Wednesday, September 10, 2014

சிகரம் தொடு - விக்ரம் பிரபு பேட்டி

வாரிசு என்பது விசிட்டிங் கார்ட், உழைப்புதான் ஐடி கார்ட்: விக்ரம் பிரபு பேட்டி! -

அன்னை இல்லத்திலிருந்து வந்திருக்கும் பெரிய இடத்து வாரிசு, விக்ரம் பிரபு, கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும் எந்த கிரீடத்தையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளாமல் எளிமையாக இருக்கிறார்.

 வாசலில் வரிசையில் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள், படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும் தயாரிப்பு நிர்வாகி, சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் அம்மா... இத்தனைக்கும் நடுவில் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுகிறார் விக்ரம் பிரபு.

* யாரை பார்த்து இம்ப்ரஸாகி நடிக்க வந்தீர்கள் அப்பாவா? தாத்தாவா?

நடிக்கிற ஆசையே முதலில் இல்லை. அப்படி நான் ஆசைப்பட்டிருந்தால் பத்து வருஷத்துக்கு முன்பே நடிக்க வந்திருக்கணும். அண்ணன் துஷ்யந்தனோடு வந்திருக்க வேண்டும். ஆர்வம் முதல்ல படிப்புல இருந்திச்சு. படிச்சு முடிச்ச பிறகு என்ன செய்யலாமுன்னு யோசிச்சப்போ சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு படம் இயக்கலாமுன்னு தோணிச்சு. அப்பாகிட்ட சொன்னேன் "பிடிச்சதை செய். ஆனா முழுசா கத்துகிட்டு செய்" என்றார். அமெரிக்கா போய் டைரக்ஷன் கோர்ஸ் படிச்சேன். திரும்பி வந்து விஷ்ணுவர்த்தன் சார்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன். 

அப்புறம் திடீர்னு நடிக்கணும்னு ஆசை வந்தது. அப்பாகிட்ட சொன்னேன். "நான் யார்கிட்டேயும் சிபாரிசு பண்ண மாட்டேன், நீயே சான்ஸ் தேடிக்கோன்னு சொல்லிட்டார். நானே ஒரு போட்டோ ஷூட் பண்ணி எங்க பி.ஆர்.ஓ டைமண்ட் பாபு சார்கிட்ட கொடுத்தேன். அப்பதான் பிரபு சாலமான் சார் கும்கி படத்துக்கு புதுசா ஒரு ஆள் தேடிக்கிட்டிருந்திருக்கார். அவர்கிட்ட போட்டோ போய் சேர்ந்ததும் வீட்ல என்னை வந்து பார்த்தார். "கேரக்டருக்கு பொருத்தமா இருக்கீங்க. ஆனா இது யானையோட கதை ரிஸ்க் இருக்கு"ன்னு சொன்னார். "நடிக்கணும்னு வந்துட்டா புலிகூட வேணாலும் நடிக்க ரெடியா இருக்கணு"ம்னு சொன்னார் அப்பா. இப்படித்தான் கும்கி வாய்ப்பு வந்தது.

* வாரிசுங்ற அடையாளம்தான் சினிமாவுக்கு கொண்டு வந்ததுன்னு சொல்லலாமா?

கண்டிப்பாக, முதல் பட வாய்ப்பு கிடைச்சதுக்கு சிவாஜியோட பேரன், பிரபு மகன் என்கிற அடையாளம் ஒரு விசிட்டிங் கார்டாக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த படத்துக்கு நான் பட்ட கஷ்டங்கள் உழைப்புதான் அடுத்த படங்களை வாங்கிக் கொடுத்துச்சு. இப்ப வரைக்கும் கொண்டு போய்கிட்டிருக்கு. விக்ரம் பிரபு கேரக்டருக்காக கடுமையாக உழைப்பார்னு சொல்றாங்க பாருங்க அதுதான் என்னோட ஐடி கார்ட். அதை எப்போதும் கையில வச்சிக்குவேன்.

* கும்கி படத்துல யானை பாகனா நடிச்சிட்டு அடுத்த படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாயிட்டீங்களே-?

இப்பவும் நான் என்னை ஆக்ஷன் ஹீரோன்னு நினைத்துக் கொள்வதில்லை. அந்த கதை என்ன கேட்டுச்சோ அதைச் செய்தேன். அரிமா நம்பியும் அப்படித்தான். ஒரு சராசரி இளைஞனோட கோபத்தைத்தான் ரெண்டு படத்துலேயும் காட்டினேன். சினிமாவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தியிருப்பேன் அவ்ளோதான்.

* உங்க நடிப்பு பற்றி அப்பா என்ன சொல்றார்-?

