Sunday, January 19, 2014

Nenokkadine - சினிமா விமர்சனம்

 
ஹீரோ  ஒரு  ராக் ஸ்டார். மேடைப்பாடகர்.ஓப்பனிங்க்லயே இவர்  போலீஸ் ல சரண்டர் ஆகி தான்  3 கொலை செஞ்சதா வாக்குமூலம் தர்றார். சின்ன வயசுல  தன் பெற்றோரை கொலை செஞ்சவங்க தான் அவங்க . ஆனா போலீஸ் சம்பவம் நடந்த இடத்துக்குப்போகும்போது அப்படி ஒரு சம்பவமே நடந்த மாதிரி  தெரியல. டெட் பாடி  எதுவும் கிடைக்கலை . போலீஸ்  ஹீரோவை  ரிலீஸ் பண்ணிடுது .


ஹீரோவுக்கு  ஏதோ சைகலாஜிக்கல் பிராப்ளம் அப்டிங்கற மாதிரி  சுத்தி  இருக்கறவங்க எல்லாம் சொல்ல்றாங்க . அதாவது  இல்லாத ஒண்ணை இருப்பது  போல் கற்பனை பண்ணிக்குவது. 


 அதை  நிரூபிப்பது போல் பல சம்பவங்கள் நடக்குது. இதுல  குறுக்கால  டி வி மீடியா ரிப்போர்ட்டர் வேற இவர் வாழ்க்கைல  குறுக்கிடறார். அவர் இந்த கேஸ்ல இம்ப்ரெஸ் ஆகி ஹீரோவுக்கு  உதவறார்.  இப்போ   ஹீரோவுக்கு   3 வேலை   1 தன்  பெற்றோரைக்கொன்னவங்களைப்பழி வாங்கனும் . 2 ஹீரோயினை லவ் பண்ணனும்   3 தனக்கு சைக்கலாஜிக்கல்  பிராப்ளம் எதுவும் இல்லை , நார்மல்  தான் அப்டினு வெளி உலகத்துக்கு  நிரூபிக்கனும். 



 இதை  எல்லாம்  ஹீரோ எப்படி  செய்யறார் என்பதே கதை 

  சும்மா  சொல்லக்கூடாது  இயக்குநர்  சுகுமார்க்கு தில் ஜாஸ்தி  தான். ஏன்னா வழக்கமான பழி வாங்கல் கதை , மசாலாக்கதையையே பார்த்த தெலுங்கு ஆடியன்ஸ்க்கு ஒரு மாறுபட்ட சைக்கலாஜிக்கல் த்ரில்லரை அதுவும் மகேஷ்  பாபுவை வெச்சுக்குடுக்க எண்ணம் வந்திருக்கே? வெல்டன் . ஆனா தமிழனுக்கு இது ஒண்ணும்  புதுசு  இல்லை. குடைக்குள் மழை , முப்பொழுதும்  உன் கற்பனைகள் , கஜினி  உட்பட பல படங்கள் இந்த மாதிரி பார்த்தாச்சு 


இயக்குநருக்கு அடுத்து நம்ம மனசில் இடம்  பிடிப்பது ஒளிப்பதிவாளர்  தான். ரத்தினவேலுவின்  கேமராவில்   கோவா , பாங்காங்க் , யு கே என ஃபாரீன்  லொக்கேஷன்களில் கலக்குது . ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஒளிப்பதிவு , லொக்கேஷன்  செலக்சன் 


 அடுத்து நம்ம தேவிப்ரசாத்தின் பின்னணி  இசை . ஒரு சைக்கோ த்ரில்லருக்கு  பி ஜி எம் எவ்வளவு  முக்கியம்னு சொல்ல வே தேவை  இல்லை. பாட்டு கூட  சுமாரா  இருந்தாப்போத்ம், ஆனா பி ஜி எம் கலக்கலா இருக்கனும் . பிரமாதமா பண்ணி  இருக்கார் , சபாஷ் 


 ஆக்சன் காட்சிகள் , ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பு பிரமிக்க வைக்குது 


 இப்படி  டெக்னிக்கல் பிரம்மாண்ட்ங்கள்க்குப்பிறகுதான்   நடிகர்கள்  பங்களிப்பே  கண்ணுக்குத்தெரியுது 

ஹீரோவா   மகேஷ் பாபு . அண்ணனுக்கு  புது கேரக்டர் . நம்ம ஊர் செல்வராகவன், தனுஷ் படங்கள் பார்த்தவங்களுக்கு சைக்கோ கேரக்டர் எல்லாம் மனப்பாடம் . புதுசா உருவாகும் சைக்கோக்கள் கூட  முதல்ல செல்வ ராகவன் படம் பார்த்துடறதா  ஒரு புரளி கிள்ம்பிட்டு இருக்கு , மகேஷ் பூபதி தன் பாணீல  சைக்கோவுக்கு  செயல் வடிவம்  கொடுத்து  இருக்கார் . டான்ஸ் காட்சிகளில் வ்ழக்கம் போல் கலக்கல்  தான் . அதுவும்  குறிப்பா இந்த்   சைடில்  இருந்து அந்த சைடுக்கு   ஷூ முனைக்கால்களால் நகரும் காட்சி  வாவ்!! 


