Monday, February 10, 2014

நினைவில் நின்றவள் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்

எஸ்.வி.சேகரின் வாரிசு அஸ்வின் சேகர் நாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்! இப்பட இயக்குநர் அகஸ்திய பாரதி அறிமுக இயக்குநர், இப்படம் வெளிவருவதற்குள்ளாகவே இயற்கை எய்திவிட்டார் என்பதால் அவரது இரண்டு கல்லூரி படிக்கும் பெண் வாரிசுகளையும் இப்படவெளியீட்டிற்கு முன்பாக அழைத்து தலா ஒரு லட்சம் என ஆக மொத்தம் 2 லட்சங்கள் கொடுத்து 'நினைவில் நின்றார்' எஸ்.வி.சேகர். இனி படம் 'நினைவில் நின்றதா?' என பார்ப்போம்...


காவல்துறை அதிகாரி மகள் கீர்த்தி சாவ்லா சுற்றுலா செல்கிறார். அங்கு 'கைடு' ஆக வரும் அஸ்வின் சேகரின் கனிவான குணம், கசிந்துருகும் மணம் கீர்த்தியை கவருகிறது. அஸ்வின் மீது கீர்த்தி ஒருதலைகாதலில் விழுகிறார். காதலை அஸ்வினிடம் சொல்வதற்கு முன் அஸ்வின் 'எஸ்' ஆகிறார். மீண்டும் ஒரு கொலை கைதியாக அஸ்வினை சிறையில் பார்க்கிறார் கீர்த்தி சாவ்லா! ஏன்? எதற்கு.? எப்படி..? இருவரும் க்ளைமாக்ஸில் ஜோடி சேர்ந்தனரா? இல்லையா.? என்பது சஸ்பென்ஸான மீதிக்கதை!


அஸ்வின் சேகர், கீர்த்தி சாவ்லா, எஸ்.வி.சேகர் எல்லோரும் நடித்திருப்பது பலம். நாடகத்தன்மையில் நடித்திருப்பது பலவீனம்! சோனா ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது ஆறுதல்! சோனாவின் ஆட்டம் மாதிரியே டி.இமானின் இசையும் பெரும்பலம்!

இயக்குநர் அகஸ்திய பாரதி இறைவனடி சேர்ந்துவிட்டதால் அவரது இயக்கம், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகி விடுகிறது.

ஆகமொத்தத்தில், 'நினைவில் நின்றவள்' வெளியீட்டில் எஸ்.வி.சேகர், இப்படத்தின் இயக்குநர் குடும்பத்திற்கு செய்த உதவி மட்டுமே 'நினைவில் நிற்கிறது!'
thanx - dinamalar 



  • நடிகர் : அஸ்வின் சேகர்
  • நடிகை : கீர்த்தி சாவ்லா
  • இயக்குனர் :அகஸ்திய பாரதி