Wednesday, January 22, 2014

ஜூ.வி. சர்வே - அடுத்த பிரதமர் யார்?

நடப்பு கூட்டணி அரசியலை முன்வைத்து 'தேர்தல் 2014’ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். விகடன் நிருபர் படை நேரடியாக எடுத்த அந்த சர்வேயில் 9,174 பேர் பங்கேற்றனர். அதே நேரத்தில் விகடன் டாட் காம் மூலம் ஆன்லைனிலும் சர்வே எடுத்தது ஜூ.வி. சர்வேயில் பங்கேற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். இதற்காக தமிழகத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஆன்லைன் சர்வேயில் பங்கெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேரடியாக எடுத்த சர்வே முடிவுகளோடு கிட்டத்தட்ட ஒத்து போயிருந்தன ஆன்லைன் சர்வே முடிவுகள்.





பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் சேர்ந்தால், அது 'முரண்பாடாக இருக்கும்’ என்று நேரடியாக மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் 41 சதவிகிதம் பேர் சொல்லியிருந்தனர். ஆனால், ஆன்லைன் சர்வேயில் 47 சதவிகிதம் பேர் பலமான அணியாக இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்ற கேள்விக்கு நேரடியான சர்வேயில் 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. ஆனால், ஆன்லைன் சர்வேயில் பி.ஜே.பி. கூட்டணி என 57 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.


இதுதவிர மற்ற கேள்விகள் அனைத்தும் ஏற்கெனவே எடுக்கப்பட்ட நேரடியான சர்வேயுடன் ஒத்துப்போயின.


இனி சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு...

 




நன்றி -ஜூனியர் விகடன்