Tuesday, January 07, 2014

அக்னி நட்சத்திரம் - ஸ்டாலின் VS அழகிரி -உச்சக்கட்ட மோதல்

தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை': ஸ்டாலின் பதிலடி


தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.
250 ஏக்கரில்...:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று திருச்சி வந்தார். மாநாட்டிற்கான, பந்தல், மேடைகளை பார்வையிட்ட அவர், மாநாட்டு பணிகளை கவனிக்கும் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்காக, 1,100 அடி நீளம், 600 அடி அகலமுடைய பிரமாண்ட பந்தல், 200 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கான்கிரீட் மேடை, கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடிக்கம்பம் போன்றவை அமைக்கப்படுகின்றன. தலைவர்கள் தங்க, குடில்கள் கட்டப்படுகின்றன. தொண்டர்கள் தங்க, திருச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, 100 திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு வாய்ப்பு:

மாநாட்டிற்கு, 10 லட்சம் பேர் வருவர். பிப்., 15ம் தேதி நிர்வாகிகளும், 16ம் தேதி கூட்டணிக் கட்சி தலைவர்களும் பேசுகின்றனர்.லோக்சபா தேர்தலில், இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், கணிசமான தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும். தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, கட்சியில் இருக்கிறாரா என்பதை, கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தேவையில்லை' என, தெரிவித்திருப்பது குறித்து கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.
மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 92வது வயதை குறிக்கும் வகையில், மாநாடு பந்தல் முகப்பில், 92 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. இந்த கொடிக்கம்பத்துக்கு, மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது. அதேபோல், திங்கள்கிழமையான நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.


T.R.Radhakrishnan முதலில் குடும்பத்துக்குள் கூட்டணி போடுங்கப்பா.....இவங்க சண்டையில் ஏற்கனவே மூணு உயிர் பலியாகிருக்கு.......
Rate this:
3 members
0 members
30 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜன-201405:52:57 IST Report Abuse
s.maria alphonse pandian "மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்"...பந்தல் போடும் கான்ட்ராக்டரின் நம்பிக்கையை காட்டுகிறது..அவ்வளவுதான்...இதை போய்..பிறந்ததற்காக பத்த வைப்பவர்களும் உண்டு..பத்தவைப்பதற்கேன்றே பிறந்தவர்களும் உண்டு......
Rate this:
49 members
0 members
13 members
Share this comment
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
07-ஜன-201406:12:14 IST Report Abuse
T.R.Radhakrishnanபத்த வைப்பதுதானே உங்க கட்சியின், தலைவரின் ஒரே தொழிலாக இதுவரை வந்துள்ளது.......உங்க மருந்து உங்களுக்கே என்றவுடன், எதுக்கு இந்த அங்கலாய்ப்பு?...
Rate this:
5 members
2 members
41 members
Share this comment
Ootai Vaayan - Chicago,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
07-ஜன-201405:29:13 IST Report Abuse
Ootai Vaayan அப்படியே யாருடைய தனியார் நிலம் அது, எப்போது இந்த 250 ஏக்கர் நிலம் வாங்கினார், அவருக்கும் தி.மு.க., வுக்கும் இருக்கம் உறவு என்ன என்று புட்டு புட்டு வைத்தால் அது தான் investigative ஜோனலிசம்.
Rate this:
2 members
1 members
23 members
Share this comment
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-ஜன-201405:08:32 IST Report Abuse
P. Kannan கட்சி தலைமை பொறுப்பு இன்னும் எனக்கு தரப்படவில்லை என்பதை சூசகமாக சொல்லுகிறாரோ. கட்சி தலைமை ஏற்க்க காத்திருக்கும் ஒருவர் மிகவும் உற்சாகத்தோடு ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். இவருடைய பதில்கள் கட்சி தலைமையின் பதில் போல் நறுக்கு தெரித்தாற்போல் இருக்கவேண்டும். அதையெல்லாம் காணோம். பார்ப்போம் தேறுவாரா என்று.
Rate this:
4 members
0 members
5 members
Share this comment
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
07-ஜன-201404:31:23 IST Report Abuse
வைகை செல்வன் மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது.......நாத்திகம் .. நாத்திகம் ... (தகடு....தகடு ... ஸ்டைல் ..)
Rate this:
3 members
1 members
35 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-201404:30:40 IST Report Abuse
Baskaran Kasimani இவர் கூட TASMAC கின் ஆதிக்கத்தில் இருப்பவர் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது...
Rate this:
4 members
0 members
15 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜன-201405:56:13 IST Report Abuse
s.maria alphonse pandianஊற்றிக்கொடுப்பவரின் ஆட்சியில் பாதிபேர் எப்போதும் போதையிலேதான்......
Rate this:
28 members
0 members
11 members
Share this comment
தேன் தமிழ் - Salem,இந்தியா
07-ஜன-201404:21:01 IST Report Abuse
தேன்  தமிழ் நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தலை பாதியே எமகண்டம் ஏற்கனவே 2G உருவில் வந்து ஆயற்று
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
Vijay - chennai,இந்தியா
07-ஜன-201404:05:44 IST Report Abuse
Vijay மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின் மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.... ஹ ஹா ஹா... பகுத்தறிவு பகுத்தறிவு......
Rate this:
3 members
0 members
15 members
Share this comment
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
07-ஜன-201403:50:54 IST Report Abuse
Sekar Sekaran எப்படித்தான் இந்த இரட்டை குழல் துப்பாக்கி தனித்தனியே பிரிந்ததோ? தேர்தல் வந்தால் அண்ணா என்று அழைப்பதும்..பதவியை பெறும்போது அடித்துகொள்வதும் இந்த இரட்டை குழல் துப்பாக்கியால்தான் முடியும்.
Rate this:
5 members
0 members
58 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜன-201405:55:27 IST Report Abuse
s.maria alphonse pandianசிவனின் குடும்ப உறுப்பினர்களான முருகனும் பிள்ளையாரும் ஞானப்பழத்துக்காக அடித்துக்கொண்டாலும் அச்சண்டை வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லையே?...
Rate this:
31 members
0 members
11 members
Share this comment
Jayakumar Santhanam - chennai,இந்தியா
07-ஜன-201409:44:13 IST Report Abuse
Jayakumar Santhanamசிவனுடன் ஒப்பிடுவதற்கு எந்த அருகதையும் இல்லாத மானிட பதர்களை இவ்வாறு ஒப்பிட்டு பேசுவது உங்கள் பகுத்தறிவு பாசறைக்கு இழுக்கு அல்லவா.இன்னும் கொஞ்ச நாள் தான் . இது பழததுக்கான சண்டை இல்லை. பணத்துக்கான சண்டை...
Rate this:
31 members
0 members
11 members
Share this comment
Vanavaasam - Chennai,இந்தியா
07-ஜன-201403:42:31 IST Report Abuse
Vanavaasam கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடி கம்பத்துக்கு பதிலாக 2G யை குறிக்கும் வகையில் 175000 அடிக்கு கொடி கம்பம் வையுங்கள் .. 1 கோடிக்கு ஒரு அடி... கொடி நிலவில் பறக்கும்.. அப்புறம் அமெரிக்காவுக்கு பிறகு திமுக கொடி தான் நிலவில் பட்டொளி வீசி பறக்கும் 
 
