Friday, January 10, 2014

ஜில்லா - சினிமா விமர்சனம்

ஊருக்கே  தாதா  மோகன் லால்.அவரோட  டிரைவரோட பையன் தான் விஜய்.சின்ன வயசுல  நடந்த  ஒரு ரகளைல மோகன் லால் மனைவியின்  உயிருக்கு வந்த ஆபத்தில்  இருந்து விஜய் காப்பாத்துவதால் அவரைத்தன் வளர்ப்பு மகனாவே மோகன் லால் வளர்க்கிறார். விஜய்யோட  நிஜ அப்பா ஒரு போலீஸ் ஆஃபீசர் கையால  சாவதால் விஜய்க்கு சின்ன வயசுல  இருந்தே போலீஸ்னாலே வெறுப்பு .


காஜில் அகர்வால்  போலீஸ் ஆஃபீசர் ( யாரும் சிரிக்கப்படாது,இந்தக்கதைல எல்லாரும் போலீஸ் தான் , ஹீரோ , ஹீரோயின்,காமெடியன்).ஹீரோயின் போலீஸ் -னு தெரியாம ஹீரோ பொண்ணுப்பார்க்கப்போறார்.போலீஸ்னு தெரிஞ்சதும் ஜகா வாங்கறார். அதை வெச்சுக்கொஞ்சம் காமெடி , கலாட்டான்னு படம் ஜாலியாத்தான் போகுது. 

மோகன் லாலுக்கு  போலீஸ்னாலே ஒரு  சிக்கல் வருது. அப்போதான் அவர் முடிவெடுக்கறாரு, நாம ஆபத்தில்லாம தொழில் பண்ணனும்னா நம்மாளு ஒருத்தன் போலீஸ் ஆஃபீசரா  இருக்கனும்னு. விஜய்  அசிஸ்டெண்ட் கமிஷனரா ஆகிடறார். 


ராமர் அவதாரம் எடுத்த ராவணன்  சீதையைத்தொடப்போனப்ப ராமர் நல்ல மனசும் வந்துட்டதால  டச்சிங் டச்சிங்க் பண்ணாமயே வீணாப்போன மாதிரி ஹீரோ போலீஸ் ஆனதும் மனசு மாறிடறார்.

விஜய்க்கும் ,மோகன் லாலுக்கும் முட்டிக்குது.இடைவேளை.


அதுக்குப்பின் என்ன நடக்குது? தங்கச்சி செண்ட்டிமெண்ட் , அம்மா  செண்ட்டிமெண்ட் ( நம்ம அம்மா இல்ல , நிஜ அம்மா ) ,தம்பி செண்ட்டிமெண்ட் எல்லாத்தையும் கசக்குப்பிழிஞ்சு ( ஃபேமிலி ஆடியன்ஸ் வேணுமே? ) படத்தை முடிக்கறாங்க .


எது எப்படியோ தலைவா தோல்வியால் துவண்டு போன விஜய்க்கு இது  பூஸ்ட் அப் குடுக்கும் படம்  தான்.

மோகன் லாலின் கம்பீரமான நடிப்பு , கணீர்க்குரல் அவருக்கு பெரிய பிளஸ்.பல காட்சிகளில் அநாயசமான நடிப்பு .விஜய் , மோகன் லால் காம்போ காட்சிகளில்  மோகன் லாலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு .


விஜய் இந்தப்படத்தில்  ரொம்ப இளமையா , அழகா , புதுப்புது மேனரிசத்தோட ,வசன உச்சரிப்பில்   சில மாற்றங்களோட வர்றார். தேவை இல்லாத பஞ்ச் டயலாக்ஸ் எதுவும் பேசாம கனகச்சிதமான நடிப்பு . 

போக்கிரி படத்தில் போலீஸாக வந்தாலும் யூனிஃபார்மில்   அவரை அதிக நேரம் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இதில் பாயாசத்துடன் விருந்து . போலீஸ்  யூனிஃபார்மில் கலக்கிட்டார். 

பாடல் காட்சிகளில் வழக்கமான விஜய் துள்ளாட்டம் போட்டிருக்கிறார். காவலன் படத்தில் அசினின் பின்னால பதம் பார்த்தவர் இதில் காஜல் பின்னாடி போய் பின்னால  பரோட்டா  பண்றார். இனி விஜய் ரசிகர்கள் காதலிகளிடம் இதைச்சொல்லியே பரோட்டா ஆர்டர் செய்வாங்கனு எதிர்பார்க்கலாம். 


