Saturday, March 01, 2014

ஐ டி கம்ப்பெனிகளில் பணி புரியும் பெண்கள் என்றால் இளக்காரமா?

கோப்புப் படம்
கோப்புப் படம்
'யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?'


'காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்... அப்படி என்ன வேலையோ?!


'ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!'


'இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?'

உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- ஐ.டி. இளைஞனின் கடிதம்


உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை.


ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் மேலோட்டமாகக் கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ஏதாவது இப்படி கிளப்பி விடுவது வழக்கமாகிவிட்டது.


எந்தக் குடும்பச் சூழலில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்பது இந்த அறிவுஜீவிகளுக்குத் தெரியுமா? 'என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும், நான் சுதந்திரமாக நடைபோட வேண்டும்' என்று எண்ணம் கொண்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சையைதான் சந்திக்கின்றனர்.


நைட்டு வரைக்கும் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்கும் அன்பர்கள் சிலருக்கு, நம் இரவு நேரம்தான் அமெரிக்கா முதலான பல நாடுகளின் வர்த்தக நேரம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service based companies) பலவும் இப்படி இங்கு இரவு நேரத்தில் ஆந்தை போல் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இவர்கள் செய்வது கஸ்டமர் சர்வீஸ். வெளியூரிலுள்ள பலரிடமும் பேச வேண்டியிருக்கும், நாம் வேலையை செய்து முடித்து விட்டு இரவு எட்டு, எட்டரை மணி அளவில் கிளம்பப் பார்த்தாலும் அவர்கள் கூறும் குறைபாடுகளை தீர்த்து வைத்த பிறகே கிளம்ப முடியும்.


அதிலும் பி.பி.ஓ. இருக்கிறதே - பொதுவாக கால் சென்டர் என்று சொல்லப்படுவது - இதில் வேலை பார்ப்பவர்களின் பொழுது குறைந்த பட்சமாக இரவு ஏழு மணி அளவில்தான் தொடங்குகிறது. அடுத்த நாள் அதிகாலை சுமார் மூன்று நான்கு மணி வரை வேலை நேரம் செல்கிறது. திரைப்படத்தில் காட்டுவது போல் சும்மா ஜாலியாக கும்மாளம் அடிப்பது, ஒகே DUDE, சூப்பர் buddy என்று பீட்டர் விடுவது போல் எல்லாம் இந்த மாதிரி கம்பெனிகளில் கிடையாது.


ஒவ்வொரு நாளும் எப்போது நிறுவனத்தை விட்டு கிளம்புவோம் என்று இங்கு யாருக்கும் தெரியாது. எப்போ என்ன வெடி வெடிக்குமோ என்ற பயம் தான் ஒவ்வொரு நாளும் இங்கு ஆள்கின்றது.


நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்போது, ஒவ்வொரு மனிதரும் பல மன உளைச்சல்களை சுமந்துதான் வெளிவருகின்றனர். இதில் பெண்கள் பெறும் மன உளைச்சல் இருக்கிறதே மோசம். இரவு ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு மணி, மூன்றுமணி இப்படி பல வேளைகளில் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இவர்களுக்கு நிகழ்கின்றது.


தர்மபுரி, ஈரோடு, சேலம், மதுரை, ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவை, தேனீ, கொச்சின், நெல்லூர், குண்டூர் இப்படி பல ஊர்களிருந்து பல மாநிலங்களிருந்து பெண்கள் நம்மூரில் வந்து வேலைப் பார்க்கின்றனர். பொருளாதார ரீதியாக இப்பெண்களால் இவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது, மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களும் இவர்கள் குடும்பங்களும் சந்திக்கின்ற வேதனைகள் இருக்கிறதே, அது ஏராளம்.


