Sunday, July 06, 2014

மினரல் வாட்டர் குடிப்பது பாதுகாப்பானது என நினைப்பவர்கள் படிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரை

படம்: கோப்பு
படம்: கோப்பு 
 
 
பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள். 


குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்?


 
Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும். 


Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும். 



Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter) முறையில் தண்ணீரில் இருக்கும் நுண் கிருமிகளை நீக்க வேண்டும். 


Ø ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் (Reverse osmosis) மூலம் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கனிமங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். 


Ø இந்தத் தண்ணீரை கொதிக்க வைத்து, அல்ட்ரா வயலெட் பல்ப் (UV Bulb) தொழில்நுட்பம் மூலம் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி வைரஸ், பாக்டீரியா கிருமிகள் நீக்கப்பட வேண்டும். 


Ø ஒரு கேன் 20 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 


போலி சுத்திகரிப்பு

 
தண்ணீரைச் சுத்திகரிக்கும் நிறுவனங்கள் தங்களின் கேன் மீது நிறுவனத்தின் பெயர், பேட்ச் அல்லது கோட் எண், சுத்திகரிப்பு தொழில்நுட்ப விவரங்கள், தயாரான தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால், அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் புறநகர் பகுதிகளில் ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீரை வாங்கி, செலவு பிடிக்காத மேலோட்டமான சுத்திகரிப்பை செய்கின்றனர். எதுவுமே செய்யாமல் தண்ணீரை அப்படியே கேன்களில் நிரப்புவோரும் உண்டு. சிலர் தண்ணீரில் அலுமினியம் சல்பேட் படிகாரத்தைப் போட்டு சுத்திகரிக்கிறார்கள். இது ஆபத்தானது. 



கோடையில் இது சீசன் தொழில்


 
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் சுமார் 1,250 மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயிரம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்திய தர நிர்ணய அமைப்பின் தெற்கு மண்டல அதிகாரிகள் கூறுகையில், “அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன. 



இது சீசன் தொழில். கோடை தொடங்கிவிட்டால் போர்வெல் தோண்டி குடிசைத் தொழிலைப் போல செய்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ரெய்டுகளை நடத்தி வருகிறோம்” என்கின்றனர். தமிழ்நாடு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக்ஸ்பியர், “இதனால் மொத்த நிறுவனங்களுக்கும் சேர்த்து அவப் பெயர் ஏற்படுகிறது. தமிழகத்தில் சுமார் 500 நிறுவனங்கள் 'ஐ.எஸ்.ஐ. 2002' உரிமம் இல்லாமல் தொழில் செய்கின்றனர்” என்றார். 


தீர்வுகள் என்ன?

 
250 - 300 வரை டி.டி.எஸ். இருக்கும் நீர் குடிப்பதற்கு உகந்தது. நாம் குடிக்கும் நீரை நாமே பரிசோதனை செய்யலாம். பெங்களூரில் இருக்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் சுமார் 4000 ரூபாய் மதிப்புள்ள குடிநீர் பரிசோதனைக் கருவி கிடைக்கிறது. இதை குடிநீரில் வைத்தால் டி.டி.எஸ். அளவு காட்டும். இதில் 100 முறை சோதனை செய்ய முடியும். சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள பி.டி.ஆர். பவுண்டேஷனில் சுமார் 350 ரூபாயில் சிறு கருவி கிடைக்கிறது. 


கிங் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன. 


பாட்டில் குடிநீர் குறியீடு அறிந்துகொள்ளுங்கள்

 
பெரும்பாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது அதன் லேபிளில் முக்கோண குறியீட்டுக்குள் 1 முதல் 7 வரை ஓர் எண்ணைக் குறிப்பிட்டிருப்பர். அதை கவனியுங்கள். ஒவ்வொரு எண்ணும் அந்த பாட்டில் எந்த வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும். 



எண் 1 - பாலி எத்திலின் டெர்ப்தலேட், 2 - ஹை டென்சிட்டி பாலி எத்தனால், 3 - பாலிவினைல் குளோரைடு, 4 - லோ டென்சிட்டி பாலி எத்தனால், 5 - பாலி புரோபைலினால், 6 - பாலிஸ்டிரின் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. 7 - ஓரளவு நீடித்த பிளாஸ்டிக் பாத்திரங்களை குறிக்கிறது. குடிநீர் பாட்டிலைப் பொறுத்தவரை முறையே 1, 2, 3 என எண் குறிப்பிடப்பட்ட பாட்டில்களை அந்த எண்ணிக்கையிலான நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்! 


