Saturday, September 06, 2014

'லூசியா vs 'எனக்குள் ஒருவன்

சித்தார்த், தீபா சந்நிதி நடிக்கும் 'எனக்குள் ஒருவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பிரசாத் ராமர் இயக்கி இருக்கிறார். சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படம், இந்தியளவில் பெரும் வரவேற்பை பெற்ற 'லூசியா' படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
'லுசியா' திரைப்படம் இந்தியாவின் பல்வேறு முன்னணி இயக்குநர்களின் பாராட்டைப் பெற்ற படமாகும். கதையளவில் மட்டுமன்றி படத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் இயக்குநர் பவன் குமார் தனது புதுமையை புகுத்தி இருந்தார்.
தமிழ் ரீமேக்கான 'எனக்குள் ஒருவன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் இருக்கும் நேரத்தில் இயக்குநர் பவன் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:
"தமிழ்ப் படத்தின் போஸ்டர் ரிலீஸாகி வெறும் 15 மணி நேரத்திலேயே 108+ பகிர்வுகளையும், 820+ ஃபேஸ்புக் லைக்குகளையும் பார்க்க பிரம்மிப்பாக இருக்கிறது. ஏன் இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது? ஏன் எதையோ சாதித்து காட்டிய மாதிரி ரசிகர்களிடம் ஒரு உற்சாகம் தெரிகிறது?
ஒரு கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்வது ரசிகர்களுக்கு ஒரு திருப்தியை அளிக்கிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமில்லாமல், ரசிகர்களில் ஒரு தரப்பினருக்கு வழக்கமான படங்களின் மீது உள்ள ஒரு விரக்தி உண்டாகி இருப்பதையும் வெளிப்படுத்துகிறது.
சில நாட்களுக்கு முன்பு, ஒரு முஸ்லிம் பெண், இஸ்லாமைப் பற்றியும் தீவிரவாதத்தைப் பற்றியும் கேள்விளைக் கேட்கும் ஒரு வீடியோ பகிர்வைப் பார்த்தேன். அதற்கு அவருக்கு தகுந்த பதில்களும் கிடைத்தது. அந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பெருமளவு பகிரப்பட்டது. அந்த வீடியோவில் ஒரு விஷயத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்தார்கள்.
"இந்த சமூகத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை, மாற்றங்களைக் கொண்டுவருவது சிறுபான்மையினரே" என்பதுதான்.
படங்களுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இதேதான் பொருந்தும். பெரும்பான்மையான ரசிகர்கள் (எண்ணிக்கையில் அடிப்படையில் கூறுகிறேன்) விரும்புவது சாதாரணமான படிப்பு, வேலை, அவர்களின் வாழ்க்கை முறை போன்ற படங்களே. ஆனால் அதற்காக அவர்கள் பெரும் அளவு முயற்சிகளைச் செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல் பெரும்பான்மை மக்கள் புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள், யாருக்கும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.
மறுபுறம், சிறுபான்மை மக்கள் சாதாரணமானவர்கள், அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் சிறியதே. ஒரு திரையுலக நட்சத்திரத்தை அவர்களுக்கு பிடித்துவிட்டால், அவர்கள் எந்த மாதிரியான படத்தில் நடித்தாலும் பார்த்து ரசிப்பார்கள். ஊடகத்துறையும் இவர்களைச் சுற்றியே வேலை செய்கிறது. எல்லா விதமான பிஸினஸ்களும் சிறுபான்மையினரைச் சார்ந்தே நடைப்பெறுகிறது. இவர்களின் விருப்பமும் நிலையானதாக தான் இருக்கிறது, அடிக்கடி மாறுவதில்லை. அதனால்தான் வர்த்தகங்களும் கூட இவர்களை சென்றடைவதயே இலக்காக கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையினர் விரும்பும் வகையில் படத்தை எடுப்பது கடினம், எத்தனை பேர் புதிய முயற்சியை எடுக்க முன்வருவார்கள்?
மொத்தத்தில் யார் தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் உலகத்திற்கு தெரிவார்கள். தானாக நடக்கும் என்று காத்திருந்தால் எதுவுமே நிறைவேறாது. பெரும்பான்மையினர் ஆர்வத்துடன் ஈடுபட்டால் இந்த உலகத்தில் பல விஷயங்கள் மாறக்கூடும், படங்களில் மட்டுமல்ல சமூகத்திலும் கூட. "என் தேவைகளை அறிந்து அது செயல்பட உழைப்பேன்" என்று நினைத்தால் பெரும்பான்மையினரால் சாதிக்க முடியாததே இல்லை" என்று கூறியிருக்கிறார்.
வசூல் ரீதியில் மகத்தான வெற்றியை பெறும் வர்த்தக சினிமாவையும், சினிமாவில் புதிய முயற்சிகளுக்கு வித்திடப்படுவதையுமே புது முயற்சிகளை தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பதைச் சுட்டிக்காட்டி இயக்குநர் பவன் குமார் ஆதங்கமாகச் சொல்லியிருக்கிறார். 



 thanx - the hindu