வேறு ஊரில் வசிக்கும் அப்பாக்கள் தன் மகள் 'ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்ப்பா' என்ற செய்தி கேட்ட பிறகே உறங்குகிறார்கள், தெருமுனையில் இரவு மூன்று மணிக்கு தன் தங்கைக்காக காத்திருக்கும் அண்ணன்களுக்கும், வீட்டில் சாப்பாட்டை வைத்து கண் விழித்துக் காத்திருக்கும் அம்மாக்களுக்கும் எத்தனை பேர் தெரியுமா? 


அந்த இரவு நேரத்தில் தன் வீட்டுப் பெண் வீடு திரும்பவில்லை, இனி அவள் வரவே மாட்டாள் என்ற செய்தி வந்தால் இவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்னும் பல அம்மாக்கள் தன் பிள்ளையை வீட்டில் உறங்க வைத்து, ஏதோ ஒரு பொழுதில் வீட்டிற்கு சென்று தன் குழந்தைக்குத் தரும் முத்தத்தில் தான் உயிர் வாழ்கிறாள். வேலைக்கு சென்ற அம்மா வீட்டிற்கு திரும்ப மாட்டாள் எனும் செய்தியை அக்குழந்தைக்கு எப்படி கூறப்போகீறீர்கள்?


இரவில் தனிச் சாலையில் ஒரு பெண் நடந்து சென்றாலே அவள் ஒரு போகப்பொருளாகவே பலநேரங்களில் பார்க்கப்படுகிறாள். இன்னும் எத்தனை தூரத்திற்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டுக்கு செல்லும் வரை அவர் பின்னால் ஒரு காவலாளியை அனுப்ப முடியுமா? 


ஒவ்வொரு சந்திலும் சீ.சி.டி.வீ கேமராவை இணைக்க முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு தவறும் செய்யாத பெண்ணை குறை கூறப் போகிறோம்? எப்போது திருந்தப் போகிறோம்? இன்னும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் இழிபாடுகளுக்கு பெண்களின் ஆடையும், பெண்களின் நடத்தையை மட்டும் குறைகூறுபவர்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு!



ஒரு பெண் தனியே நடக்கையில் அவள் ஒரு உயிர், வெறும் ஒரு பண்டம் அல்ல என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்க வேண்டும். ஒரு பெண் தனியே நடந்த செல்கையில் இவள் என் நாட்டு பொக்கிஷம். இவளுக்கு யார் தீங்கு செய்தாலும், சிதைக்க முயன்றாலும் நான் விட மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் வர வேண்டும். என் பெண் காணவில்லை என்ற பதறி வரும் அப்பாவிடம் எங்கேயாவது ஓடி இருப்பாள் என்று கூறும் வாய்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும்.



பெண்ணைப் பெற்றவருக்கு நெஞ்சு ஒவ்வொரு நாளும் பக் பக் என்று அடிக்கின்றது, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று. உங்களின் சதைப் பசிக்கும், வன்மத்திற்கும் அனாவசியமாக ஒரு குடும்பத்தை இரையாக்காதீர்கள்!



அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்!



எங்காவது ;இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்' என்று பேசும்பொழுது உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொஞ்சம் மனதில் வைத்துப் பேசுங்கள்!
உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?



ஐ.டி. நிறுவனங்களின் பணியாற்றும் பெரும்பாலான பெண்கள், பொருளாதார ரீதியில் வசதியான குடும்பங்களைப் பின்னணியாகக் கொண்டவர்கள் அல்ல... கீழ், நடுத்தர நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றும் உமா மகேஸ்வரிகள் அவர்கள்.