 நன்றி - த இந்து


  • மணி அவர்களுக்கு ,எனக்கு தெரிந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் உலகத்தில் உள்ளன. அந்தந்த நாட்டிற்கு,கடந்தகால வரலாறு உள்ளது. எந்த நாட்டின் வரலாற்றில் ஆவது, அரசு இயந்திரம் இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்று புள்ளியை வைத்தது உண்டா என வரலாறு படித்தவர்களிடம் கேட்டு பதில் எழுதுங்கள். ராஜராஜ சோழன் காலத்தில் கையூட்டு என்றபெயரில் லஞ்சம், அரசு துறையில் பணி புரிந்தவர்களிடம் இருந்ததாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.!. கனடா நாட்டில், ஒரு ஊரில், 25 வருடங்களாக,காவல் நிலையத்தில், ஒரு குற்றம் கூட பதிவு ஆகாத காரணத்தால்,(அந்த ஊர் ஒரு சிறு சமுதாய அமைப்பு,) காவல்நிலையத்தை மாவட்ட தலை நகருக்கு மாற்றி விட்டதாக படித்தேன்.(சம்பளம்,மின்சாரம்,பராமரிப்பு எல்லாம் மீதம்!! ) தனி மனிதனிடம், சமுதாய கட்டமைப்பு ,மற்றும் செயல்பாடு பற்றி அக்கறை ஏற்படுத்துவது, கனடா ஊர் போல,மாற்றத்தை ஏற்படுத்தலாம். அரசு,சட்டம், தண்டனை,வெகுமதி,நிர்பந்தம்,போன்றவை தற்காலிக தீர்வு. சமுதாய ஒழுங்கிற்கு நிரந்தர தீர்வு இல்லை. தனி மனிதனுக்குள் சமுதாயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு ஆவண செய்தல் வேண்டும்.இது என் அபிப்ராயம.
    Points
    1740
    12 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • mani  from ALANDUR
    மேற்காணும் இந்த செய்தியை அரசு உயர் அதிகாரிகள் ,மற்றும் சம்பத்தப்பட்ட துறையின் மந்திரியார் ,முதல்வர் என அனைவரும் மனது வைத்தால் ஒரே நாளில் இந்த குற்ற சாட்டுக்கு முற்று புள்ளி வைக்கலாம் .
    13 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Balan  from COIMBATORE
    சுந்தர் அவர்களுக்கு , என் வீட்டிற்கு கேன் தரும் பையன் MBA , M.A, எல்லாம் படித்துள்ளதாக கூறினான். நான் ஒருமுறை, தற்செயலாக, (கதவருகே இருந்த கண்ணாடி மூலம் கவனித்தேன்) , மூடி கழன்று கீழே விழுந்ததை, எடுத்து, குப்பையை வாயால் ஊதி, மறுபடி அழுத்தி வைத்தான்.!. நான் வேறு கேன் எடுத்து வர சொன்னேன். எடுத்து வந்து கொடுத்து விட்டு, சார் ,வாட்டர் பிளாண்டிள், இதெல்லாம் சகஜம். நான் பார்த்துள்ளேன். அங்கு இப்படி நடந்தால் உங்களால் கண்டு பிடிக்க முடியுமா என்று கேட்டான்.! ஒரு நாளைக்கு எத்தனை கேன் விற்கிறோம் என்பது குறிக்கோள். இதெல்லாம் பெரிது படுத்தாதீங்க என்றான். அவனுக்கு ' முழுமையாக செய்யுங்கள் ' என்ற ஆரிசன் ஸ்வெட் மார்டன் எழுதிய கண்ணதாசன் பதிப்பக, புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தேன். படித்து விட்டு,வந்து வருத்தம் தெரிவித்தான். வண்ணத்து பூச்சி விளைவுப்படி, (Butter Fly Effect) அவனின் சிறு பிழை, சமுதாயத்தில் பலரை பாதிப்பதை சுட்டிக்காட்டினேன். என்னைவிட அதிகம் படித்து இருந்ததால், பல உதாரணங்களை கூறி எளிதில் புரியவைக்க முடிந்தது. ஜஸ்ட் ஒரு O Ring பிழையால் விண்வெளி ஓடம் வெடித்து சிதறியது பற்றியும் கூறினேன்.
    Points
    1740
    13 days ago ·   (3) ·   (0) ·  reply (0)   
  • sundar  from NOIDA
    தண்ணீர் கேனில் தண்ணீர் இருக்கும்போது வெயில் படும்படியாக வைக்க கூடாது. கேனில் பாசி பிடிக்கும். குடிப்பதற்கு அது கெடுதல். ஆனால் பெரும்பாலான கடை காரர்கள் கண்டுகொள்வதில்லை.
    Points
    520
    13 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited 
    தமிழகத்தில் ஆங்காங்கே அம்மா குழாய்கள் பொருத்தி, அம்மா குடிநீர் வழங்கவேண்டும். மாசு பட்ட கேன் குடிநீருக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும். உடனே, சென்னையில் மக்கள் சுவாசிக்கும் காற்றும் மாசு பட்டு விட்டது. அதற்கும் அம்மா சுவாசக்காற்று கொடுங்கள் என்று கேட்டு வேண்டுகோள் வைக்காதீர்கள்!!
