Thursday, January 09, 2014

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா? (பொங்கல் ஜல்லிக்கட்டு)

ஜெயிக்கப்போவது ஜில்லாவா? வீரமா?: பொங்கல் ஜல்லிக்கட்டு கவுண்டவுன் ஸ்டார்ட்!

எம்.கே.டி.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ரசிகர்களின் மோதலில் தொடங்கியது கருப்பு வெள்ளை பொங்கல். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடர்ந்தது ஹாட் பொங்கல். சினிமா கலர் பூசிக்கொண்ட பிறகு ரஜினி, கமல் என அந்த பொங்கல் கொஞ்சம் காரசாரமாகவே பொங்கியது. இப்போது விஜய், அஜீத் பொங்கல். அந்த கவுண்டவுன் நாளை முதல் ஸ்டார்ட். போட்டிக்கு முன்னால் சின்ன ட்ரைய்லர் ஓட்டிப்பார்க்கலாமா...

* "விஜய்" மூன்றெழுத்து, "அஜீத்" மூன்றெழுத்து, "ஜில்லா" மூன்றெழுத்து, "வீரம்" மூன்றெழுத்து, இருவரும் எதிர் பார்க்கும் "வெற்றி" மூன்றெழுத்து. எப்பூடி.

* விஜய், மோகன்லால் என்ற கேரளத்து களரி வீரனோடு களம் இறங்குகிறார். அஜீத் விதார்த், பாலா, முகிஷ், சுஹைல் என்ற சகோதரர்களின் துணையோடு களம் இறங்குகிறார்.

* விஜய்க்கு கள்ளசிரிப்பழகி காஜல் அகர்வால் ஜோடி. அஜீத்துக்கு தகதக தக்காளி தமன்னா ஜோடி. இரண்டு பேருமே நடிப்பிலும், அழகிலும் "சபாஷ் சரியான போட்டி" என களத்தில் ஆடிக் கொண்டிருப்பவர்கள்.

* விஜய்யை இயக்கி இருப்பவர் முருகா என்ற ஒரு சுமாரான படத்தை இயக்கிய நேசன். அஜீத்தை இயக்கியவர் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்களையும், தமிழில் சிறுத்தை என்ற ஹிட் படத்தையும் இயக்கிய சிவா.


* இரண்டு பேரையுமே சண்டை போட வைத்திருப்பவர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. "இரண்டு பேருமே டூப் போடாமல் சண்டை போட்டிருக்கிறார்கள். விஜய்யும், மோகன்லாலும் போடும் சண்டையில் இருவரின் இமேஜையும் காப்பாற்றி இருக்கிறேன்" என்றும், "அஜீத் போடும் சண்டையில் அனல் பறக்கும், காலில் இருக்கும் பிரச்னையை பொருட்படுத்தாமல் புகுந்து விளையாடி இருக்கிறார்" என்று பேட்டிகளை தட்டிவிட்டு சேம் சைட் கோல் போட்டிருக்கிறார் சில்வா.

* இரண்டு கதைகளுமே இந்த நிமிடம் வரைக்கும் படு சீக்ரெட். கசிந்த வரையில் கதை இதுதான். மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய், வளர்ப்பு மகன் என்று தெரியாமல் அப்பா மீது உயிரையே வைத்திருப்பார். மதுரையில் பெரும் புள்ளியான மோகன்லாலுக்கு எந்த பிரச்னை என்றாலும் அவருக்கே தெரியாமல் மகன் விஜய் முன்னால் நின்று முடித்து வைப்பார். மகனின் அசுர வளர்ச்சியும், செல்வாக்கும் அப்பா மோகன்லாலுக்கு பிடிக்காது. ஏன் பிடிக்காது என்றால். தனது அடுத்த வாரிசாக அவர் தன் சொந்த மகன் மகத்தை கொண்டு வர நினைக்கிறார். அதற்கு விஜய் தடையாக இருப்பாரோ என்று கருதி தனது அஸ்திரங்களை விஜய்க்கு எதிராக திருப்புவார். அது தெரிந்தும் விஜய் கடைசி வரை அப்பாவுக்காகவே உழைப்பார். அதை கடைசியில் உணர்ந்து சொந்த மகனை விட வளர்ப்பு மகன் விஜய்யே சிறந்தவன் என்பதை மோகன்லால் உணர்வார். இது ஜில்லாவோட கதை.