ஹரி, ஐ.டி. நிறுவன ஊழியர் - தொடர்புக்கு [email protected]

thanx - the hindu


  • அருமையான பதிவு நண்பரே!

    a day ago ·   (41) ·   (2) ·  reply (1)



    • அந்த சகோதரியின் மரணம் சோகமானது ..நம் வீடு பெண்களை அந்த இடத்தில் வைத்து பார்க்கும் பொது.கற்பனையே கொஞ்சம் மோசமாக இருக்கிறது.யார் போக சொன்னது?.ராத்திரி போக வர வண்டி வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.அதை ஏன் அந்த பெண் பயன் படுத்தவில்லை? நிறுவனங்கள் ஏன் பெண் ஊழியர்கள் வீடு போய் சேரும் வரை பாதுகாப்புக்கு பொறுப்பு எடுக்க மாட்டேன்கிறார்கள்?ஏன் ராத்திரி போய் வேலை செய்ய வேண்டும்?சில பெண்கள் நல்ல உடை உடுத்தி,ஒழுக்கமாக நடக்கலாம் ..போய் பாருங்கள் உள்ளே ஐடி நிறுவனங்களில் என்ன ''கூத்து'' நடக்கிறது என்று.டெல்லி-நொய்டா குர்கன்,புனே,பெங்களுரு,ஹைதராபாத் இடங்களில் போய் பாருங்கள் அரை குறை ஆடைகளுடன் குடிகார பெண்களை பார்க்கலாம் . ஒரு மரணத்து பின் ஒரு கட்டுரை எழுதியவுடன்,உடனே அருமையான பதிவுன்னு கருத்து..நான் கல்லூரியில் படித்த போது ஒரு ஐடி நிறுவனத்தின் தேர்வாளர் ஒரு பெண்ணை சிரிக்க சொல்லி தேர்வு செய்தார்கள்.மத்தவ'னு'க்கு எல்லாம் கெட் அவுட்.வேலை கிடைக்காமல் இருக்கும் ஆண்கள் அதிகமாக போனது இதுதான் காரணம்.உடனே சில பெண்ணாக இருக்கும் ஆணியவாதிகள் ஆணாதிக்கம் என்று கொடி கண்டுபிடிப்பார்கள்.முடியல

      a day ago ·   (15) ·   (21) ·  reply (2)

      Janaki  Down Voted

      •  Savitha  

        சிரிக்க சொல்லி தேர்வு செய்தது அந்த பெண்ணின் தவறா? எப்படி பெண்களின் உடை அவர்களது நடத்தையை தீர்மாநிகறது? இப்படியே இன்னும் எதனை காலம் கூறிக்கொண்டு இருக்க போகிறோம்..இந்த மகேஸ்வரி கேஸ்ல் கூட அந்த பெண் சம்பவத்தன்று உங்களின் எதிர்பார்ப்பு படி அவள் மிக நாகரிகமான உடையாக கருதப்படும் சுடிதார் தான் அணிந்திருந்தாள். பின்பு ஏன் இந்த சம்பவம் நடந்தது. பெண்ணை குறை கூறும் ஆண்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். குர்கன்,புனே,பெங்களுரு,ஹைதராபாத் ஆகிய இடங்களில் IT நிறுவன பெண்கள் மட்டும் அன்று அனைவருமே நாகரிக உடை அணியும் பழக்கம் உள்ளவர்கள். அதில் தவறொன்றும் இல்லை. அன்று வெட்டி அணிந்த ஆண்கள் இன்றும் வெட்டியா அணிந்து வளம் வருகிறிர்கள்?

        about 17 hours ago ·   (5) ·   (0) ·  reply (0)

