு என்ற பெயரில் வெளியான படத்தை தமிழில் ‘பொலிடிக்கல் ரவுடி’. என்ற பெயரில் எஸ். சுந்தரலட்சுமியின் சிவம் அசோசியேட்ஸ் நிறுவனம் மொழி மாற்றம் செய்கிறது. இதில் விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார். டாப்சி நாயகியாக நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், சாயாஜி சிண்டே, பிரம்மானந்தம், ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும் போது, பெரிய ரவுடியாக இருக்கும் சாயாஷி சிண்டேயிடம் அடியாளாக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் விஷ்ணு, டாப்சி இருவரையும் ஒர் இடத்தில் பார்க்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜ் எடுக்கும் அதிரடி முடிவுதான் கதை.

உண்மையாக விஷ்ணுவுக்கும் டாப்சிக்கும் பழக்கம் இல்லாத நிலையில் பிரகாஷ்ராஜ் எடுத்த தவறுதலான முடிவின் தொடக்கம் தான் கதை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இம்மாதம் திரைக்கு வருகிறது என்றார். எஸ்.கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிசர்மா இசையமைத்துள்ளார். தணிக்கொடி, புன்னியா, தமிழமுதன், சிபிசந்தர் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். வசனம்: சிபிசந்தர், எடிட்டிங்: இளங்கோ.
 





10   DRAGULA
Dracula டிராகுலா
டிராகுல் என்றால் ரொமேனிய மொழியில் டிராகன் என்று பொருள்.
மனித ரத்தம் குடிக்கும் குணம் கொண்ட காட்டேரிகளுக்கு, டிராகுலா என்ற பெயர் வந்தது வலாக்கிய அரசாங்கத்தின் மன்னான மூன்றாம் விளாட்டி என்னும் சிற்றரசனால். நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. டிராகுலா என்பதற்கு சாத்தானின் மகன் என்ற அர்த்தத்தையும் கொடுத்துவிட்டன.
மனித ரத்தம் குடிக்கும் டிராகுலா பற்றிய படங்கள் பல முறை திரையில் உலா வந்ததுள்ளன. ஆனால் டிராகுலாவின் முந்தைய சரித்திரத்தைப் பற்றி விவரிக்கிறது, “டிராகுலா அன்டோல்ட் (Dracula Untold)” என்ற புதிய படம். கதை, 1492இல் நடக்கிறது. ட்ரான்சில்வேனியா வில் ஆட்சி புரிந்த அரசன், மூன்றாம் விளாட், டிராகுலாவாக மாறுவதாகக் காட்டப்பட்டுள்ளது.
ட்ரான்சில்வேனியாக்கு அருகே உள்ள ஒட்டோமான்அரசாங்கம் மூன்றாம் விளாடு க்கு பல கஷ்டங்களைக் கொடுக்கிறது. இதற்கிடையே, இரண்டாம் சுல்தான் மெஹமத், மூன்றாம் விளாடின் நாட்டிலிருந்து, 1000 சிறுவர்களை, தன் படையில் சிறுவர் அணியில் சேருவதற்காகக் கேட்கிறார்! இந்த அணியில் மூன்றாம் விளாடின் மகனும் கூட உண்டு! மூன்றாம் விளாட், டிராகுலாவாக மாறவேண்டிய கட்டம் வந்துவிட்டது!
கேரி ஷோர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். லூக் ஈவாண்ஸ், மூன்றாம் விளாடாக நடித்துள்ளார். அவரது மனைவியாக, ராணி மிரெனாவாக நடித்துள்ளவர், சாரா கோடன்.
அக்டோபர் 10 வெளியாகும் இந்தப் படம், தமிழிலும், “டிராகுலா: ஒரு மர்மம்” என இப்படத்தை ஹன்சா ஃபிக்சர்ஸால் வெளியிடப்படுகிறது.


 

11

Annabelle (2014)

A couple begin to experience terrifying supernatural occurrences involving a vintage doll shortly after their home is invaded by satanic cultists.



12  After Air Force One goes down during a storm over the Bermuda Triangle, the United States Navy is dispatched to find the escape pod holding the President. A giant monster beneath the ocean awakens and attacks the fleet.



thanx  - dinamalar, dinamani . maalaimalar , all cine web sites