பிரபு தேவா , ராஜூ சுந்தரம் , விஜய் பாதிப்பு இல்லாமல் சொந்த மாக நடனம் ஆடும்  வெகு சில ஹீரோக்களில்  இவரும்  ஒருவர் . ஃபைட் காட்சிகளில்  ரிஸ்க்  எடுத்திருக்கார் . இந்தப்படம்  அவருக்கு பாக்ஸ் ஆஃபீசில் கல்லா கட்டிடும் , விமர்சன ரீதியாவும் பாராட்டு கிடைச்சுடும் 


 ஹீரோயின் க்ரிட்டி சனான் ( KRITI  SANON).இவர்   கூந்தலில்  பியா சாயல் , முக அமைப்பில்  விக்ரம் லிசி சாயல் , தைப்பூசத்தில் ( THIGH) ரம்பா சாயல் , தன்னம்பிக்கையில்  ரம்யா கிருஷ்ணன் சாயல் என கலந்து கட்டி அடிக்கிறார். இவர்  உதடு தான்  ரொம்ப சின்னது . ஆனா அதைப்பத்தி நமக்கென்ன கவலை ? படத்தை ரசிப்பதோட நம்ம கடமை  முடிஞ்சுடுதே ! 


சாயாஜி ஷிண்டே , நாசர் இவங்களும் படத்தில்  இருக்காங்க . ஆனாலும்  பெரிய தாக்கம் ஏதும்  இல்லை 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1,.. படத்தின்  மையக்கருத்து ,திரைக்கதை  இழை  ஹாலிவுட் படம்னான  த பர்ன் ஐடெண்ட்டிட்டி  பாகம் 1 , 2 ,3  சாயல்  இருந்தாலும்  இயக்குநர் சாமார்த்தியமா  அதை  மூடி மறைச்சு திரைக்கதையில்  ஜால வித்தை  புரிந்தது 


2  வில்லனின் ஆள்  பேசிக்கொண்டிருக்கும்போதே கடலில்   போட் மூலம் தூக்கும் கலக்கலான்  லாங்க் ஷாட் 


3  ஓப்பனிங்க்  சீனில்  எதிர் வரும் காரை  நோக்கி பயணிக்கும்,  ஹீரோ பைக்கில்  இருந்து அப்டியே ஜம்ப் பண்ணி பைக்கை மட்டும் காரை  நோக்கி   தற்கொலைப்படை தனு மாதிரி அனுப்பும் காட்சி கலக்கல் 


4   ஓ மை  ஹார்ட் ;பாடல் காட்சி  முழுக்க  ஹீரோ பயன்படுத்திய  டான்ஸ் உத்திகள் அருமை 


5   எரிந்து போன் மோட்டார் படகில்   இருந்து  ஹீரோ பாராசூட்  மூலம்  வெளி வரும் காட்சி , அதற்கான பி ஜி எம்  செம 


6 இண்ட்டர்வெல் ஃபைட்க்குக்கான  பி ஜி எம்  அருமை 


7  தூம்  3 யை   நினைவு படுத்தினாலும் பைக் சேசிங்க் காட்சி செமயா படமாக்கப்பட்டிருக்கு 

8   மகேஷ் பாபுவின் பையன் இந்தப்படத்தில்  ஒரு ரோலில் வர்றான் , சோ க்யூட் 

இயக்குநரிடம்  சில கேள்விகள்

1,  இப்படத்தின் திரைக்கதை  பி , சி செண்ட்டர் ரசிகர்களுக்கு சுத்தமாப்புரியாது என்பதை எப்படி இயக்குநர் கவனிக்க மறந்தார் ?  ஒரு வேளை  புரிஞ்சாதானே கேள்வி  எல்லாம் கேட்பாங்கனு நினைச்சுட்டாரோ ? 



2 க்ளைமாக்ஸ்  சீன்ல்  ஹீரோவைச்சுத்தி  13 பேர் துப்பாக்கியோட   நிக்கறாங்க . அவங்களூம்  சுடறாங்க , ஹீரோவும்  சுடறார் . 3  அடி தூரத்துல எல்லாரும்   இருந்தும்  ஒரு புல்லட்  கூட ஹீரோவை எதுவும்  செய்யலையே ? எப்படி ? 


3 பைக்  சின்னா பின்னம் ஆகி கிடைக்கு , பைக்கில்  பயணித்த ஆள் எஸ் அவது  கூட  போனாப்போகுதுன்னு  ஜீரணிச்சுக்கலாம் , ஆனா  அவர்  செல் ஃபோன்  புத்தம்புது காதலி சிணுங்குவது மாதிரி   ரிங்க் கேட்பது காதில்  பூ 


சி பி கமெண்ட் - ஆக்சன் பிரியர்கள் , மசாலா ப்ரியர்கள் , மகேஷ் பாபு ரசிகர்கள் பார்க்கலாம் ,  விஜய்  ரசிகர்கள் எதுக்கும் பார்த்து வெச்சுக்குங்க, ஒரு வேளை விஜய் இந்தப்படம் செய்யக்கூட வாய்ப்பு  இருக்கு 


 ரேட்டிங்க்  =  3 / 5