        Savitha  Up Voted

        •  Janaki  from Mumbai
          அதே அலுவலகத்தில் பணிபுரிந்தவள் நான். ஒவ்வொரு ப்ரோஜெக்ட்டுக்கும் WON குடுப்பார்கள். அது இல்லாத காரணத்தினாலே அந்த பெண் அலுவலக வசதியை உபயோகிக்க முடியாமல் போயுள்ளது. இது நிறைய நேரங்களில் நடக்கும்.அப்போது நாங்கள் அலுவலகத்தில் தங்குவோம் அல்லது அண்ணன்களை அழைத்து போக வர சொல்லுவோம். அது அல்லாமல் PLs உதவலாம்.இதில் எதாவது நடந்திருந்தால் இந்த சம்பவம் நிகழாமல் இருந்திருக்கும். சென்னையில் IT வேலை பார்க்கும் நிறைய தமிழ் பெண்கள் மற்ற சின்ன தமிழ் மாவட்டங்களில் இருந்து வருபவர்களே. நானும் அப்படிப்பட்டவள் தான்.ஒழுக்கமற்ற பெண்களும் இருக்கிறார்கள்.அதையும் பார்க்கிறோம்.ஆனால் அதை தடையாகவோ குற்றமாகவோ இதில் சம்பந்தபடுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.நாகரிகமாக உடை அணியாத பெண் மட்டுமே களங்கப்படுகிறாளா என்ன? பெண் போக பொருள் தான் இன்றும். இந்த நிலைமை மாற வேண்டுமே தவிர பெண் உடை நேரம் எல்லாம் பேசுவது நல்ல முன்னேற்றமல்ல. பெண்கள் பாதுகாப்புக்காக தங்களை எல்லா வகையிலும் ஒடுக்கி கொள்ளும் நிலையில் தான் இன்னும் உள்ளோம். அது மாற ஆண்களின் எண்ணங்களும் மாற வேண்டும். இது நியாயமான மனித உரிமை கோரலே தவிர பெண்ணாதிக்கம் அல்ல.

          about 24 hours ago ·   (15) ·   (0) ·  reply (1)



          • ஆண்களின் எண்ணம் மாறாமலா தமிழகத்தின் உயரிய அரியாசனத்தில் ஒரு பெண் முதல்வராக அமர்ந்திருக்க முடியும்.

            about 16 hours ago ·   (0) ·   (4) ·  reply (0)


      •  Thamizhan  from Chennai
        சில மிருகங்களுக்கு உரைக்கும் படி சொன்னீர்கள். நிர்பாயாவுக்கும், உமா மகேஸ்வரிக்கும் நடந்த கொடுமைக்கு முக்கிய காரணம் அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் என்பது தான். மது என்ற அரக்கனை இந்த நாட்டை விட்டே அகற்ற வேண்டும். நிச்சயம் இந்த அரக்கர்களுக்கு தாய்க்கும் தாரதிர்க்குமே வித்தியாசம் தெரியாது.

        a day ago ·   (23) ·   (2) ·  reply (1)



        • ஒரு சிறிய திருத்தம்... "நிர்பாயாவுக்கும், உமா மகேஸ்வரிக்கும் நடந்த கொடுமைக்கு முக்கிய காரணம், அந்த குற்றவாளிகள் மது அருந்தியிருந்தார்கள் என்பது தான்."

          a day ago ·   (9) ·   (0) ·  reply (0)

          Priya  Up Voted


        • அருமையான பதிவு

          a day ago ·   (1) ·   (1) ·  reply (0)


          •  vadivel  from Chennai
            உரக்க சொன்னீங்க ஹரி........இப்பவாவது புரியட்டும் இந்த மர மண்டைகளுக்கு.............

            a day ago ·   (2) ·   (0) ·  reply (0)


            • பொதுவாக அருமையான பெரும்பாலானவற்றை அப்படியே ஏற்றுகொள்கிறேன், சில விசயங்களில் முரண்பட்டாலும். நீங்கள் கூறியவற்றில் குறிப்பாக இந்த வரிகள் --///அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்// உண்மை, ஆனால் இது இங்கே தவறிழைக்க நினைக்கும் குற்றவாளிகளுக்கு உரைபதில்லை, குற்றத்தை கானநேரும்போதும், தனக்கு எந்த வித பாதிப்பும் நேர்ந்து விட கூடாதென்று ஒதுன்கிர்யே செல்கின்றனர்... இது சமூகத்தின் குறைப்பாடு, நல்லொழுக்கம் என்பது தன்னுடைய குடும்பத்திலேயே வரவேண்டும், பெற்றோர்களால் சொல்லி சொல்லி வளர்க்கபடவேண்டியது... வளர்ந்த பின் என்பது.. மிக கடினம்..நன்றி நண்பரே...