நடிப்பை பாராட்டுவார். கும்கி பட ஷூட்டிங்கப்போ அவரோ அம்மாவோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரலை. நான் படுற கஷ்டத்தை கேள்விப்பட்டு அதை நேர்ல பார்க் அவுங்க விரும்பல படத்தை பார்த்துட்டு அப்பாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என்னோட டான்ஸ்ல தான் கொஞ்சம் அவுங்களுக்கு குறை இருந்தது. இப்போ சிகரம் தொடுவில் என்னோட டான்ஸ் பாத்துட்டு அதுலேயும் திருப்தி அடைஞ்சிட்டாங்க.

* வெள்ளைக்கார துரையில் காமெடி பண்றீங்க போல..?

நடிப்பு காட்டியாச்சு, ஆக்ஷன் பண்ணியாச்சு அடுத்து காமெடிதானே. சிகரம்தொடுவில் ஒரு போர்ஷன்ல காமெடி பண்ணியிருக்கேன். வெள்ளைக்கார துரையில் முழுநீள காமெடி. கதையில் காமெடி நிறைய இருந்தாலதான் அந்த படத்தையே ஒத்துக்கிட்டேன். ஒரு வித்தியாசமான விக்ரமை அந்தப் படத்துல பார்க்கலாம். காமெடியிலேயும் ஜெயிச்சாத்தான் என்னை முழு நடிகனாக வீட்டுல ஒத்துக்குவாங்க. மக்களும் ஒத்துக்குவாங்க.

* ஏ.எல்.விஜய் படம் பற்றி...?

இப்பதான் படம் ஆரம்பிச்சிருக்காங்க... கதை உள்ளிட்ட மற்ற விஷயங்களை இயக்குனர்தான் சொல்லணும். இதுவரை நடித்த படங்கள்லேருந்து வித்தியாசமான ஜானர்ல பண்ணற படம். என்னோட லுக்கும் வித்தியாசமாக இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் அதை மட்டும் சொல்லிக்கிறேன்.

* பார்ன் இன் சில்வர்பூன் நீங்க. லைஃபை ஜாலியா என்ஜாய் பண்ணாம ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கீறங்க?

அன்னை இல்லத்துக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு இல்லையா... அதை தொடர வேண்டாமா? தாத்தாவோட உழைப்பை நினைச்சு பார்த்தா நானெல்லாம் அதுல கால் தூசுக்குகூட வரமாட்டேன்.

விடைபெற்று திரும்பினார் விக்ரம் பிரபு. நடையில் அப்படியே நடிகர் திலகத்தின் சாயல்.