காஜல் அகர்வால்  படம்  முழுக்க   4 ரீல் கூட வர்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டும் தான் குங்கும நெற்றியுடன் வர்றார்.மற்ற காட்சிகளில் எல்லாம் சாதா நெத்திதான். முந்திரி இல்லா கேசரி மாதிரி இருக்கு.அவருக்கு மேக்கப் விமன் யார்னு பார்த்து  பாதி சம்பளம் கட் பண்ணனும் , லிப்ஸ்டிக் எடுபடாத கலரில். அவர் இயல்பான இதழே கனகாம்பரக்கலர் தானே? எதுக்கு வானவில்லுக்கு வல்லியனா ஒரு மேக்கப் ? இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ரொம்ப நல்ல கேரக்டர் போல , கிளாமர் காட்சிகளில்  அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்கள்.வரும் காலத்தில் இந்த மாதிரி நல்லவர்கள் கூட எல்லாம் கூட்டணி வைக்க வேணாம் என விஜயைக்கேட்டுக்கொள்கிறேன்.

புரோட்டா  சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில்  சிரிக்க முடியுது. 


முன் பாதி  திரைக்கதையில்  இருந்த வேகம்  பின் பாதியில்  இல்லை . கடைசி 30 நிமிடங்கள்  இழுவை . மொத்த படம்  3 மணி நேரம் என்பதால்  ரசிகர்கள்  பொறுமை காக்க வேண்டி  இருக்கு. எடிட்டிங்கில் இன்னும்  ட்ரிம் பண்ணி  இருக்கலாம். 

விஜய்  ஒரு பாட்டு பாடி  இருக்கார். நல்ல வாய்ஸ் . குத்தாட்டத்தை  விட மெலோடியை அதிகம் நம்பிய இமானுக்கு  ஒரு ஷொட்டு . 

படம்  முழுக்க ஆங்காங்கே வரும்  ஜில்லா ஜில்லா தீம் இசை  ரசிகர்களிடையே பலத்த ஆரவாரம் பெறுகிறது 
திருப்பூர்  சிவன் தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ,டிக்கெட்  ரேட் 200  ரூபா

சபாஷ்  சத்யா 


1. கண்டாங்கி சேலை பாட்டில் மூங்கில்  தோட்ட லொக்கேஷன் , பின் புலத்தில் கேரள கத களி ஆட்டக்காரர்கள் கண்ணுக்கு விருந்து 



2  கேரள மார்க்கெட்டுக்காக மோகன் லாலுக்குத்தரப்பட்ட முக்கியத்துவம் , அவரின் பிரமாதமான பர்ஃபார்மென்ஸ் அப்ளாஸ் அள்ளுது

3 தாதா கதை என்றாலும்  வன்முறைக்காட்சிகள் எதையும் காட்டாமல்   ஃபேமிலி செண்ட்டிமெண்ட்ஸ் காட்சிகளால் திரைக்கதை அமைத்த சாமார்த்தியம் 


4.  இமானின் இசை , பின்னணி இசை , ஒளிப்பதிவு , ஆர்ட் டைரக் சன்  எல்லாமே   ஒரு கமர்ஷியல் மசாலாப்படத்துக்கு என்ன தேவையோ அதை  நிறைவேற்றிய விதம் 



சொதப்பல் சொப்னா 



1. விஜய் அப்பாவுக்கு என்ன தான் செல்வாக்கு  இருந்தாலும்  இன்ஸ்பெக்டர் போஸ்ட் வாங்காமல் டைரக்டா  அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டே வாங்கித்தருவது ஓவர்னா   அவர் வாழும் அதே  ஏரியாவிலேயே போஸ்ட் வாங்குவது சாத்தியமே  இல்லை. போலீஸ்  முத  ரூல்ஸே அவங்க பிறந்த  ஊர், வாழும்  ஊரில் பதவி வகிக்கக்கூடாது என்பது தானே? 


2. போலீஸ்  மீட்டிங்க் நடக்கும்போது  வராண்டாவில்  எல்லாரும்  நிக்கறாங்க.  ஏ சி சார்க்கு  ஒரு சேர்  கூடவா கிடைக்கலை? ஏன் ஜீப் மேல ஏறி  நின்னு  “ அன்பார்ந்த வாக்காளப்பருமக்களே “ரேஞ்சுக்கு காமெடி பண்றார்? 


3. போலீஸ் கமிஷனர்  ஐயப்ப சாமி  தாடி வைக்கலாம், ஆனா ஸ்டைலிஸ் பிரெஞ்ச்  தாடியுமா? 


4. காஜல் சேறில் விழுந்து எழுந்து நடக்கும்போது பின்னால் விஜய் ஃபாலோ பண்ணும்போது “அழகே பிரம்மனிடம் மனுக்குடுக்க போய் இருந்தேன் “பாடல் பல்லவி  இசை  பி ஜி எம்மா வருதே ஏன்? 


