Sunday, January 26, 2014

மாலினி 22 பாளையங்கோட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோயின்  ஒரு நர்ஸ்.கேரளாவில்  இருந்து 2 தோழிகளுடன்  சென்னை வந்து  ஒரு பங்களாவில் ஒன் பை த்ரீ ஆக தங்கி வேலைக்குப்போறாங்க .கால் காசு சம்பளம்னாலும் அது கவர்மெண்ட் காசா இருக்கனும்னு சிலர் நினைப்பது போல் இந்தியாவில் வேலை பார்ப்பதை விட வெளிநாட்டில் வேலை பார்ப்பதை கவுரமாக நினைப்பவர்களும் நாட்ல நிறைய பேர் இருக்காங்க .அதே போல்  ஹீரோயினும் ஃபாரீன் போய் ஒர்க் பண்ண ஆசைப்பட்டு  விசா வாங்க ஏற்பாடு பண்றாங்க .


 விசா  ரெடி பண்ண நடக்கும் முயற்சில அந்த ஆஃபீஸ் ல ஒரு ஆஃபீசர்  கூட ஹீரோயினுக்கு பழக்கம். அது நாளடைவில் காதலா மாறிடுது.ஹீரோயின் வீட்டைக்காலி பண்ணிட்டு காதலன்  வீட்டில்  லிவ்விங்க்  டுகெதரா வாழ ஒரு கண்டிஷனோட  கிளம்பறார். ஒண்ணா ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் நாம் இருவரும் ஒண்ணாகக்கூடாது என்பது தான் அது . எதுக்கு சுத்தி வளைச்சுக்கிட்டு? கில்மா பண்ணக்கூடாது என்பதுதான்  அந்த கண்டிஷன். 

கோஷ்டிப்பூசல் இல்லாம காங்கிரஸ் இருந்துடும் , முதுகுத்தண்டு பெண்ட் ஆகாத அமைச்சர்கள் அதிமுகவில் அமைஞ்சிடுவாங்க , அண்ணன் - தம்பிக்குள்ள பிரச்சனையே வராம கழகம் கண்ணியம் ஆகும் , கேப்டன் சரக்கு அடிக்க மாட்டார் -இத்தனை அதிசயம் நடந்தாலும்   ஒரு இயற்கை விதி மட்டும் மாறாது . பஞ்சும் நெருப்பும் பக்கத்து பக்கத்துல  இருந்தா பத்திக்கும். பத்திக்குது . மேட்டர்  முடிஞ்சிடுது . 





 மேட்டர்  முடிஞ்ச பின் தான் நமக்கெல்லாம் இன்னொரு மேட்டர்  தெரிய வருது. ஹீரோவா இதுவரை இருந்தவர் தான் வில்லன். இவருக்கு தொழிலே புது பைக்கை முதல்ல இவர் ஓட்டிப்பார்த்துட்டு அடுத்து தன் முதலாளிக்கு கொடுத்து  ஓட்டிப்பார்க்கச்சொல்வார். அதுக்கு தனி காசும் வாங்கிக்குவார். இந்தக்கேவலமான அக்ரீமெண்ட்டில் நம்ம நாயகி 420 வது ஆள் .


ஹீரோ வீட்டில்  இல்லாத நேரம் பார்த்து ஓனர் ஹீரோயினை கதற கதற என்ன பண்ணனுமோ அதைப்பண்ணிடறார். அது மட்டும்  இல்லாம  நாயகன் நாயகியை ஒரு போதை மருந்துக்கேசில்  போலீசில்  மாட்டி விட்டுடறார். ஜெயிலுக்குப்போன ஹீரோயின் பின்  ரிலிஸ் ஆகி வில்லன்கள் 2 பேரையும் எப்படிப்பழி வாங்கறார் என்பதே கதை .



22 ஃபீமேல் கோட்டயம் என்ற பெயரில் கேரளாவில்  ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட படம்  தான் தமிழில் முறையா உரிமை வாங்கி  ரீமேக் ஆகி இருக்கு , திரைக்கதை , இயக்கம் நடிகை ஸ்ரீப்ரியா. 