* கிராமத்து அஜீத்துக்கு நான்கைந்து தம்பிகள். இவர்கள் பண்ணாத பஞ்சாயத்து கிடையாது. அடிக்காத ஆள் கிடையாது. அண்ணனுக்கு ஏதாவது ஒன்று என்றால் தலைகொடுக்கவும், தலை எடுக்கவும் தயங்க மாட்டார்கள் தம்பிகள். தம்பிகள் சிலருக்கு காதல் வர... அண்ணனுக்கு கல்யாணம் நடந்தால்தானே தங்களுக்கும் நடக்கும் என்று கருதும் தம்பிகள், அண்ணனுக்கு தமன்னாவை பெண் பார்க்கப்போன இடத்தில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த பிரச்னையை தீர்க்க அண்ணன் போராட. அண்ணனுடன் அண்ணி தமன்னாவை சேர்த்து வைக்க தம்பிகள் போராட கமகம கிராமத்து விருந்து வீரத்தோட கதை.


* ஜில்லாவுக்கு மெலடி கிங் இமான் இசை. வீரத்துக்கு குத்துப்பாட்டு கிங் தேவிஸ்ரீபிரசாத் இசை. பாட்டுல ரெண்டு பேருமே பட்டைய கிளப்பிட்டாங்க. பின்னணி இசையில என்ன பண்ணியிருக்காங்கன்னு படத்துலதான் பார்க்கணும்.

Current events
* விஜய்யின் கேரக்டர் பெயர் சக்தி, அஜீதின் கேரக்டர் பெயர் விநாயகம். புராணத்தில் சக்தியின் மூத்த மகன்தான் விநாயகம். ஆனால் சக்தியை விட அதிக சக்தி கொண்டவர் விநாயகம்.


* விஜய்க்கு கிருதாவுடன் இணைந்த சின்ன தாடி கெட்அப். அஜீத் மங்காத்தா, ஆரம்பம் படங்களின் தொடர்ச்சியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக் கெட்-அப். விதவிதமான மார்டன் டிரஸ் விஜய் காஸ்ட்யூம். வெள்ளை வேட்டி சட்டை அஜீத் காஸ்ட்யூம். பாடல்களில் மட்டும் கோட் சூட்.

* விஜய்யுடன் காமெடியில் கலக்குவது சூரி, அஜீத்துடன் காமெடியில் கலக்குவது சந்தானம். எனவே சந்தானம், சூரி போட்டியும் பொங்கலில் பொங்குகிறது.

* இரண்டு படத்திலுமே பாட்டு, பைட்டு, ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் அயிட்டங்கள் பக்காவாக இருக்கும். இல்லாத ஒரே விஷயம் லாஜிக்.


* ஜில்லாவை தயாரித்திருப்பது வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ். வீரத்தை தயாரித்திருப்பது பாரம்பரியமிக்க நிறுவனமான விஜயா புரொடக்ஷன்.

* இரண்டு படங்களுமே எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்துவிட்டது. சேட்டிலைட் ரைட்சும் பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிமிடம் புரட்யூசர்கள் இருவருமே வெரி ஹேப்பி. படத்தை வாங்கியவர்களும், பார்க்கும் ரசிகனும் ஹேப்பியா என்பது இன்னும் 24 மணிநேரத்தில் தெரிந்து விடும்.

* ஜில்லா உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் மட்டும் 300 தியேட்டர். வீரம் உலகம் முழுவதும் 1300 தியேட்டர்களில் ரிலீஸ். கேரளாவில் 150 தியேட்டர். இரண்டு படங்களுமே ஜனவரி 19 வரை அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் புக்கிங்.

* எட்டு வருடங்களுக்கு முன்பு வந்த போக்கிரி-ஆழ்வார் மோதலில் ஜெயித்தது போக்கிரி. இப்போது ஜில்லா-வீரம். ஜெயிக்கப்போவது யார்? அல்லது இருவருமா? நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தெரிந்து விடும். 


thanx - dinamalar

'வீரம்' - முன்னோட்டம்

நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து பின்னணி கதையில் அஜித் நடித்திருக்கும் படம் 'வீரம்'. ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. 


அஜித், தமன்னா, வித்தார்த், சந்தானம், வித்யூ ராமன், அப்புக்குட்டி என ஒரு நட்சத்திர பட்டாளத்தினை வைத்து இயக்கியிருக்கிறார் சிவா. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. 


