Friday, January 24, 2014

நேர் எதிர் - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு பொண்ணை  உயிருக்கு  உயிரா  லவ் பண்றார். அந்த ஊர்லயே  ஃபேமசான  ஒரு கில்மா ஹோட்டல்க்கு அந்தப்பொண்ணு கார்ல போறதைப்பார்த்து ஃபாலோ பண்ணி அந்தப்பொண்ணு   ரூம் போட்ட ரூம்க்கு எதிர்  ரூம் ல ரூம் போடறார் ( அடேங்கப்பா, ஒரு வாக்கியத்துல எத்தனை  ரூம் ? நாம போட்டாச்சு ? ) .இப்போ அவளைக்கண்காணிக்கனும். இப்பவெல்லாம் பொண்ணுங்களைக்கண்காணிப்பதுதானே நாட்டோட ஹாட் டாபிக்?


கண்காணிப்பு நடக்கும்போது  ஹீரோ தன் உயிர் நண்பனுக்கு  ஃபோன் பண்ணி  மேட்டரைச்சொல்லி துணைக்கு அவனையும் வரச்சொல்றார். இப்போ  ஒரு ட்விஸ்ட். ஹீரொவுக்கு துரோகம் செஞ்சதும்  ,ஹீரோவுக்கு  நிச்சயம் ஆன பொண்ணோட  கில்மா பண்ண ஹோட்டல்க்கு அந்த ரூம் ல வந்ததும் அந்த  உயிர் நண்பன்  தான். 


 இந்த  ரூம் ல ஹீரோ , அந்த  ரூம் ல  ஹீரோயின் , வில்லன். அவன் வெளில வர வழி இல்லை . இனி என்ன நடக்கும் ? என்பதன் பர பரப்பான  க்ரைம்  த்ரில்லர் தான் நேர்  எதிர்  கதை .


அஜித்தின் மச்சானும் , ஷாலினி அஜித்தின் தம்பியும் ஆன  ரிச்சர்ட் தான் படத்தின்  வில்லன். ப்ளே பாய் கேரக்டர் பிரமாதமாப்பண்ணி  இருக்கார். கதிர்  இயக்கத்தில் காதல் வைரஸ் ல ஹீரோ வா நடிச்சாரே அவரே  தான் . படத்தில் மொத்தம் உள்ள  முக்கியமான அஞ்சு கேரக்டர் ல இவர்  தான்  முதல் பரிசு வாங்கறார். முகத்தில் பதட்டம் காண்பிக்கும்போதும் சரி , ஒரே  ஹோட்ட்ல ல 2  ஃபிகருங்களைக்கரெக்ட் பண்ணும்போதும் சரி அப்ளாஸ் அள்ளறார் ( தியேட்டர்ல இருந்த 13 பேர்ல அப்ளாஸ் அடிச்சது நாம மட்டும்  தான் . ஒரு பில்டப் வேணாமா? )


ஹீரோவா வருபவர்  புதுமுகம் பார்த்தி . ஏதோ பரவாயில்லை என்ற அளவில் தான் இவர் நடிப்பு . வாய்ஸ் மாடுலேஷனில்   வெரைட்டி காண்பிக்கிறேன் பேர்வழி என இவர் நிறுத்தி  நிதானமாக வசனம் பேசுவது வசனத்தை ஒப்பிப்பது மாதிரி இருக்கு . 



ஹீரோயினாக வரும்  வித்யா  60 மார்க்  போடும் அளவு சுமார் அளவைத்தாண்டிய   ஃபிகர் என்றால் , வில்லனின் எக்ஸ் & கரண்ட் கேர்ள்  ஃபிரண்டாக வரும் அந்த  ஃபிகர்  75 மார்க் அளவு பிரமாதமாக இருக்கார். இந்த  இயக்குநர்கள்ட்ட இருக்கும் கெட்ட பழக்கமே   சுமார்   ஃபிகரை  ஹீரோயினா போட்டுட்டு , பக்கா  ஃபிகரை  துணைக்கேரக்டரில்  போட்டுடுவதுதான் ( இதுக்கு ஏதாவது  முக்கிய உளவியல் , களவியல் காரணம் இருக்கும் என அவதானிக்கிறேன் , நேரம்  கிடைக்கையில்  விசாரித்து  இது பற்றி தாளிக்கிறேன் ) 


ஹோட்டல்   ரூம் பாயாக வரும்  எம் எஸ் பாஸ்கர்    கச்சிதமான நடிப்பு , அல்வா வாசுவும் இருக்கார் ,ஒரு சீனில் மட்டும் காமெடி பண்றார் . 


