1.மான் கராத்தே - வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மான் கராத்தே.
திருக்குமரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை திரைக்கதை எழுதி இருக்க்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன்-ஹன்சிகா இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது. சூரி மற்றும் ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடியில் கலக்கிய சதீஷ் இந்தப் படத்திலும் கலகலப்பூட்ட வருகிறார்கள். சமீபத்தில் இந்தப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தின் எந்த காட்சியிலும் கத்திரி போடாமல் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மேலும் படத்தில் இரட்டை அர்த்த வசனம், ஆபாசம், வன்முறை எதுவுமின்றி இயக்கியுள்ளதாக திருக்குமரனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். படம் கோடை விடுமுறையொட்டி வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலிசாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழா சில தினங்களுக்கு முன் நடந்தது. அவ்விழாவுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்களை வர வைத்திருந்தனர். விழா நடைபெற்ற சத்யம் தியேட்டரின் உள்ளேயும் வெளியேயும் கூடிய ரசிகர்கள் கூட்டத்தினரால் படத்துறையைச் சேர்ந்த
வி.ஐ.பி.க்களும், மீடியாக்களைச் சேர்ந்தவர்களும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
அதோடு, பவுன்சர்கள் என்கிற குண்டர்களை வைத்து கெடுபிடி செய்ததும், விழாவுக்கு வந்தவர்களை எரிச்சல் அடைய வைத்தது. இதற்கெல்லாம் யார் காரணம்? மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மதன்தான் காரணம் என்கிறார்கள்.
சுமார் 8 பட்ஜெட்டில் படத்தை முடித்துவிட்ட மதன், 18 கோடிக்கு வியாபாரம் செய்து 10 கோடி லாபம் பார்த்திருக்கிறாராம். பெரிய தொகைக்கு மான் கராத்தே படத்தை பிசினஸ் செய்துவிட்டாலும், ரிலீஸ் நேரத்தில் பேசிய தொகையைக் கொடுக்காமல் விநியோகஸ்தர்கள் பிரச்னை செய்துவிடக்கூடாது என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம். எனவேதான் மான் கராத்தே இசைவெளியீட்டு விழாவில் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார். அதாவது, சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய கிரேஸ் இருக்கிறது என்பதை மான் கராத்தே படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்குக் காட்டநினைத்தாராம். அதற்காக சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சியிலிருந்து ஆயிரக்கணக்கான ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து சீன் போட்டிருக்கிறார்.
60கோடிக்கு மான் கராத்தே விற்பனை எரிச்சலில் முன்னணி ஹீரோக்கள்.. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ போய் விட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் மான் கராத்தே படத்தை ஏ.ஆர்,முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த திருக்குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் படத்திற்கு மட்டும் மூன்று கோடி ரூபாய் செலவழித்து இருக்கின்றனர். சிவகார்த்திகேயனோடு ஹன்சிகா நடிப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க சன் டிவியும், விஜய் டிவியும் கடும் போட்டியில் இருக்கிறதாம். இது பிரபல நடிகர்களின் தொகையை நெருங்கிவிட்டது. இதுபோக மற்ற மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை போன்றவைகளை எல்லாம் கணக்கு பார்த்தால் சுமார் 60 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.35 கோடிதான். இத்தனை விலை போனதால் சிவகார்த்திகேயன் மீது இளம் ஹீரோக்கள் பலர் கடும் எரிச்சலில் உள்ளனராம்
2.ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் -சிம்புதேவன் இயக்கத்தில், அருள்நிதி, பிந்துமாதவி, அர்ஷிதா ஷெட்டி, பகவதி பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'.
'மூடர்கூடம்' படத்திற்கு இசையமைத்த நடராஜன் சங்கர் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தினை ஒளிப்பதிவு செய்கிறார் எஸ்.ஆர்.கதிர்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் இப்படத்தை மோகனா மூவீஸ் சார்பில் எம்.கே.தமிழரசு தயாரித்திருக்கிறார்.
