Saturday, July 05, 2014

கிரிக்கெட் - டோனி - லட்சுமிராய்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது!: ராய் லட்சுமி நேர்காணல்

அடுத்த ஆட்டத்திற்குத் தயாராகிறார், நடிகை லட்சுமி ராய். இந்த பெங்களூரு குயின் வெள்ளித்திரையில் அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. அவ்வப்போது சின்னச் சின்னதாய் இளைப்பாறிக்கொள்ளும் லட்சுமி ராய் இப்போது தமிழில் ‘இரும்புக் குதிரை’, ‘அரண்மனை’, மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘ராஜாதி ராஜா’, கன்னடத்தில் ‘ஸ்ருங்காரா’ என்று தொடர் பிஸி நாயகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில், வலசை பறவையைப் போல இடம்பெயர்ந்துகொண்டே இருப்பார். சென்னை வந்தபோது நம்மிடம் சிக்கினார். இந்தக் கேள்விதான் கேட்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை ராயிடம்…



மீண்டும் மலையாளத் திரையுலகம் உங்களை அப்படியே தத்தெடுத்துக்கொண்டது போல?



இப்போ மம்முக்காவுடன் (நடிகர் மம்முட்டி) நடிக்கும் ‘ராஜாதி ராஜா’ அங்கே எனக்கு 12வது படம். மலையாளத்தில் வெளிவந்த படங்களில் அதிகம் மம்முக்காவுடனும், மோகன்லாலுடனும்தான் நடித்திருக்கிறேன். அங்கே எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி காத்திருந்து கிடைத்ததில்லை. உடனுக்குடன் கிடைத்தது. இந்த அளவுக்கு அங்கே ரசிகர்கள் பெரிய இடம் கொடுப்பாங்க என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. கிராமம், நகரம், ஆக்‌ஷன், சென்டிமென்ட், ஜீன்ஸ், சேலை என்று நானே எதிர்பார்க்காத கெட்டப் எல்லாம் அங்கே கிடைத்தது. அதில் ஒரு ரியாலிட்டியும் இருந்தது. இதை என்னோட கேரியரில் போனஸ் என்றே நினைக்கிறேன்.



சொந்த மண் கன்னட பூமியாக இருந்தாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளும் பேசி அசத்துறீங்களே?



சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் வந்தேன். புது ஸ்டேட், புது மொழி, புதிய மனிதர்கள் என்று பார்க்கும்போது எதையோ விட்ட மாதிரிதான் ஆரம்பத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் எனக்குள்ளே ஒரு இன்ஸ்பிரேஷன் வந்தது. கூடவே கான்ஃபிடன்ஸும். இப்போ என்னோட மொழி கன்னடத்தை மறக்குற அளவுக்கு ஆயிருச்சு. ஆர்வம் இருந்தால் போதும். உலகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.


லட்சுமி ராய்க்கு வயது கூடுகிறதா, இல்லையா?


15 வது வயதில் திரைக்கு வந்தேன். அதுவும் முதன்முதலாகத் தமிழ் சினிமாதான். அப்பவே மெச்சூரிட்டியான கேரக்டர் செய்தேன். அந்த வயதில் குழந்தை நட்சத்திரமாகத்தான் ஏற்றுக்கொள்வார்கள். நானோ, நாயகியாக அறிமுகமானேன். காரணம், அந்த வயதில் இருந்த மெச்சூர்ட் லுக்தான். எப்பவுமே ஒருவித பர்சனாலிடி ஸ்கின்ல தெரியும். அது கிப்ஃட். ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ கேரக்டருக்கு பிட்னஸ் அவசியப்பட்டது. இப்போதுகூட ‘இரும்புக் குதிரை’யில் பைக்கர் கேரக்டரில் நடித்திருக்கேன். இதுக்காக 4 மாதம் எடுத்துக்கொண்டு 15 கிலோ எடை குறைத்தேன். இந்த பியூட்டிக்கும் இளமைக்கும் எனக்கு அடுத்தடுத்து அமையும் கேரக்டரும் ஒரு காரணம்.


ராய் லட்சுமி என்று பெயர் மாற்றிக்கொண்ட பிறகு அதிர்ஷ்டம் எப்படி?





‘லக்கி’க்காக நான் பெயர் மாற்றிக்கொள்ளவில்லை. வீட்டில் ஆரம்பித்து பிரண்ட்ஸ் வரைக்கும் ராய்ங்கிறது தான் பிரபலம். நானும் யோசித்தேன், ராய் என்பதில் ஒருவித மாடர்ன் ஃபீல் இருக்கே. என்னை இப்போதும் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.



ஆன்மிகத்திலும் ஆர்வம் அதிகமோ?



அது என்னோட இன்னொரு பக்கம். பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. மனதுக்குப் பட்டால் வைஷ்ணவ தேவி, மூகாம்பிகை, திருப்பதி, ஷீர்டி என்று பறந்துவிடுவேன். கடவுள்தான் எல்லாமும். அதுக்கு மேல எதுவும் இல்லை. எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை உண்டு.



ராய் என்றாலே ‘கிசுகிசு’ நாயகி என்கிற அளவுக்கு ஒரு செய்தி பரவுகிறதே?



செலிப்ரட்டியாக இருக்கும்போது காண்ட்ரவெர்சி, ரூமர்ஸ், கிசுகிசு இதெல்லாம் வரத்தான் செய்யும். அதையும் பார்ட் ஆஃப் லைஃப் ஸ்டைலாகத்தான் எடுத்துக்க வேண்டியிருக்கு. ஒரு கட்டத்தில் என்னைச் சுற்றி ஏகப்பட்ட ரூமர்ஸ் வந்துக்கிட்டே இருந்தது. அதுக்கு நான் எல்லா நேரத்திலும் ரியாக்ட் செய்துகிட்டே இருக்க முடியாது. ஒரு ஸ்டேஜ் வரைக்கும் பார்க்கலாம். அதுக்கும் மேலே போனால் கீழே இழுத்துப்போட்டுடுவாங்க. அந்த ஸ்டேஜ்ல அதுக்கு புல் ஸ்டாப் வைக்க வேண்டும். பர்ஷனல் லைஃபை டேமேஜ் செய்கிற எந்த விஷயத்தையும் அனுமதிக்கக் கூடாது. அந்த இடத்தில் ரியாக்‌ஷன் செய்தே ஆக வேண்டும். எனக்குப் பொறுமை உண்டு. ஆனா நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா இருக்கிற பெண் இல்லை.



உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?





ஸ்கூல் டேஸ்லயிருந்தே நான் ஸ்போர்ட்ஸ் மாணவி. எப்படி கிரிக்கெட் பிடிக்காமல் இருக்கும்? கிரிக்கெட், ஃபுட்பால், பேட்மிண்டன், அத்லெடிக்ஸ் இதெல்லாம் மை பேவரிட்ஸ். அதுக்காக சிசிஎல் கிரிக்கெட் நடந்தா போக மாட்டேன்னு எழுதிடாதீங்க. கண்டிப்பா போவேன். கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.


நன்றி  - த இந்து