நித்யா மேனன்  தான் ஹீரோயின் . பூ ஒன்று  புயலானது நாயகி விஜய சாந்தி   மாதிரி கேரக்டர். பிரமாதமாப்பண்ணி  இருக்கார் . காதலியாக , அப்பாவி நர்சாக அழகு மயிலாக வரும் காட்சிகளில் அள்ளிக்கறார். ஆனா க்ளைமாக்சில்   வில்லி அவதாரம் எடுக்கும்போது அவர் பாடி லேங்குவேஜில்  செயற்கையோ  செயற்கை . சமீபத்துல இவ்வளவு அடர்த்தியான புருவத்தை பார்க்கலை .நித்யா மேனன் அழகுப்பதுமை


கோவை சரளா காமெடி பண்றேன்கற பேர்ல  படு மொக்கை போடறார். சரியான அலையல் கேஸாக நடித்திருப்பது முகம் சுளிப்பு . ஆம்பளைங்களுக்கே அவர் நடிப்பு இப்படி இருந்தா பொண்ணுங்களுக்கு எப்படி இருக்குமோ? 


நாயகனாக  கிரிஷ் ஜே சதார்  ரொம்ப இயல்பான  முகம் . பசுத்தோல் போர்த்திய  புலியாக அவர் வரும் காட்சிகள்  குட் ஒர்க் . காதல் காட்சிகளில் நாயகி ஓவர் டேக்கி விடுகிறார். ( விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு தகவல் இந்தப்படத்தின்  ஒரிஜினல் மலையாளப்படத்தின்  ஷூட்டிங்க் டைமில்  தான் அதன் இயக்குநர் ஆஷிக் குக்கும் , நாயகி  ரீமா கல்லிங்கல்க்கு ம் காதல் ஆகி கல்யாணம் வரை போச்சு )


வில்லனாக வரும்  முதலாளி கேரக்டரில் நரேஷ் என்பவர் நடிச்சிருக்கார் . படத்தில்  ரேப் சீன்கள்லயும் நடிச்சுட்டு அதுக்கு சம்பளமும் வேற. அந்த குதூகலம்  முகத்தில் நல்லாத்தெரியுது. மேன் மேலும் அவர் பல ரேப் சீன்கள் நடிக்க வாழ்த்து /


திரைக்கதை யில்   ஒரு லவ் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கே  உண்டான திருப்பங்களுடன்  இருப்பது பிளஸ் . ஆனா 20 வருடங்களாக சினிமா உலகம் மறந்து  போன  ரேப்  சீன்களை  தத்ரூபமாக காட்டுகிறேன் பேர்வழி என இறங்கி அடித்திருப்பது மைனஸ் , இதுல   இயக்குநர் ஒரு பெண்  வேற . என்ன தான் சமூக விழிப்புணர்வு என சால்ஜாப் சொன்னாலும்  சொன்ன விதத்தில்  இது பெண்களைக்கவராத படமே . 




நச்  வசனங்கள்



1.   கொச்சி மாதிரி  ஒரு ரிச்சி சிட்டியை இந்தியாவிலேயே பார்க்க முடியாது 



2   சென்னைக்கு இணையான ஊர் தமிழ் நாட்லயே கோவை மட்டும் தான்  ( இந்த மாதிரி ஊர்ப்பெருமை பேசும் டயலாக்ஸ் எல்லாம் அந்தந்த ஊர் ஆடியன்ஸ் கை தட்ட யூஸ் ஆகும் ) 


3  ஒரு பொண்ணுக்கு  2 அண்ணன்கள்  இருக்கலாம்,  2  தம்பிகள்  இருக்கலாம். 2 பாய் ஃபிரண்ட்ஸ் மட்டும்  இருக்கக்கூடாதா? 



4  சாரி, உன்னை கல்யாணம் பண்ணிக்கவும்  முடியாது, நீ என்னை வெச்சுக்கவும்  முடியாது , ஆல்ரெடி நான் கமிட்டட் 


5 குடிச்சுப்பார்க்கனும், குடிக்கறவன் எல்லாம் எவ்ளவ் கஷ்டப்பட்டு அதைக்குடிக்கறான்  அப்டிங்கறதை பொண்ணுங்க தெரிஞ்சுக்கனும்னா அவங்களும் அதை குடிச்சுப்பார்க்கனும் ( நாசமாப்போச்சு )



6  டியர் , ஐ லவ் யூ.. நீ யும்  ஐ லவ் யூ சொல்லு பார்ப்போம் 


 உனக்கு தோணுச்சு , நீ சொல்லிட்டே. எனக்குட்தோணும் போது நான் சொல்றேன் . ஐ.....


 ஐ ? \\


 ஐ டெல் யூ லேட்டர் 



7  தண்ணி அடிக்கற டைம்ல  காபி குடிக்கறியா?ன்னு கேட்டா எப்படி ? 