              a day ago ·   (1) ·   (4) ·  reply (0)



              • ஐ.டி. தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் வந்தமையால் சென்னையில் பலருக்கு வேலை கிடைத்துள்ளது . அதில் பெண்களும் அதிகமானவர் வேலை செய்கின்றனர் .அவர்களது வேலை இரவு நேரங்களிலும் இருக்கலாம் . அமெரிக்காவில் பகல் நமக்கு இரவு அதனால் இரவில் பார்க்க வேண்டிய நிலை. ஓரளவு நிறுவனங்களும் அரசும் அவர்களுக்கு பாதுகாப்பைத்தான் தருகின்றது .ஒரு தவறு நிகழ்ந்து விட்டால் ஒட்டு மொத்தமாக அந்த வேலைக்கு போவது பாதுகாப்பற்றது என்பது தவறானது . வட நாட்டிலிருந்து கடின வேலை செய்ய வருபவர்கள் மட்டும்தான் தவறு செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.ஒரு தவறு கொலையாக வரும்போதுதான் அது வெளியில் வருகின்றது .அனைத்து இடங்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தவறு செய்பவர்களை உடன் கண்டிப்பதிலும் அவர்களுக்கு தகுந்த தண்டனையும் சீக்கிரம் நிறை வேற்ற ஆக்கப் பூர்வமான வேலையில் ஈடுபட்டால் தவறு செய்பவர்களுக்கு ஒரு அச்சம் வர தவறு குறையலாம்.பாதுகாப்பையும் அதிகமாக்கலாம் .அத்துடன் தனியே பெண்கள் வேலை செய்யப் போகும்போது துணையோடு செல்ல வேண்டும்

                a day ago ·   (6) ·   (0) ·  reply (0)

                Kriti Janarthanan  Up Voted

                •  jc  from Coimbatore
                  மிகவும் சரியானதும் உண்மையான தொரு விஷத்தை தெரிவித்து உள்ளீர்கள். மிகவும் சரியானதே. நன்றி நண்பரே

                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                  •  babu  from Chennai
                    ஒரு பெண் தனியே நடக்கையில் அவள் ஒரு உயிர், வெறும் ஒரு பண்டம் அல்ல என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்க வேண்டும். ஒரு பெண் தனியே நடந்த செல்கையில் இவள் என் நாட்டு பொக்கிஷம். இவளுக்கு யார் தீங்கு செய்தாலும், சிதைக்க முயன்றாலும் நான் விட மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் வர வேண்டும்

                    a day ago ·   (3) ·   (0) ·  reply (1)


                    •  Janaki  from Mumbai
                      உங்கள் உணர்வு சந்தோசமாகவும் வியப்பாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.பெண்களை பொக்கிஷமாக வேண்டாம் மனிதர்களாக மதித்தாலே நிலைமை மாறிவிடும்.

                      about 24 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)


                    •  K.MUTHUKUMARASAMY  from Laguna Niguel
                      வெரி எச்செல்லேன்ட் ...

                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                      •  KV  

                        இந்த கட்டுரயில் கூறப்படும் அளவுக்கு சிந்தனையும் மனசாட்சியும் உள்ள யாரும் இந்த செயல்களில் இடுபடுவது இல்லை. எனவே இந்த கட்டுரை பிரயோஜனமமில்லாதது... i mean with respect to the purpose of writing.

                        a day ago ·   (7) ·   (9) ·  reply (1)

                        KV  Up Voted
                        Kriti Janarthanan  Down Voted

                        •  KP  from Yorktown Height
                          உங்கள் கூற்று தவறு. இந்தக் கட்டுரை இது போன்ற சம்பவங்களை மனசாட்சி இல்லாமல் விமர்சிப்பவர்களை நோக்கித்தான் எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்தப்பின்னாவது ஒரு சிலராவது தம் தவறை உணர்ந்தால், அதுவே வெற்றி தான்.