 thanx - dinamalar
அன்னை இல்லத்திலிருந்து வந்திருக்கும் பெரிய இடத்து வாரிசு, விக்ரம் பிரபு, கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும் எந்த கிரீடத்தையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளாமல் எளிமையாக இருக்கிறார். வாசலில் வரிசையில் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள், பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள், படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல காருடன் காத்திருக்கும் தயாரிப்பு நிர்வாகி, சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் அம்மா... இத்தனைக்கும் நடுவில் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுகிறார் விக்ரம் பிரபு.
* யாரை பார்த்து இம்ப்ரஸாகி நடிக்க வந்தீர்கள் அப்பாவா? தாத்தாவா?
நடிக்கிற ஆசையே முதலில் இல்லை. அப்படி நான் ஆசைப்பட்டிருந்தால் பத்து வருஷத்துக்கு முன்பே நடிக்க வந்திருக்கணும். அண்ணன் துஷ்யந்தனோடு வந்திருக்க வேண்டும். ஆர்வம் முதல்ல படிப்புல இருந்திச்சு. படிச்சு முடிச்ச பிறகு என்ன செய்யலாமுன்னு யோசிச்சப்போ சிவாஜி பிலிம்ஸ் வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சேன். திடீர்னு படம் இயக்கலாமுன்னு தோணிச்சு. அப்பாகிட்ட சொன்னேன் "பிடிச்சதை செய். ஆனா முழுசா கத்துகிட்டு செய்" என்றார். அமெரிக்கா போய் டைரக்ஷன் கோர்ஸ் படிச்சேன். திரும்பி வந்து விஷ்ணுவர்த்தன் சார்கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன்.
அப்புறம் திடீர்னு நடிக்கணும்னு ஆசை வந்தது. அப்பாகிட்ட சொன்னேன். "நான் யார்கிட்டேயும் சிபாரிசு பண்ண மாட்டேன், நீயே சான்ஸ் தேடிக்கோன்னு சொல்லிட்டார். நானே ஒரு போட்டோ ஷூட் பண்ணி எங்க பி.ஆர்.ஓ டைமண்ட் பாபு சார்கிட்ட கொடுத்தேன். அப்பதான் பிரபு சாலமான் சார் கும்கி படத்துக்கு புதுசா ஒரு ஆள் தேடிக்கிட்டிருந்திருக்கார். அவர்கிட்ட போட்டோ போய் சேர்ந்ததும் வீட்ல என்னை வந்து பார்த்தார். "கேரக்டருக்கு பொருத்தமா இருக்கீங்க. ஆனா இது யானையோட கதை ரிஸ்க் இருக்கு"ன்னு சொன்னார். "நடிக்கணும்னு வந்துட்டா புலிகூட வேணாலும் நடிக்க ரெடியா இருக்கணு"ம்னு சொன்னார் அப்பா. இப்படித்தான் கும்கி வாய்ப்பு வந்தது.
* வாரிசுங்ற அடையாளம்தான் சினிமாவுக்கு கொண்டு வந்ததுன்னு சொல்லலாமா?
கண்டிப்பாக, முதல் பட வாய்ப்பு கிடைச்சதுக்கு சிவாஜியோட பேரன், பிரபு மகன் என்கிற அடையாளம் ஒரு விசிட்டிங் கார்டாக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த படத்துக்கு நான் பட்ட கஷ்டங்கள் உழைப்புதான் அடுத்த படங்களை வாங்கிக் கொடுத்துச்சு. இப்ப வரைக்கும் கொண்டு போய்கிட்டிருக்கு. விக்ரம் பிரபு கேரக்டருக்காக கடுமையாக உழைப்பார்னு சொல்றாங்க பாருங்க அதுதான் என்னோட ஐடி கார்ட். அதை எப்போதும் கையில வச்சிக்குவேன்.
* கும்கி படத்துல யானை பாகனா நடிச்சிட்டு அடுத்த படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாயிட்டீங்களே-?
இப்பவும் நான் என்னை ஆக்ஷன் ஹீரோன்னு நினைத்துக் கொள்வதில்லை. அந்த கதை என்ன கேட்டுச்சோ அதைச் செய்தேன். அரிமா நம்பியும் அப்படித்தான். ஒரு சராசரி இளைஞனோட கோபத்தைத்தான் ரெண்டு படத்துலேயும் காட்டினேன். சினிமாவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தியிருப்பேன் அவ்ளோதான்.
* உங்க நடிப்பு பற்றி அப்பா என்ன சொல்றார்-?
நடிப்பை பாராட்டுவார். கும்கி பட ஷூட்டிங்கப்போ அவரோ அம்மாவோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரலை. நான் படுற கஷ்டத்தை கேள்விப்பட்டு அதை நேர்ல பார்க் அவுங்க விரும்பல படத்தை பார்த்துட்டு அப்பாவும், அம்மாவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. என்னோட டான்ஸ்ல தான் கொஞ்சம் அவுங்களுக்கு குறை இருந்தது. இப்போ சிகரம் தொடுவில் என்னோட டான்ஸ் பாத்துட்டு அதுலேயும் திருப்தி அடைஞ்சிட்டாங்க.
* வெள்ளைக்கார துரையில் காமெடி பண்றீங்க போல..?
நடிப்பு காட்டியாச்சு, ஆக்ஷன் பண்ணியாச்சு அடுத்து காமெடிதானே. சிகரம்தொடுவில் ஒரு போர்ஷன்ல காமெடி பண்ணியிருக்கேன். வெள்ளைக்கார துரையில் முழுநீள காமெடி. கதையில் காமெடி நிறைய இருந்தாலதான் அந்த படத்தையே ஒத்துக்கிட்டேன். ஒரு வித்தியாசமான விக்ரமை அந்தப் படத்துல பார்க்கலாம். காமெடியிலேயும் ஜெயிச்சாத்தான் என்னை முழு நடிகனாக வீட்டுல ஒத்துக்குவாங்க. மக்களும் ஒத்துக்குவாங்க.
* ஏ.எல்.விஜய் படம் பற்றி...?
இப்பதான் படம் ஆரம்பிச்சிருக்காங்க... கதை உள்ளிட்ட மற்ற விஷயங்களை இயக்குனர்தான் சொல்லணும். இதுவரை நடித்த படங்கள்லேருந்து வித்தியாசமான ஜானர்ல பண்ணற படம். என்னோட லுக்கும் வித்தியாசமாக இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் அதை மட்டும் சொல்லிக்கிறேன்.
* பார்ன் இன் சில்வர்பூன் நீங்க. லைஃபை ஜாலியா என்ஜாய் பண்ணாம ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துக்கீறங்க?
அன்னை இல்லத்துக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு இல்லையா... அதை தொடர வேண்டாமா? தாத்தாவோட உழைப்பை நினைச்சு பார்த்தா நானெல்லாம் அதுல கால் தூசுக்குகூட வரமாட்டேன்.
விடைபெற்று திரும்பினார் விக்ரம் பிரபு. நடையில் அப்படியே நடிகர் திலகத்தின் சாயல்.

- See more at: http://cinema.dinamalar.com/cinema-news/21385/special-report/Vikram-Prabhu-believes-in-his-hard-work.htm#sthash.mT7GCfpT.dpuf