8  நெகடிவ் பப்ளிசிட்டி  யாருக்கும் நல்லதில்லை 


9  மிஸ் , நீங்க  கோவாவா? 

ம் 

 ஸ்கின் பார்த்தாலே தெரியுது . 

 ஓ , நீங்க ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டா?


10   உன்  நோய்க்கு மரணம் தான் மருந்து 


11   எதிரியோட   உயிர்  போகும் தருணத்துல நாம செஞ்சதுதான் சரி , நாம தான் கடவுள்னு ஒரு எண்னம் நம்ம மனசுல வரும் 



12  இண்டியன்  கோப்ரா - தமிழ் ல இதை ஏன் நல்ல பாம்புன்னு சொல்றாங்க  தெரியுமா?  கொத்துனா உடனே அதிக சித்ரவதை இல்லாம டக்னு உயிர் போயிடும் 


இயக்குநர் பாராட்டு பெறும்  இடங்கள்


 1.  ஹீரோ  - ஹீரோயின்  ரொமான்ஸ் காட்சிகள்   மார்கழிப்பனிக்கு ஓ அந்த மாசம் தான் காலாவதி ஆகிடுச்சா சரி  பொதுவா குளிருக்கு ஏற்ற சூடான காட்சிகள் .


2 மகாநதிதான்  தமிழ் சினிமாவில் அதிக நேரம்  ஜெயில் வாழ்க்கையைக்காட்டிய படமாக இதுவரை  இருந்தது, இது அதுக்கு அடுத்த இடம்  பிடிக்கும்  


3 பெண் வேடம் இட்ட ஆண்   ஜெயிலில் நாயகியை துரத்தும் காட்சிகள் , அவன் சுயரூபம் வெளிப்படும் பர பர சேசிங்க் காட்சிகள் 


4 க்ளைமேக்சில்   ஹீரோயின்  ஹீரோவுக்கு அளிக்கும்  தண்டனை கர்ண கொடூரமா  இருந்தாலும் தியேட்டரில் கைதட்டலை அள்ளிக்கிச்சு 


5  பின்னணி  இசை , எடிட்டிங்க், ஒளிப்பதிவு  போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்  கன கச்சிதம் 

 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஓனரா வரும்  வில்லன்  ஹீரோயினை   ரேப் பண்ணும் காட்சி கொடூரம். அவர் ஒண்ணும் சைக்கோ இல்லை . ஜஸ்ட் மயக்க மருந்தோ , போதை மருந்தோ  கொடுத்து  அல்லது  சரக்கு  குடுத்து  ஹீரோயினை பலவீனப்படுத்தி   கெடுத்திருக்கலாம். அவ்வளவு வன்முறையான ரேப்  எதுக்கு ? வில்லன்  மேல் அதீத வெறுப்பு வர வைக்கவா? 



2  மேலே சொன்ன  பாயிண்ட்டை மெய்ப்பிக்கும் வகையில் வில்லன் ஒரு சீன்ல வீல்  சேரில் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை அடைய  நினைத்து தன் அடியாளிடம் சொல்லும் வசனம் ஒரு சோறு பதம் - பொண்ணுங்க ஓட விட்டு அலைய விட்டு நாம அடைவது  போர், அவங்க எதிர்க்காம அமைதியா இருக்கனும் “ 



3  ஹீரோ இண்ட்டர்வெல்  டைம்ல  ஹீரோயினை ஆறுதலா கட்டி அணைத்து அப்போதே முதுகுப்பக்கமாக செல்லில் ஓனருக்கு  மெசேஜ் அனுப்பறார். அவ  ரெடி ஆகிட்டா அப்டினு . எவ்ளவ் அபாயம் அது .? ஏன் அவன்  தனியா பாத்ரூம் போய் அந்த மெசேஜை அனுப்பக்கூடாது ? 


4  ஜெயிலுக்குள் பெண் வேடத்தில்  நுழையும் ஆண்  ஹீரோயினை தாக்கி மயக்கம் அடைய வைப்பதோடு காட்சி  முடியுது . கொலை  முயற்சியா? அல்லது  வில்லன்  சொன்ன் படி ரேப் செஞ்சானா? என்ற தெளிவு காட்சியில்  இல்லை 


5  ஜெயில்  ரவுடியாக வரும் அந்த நிறைமாத கர்ப்பிணிப்பெண் மிக பரிதாபகரமாக உள்ளார். ரவுடி  தோற்றமே வர்லை 



6 க்ளைமாக்சில்  அந்த  ரவுடிப்பெண்  ஆண்  வேடத்தில்  இருக்கும் பெண்  ரூமில் அவருக்குத்தெரியாமல் ஒளிந்திருந்து பார்ப்பவர் ஏன் கதவை தடார்  என சாத்தி சத்தம் எழுப்பறார்? பூனை மாதிரி வந்திருக்கலாமே? 



