- பாலியல் தொழில் வழக்கில் ஒரு நடிகை கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அதையொட்டிய ஊடகங்களின் அணுகுமுறை மீதான கடும் கோபத்தை பதிவு செய்திருக்கிறார், பாலிவுட்டில் குறிப்பிட்டத்தக்க இயக்குநர்களில் ஒருவரான ஹன்சால் மேத்தா.நடிகை ஸ்வேதா பாஸு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர். 'மக்தீ' என்ற இந்திப் படத்தில் நடித்ததற்காக 2002-ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர். 2008-ஆம் ஆண்டு, இவர் தெலுங்கில் நாயகியாக நடித்த 'கொத்த பங்காரு லோகம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதுடன், விமர்சகர்களிடையே ஸ்வேதாவிற்கு பாராட்டையும் வாங்கித் தந்தது.கடந்த வாரம் ஹைதராபாத் நகரில் ஸ்வேதா பாலியல் தொழில் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இது, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணம் ஈட்டுவதற்கு வேறு வழியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக ஸ்வேதா கூறியதும், சமூகத்தால் அறியப்பட்ட செல்வந்தர்களும் பிரபலங்களும் அவருடன் தொடர்பு வைத்திருந்ததும் பெயர்கள் குறிப்பிடப்பாமல் செய்திகளாக கொட்டப்பட்டன.இதனிடையே, பாலியல் தொழிலில் இருந்து மீண்டு வந்த ஸ்வேதா, தற்போது அரசு காப்பக்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், 'ஷாகித்', சிட்டி லைட்ஸ்' போன்ற படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஸ்வேதாவுக்கு வாய்ப்பு தர முன்வந்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை."நான் ஸ்வேதாவுக்கு எனது அடுத்த திரைப்படத்தில் வாய்ப்பு தர இருக்கிறேன். 'மக்தீ'யில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.அவரது புகைப்படங்களை பகிர்வதை நிறுத்திவிட்டு, அவருடன் சம்பந்தப்பட்ட செல்வந்தர்களின் படங்களை வெளியிடுங்கள். செல்வாக்கு இல்லாத பெண்ணை விட்டுவிட்டு, குற்றம் செய்யக் காரணமானவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்" என்று தனது கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார் அந்த இயக்குநர்.சம்பந்த பட்ட அனைவரையும் செய்தி மீடியா வெளியீட முயற்சி மேற்கொள்ளதது ஏன்?முற்றிலும் நியாயமானது. இந்த அறச்சீற்றம் தமிழ் உலகில் இருந்து வரவில்லையே? அதுதான் என் கோபம்ழைத்துவந்து கோடி ,கோடியாக கொட்டி கொடுக்கிறார்கள் .இந்திய ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு ஆட்டம் பார்க்க அல்லாடுகிறார்கள் .சன்னி லியோனும் எனக்கு ஹய் லைட்செய்து ,விவாத பொருளாக்குவது தான் விந்தை !!!
- நியாயம் தான் யார் அந்த கறுப்பு ஆடுகள் என்பதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்..பாலியல் தொழிலும் எனக்கு எழும் சில கேள்விகளும்? 1. பாலியல் தொழில் பரவலாக எங்கும் நடக்க ஒரு சில ஏமாந்தவர்கள் மட்டும் அவ்வப்போது பலிகாடாவது ஏன்? 2. மும்பை, தில்லி, கொல்கத்தாவில் மட்டும் சிவப்பு விளக்கு பகுதிகள் எந்த சட்டத்தின் கீழ் இயங்குகின்றன? 3. ஒரு மணி நேரத்திற்கு 1 லட்சம் 2 லட்சம் என்று வாங்கும் நடிகைகளை பிடித்து "மறுவாழ்வு" மையத்திற்கு அனுப்புகிறார்களே, அங்கு அவர்களுக்கு என்ன "மறுவாழ்வு" கொடுப்பார்கள்? 3. எல்லோரும் திருமணம் செய்து ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்துதான் தங்களது இயற்கையான பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், ஆண்-பெண் பாலியல் விகிதம் 1000 க்கு 900/800 இருக்கின்றதே, மீதமுள்ள 100/200 ?thanx - the hindu