Sunday, August 03, 2014

தனலட்சுமி vs தொண தொண லட்சுமி!

1.கோவில் வீதியில் மாவிளக்கு தட்டு ஏந்தி வரும் பக்தைகளே! தட்டை தலையில் வெச்ட்டு வந்தா எனக்கு எப்டி எட்டும்?தோளில் வைத்து வரவும்


========================



2  விஜய் = விருது வழங்கும் விழா வுக்கு நீங்களும் வரனும்.நான் விருது வாங்கறேன். 


அஜித் =அதான் ஆல்ரெடி "வாங்கிட்டீங்க்ளே"மறுபடி ஏன் வாங்கனும்?



====================


3 PRETTY GIRL னு யாரும் உங்களை கூப்பிடுவதில்லையா? கவலைப்படேல்.டெய்லி BREAD ,TEA அடிக்கடி சாப்பிடுங்க.பிரட் டீ கேர்ள் ஆகிடுவீங்க



====================



4 நான் ஏன் ட்விட்டர் face 2014 விருது போட்டில கலந்துக்கலைனு எல்லாரும் கேட்கறாங்க.நான் விஜய் மாதிரி எளிமையா வாழ ஆசைப்படறேன்


====================



5 ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்ட்டர் க்யூ 3 இருந்தது.எதுல ஆள் கம்மி னு எண்ணிப்பார்த்தேன்.3 க்யூ லயும் சரியா தலா 26 பேர் இருக்காங்க#தமிழன்


====================


6 ஜங்க்சன் ல ஒரு ட்ரான்ஸ்போர்ட்டர் ஜோடி பெஞ்ச் ல உக்காந்திருக்கு.இவன் மென்னுட்டு இருக்கும் பபிள்கமை அவ வாய்க்கு கடத்திட்டான் #அடெய்


==================



7 பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தை பலரும் விரும்ப முக்கியக்காரணம் இஷ்டத்துக்கு நினச்ச நேரம் நொறுக்ஸ் சாப்டுக்கலாம் என்பதாக இருக்கக்கூடும்


====================


8 பொது இடங்கள் ல அன்னியோனமா நடந்துக்கும் ஆதர்ச தம்பதிகள் நிஜமாவே அப்டித்தானா? நம்மை எல்லாம் கடுப்பேத்த அப்டி நடந்துக்கறாங்களா?

===================



9 பொண்ணுங்க பூ கட்டும்போதும் ,ஒயர் கூடை பின்னும்போதும் ,கை வேலைப்பாடு எம்ப்ராய்டரி தைக்கும்போதும் அவங்க விரல்கள் ஒரே பேட்டர்ன்ல இருக்கும்


====================



10  அடிக்கடி தொலைதூர பயணம் மேற்கொள்பவன் பேசஞ்சர் ட்ரெய்ன் டைம் டேபிளுக்கு தக்கபடி தன் பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்வான்



=====================


11 எப்போதும் கூந்தலில் பூ வைக்கும் பெண்கள் பூவையர்.எப்போ பாரு பெண்களை திட்டிட்டே இருப்பவர்கள் பூவையர் வையர்




=================


12 விழுப்புரம் டூ பாண்டிச்சேரி =பேசஞ்சர் ட்ரெய்ன் =டைம் டேபிள் காலை 6 35 10 மதியம் 12 55 2 25 மாலை 5 40 # தூரம் =38 கிமீ. டிக்கெட் 10 ரூபா


====================




13 பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் 8 வது கிமீ ல் முரட்டாண்டி எனும் ஊரில் புகழ் பெற்ற பிருத்தியங்காரா தேவி காளி கோவில் இருக்கு


================



14 பஸ்ல ஏறுனதும் அறிமுகம் இல்லாதவன் ஏதாவது பேசிட்டா என்ன பண்ண?னு உம்முனு வரும்பிகர்ட  ஹாய் மிஸ்! வீட்ல உப்புமாவா?" னு கேட்பான் தமிழன்


======================



15 பஸ் ல போகும்போது தான் பசிக்கும்.வீட்ல டைனிங் டேபிள் ல பரிமாறி கூப்பிடும்போது பசிக்காது



=====================


16 ஜன்னல் ஓர சீட்டில் அமர்பவர் தான் முழுதாக பஸ் சில் அமர முடிகிறது.2 வது ,3 வது நபர் முக்கால் ,பாதி உடம்புதான்


====================


17 
பஸ் ல ஒருத்தன் மொபைல் ல LOVER (NEW) னு போன் நெம்பர் சேவ் பண்ணி வெச்சிருக்கான்.லவ்வரோட புது நெம்பரா?லவ்வரே புதுசா? புது லவ்வரா?


====================


18 ஒவ்வொரு மொபைல் போனிலும் ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கும்.அது பற்றி யாருக்கும் தெரியாதவரை எல்லோருக்கும் நல்லது


====================


19 கவனத்தை ஈர்க்க சிலர் புனைப்பெயர்கள் வைத்துக்கொள்கிறார்கள்.நிஜப்பெயரில் எழுதுவது பெற்றோருக்கு நாம் செய்யும் மரியாதை.நம்பகத்தன்மையும் தரும்



=====================


20 அன்பே தனலட்சுமி! காதலிக்கும்போது தள தள லட்சுமி! இப்போ தொண தொண லட்சுமி!



=====================