ஏதோ ஹாலிவுட் படத்தைப்பார்த்து  எடுத்திருக்கார்னு அப்பட்டமா தெரியுது . (நேர் எதிர் = உன்னோடு ஒரு நாள் = ACROSS THE HALL ( 2009))பரபரப்பான  கதை  தான் , நகாசு வேலைகள்  சேர்த்து  இன்னும் கலக்கி  இருக்கலாம் .100 நிமிடம் தான் மொத்தப்படமே . இயக்குநர் , ஜெயபிரதீப்  முதல் படம் என்ற அளவில்   ஓக்கே  தான் .  இசை சதீஷ் சக்ரவர்த்தி , பல இடங்களில்  பி ஜி எம்களில்  ஹாலிவுட் பட தழுவல் அப்பட்டமாய்த்தெரியுது . 

 என் பேரு லட்சுமி என்ற  ஒரு பாட்டில் அந்த  முதல் வரி புரியவே பாட்டு  முடிஞ்சிடுது . அது  ஒரு  ஹிட் பாட்டு 

 

இயக்குநரிடம்  சில கேள்விகள் 



1.  நிச்சயம் ஆன பெண்  அதே  ஊரில்  கில்மா லாட்ஜில்  ரூம் போடுமா?  டீசண்ட்டான  ஹோட்டலில்  தங்க மாட்டாங்களா? 


2   ஹீரோ  அந்த  ஹோட்டலுக்கு வந்து   ஹீரோயின் தங்கின  ரூம் எது என லெட்ஜரில் பார்த்து அதுக்கு  எதிர்  ரூம் வேணும்  என கேட்டு வாங்குவது பின்னாளில்  சாட்சி ஆகி விடாதா?  நானா  இருந்தா   ஜஸ்ட் சுத்திப்பார்க்கறேன்னு சொல்லி ஹீரோயின் ரூம்  நெம்பர்  நோட் பண்ணி  அதுக்கு  எதிர்  ரூம் எதுன்னு பார்த்துட்டு வந்து பின்  ரிசப்சனில்  குறிப்பிட்ட  ரூம் நெம்பர் வேணும் என கேட்டிருப்பேன் . கேட்டா லக்கி நெம்பர்னு  சாக்கு சொல்லிக்கலாம் 


3  ஹீரோயின்  ரூம் புக் பண்ண  ஹோட்டல் வரும்போது ஒரே  ஒரு ஹேண்ட் பேக் தான் வெச்சிருக்கார் . ஆனா ரூமுக்குள்  அவர் வரும்போது  ரூம் பாய் எக்ஸ்ட்ரா ஒரு ட்ராவல் பேக் கொண்டு வர்றார் . அடுத்த  சீனில்      3 பேக் ஆகிடுது . எப்டி ? 


4  யாரும்   5 வது மாடில  இருந்து டக்னு எஸ் ஆகிடக்கூடாதுன்னு   ஹீரோ தம்பிள்சை  லிஃப்ட் கதவின் இடுக்கில் மாட்டி வெச்சுடறார். ஓக்கே , ஆனா   ரிசப்ஷனில்  வார்னிங்க்  லைட்  எரியுமே ? ஏன் 6 மணி  நேரமா  யாரும் பார்க்கலை ? யாருமே லிஃப்டில் போக  முயற்சிக்கலையா? 



5  ஹீரோயின்  தங்கும்  ரூம்  நெம்பர் 504 . அதே வரிசையில்  5  ரூம்  இருக்கு.  ஆனா   504 க்கு  எதிர்  ரூம்  507 எப்படி  வரும் ?  அந்த வரிசையில்  ஹீரோயின் ரூம் 2 வது  ரூம் . 


6 வில்லன்    ரூமுக்குள்ளே   இருந்துக்கிட்டே  தன் நண்பனான  ஹீரோ கிட்டே  ரிசப்ஷன் க்கு கீழே  போ என   ஃபோனில்  சொல்றார். அந்த வாக்கியத்திலேயே தப்பு ,  காட்டிக்குடுத்த மாதிரி ஆச்சு . அவர் வெளில  இருந்து பேசுவது  போல் காட்டிக்கொள்வதால்  கீழே வா என  தானே அழைக்கனும் ? கீழே  போ என்றால் அவர் அந்த  ஹோட்டலில்  இருப்பது   ஹீரோவுக்கு  தெரிந்து  விடாதா? 