7  ஜெயிலில் பெண் வேடத்தில் நுழையும் ஆண் அவ்வளவு அசால்ட்டாக   ரூமை உள் பக்கம்  தாழ்ப்போடாமல்  ஷேவிங் செய்வாரா? ( தாடியைத்தான் ) 



8  ஹீரோயினை  முதல்  முறை  ரேப் செய்யும்  வில்லன் பின்  2 வது  முறை வரும்போது  வீட்டுக்கதவை  ஏன் திறந்தே வெச்சிருக்கார் ?  வர வேண்டும் மகராஜா , வர்வேற்கும் மது  ரோஜா பாட்டு போடாதது ஒண்னுதான்  குறை 



9   நர்சின் பேஷண்ட்டாக வரும் ஒரு பணக்காரர்  எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி அவருக்கு தன் சொத்தில் பாதியை எழுதி வைப்பது நம்பும்படி இல்லை ( மலையாள ஒரிஜினலில்  அந்த பணக்காரருடன்  ஹீரோயின்  கில்மா வெச்சுக்கிட்டு பிரதி உபகாரமா உதவி பெறுகிறார்னு காட்சி வருது போல ., தமிழ்ப்பண்பாட்டுக்காக மாத்திட்டாங்க ) 



10   ஹீரோயின்   தன்  காதலனுடன்   ஹோட்டலில் இருக்கும்போது  ஹீரோ அவரைத்தூண்டி  விட்டு சரக்கு அடிக்கும் காட்சி  ரொம்ப செயற்கை. முதல்  முறை சரக்கு அடிக்கும் பெண் அப்படித்தான் ஊத்தி ஊத்தி அடிக்குமா? ஒரு ரூமில்  யாரும் இல்லாத பொது வேணும்னா அப்டி அடிக்கலாம்.,  ஹோட்டலில் எல்லாரும் பார்க்கும்போது  ஒரு பெண் அப்படி சரக்கு அடிக்குமா? 


11 போதை மருந்து வழக்கில்  ஹீரோயினை போலீஸ்  பிடிக்கும்போது   அவர் செல் ஃபோனில்  யார் யார் உரையாடினாங்க என டெஸ்ட் செஞ்சா வில்லன்கள் மாட்டி இருப்பாங்களே?  ஏன் அப்படி செய்யலை ? 


12  ஹீரோயின்    ஹீரோவுக்கு க்ளைமாக்சில் அளிக்கும்  தண்டனை  அதை கட் பண்ணுவதோடு  விட்டிருக்கக்கூடாது . கை கால் ரெண்டையும் கட் பண்ணி  இருக்கனும் . ஏன்னா  அப்போதான் மத்தவங்க முன்னால அவன் அவமானப்படுவான் . அதை மட்டும் கட் பண்ணிட்டா யாருக்கு அது தெரியப்போகுது ?


13  ஹீரோயினின்  தோழியாக வருபவர் வசதியான வாழ்க்கைக்காக ஒரு தொழில் அதிபருடன் கீப்பாக இருக்கார் என்பது  கதைக்கு எந்த விதத்தில் பயன் ? பெண்களை மிகவும் மட்டம்  தட்டுவது போல் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் வடிவமைக்கட்டிருப்பது படத்தின்  பெரிய மைனஸ்


மனோரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மாலினி 22 படத்தை 30 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் ,இதய பலஹீனம் உள்ளவர்கள் தவிர்க்கவும்




சி பி கமெண்ட் - மாலினி 22 பாளையங்கோட்டை - ரேப் ரிவஞ்ச் த்ரில்லர் - கேரளா வில் நடந்த உண்மைசம்பவம் - விகடன் =41 ரேட்டிங் = 3 / 5 பெண்கள் தவிர்க்கவும்



டிஸ்கி - ஒரிஜினல் மலையாளம்  22  ஃபீமேல் கோட்டயம் ( 2012 ) முழுப்படமும் பார்க்க  லிங்க் -http://www.youtube.com/watch?v=bNofelGKcvc