                          a day ago ·   (2) ·   (0) ·  reply (0)

                          Janaki  Up Voted

                        •  manjula  from Bangalore
                          அது சரி, இந்த கஸ்டமர் சப்போர்ட்-ல வேலை செய்றவங்களுக்கு நியாயம் கிடைக்க எதாவது அமைப்புகள் இருக்க?(any regulating authorities) compulsory Cab facility to ensure employee safety should be must. Govt should come up more strict rules, Indian Labor law should be applied to all the MNCs who ever have their business here.

                          a day ago ·   (1) ·   (0) ·  reply (0)


                          •  Anbu Raj at SRM University from Chennai
                            yes சார்

                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                            •  ரத்னா  from Tirunelveli
                              சரியாக பெண்களின் மனதை உணர்ந்து,உணராத மனிதர்களையும் சிந்திக்க செய்த தங்களுக்கு அனைத்து பெண்களின் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வாழ்த்துக்கள் தோழரே !

                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                              •  prasath  from Mumbai
                                மூடர்களின் முகத்தில் அடிக்கும் பதிவு ....நண்பா .

                                a day ago ·   (1) ·   (0) ·  reply (0)


                                •  ரத்னா  from Tirunelveli
                                  நன்றி தோழரே ! பெண்களின் மனதை அழகாக படம் பிடித்து,உணராத உள்ளங்களுக்கும் உணரவைத்து, பெண்களும் இந்த யுகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் வளர்சிக்காக பாடுபடுகிறார்கள் என்பதை ஒவ்வொரு இதயமில்லா இதயத்திற்கும் தெரிவித்தமைக்கு அனைத்து பெண்களின் சார்பாகவும் நன்றியை பகிர்ந்து கொள்கிறேன் தோழரே...வாழ்த்துக்கள்...

                                  a day ago ·   (1) ·   (0) ·  reply (0)



                                  • அருமையான பதிவு

                                    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)


                                    •  Sembiyan  from Chennai
                                      தோழரே ! மனசாட்சி இல்லாமல், மதுவின் போதையில் தவறு செய்யும் இந்த மனித மிருங்கங்களை ஏன் மற்ற மனிதர்களை போல நடத்தவேண்டும். கதற கதற நாடு சாலையில் அணு அணுவாக சித்திரவதை செய்யலாமே. பலர்பார்க்க கொடுமைப்படுத்தப்படும்போது, இதனைப்பார்த்து மற்றவன் அதே தவறை செய்ய தயங்குவான். பயப்படுவான். இரண்டு அல்லது மூன்றுபேருக்கு இந்தமாதிரி காட்டுமிராண்டித்தனமாக தண்டனைகள் கொடுத்தால் தவறுகள்/ குற்றங்கள் தன்னாலேயே குறையும்...[மதுவின் போதையில் தவறு செய்பவனுக்கு, சாகும்வரை மதுவை மட்டுமே குடிக்கசெய்யலாம்.. பாலியல் வன்முறையில் ஈடுபடுபவனுக்கு, விலங்குகளுக்கு செய்வதுபோல இரும்பு கருவிகளைக்கொண்டு விரைத்தரிப்பு செய்யலாம்.] நடுரோட்டில் தண்டனை நிறைவேற்றப்பட்டு ,நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டால், குற்றத்தில் அளவு தன்னால் குறையும்...பரிந்துகொண்டு வருபவனுக்கு பாதி தண்டனையாவது தரவேண்டும்...

                                      a day ago ·   (5) ·   (0) ·  reply (0)

                                      Janaki  Up Voted

                                      •  wastefellow  from Bangalore
                                        தனியாக செல்லும் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இங்கு பெங்களூரிலும் கேப்களில் கூட்டிச்சென்று கொள்ளைஅடித்து கொன்ற சம்பவங்கள் உண்டு. பெண்கள் எல்லாம் தற்காப்பிற்கான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டியது தான். இதற்கெல்லாம் நல்ல தீர்வு இந்த மாதிரி ஐ.டி பார்க் களை மாநிலத்தின் எல்லா நகரங்களிலும் கொண்டு வர வேண்டும்(employment decentralization). இதனால் தன் சொந்த ஊரிலே வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். டிராபிக் பிரச்சினை என்று சொல்லி ஊருக்கு வெளியே காட்டுக்குள் ஐ.டி பார்க்குகளை அமைக்க வேண்டியது இல்லை.