7 கதையின்  முக்கிய  ட்விஸ்ட்டே     வில்லன் தன்  செல் ஃபோனை  ஹீரோயின்  ரூம் ல போட்டுட்டு  ஹீரோயின்  ஃபோனை மாத்தி எடுத்துட்டுப்போவதில்  தான்  இருக்கு . அதை  ஹீரோயின் பார்த்துடறா. உடனே ஏன் அவ  ஃபோன் பண்ணி சொல்லலை ? 


8  வில்லன்  ஹீரோயின்  ரூமில்  இருந்து வெளியே வர வழி  இல்லை .  ஹீரோ எதிர்  ரூம் ல  இருந்து  நோட் பண்ணிட்டு இருக்கான் .  டைவர்ட் பண்ண   ஹீரோ லேண்ட் லைன் நெம்பருக்கு  ஃபோன் பண்றான் , ஹீரோ   கதவை விட்டு நகர்ந்ததும்   வில்லன் டக்னு  ரூமை விட்டு வெளியேறும் காட்சி கலக்கல்  தான். ஆனா இந்த  ஐடியா  ஹீரோவுக்கு ஏன் தோணலை ?  ஃபோனை அட்டெண்ட் பண்ணுனதும் கட் ஆகுதே , உடனே ஏன்  ஒடிப்போய் பார்க்கலை ? 


9  ஏன்  சைலன்ஸர் பொருத்தாம    ஹீரோ  ஒரு ஹோட்டல்  ரூம் ல கொலை செய்யனும் ? 


10  போலீஸ்   ஹோட்டலை சூழந்ததும்   ஹீரோ   ரூம் பாய்  டிரசில்  ஈசியா தப்பிச்செல்வது  போல் காட்டறாங்க. கொலை நடந்த  ஹோட்டலில்  விசாரணை  முடியும் வரை  யாரையும்  வெளில போக அனுமதிக்க மாட்டாங்களே? 


11  கொலை செய்யப்பட்ட  ஹீரோயின்  செல்  ஃபோன் ல லாஸ்ட்   ரிசீவ்டு கால், டயல்டு கால்  செக் பண்ணாலே   ஹீரோ மாட்டிக்குவாரே? டக்னு படத்தை  முடிச்சுட்டா  எப்படி ? 



 

நச்  வசனங்கள் 


1.ஹோட்டல் ல நாள் கணக்குல தங்கறவங்களை விட மணிக்கணக்கில தங்கறவங்க தான் அதிகம்



2 மிஸ்!,லிப்ட் ல போனா சீக்கிரம் மேலே போய்டலாம். யா.லைப் லயும் மேலே போய்டலாம்.படிக்கட்ல நடந்தாதான் ஆரோக்யம்


3 நாட் ல 5000 கோடி ஊழல் நடத்தினவன் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழறான் , ஆனா  5000 ரூபா லஞ்சம் வாங்குன சாதா ஆளை  ஜெயில்ல தள்ளுவாங்க


4 நண்பனுக்கு துரோகம் செய்யறவன்  வேற எது செய்யவும் அஞ்ச  மாட்டான் 



5 அவ மேல  உயிரையே வெச்சிருக்கேன்னு சொல்வியே , இப்போ உயிரையே எடுத்துட்டியே?


 உயிர்  போற வலியை  விடக்கொடூரமானது நம்பிக்கைத்துரோகம் 

 

சி பி கமெண்ட் -        இது   ஹாலிவுட் படத்தின் காப்பியோ , ஒரிஜினலோ படம் பர பரப்பா தான் போகுது . ஆனா   100  நிமிடம் என்பதால்  சிலருக்கு  ஃபுல்   மீல்ஸ் சாப்பிட்ட  திருப்தி  இல்லாமல்  போகலாம் . மற்ற படி ஒரு நல்ல க்ரைம்  த்ரில்லரே .ஈரோடு  தேவி அபிராமில படம் பார்த்தேன் 


ஆனந்த விகடன் மார்க் = 40 


 ரேட்டிங்க்  =  2.5 / 5

Across the Hall (2009) Poster