 
 
சென்னை : சர்ச்சை போஸ்டர் விவகாரத்தில், தி.மு.க.,வில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களுக்கு, கட்சியில் இருந்து, 'கல்தா' கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் நிர்வாகிகள், கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

ஜனவரி, 30ம் தேதி, அழகிரிக்கு, 63வது பிறந்த நாள். அதையொட்டி, இப்போதே, அவரது ஆதரவாளர்கள், மதுரை முழுவதும், போஸ்டர் ஒட்டத் துவங்கி விட்டனர். அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில், தி.மு.க.,வின் உண்மையான பொதுக்குழுவே, 30ம் தேதி தான் கூடப்போவது போல், சித்தரித்து, ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.'இனியொரு விதி செய்வோம்' என்ற தலைப்பில், அச்சிடப்பட்டுள்ள அந்த போஸ்டர், தி.மு.க.,வில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி தலைமைக்கு எதிரான, போட்டி மனப்பான்மையை, போஸ்டர் விவகாரம் உணர்த்துவதாக, கருணாநிதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து, போஸ்டர் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்களின் பெயரை குறிப்பிட்டு, 'அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என, எச்சரித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கைக்கும், அழகிரி ஆதரவு வட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழியை வாழ்த்தி, ஒட்டப்பட்ட போஸ்டர்களும், கட்சியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஆனால், அதுபற்றி எந்த கண்டனமும், எதிர்ப்பும், கருணாநிதி தெரிவிக்க மறுத்து விட்டதை சுட்டிக்காட்டிய, அழகிரி ஆதரவாளர்கள், கருணாநிதிக்கு எதிராக, கருத்து தெரிவித்தனர்.இந்த விவகாரம், மேலும் வலுத்ததை அடுத்து, மதுரை மாநகர் மாவட்ட செயலர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோரை உடனடியாக, சென்னை வருமாறு, கட்சி பொருளாளர், ஸ்டாலின் அழைத்தார்.