வருகிற ஏப்ரல் 4ம் தேதி இப்படம் திரைக்குவருகிறது
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி தற்போது நடித்து வரும் படம் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும். மகனுக்காக தந்தை மு.க.தமிழரசு தயாரிக்கிறார். சிம்புதேவன் டைரக்ட் செய்கிறார். பிந்து மாதவியும், அஸ்ரிதா ஷெட்டியும் ஹீரோயின்கள். சென்னை மற்றும் புதுச்சேரியில் ஒரே ஷெட்யூலில் ஷூட்டிங் நடத்தி முடித்து விட்டார் சிம்புதேவன்.
படத்தை பற்றி சிம்புதேவன் கூறியதாவது: எனது முந்தைய படங்களில் இருந்து இது டிபெரண்டாக இருக்கும். ரொமாண்டிக் காமெடிப் படம். தனக்கு சொந்தமானதை யாருக்கும் விட்டுத்தராத மூன்று சுயநலம் மிக்க நண்பர்களின் கதை. அருள்நிதி முதன் முறையா காமெடியாக நடிக்கிறார். கதையோடு இணைந்த காமெடி ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. திட்டமிட்டு படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் முடித்தோம். இப்போது பின்னணி இசை கோர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. ஜனவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
3 கூட்டம் -Koottam is an tamil upcoming action triller movie from the debut director M. Jeevan associate of Ram Gopal Varma. The story is about the Naxals, Polices and some Politicians with thier connections
A
4 எப்போதும் வென்றான்-Eppothum Vendran (aka) Eppodhum Vendran is a Tamil movie with production by Arr Films, direction by Siva Sanmugan. The cast of Eppothum Vendran (aka) Eppodhum Vendran includes Unknown.
5 காந்தர்வன் -தாமரை மூவீஸ் வழங்கும் சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் “காந்தர்வன்”. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். மேலும் கஞ்சாகருப்பு, காதல்தண்டபாணி, நெல்லைசிவா, சபாபதி, ஆண்டமுத்து, வெள்ளைசுப்பையா, செல்லத்துரை, கிரேன் மனோகர், கோவைசெந்தில்குமார், ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி சலங்கைதுரை இயக்கியுள்ளார். இவர் கரண் – வடிவேலு நடித்த காத்தவராயன் படத்தை இயக்கியவர்.
காந்தர்வன் படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது….
காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம் . கஞ்சாகருப்பு இந்த படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறார். இந்தப் பட ரிலீஸுக்கு பிறகு கஞ்சாகருப்புவை கஞ்ச கருப்பு என்று அழைப்பார்கள் அந்த அளவிற்கு படத்தில் அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. அதே மாதிரி புதுமுகம் கதிர் நிச்சயம் பெரிய அளவிற்கு வரக்கூடிய நடிகராக காந்தர்வர் மூலம் மாறுவார். இந்த படத்திற்காக சமீபத்தில் கதிர் - ஹனிரோஸ் பங்கேற்ற “ நெருப்பாய் நெருப்பாய் தெரியுது நிழலே” என்ற பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கி பாண்டிச்சேரி வரை படப்பிடிப்பு நடைபெற்றது என கூறியுள்ளார்.
6 CAPTAIN AMERICA -கேப்டன் அமெரிக்கா-தி விண்டர் சோல்ஜர் இந்த வருடத்தின் மிக பெரிய அதிரடி படம், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் 'எதற்கும் அஞ்சாதவன்' என்ற பெயரில் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் 4-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது.
நியூயார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிற ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து வந்து நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது, அவரை காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர்நோக்குகிறார். தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோ மற்றும் பால்கன் உடன் இணைந்து போராடும்போது தான் அறிகிறார், அவர் இப்போது போராட போவது - தி விண்டர் சோல்டர் என்ற மாபெரும் மகா அழிவு சக்தி உடைய எதிரி என்பதை.
உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் தொடரான காப்டன் அமெரிக்காவின் முதல் பதிப்பு 1941-ஆம் வெளியிடப்பட்டது. அந்த தொடரின் பிரதிபலிப்பாக உலகமெங்கும் தற்போது திரை வடிவத்தில் வர இருக்கும் இந்த திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.