                                        a day ago ·   (5) ·   (0) ·  reply (0)

                                        Janaki  Up Voted

                                        •  saroja  from Bangalore
                                          100% சரியாக சொன்னார்.

                                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0)



                                          • ஒட்டுமொத்த குடும்பத்தில் உள்ள வர்களின் மன நிலையை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள் .மனிதா வேசத்தில் உள்ள வக்கிரம் பிடித்தமிருகங்களுக் கு சரியான சாட்டையடி

                                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                            •  veeraputhiran  from Chennai
                                              இந்த ஐ டி நிறுவனங்களுக்கு ஒரு வேண்டுகோள் 8/9 மணி நேரம் வேலைக்கு சம்பளம் கொடுங்கள். 8/9 மணி நேரம் மட்டுமே வேலை செய்யவையுங்கள் காலை 6 முதல் மதியம் 2 வரை ஒரு ஷிப்ட் -1 மதியம் 2 முதல் இரவு 10 வரை ஒரு ஷிப்ட் -2 இரவு 10 முதல் காலை 6 வரை ஒரு ஷிப்ட் -3 ஒவ்வொரு ஷிஃப்ட் முடியும் முன்னும் அடுத்த ஷிஃப்ட் ஊழியர்கள் 30 மணிதுளிகள் முன்னதாக வரவேண்டும் முற்ச்சிக்கலாம்

                                              a day ago ·   (1) ·   (0) ·  reply (0)

                                              M.A.Mohamed Ali  Up Voted


                                              • ஹரியின் பதிவுகள் நூறு விழுக்காடு உண்மை. வக்கிர சிந்தனையுடன் மேலோட்டமாகப் பார்க்காமல் பிரச்சினையின் அடி ஆழம் வரை சென்று அங்குலம் அங்குலமாக அலசி ஆராயப்பட்ட நிஜங்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் தன் பெண்ணை பணிக்கு அனுப்பிவிட்டு அவள் எப்போது திரும்பி வருவாள்,என்று ஏக்கத்தோடு காத்திருக்கும் தாய் தந்தையரின் மனநிலையைத் துல்லியமாகக் காட்டி இருக்கிறது கட்டுரை. 'கடவுளே என் மகள் பத்திரமாகத் திரும்பிவரவேண்டும், அவளைக் காப்பாற்று " என்று இறைவனை ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொண்டிருக்கும் பெறோர்களின் சார்பில் கட்டுரையாளருக்கு நன்றி.

                                                a day ago ·   (1) ·   (0) ·  reply (0)


                                                •  KUMAR LABANASUNDARAM  from Al Ain
                                                  heart touch & truth words sir ! let us respect women !

                                                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                                  •  Selvaraj Sermathi  from Chennai
                                                    நீங்கள் சரியாக சொன்னீர்கள்.

                                                    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                                    •  Venu  

                                                      அருமை அருமை நண்பரே!!! நம் படும் கஷ்டங்களை அருமையாக கூறினீர்கள்

                                                      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                                      •  Oviya  from Bangalore
                                                        எங்காவது ;இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்' என்று பேசும்பொழுது உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொஞ்சம் மனதில் வைத்துப் பேசுங்கள்!

                                                        a day ago ·   (1) ·   (0) ·  reply (0)


                                                        •  murugan  

                                                          நல்ல செல்லுங்க , மன வலி தெரியாத சில ஜென்மங்கள்ளுக்கு இப்பவாது புரியட்டும் .