5. வாசல்ல நிறுத்தி வெச்ச பைக்கை  மோகன் லால் தள்ளி விடும்போது பெட்ரோல் டேங்க்  மூடி ஓப்பன் ஆகி  பெட்ரோல் கொட்டுதே எப்படி? அதை லாக் பண்ணித்தானே சாவியை எடுக்க முடியும் ? சாவி இல்லாம எப்படி  ஓபன் ஆச்சு? 

6. விஜய்  தன் தம்பியை  ஒரு ரூமிலடைத்து  வெளியே போகும்போது வில்லனைப்பத்தி  ஒரு எச்சரிக்கை ஏன் செய்யலை ? செஞ்சிருந்தா அவர்  தப்பி  ஓடி வில்லன்  கிட்டே மாட்டி  இருப்பாரா? 


7. மரணத்தின்  விளிம்பில்  இருக்கும் தம்பி “ஹாஸ்பிடலுக்குப்போகாதே , அப்பா கிட்டே கூட்டிட்டுப்போ , என்னைக்கொன்னது யார்னு சொல்றென்”னு சொல்வது ஏன்? செல் ஃபோன் எதுக்கு இருக்கு?ஹாஸ்பிடல் போய்ட்டே  ஃபோன்ல சொல்லலாம், எஸ் எம் எஸ் ;பண்ணலாம் . 


8. சூரி  எதுக்காக  தம்பி அடைக்கப்பட்ட  ரூமுக்கு  உள்ளே கதவைத்திறந்து போறார்? அது தேவையே  இல்லையே?

தாரை தப்பட்டை  முழங்க  ரசிகர்களின்  வெற்றிக்கொண்டாட்டம்


நச் வசனங்கள்

1எதிரிய எதிர்ல வெச்சுக்கலாம் . ஆனா துரோகிய தூரத்துலக்கூட வெச்சுக்கக்கூடாது.... # பன்ச்


2  போலீஸடிச்சுப் பாத்திருப்ப - போலீஸையே அடிச்சுப் பாத்துருப்ப? # அதான் காஜல் ..!


3ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒன்னு குணமாகிப்போகனும், இல்ல பொணமாகிப்போகனும் ....!!


4. அழிக்குறவந்தாண்டா சிவன் - இந்த சிவன அழிக்குற சக்தி எவனுக்குமில்லை ... # மோகன்லால் பஞ்ச் # ஜில்லா


5 தீயிலயும் , பகையிலயும்  மிச்சம் வைக்ககூடாது 


6.சிவனையும் , பாக்க மாட்டேன், எவனையும் பாக்க மாட்டேன், தூக்கிட்டுப்போய்ட்டே  இருப்பேன் 

 உன் பின்னால 1000 பேர்  இருக்கலாம், என் பின்னால ஒரே ஒரு ஆள் இருக்கான் 


7. ஏம்மா  , இவன்  காக்கி கலர் ல கவர் வந்தாலே  பிரிச்சு மேஞ்சுடுவான், நீ காக்கியையே கவர் பண்ணிட்டு வந்திருக்கியே 


8  சார், உங்க பொண்ணோட  2......

 வாட்?


 2 கண்ணைப்பார்க்கும்போது......


டேய், அது பொண்ணோட அப்பாடா.. 


9. பொண்ணோட  வண்டிச்சத்தம் இங்கே கேட்குது


 வண்டிச்சத்தத்தை வெச்சே இத்தனை கணிக்கறானே......


10  அவளை  டிரஸ்  இல்லாம பார்த்துட்டேன் 

 பார்த்துட்டியா? 

 ஐ மீன்  யூனிஃபார்ம்  டிரஸ்  இல்லாம 

11  வண்டியை  விட்டு  இறங்கு எவ்ளவ்  பெரிய ஆளா  இருந்தாலும் இறக்கிடுவேன் , அதான் போலீஸ் 



12  திருடன்  போலீஸ்  விளையாட்டுல  திருடனும் நாமளாத்தான்  இருக்கனும், போலீசும் நாமாத்தான்  இருக்கனும் 


13  போலீஸ்  கிரிமினலா  யோசிச்சு தன் புத்தியைக்காட்டிடுச்சு, கிரிமினல் போலீஸ் ஆகி நம்ம புத்தியைக்காட்ட வேணாம் ? 


14 தொப்பி போட்ட போலீசை விட தொப்பை போட்ட போலீஸ்  தான் அதிகம் 


15 சரி, நான் இப்போ மேட்டருக்கு வர்றேன் 

 அதான்  முடிச்சிட்டியே ? 