அண்ணன் திருமணம் செய்து கொண்டால் தான் 4 தம்பிகளும் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த கதைக்குள் எப்படி தமன்னா வருகிறார், வில்லன்களை எப்படி அஜித் எதிர்கொள்கிறார். இறுதியில் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து, தம்பிகளும் திருமணம் செய்து கொண்டார்களா என்பதே 'வீரம்' படத்தின் கதை. 


எப்போதுமே அடிதடி பண்ணிக்கொண்டிருப்பதால், வீட்டிலேயே ஒரு வக்கீலை வைத்துக் கொள்கிறார்கள். அந்த வக்கீல் வேடத்தில் சந்தானம் தனது காமெடி பங்களிப்பை அளித்திருக்கிறார். முதல் முறையாக படம் முழுவதும் அஜித் வேஷ்டி சட்டையில் அஜித் நடித்திருப்பது இப்படத்தின் ஹைலைட்டாக அமைந்திருக்கிறது. 

 
படத்தில் முதல் டீஸர், இரண்டாவது டீஸர், டிரெய்லர், பாடல்கள் என 'வீரம்' சம்பந்தப்பட்டவை வெளியான போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்தின் அனைத்து பாடல்களுமே மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பது 'வீரம்' ஸ்பெஷல். 


அஜித்தின் வேஷ்டி சட்டை லுக், டிரெய்லரில் அஜித் போட்டிருக்கும் குத்தாட்டம் என அவரது ரசிகர்கள் இப்படத்தினை கொண்டாட காத்திருக்கிறார்கள். மக்களிடையேயும், பாக்ஸ் ஆபிஸிலும் தனது புஜத்தை சிலுப்பிக் கொண்டு 'வீரம்' சீறுமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும். 



வேட்டி கட்டிய அஜித்.. வெளுத்து வாங்கும் விஜய்: பொங்கல் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...

 

சாதாரணமாக பொங்கலுக்கு சில மாதங்களுக்கு முன்பே தீபாவளி பண்டிகை முடிந்துவிடும். ஆனால் இந்த முறை தமிழக தியேட்டர்களுக்கு பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பு தீபாவளி வருகிறது. அஜித், விஜய் இருவரின் படங்களும் இந்த மாதம் பத்தாம் தேதி அதிரடியாக ரிலீஸாவதே இதற்கு காரணம். 7 வருடங்கள் கழித்து தமிழ் திரையுலக பாக்ஸ் ஆபிஸில் அஜித் - விஜய் படங்கள் நேரடியாக மோதவிருக்கிறது. 2001ல் தீனா - ப்ரெண்ட்ஸ், 2002ல் பகவதி - வில்லன், 2003ல் திருமலை - ஆஞ்சநேயா, 2006ல் ஆதி - பரமசிவன், 2007ல் போக்கிரி - ஆழ்வார் என்று பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட்டவர்கள் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 


ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டுவந்துள்ள இந்தப் படங்களின் ஹைலைட்தான் என்ன என்று 'ஜில்லா' இயக்குநர் நேசனிடமும், 'வீரம்' இயக்குநர் சிவாவிடமும் கேட்டோம். 


வீரம் படத்தின் முக்கியத்துவத்தை பற்றி இயக்குநர் சிவா நம்மிடம் கூறியவை: 


 
முதல் முறையாக அஜித் முழுப்படமும் வேஷ்டி, சட்டையில் நடித்துள்ளார். இதுவரைக்கும் வந்த அஜித் படங்களில் இல்லாத அளவிற்கு இறங்கி அடிச்சிருக் கார். இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதையில் இதற்கு முன் அஜித் நடித்த தில்லை. அதுதான் 'வீரம்' படத்தின் முதல் ஹைலைட். 


நீண்ட நாட்கள் கழித்து தமன்னா தமிழில் நடித்திருக்கிறார். அஜித், தமன்னா காம் பினேஷன் மிகவும் புதியதாக இருக்கும். டான்ஸ் காட்சிகளில் இருவரும் அசத்தியி ருக்கிறார்கள். 


படத்தோட பாடல்கள் பெரிய ப்ளஸ். ஒவ் வொரு பாடலுக்கும் அஜித் ரசிகர்களால் ஆடாமல் இருக்க முடியாது. 


