Tuesday, October 07, 2014

ஜெயலலிதா ஜாமீன் வழக்குத் தீர்ப்பு: ஊடகச் செய்திகளில் குழப்பம் ஏன்?

கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம்.
கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம்.
சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதேவேளையில், தீர்ப்பு விவரம் முழுமையாக வெளிவருவதற்கு முன்பே ஊடகங்களில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என செய்திகள் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது.
நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வாதத்தின்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் முதலில் வாதிட்டார். பிற்பகலில் தொடர்ந்த வாதத்தின்போது, நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என்று நீதிபதியிடம் அவர் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்படலாம் என்று நீதிமன்ற வளாகத்தில் எதிர்பார்ப்பு நிலவியது. இதன்பின், நீதிபதி சந்திரசேகர் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
மிக நீண்ட அந்தத் தீர்ப்பின் முற்பகுதியில் இருந்த விவரங்கள், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக, நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்குத் தோன்றியிருக்கிறது.
அதன் எதிரொலியாக, முழு தீர்ப்பும் வாசிக்கப்படுவதற்கு முன்பே நீதிமன்ற வளாகத்தில் 'ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன்' என்ற தவறான தகவல் பரவியது. அங்கிருந்த நிருபர்கள் அவசர அவசரமாக தங்கள் அலுவலகங்களைத் தொடர்புகொண்டு அந்தத் தவறான தகவலைப் பகிர்ந்தனர்.
அதன் எதிரொலியாக, முழுமை அல்லாத அந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. பின்னர், 'ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்' அதிகாரப்பூர்வ செய்தி வெளியானதும் குழப்பம் முடிவுக்கு வந்தது. 



thanx - the hindu 



  • A.NELSONBABU  
    Sattam than kadamayai seithiruckirathu.
    about an hour ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
  • Harinathan Krishnanandam Independent at Consultant 
    அவசர புத்திக்கர ஊடகங்கள்
    Points
    180
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • [email protected]  
    ஊடகங்களுக்கு இது ஒரு சிறந்த பாடம். இனியாவது ஊடகங்கள் பொறுப்பை உனர்ந்து செயல் பட வேண்டும்.. இது போன்ற உணர்வு பூர்வமான செய்திகளை வெளியிடும் போது அவசரம் காட்டாமல் உறுதியான செய்திகளை மட்டும் வெளியிடுமாறு கேட்டு கொள்கின்றேன்.
    about an hour ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
    prathap  Up Voted
  • venkat  
    Bec of this tamilnadu and karnataka are going to become permanent enemies.. Already kanadigas hate for cauvery water issue.. Now this major confusion only create s rift between people. I dont understand y the media is creating such a tension in both states. Dont play with people sentiments.. I will bounce back on u one day
    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • soundar  
    உங்கள நம்பி நான் எல்லர்டயும் செல்லிடன்
    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
    prathap  Up Voted
  • yuvi  
    Enna koduma sir ethu Tamilthaiku eppadi oru sothanai
    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • prathap  
    நல்லா குழப்புனீர்கள் போங்கள்....
    Points
    390
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • S  
    4 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதால் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞரின் வாதம் தேவையில்லை என்றும் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டார். இதனால் பவானிசிங் நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை என்று வாதாடியதை ஏற்காமல் ஜாமீன் வழங்க மறுத்துள்ளார்!
    Points
    1820
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • victor  
    இந்த தீர்ப்பு ஏற்கப்பட்டது எனினும் ஊடகங்கள் ஏன் அவசரபடுகின்றென அவர்களுக்கு ஒரு சூடான செய்தி அவர்கள் பத்திரிகைகளுக்கு வரவேண்டும் அவர்கள் பெயர் வருவதற்காகவும் முழு தீர்ப்பையும் வாசிப்பதற்கு முன்னரே இவர்கள் ஜாமீன் கிடைத்தது என்று ஏன் சொல்லவேண்டும் இப்பொழுது என்ன ஆனது ஜாமீன் கிடைக்கவில்லை.
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ஸ்ரீபாலாஜி  
    ஆத்திரகாரர்களுக்கு புத்தி மட்டு என்பது இதுதான் ! எல்லாம் ஜூனியர் வக்கீல்கள் செய்த வேலை ...! இவர்களுக்கு ஏன் ஆஜராக வந்தோம் என்று ரம்ஜெத்தே யோசித்து இருப்பார் !
    Points
    3460
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • rajesh  
    தானும் குழம்பி மத்தவங்களையும் குழபதீக்பா
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • v.n.thiyagarajan mudaliyar  
    இன்றைய ஊடகங்கள் மக்களுக்கு அளிக்க விரும்புவது உடனடிச் செய்திகளைத்தாம். உண்மையை அல்ல. அவர்களுக்கு எப்போதும் ‘பரபரப்பு’ ஏற்பட வேண்டும், எதிலும் ‘பதட்டம்’ நிலவ வேண்டும்.
    Points
    275
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • ஜேவி  
    செய்தியை யார் முந்தித் தருவது என்பதில் உள்ள போட்டியில் இப்படிப்பட்ட தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது அவசியம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று!