Saturday, October 04, 2014

Haider - சினிமா விமர்சனம்

 

தினமலர் விமர்சனம்

ஷாகித் கபூர், தபு, சாரதா கபூர், கே.கே.மேனன், இர்பான் கான் ஆகியோரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் ஹைடர்.

கவிதை எழுதுவதில் வல்லவர் ஹைடர்(ஷாகித் கபூர்). தன் தந்தை ஹிலால்(நரேந்திர ஜா) கடத்தப்பட்ட செய்தி அறிந்து வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால் வீட்டுக்கு வந்து பார்த்தால் தன் தந்தை கடத்தப்பட்டது தெரியாமல் தன் அம்மா, தன் மாமா உடன் சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறார். தன் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டறிய களத்தில் இறங்கும் ஷாகித் கபூர், வழியில் சந்திக்கும் தடைகளை எல்லாம் கடந்து தன் தந்தையை கண்டுபிடித்தாரா.? தந்தையை கடத்தியவர்களை பழிவாங்கினாரா என்பது படத்தின் கதை. இத்துடன் சாரதா கபூரின் காதலையும் கலந்துகட்டி படமாக்கி இருக்கின்றனர்.

ஷாகித் கபூர், மிக அற்புதமாக நடித்துள்ளார். வஞ்சம் தீர்த்து பழிவாங்கும் கேரக்டரில் அவரது கோபம், நடிப்பு உணர்ச்சி எல்லாம் பிரமாதம்.

சாரதா கபூரின், அழகிய குழந்தை தனமான பேச்சும், நடிப்பும் ஓ.கே. கேரக்டரின் தன்மையை அறிந்து நடித்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என தோன்றுகிறது. தபு, கே.கே.மேனன் ஆகியோரின் நடிப்பும் மிகப்பிரமாதம்.

இயக்குநர் விஷால் பரத்வாஜின், கதை, வசனம், இயக்கம் என எல்லாமே அருமை. படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர் என்பதால் இசையமைப்பும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதேசமயம், காஷ்மீர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சிலர் தப்பாக காட்டுவதை இவரும் காட்ட தவறவில்லை. இருந்தாலும் சிறப்பான திரைக்கதை மற்றும் சிறப்பான இயக்கத்துடன், ஷாகித், தபு ஆகியோரின் சிறப்பான நடிப்பாலும் ஹைடர் படத்தை அருமையாக படமாக்கி இருக்கிறார் விஷால் பரத்வாஜ்.

ஹைடர் படம், நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத ஒரு படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிற வசியம் செய்கிற படமாகவும் இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

ஹைடர் - குடும்ப பழிவாங்கும் நாடகம்!

ரேட்டிங் - 3.5/5



thanx- dinamalar 

  1. This is an adaptation of William Shakespeare's 'Hamlet', Haider - a young man returns home to Kashmir on receiving news of his father's disappearance. Not only does he learn that security forces have detained his father for harboring militants, but that his mother is in a relationship with his very More

  2. Initial release: October 2, 2014 (USA)