சந்தானம், தம்பி ராமையா சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் படத்துக்கு மற்றொரு பிளஸ். படத்தில் நிறைய நடிகர்கள் என்பதால் மிக கஷ்டப்பட்டு 110 நாட்கள் படம் பிடித்தோம். 


அண்ணன் - தம்பி பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே கண்டிப்பா பேசப்படும். படத்துல மட்டும் அஜித் தம்பிகளுக்கு அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்குமே அவர் அண் ணனாக இருந்தார். 


ஒரு குடும்பத்துல சின்ன குழந்தைகள், அவங்களோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என மொத்த குடும்பமும் படத்துக்கு வந்தாங்கன்னா, எல்லாரையும் சந்தோஷப்படுத்துற படமா ‘வீரம்' இருக்கும். இதை 100% நம்பிக் கையோட சொல்றேன். 


படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி. இடைவேளையின்போது வரும் இந்த சண்டைக்காட்சி மிக பிரம்மாண்டமாக வந் துள்ளது. சண்டை இயக்குநர் செல்வா அதற்காக ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார். அதோடு கிளைமேக்ஸ் காட்சியிலும் ஒரு முக்கிய சண்டைக்காட்சி இருக்கிறது. 


இவ்வாறு இயக்குநர் சிவா கூறினார். 



‘ஜில்லா’ படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இயக்குநர் நேசன் நம்மிடம் கூறியவை: 

 
விஜய், மோகன்லால்னு இரண்டு மாஸ் ஸ்டார்களை வைச்சு நான் பண்ணி யிருக்கும் கமர்ஷியல் காக்டெய்ல் ‘ஜில்லா'. இரண்டு பேருமே சேர்ந்து வரும் காட்சிகள் பட்டையைக் கிளப்பும். 


ஒப்பனிங் சாங்கில் இரண்டு பேரும் சேர்ந்தே முழுப்பாட்டுக்கும் ஆடியிருக்காங்க. ரொம்ப பிரம்மாண்டமாக கலர்ஃபுல்லா எடுத்திருக்கோம். ஓப்பனிங் பாட்டுலயே பாக்குறவங்களை எல்லாம் ‘ஜில்லா’ கட்டிப் போட்டுரும்.. 


இதற்கு முன் விஜய்யுடன் காஜல் அகர் வால் சேர்ந்து நடித்திருந்தாலும், ‘ஜில்லா'வில் அவர்களின் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு புதுசா இருக்கும்.


விஜய், சூரி சேர்ந்து பண்ணியிருக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு பொங்கல் தான். நிறைய காட்சிகளை படம்பிடித்த போது நானே கட் சொல்ல முடியாமல் சிரித்தேன். 


படத்தோட பாடல்கள் ஏற்கனவே ஹிட். அதுவும் விஜய் பாடியிருக்கும் ‘கண் டாங்கி' பாடலை ஜப்பானில் ஷுட் பண்ணி யிருக்கோம். 


கமர்ஷியல் படத்துக்கு பஞ்ச் வசனங்கள் தான் முக்கியம். ஆனா இதுல பஞ்ச் வசனங்கள்னு எதுவுமே கிடையாது. வசனங்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கும். 


விஜய்யோட சண்டைக்காட்சிகள் எல்லாம் மாஸா இருக்கும். ரோப் இல்லாம, டூப் இல்லாம நிறைய சண்டைக்காட்சிகளை இதில் விஜய் செய்திருக்கார். 


க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 100 ஏக்கர் சோளக்காட்டில் 6 கேமரா வைத்து பிரம்மாண்டமா எடுத்திருக்கோம். விஜய், மோகன்லால் ரெண்டு பேருமே வில்லன் களுடன் மோதும் அந்த காட்சியில் தீப்பொறி பறக்கும். 


படம் பார்க்க தியேட்டர்குள்ள வந்தீங்கன்னா படம் ஆரம்பிச்சதுல இருந்து, முடியுற வரை ஒவ்வொரு சீனும் விசில் அடிச்சு, சந்தோஷப்படற மாதிரி எடுத்திருக்கோம். 


இவ்வாறு நேசன் கூறினார். 


‘வீரம்' இயக்குநர் சிவா, ‘ஜில்லா' இயக்கு நர் நேசன் இருவருமே பரீட்சையை எழுதி விட்டார்கள். மக்களின் வழங்கப் போகும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

 

 thanx -tamil hindu