16  விஜய்  டூ காஜல் = அப்போ  நீ என் பின்னால கை வெச்சியே, அது உன் டர்ன், இது என்  டர்ன்  ( டர்னிங்க் பாயிண்ட்டாம் ) 




17   நான்  சொன்னது எல்லாம் உண்மை  தான், ஆனா தாத்தாவை மட்டும் தத்து எடுத்துக்கிட்டேன் 


18  தப்பைத்தடுக்கனும்னு  எப்ப  நீ நினைச்சியோ அப்பவே நீ போலீஸ் 


ஆகிட்டே 


19  சீன்  முடியறதுக்குள்ளே  சீன் போடக்கூடாது 


20  போலீஸ் காப் ? வளைகாப்பே நடத்திடுவான் போல 



21  கட்டைல தானே அடிப்பான்னு சொன்னே ? இப்போ   கொ.... கொலையே பண்ணப்பார்த்தானே? 


22 நான் நினைச்சா இவன் முடிப்பான்.இவன் சாதா சக்தி இல்ல.ஜீவன் உள்ள சக்தி # மோகன் லால் பஞ்ச்


23 நாட்ல வண்டி ஓட்டத்தெரியாதவன் கூட உண்டு.பிகரை ஓட்டத்தெரியாதவன் யாரும் இல்ல # சூரி


24 போலீஸ் அடிச்சுப்பார்த்திருப்பே.போலீசையே அடிச்சுபார்த்திருக்கியா ? # தம்பி ராமையா


25 சூரி - புரொடியூசர் நீ தானே?


வாட்? 



பொண்ணைப் புரொடியூஸ் செஞ்சது நீ தானே? கோ புரொடியூசர் எங்கே?


26 விஜய் - சப்பை பிகரைக்கூட லவ் பண்ணுவேன்.ஆனா சப் இன்ஸ்பெக்டரை லவ் பண்ண மாட்டேன்

27 மோகன் லால் - இந்த சிவன் இல்லாம சக்தி இல்லை. விஜய் - சக்தி இல்லாம எவனும் இல்லை # இடைவேளை பஞ்ச்


28 மத்தவங்க கிட்டே தோத்தாத்தான் தோல்வி , சொந்தப்பையன் கிட்டே தோத்தாலும் அது வெற்றி தான்



சி பி கமெண்ட் - ஜில்லா - முன் பாதி செம ஸ்பீடு ,பின் பாதி ஓக்கே. புதுக்கதை.நோ ரீ மேக். ஹிட் ஆகிடும்


எதிர்பார்க்கும் .விகடன் மார்க் - 43


, ரேட்டிங் = 3.25 / 5

சன் டி வி வீடியோ கிராஃபர் ரசிகர் ஷோ கூட்ட ஆட்டத்தை அப்டேட்டிங்

படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்



1 ஒன் ஆப் த பெஸ்ட் ஓப்பனிங் சீன் டூ விஜய் # கண்ணாடி சில்லுகள் சிதற ஆக்சன்

2 காஜல் அகர்வாலுக்கு ஓப்பனிங் சீன் சரி இல்ல.ஹீரோயினை கோபமான முகத்துலயா காட்டனும் ? வாடால்லிக்கலர் லிப்ஸ்டிக் வேற :-(

விரசாப்போகையிலே மெலோடி சாங்க்.விஜய் ன் அலட்டிக்காத டான்ஸ் ஸ்டெப் கலக்கல்.ஆர்ட் டைரக்சன் ,ஒளிப்பதிவு ,டான்ஸ் மாஸ்டர் ராக்ஸ்

4 சிவனும் சக்தியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ் டா வரிகள் வரும் ஒவ்வொரு சீனிலும் ரசிகர்கள் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது

5 பைட் சீன் களில் விஜய் புதுசா ஒரு மேனரிசம் காட்றார் .குட்

6 ஜிங்கிளமணி குத்தாட்டப்பாட்டு கலக்கல்.அதற்கான டான்ஸ் ஸ்டெப் பில் இன்னும் வெரைட்டி காட்டி இருக்கலாம்.அந்த 2 லேடீஸ்க்கு முகமும் முத்தல்


7 ஜில்லா @ இடைவேளை. கமர்சியல் கலக்கல்.தலைவா வை தாண்டிடுச்சு.ரீமேக் கதை இல்லை.புதுசு.ட்விஸ்ட் குட்


8 எப்போ மாமா ட்ரீட்டு .அக்மார்க் விஜய் டான்ஸ் கலக்கல்.பின்றார்யா. இசை குட். காஜில் ஸ்லீவ்லெஸ் ரெட் டிரஸ்




தியேட்டர் மேட்டர் - திருப்பூர் சிவன் தியேட்டரில் ஆகாய மனிதன் எனும் யுவராஜ் கூடப்படம் பார்த்தேன்.அதி காலை 5 மணி க்கு ஷோ என்பதால் 4 55 க்குப்போனா அவங்க 4 50 க்கே படம் போட்டுட்டாங்க , மோகன் லால் ஓப்பனிங்க் சீன் பார்க்க முடியல .தியேட்டர் சுமார் தான் , ஏ சி , டி டி எஸ் எல்லாம் ஓக்கே .