    Points
    3320
    14 days ago ·   (5) ·   (4) ·  reply (1)   
    Balan   Up Voted
    • Balan  from TIRUPPUR
      இந்து பத்திரிக்கை விமர்ச்சகர்களின் லாஜிக் மற்றும் புத்திசாலித்தனம் பற்றி, அந்த பயம் உங்களுக்கு இருந்தால் சரி ரமேஷ் சார் !. ஹ,ஹ,ஹா !!!
      14 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Arun  from CHETPUT
    Why can’t you list that 1250 authorized companies / brands?
    14 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • kkrishnaswamy  from BANGALORE
    அம்மா குடி நீர் அவசியம் தேவை.அம்மா கவனிக்கணும்.ஆஅம அம்மா தமிழ் ஹிந்து பேப்பர் படிகிறங்கள>.நேரம் இருக்கா?
    Points
    520
    14 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • Yogesh  from BANGALORE
    அம்மா கேன் நீர் வந்தால், அம்மா ஆட்சி இன்னும் 10 ஆண்டுக்கு மேல் அசைக்க முடியாது.
    14 days ago ·   (5) ·   (1) ·  reply (1)   
    •  from ERODE
      ஏன்?ஏற்கனவே இருக்கும் அம்மா குடிநீர் பற்றி தங்களுக்கு தெரியாதா? அது என்ன புதிதாக அம்மா கேன் நீர்?
      13 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • R.Subramanian  from CHENNAI
    நல்ல தகவல்
    Points
    5925
    14 days ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • selvarajan.  from PONDICHERRY
    சுத்தமான குடிநீர் தயாரிக்காத நிறுவனங்களை கண்டறிந்து அவற்றிற்கு அரசு "சீல் " வைத்தவுடன் ----நிறுவன முதலாளிகள் ஒன்று சேர்ந்துகொண்டு ---கோர்ட்டில் தடையாணை பெற்று சிறப்பாக தங்களின் கொள்ளையை நடத்துகிறார்கள் . இது மக்கள் நல பிரச்னை ஆதலால் ---தடையானை கொடுக்க முடியாது என்று ---கோர்ட்கள் என்று கூறுகின்றனவோ ---அன்றுதான் இதற்கு எல்லாம் ---" விமோசனம் "
    Points
    235
    14 days ago ·   (5) ·   (1) ·  reply (0)   
  • Balan  from COIMBATORE
    நான் வசிக்கும் மாவட்டத்தில் சுமார் 25 லட்சம் பேர் உள்ளனர். மாதம் ஆளுக்கு 30 பைசா கொடுத்தால், 7.5 லட்சரூபாய். 25 பேருக்கு மாதம் 15000 ரூபாய் சம்பளம் கொடுத்தால், 3.75 லட்ச ரூபாய். மீத பணத்தில், 25 பேருக்கும் சென்று, சுத்திகரிப்பு நிலையங்களை கண்காணிக்க, பெட்ரோல் செலவுக்கு பணம் கொடுத்து விடலாம். (பிறகு மின்சார வண்டி வாங்கி கொடுத்து விடலாம்). அவங்க 25 பேரும், லஞ்ச பணத்திற்கு ஆசைபடாமல், கேன் ல் முறைப்படி தண்ணீர் நிரப்புவது, நீங்க குறிப்பிட்டமாதிரி, 20 முறை பயன்படுத்தியபின், முறைப்படி புதிய கேன் மாற்றப்படுகிறதா என கண்காணிப்பது, அந்த தகவல்களை பொது மக்களுக்கு உடனுக்குடன், இன்டர்நெட்டில் போட்டு விடுவது, இதெல்லாம் வெறும் 30 பைசா செலவில். கண்ணை மூடிக்கொண்டு தண்ணீர் வாங்கி குடிக்கலாம். சுமார் 2 லட்சம் நபர்கள் 350 ரூபாய்க்கு கருவி வாங்கி, தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, தண்ணீர் குடிப்பை சிக்கலாக்கி, சமூக ஒழுங்கை,இப்படி ஒவ்வொரு விசயத்திலும் தனிநபர் ஆராய்ச்சியாக வைப்பது அவசியமா?. எங்கு பிரச்னை ஆரம்பிக்கிறதோ,அங்கேயே சரிசெய்து,மக்களை மகிழ்ச்சியாக வைப்பது ஆரோக்கியமான சமூகம்.
    Points
    1740
    14 days ago ·   (16) ·   (1) ·  reply (0)   
    mary  · Rameshbabu Ramadas · senthil   Up Voted
  • shan  from NEW DELHI
    மிகவும் அவசியமான கருத்துக்கள் அடங்கிய கட்டுரை .ஓரளவு இதன் மூலம் நல்ல குடிநீரை குடிக்க வாய்ப்பு