                                                          a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                                          •  P.Padmanabhan  from Coimbatore
                                                            1. . "அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்!- இது மட்டுமல்ல, திரு. ஹரியின் மற்று கருத்துகளும் மிக நல்ல முறையில் தொகுத்து வழங்க பட்டுள்ளது. ஆயினும் பணிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் , இரவு பணியில் இருக்க நேர்ந்தால் , அல்லது பகல் நேர பணியே இரவில் முடிந்தால் ( செல்வி உமாமகேஸ்வரியின் பணி காலம் முடிந்ததை போல ) தயவு செய்து வெளியே செல்வதை கவனாமாக் முடிவிடுங்கள். செல்வி.உமா ஏன் தனியே நடந்து சென்றார். சிற்றுந்து அழைத்தபடி கிடைக்கவில்லை என்பது சொல்லபட்டாலும், அவர் மற்ற அழைப்பு சிற்றுந்து ( call taxi) நிறுவனங்களுக்கு ஏன் விசாரிக்கவில்லை . தவிர் பெண்களை இரவு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களும் மேலும் பொறுப்பு எடுத்து வசதிகளை பெண்களுக்கு இரவு பணியில் இருந்து செல்லும்போது அதிகமாக கொடுக்கவேண்டும் . செல்வி.உமா போன்றோர் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

                                                            a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                                            •  P.Padmanabhan  from Coimbatore
                                                              2. பாதுகாப்பாக செல்வதற்கு வேறுவகையிலும் முயன்றிருக்கலாம்.. "இன்னும் எத்தனை தூரத்திற்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டுக்கு செல்லும் வரை அவர் பின்னால் ஒரு காவலாளியை அனுப்ப முடியுமா? ஒவ்வொரு சந்திலும் சீ.சி.டி.வீ கேமராவை இணைக்க முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு தவறும் செய்யாத பெண்ணை குறை கூறப் போகிறோம்? எப்போது திருந்தப் போகிறோம்? இன்னும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் இழிபாடுகளுக்கு பெண்களின் ஆடையும், பெண்களின் நடத்தையை மட்டும் குறைகூறுபவர்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு!" போன்ற கேள்விகள் எழுதுவதற்கும் கருத்துக்களை சொல்லுவதற்கும் சரி...ஆனாலும் சில் விதி விலக்கான சூழ்நிலைகளும் அதற்கான தேவைகளும் உண்டு. செல்வி உமா பணி முடிந்து சென்ற காலம், , அங்கே அப்பகுதியிலிருந்த சூழ்நிலைகள், போன்றவைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். மேற்கு வங்க தொழிலாளிகள் போன்றோர் இரவில் சுற்றும் அன்றாட நிகழ்வையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் போன்றோரிடம் மேலே எழுதிள்ள எந்த கருத்து பொருந்தும்? அனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் புதிய வளரும் பகுதிகளில்

                                                              a day ago ·   (0) ·   (0) ·  reply (0)


                                                              •  P.Padmanabhan  from Coimbatore
                                                                3. கட்டுமான பணிகளுக்கு அவர்களை போன்றோர் வந்து தங்குவதையும் தங்களுக்குரிய வசதிக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப ஒன்று சேர்ந்து குடிப்பதும் தவிர்க்க இயலாதது. அந்த நேரத்தில் மனிதஉணர்வுகள் மோசமாக இருக்கும் அல்லது செல்வி உமா போன்ற இளம்பெண்களை, இரவில் தனியே போதை ஏறி மனித உணர்வுகள் குறைந்து சில தீவிர உணர்வுகளின் உந்துதல்களின் வயத்தில் குழுவாக இருப்பவர்கள் பார்த்தால்,, அவர்கள் அப்பெண்ணை கொண்டு உடல் சுகம் காண உந்தப்படுவது நடக்க கூடியதே! யாரிடம் பொறுப்பு அதிகம் வேண்டும்? யார் அத்தகைய வாய்ப்புகளை தவிர்க்கவேண்டும்? திரு.ஹரி அல்லது மற்றவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்.