நேற்று காலை அறிவாலயம் வந்த அவர்களுடன், ஸ்டாலின் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். மதுரை தி.மு.க.,வில், இதுவரை நடந்துள்ள, 'புறக்கணிப்பு நடவடிக்கை'கள் குறித்து விரிவாக அலசினர். அதை அப்படியே பட்டியலிட்டு, எழுதி எடுத்துக் கொண்டு, கருணாநிதியை சந்திக்கும்படி, அவர்களை, ஸ்டாலின் அறிவுறுத்தினார்.பகல், 12:30 மணியளவில், கோபாலபுரம் வீட்டில் இருந்த கருணாநிதியை, இருவரும் சந்தித்தனர். மதுரை  

விவகாரம் குறித்து, ஆதாரங்களுடன் புகார் கூறினர். உடனடியாக, அறிவாலயத்தில் இருந்த ஸ்டாலினை அழைத்தார் கருணாநிதி.அவர், கோபாலபுரம் வந்ததும், இந்த விவகாரம் குறித்து, அரை மணி நேரம் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.அதற்கு பிறகே, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.,வை அடியோடு கலைத்து விடுவது என்றும், கட்சி பணிகளை கவனிக்க, புதிய பொறுப்புக் குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த பொறுப்புக்குழுவில், ஸ்டாலின் பரிந்துரைத்தவர்களை நியமித்து, உடனடியாக, அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதாவது, கருணாநிதி எடுத்த அதிரடியில்,அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் அடங்கிய, பொறுப்புக் குழுவிடம், மதுரை மாநகர் தி.மு.க., போய் சேர்ந்து விட்டது. பொறுப்புக்குழு தலைவராக, கோ.தளபதி, உறுப்பினர்களாக வி.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, எம்.ஜெயராம், பாக்யநாதன், மு.சேதுராமலிங்கம், சின்னம்மாள் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், குழந்தைவேலு, அழகிரி ஆதரவாளராக மாறி, மேயரானவர். 'மாஜி' ஆகி விட்ட இவர், இப்போது, ஸ்டாலின் ஆதரவாளராகி விட்டார். சேதுராமலிங்கம், அழகிரியின் தீவிர எதிர்ப்பாளரான, பொன்.முத்துராமலிங்கத்தின் மகன்.அழகிரிக்கு எதிராக, கட்சித் தலைமை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு, ஸ்டாலின் தரப்பில், பல புகார்கள் கூறப்பட்டது தான் காரணம் என, தெரிய வந்துள்ளது.

இதுபற்றி, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தி.மு.க.,வில், அழகிரி ஸ்டாலின் மோதல் அடிக்கடி வெடிப்பதும், குடும்பத்தினரின் சமரசத்துக்கு பின், அடங்கிப் போவதும் வாடிக்கை. ஸ்டாலின் எடுத்த முயற்சியால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் பலரும், அவரது அணிக்கு தாவினர்.ஆனால் மதுரை மாவட்ட தி.மு.க.,வின் முழு கட்டுப்பாடும், அழகிரி ஆதரவாளர்கள் கையில் தான் இருந்தது.அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பியதும், மீண்டும் தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வேலையை துரிதப்படுத்தினார். கட்சியில் இழந்த முக்கியத்துவத்தை திரும்ப பெற, போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில், 'அழகிரி ஆதரவாளர்கள் கையில், கட்சி இருந்தால், மதுரையில் தேர்தலை சந்திப்பது கடினம். எனவே, அதை கலைத்து விடலாம்' என்ற, ஸ்டாலின் யோசனையை, கருணாநிதி ஏற்றுக் கொண்டார். 
 
 
லோக்சபா தேர்தல் முடியும் வரை, மதுரைமாநகர் தி.மு.க.,வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட மாட்டர். பொறுப்புக்குழுவே, தேர்தல் பணிகளை கவனிக்கும் எனத் தெரிகிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

'கருவை கலைச்சுட்டாங்களே..!
'அழகிரி ஆதங்கம்:''மதுரை மாநகர் தி.மு.க., அமைப்பை கலைத்தது கரு கலைப்புக்கு ஒப்பானது,'' என தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரி காட்டமாக தெரிவித்தார்.'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* மதுரை நகர் அமைப்பு கலைக்கப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?
இதுகுறித்து, என்னை ஏன் கேட்கிறீர்கள்; கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.
* நடவடிக்கை எடுக்கும் முன், உங்களுடன் தலைமை ஆலோசித்ததா?
தென் மண்டல அமைப்பு செயலரான என்னை மதிப்பதே இல்லை. கட்சியில் எந்த முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்னும், என்னை கலந்து ஆலோசிப்பதில்லை.
*கலைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
எதற்காக கலைத்தனர் எனத் தெரியவில்லை. இது பெண்ணின் கருவை கலைத்தது மாதிரியான நடவடிக்கை.இவ்வாறு, அவர் கூறினார்.
 
 நன்றி - தினமலர்