Friday, December 27, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (27 12 2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1. ஜெ.சி.டேனியல்- மலையாளத்தில் ரிலீசான படம், ‘செல்லுலாயிட்’. தமிழகத்தில் பிறந்து, முதல் மலையாளப் படத்தை இயக்கி, மலையாள சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் ஜெ.சி.டேனியலின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் இப்படத்தில், டேனியல் கேரக்டரில் பிருத்விராஜ் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறந்த படமாகவும், பிருத்விராஜ் சிறந்த நடிகராகவும் தேர்வு செய்யப்பட்டு, கேரள மாநில அரசின் விருதைப் பெற்ற இப்படம், தமிழில் ‘ஜெ.சி.டேனியல்’ என்ற பெயரில் ‘டப்’ ஆகிறது.ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை
 
 
 
2.  விழா -இன்று வெளியாகும் விழா எனும் படம் உதிரி எனும்  குறும்படத்தின் நீட்சி . கூகுளில் விபரம் கிடைக்கவில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் பகிரவும் .ஈரோடு வி எஸ் பி  யில் ரிலீஸ்






3. புவனக்காடு  - மலர் மீடியா என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “புவனக்காடு”
  இதில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக திவ்யாநாகேஷ் நடிக்கிறார்.

மற்றும் கராத்தேராஜா, நிழல்கள்ரவி,அனுமோகன்,பாண்டு,தேசிங்குராஜா,மணி, தர்வேஷ், குட்டிமலர், சின்ராசு, காந்தராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    -     ரவிஸ்வாமி
இசை    -    சரத்பிரியதேவ்
நடனம்    -   சாய்கேசவ்
ஸ்டன்ட்      -    ஸ்பீட்மோகன்
எடிட்டிங்     -  பாஸ்கர்
தயாரிப்பு மேற்பார்வை  -  கவிசேகர் 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் -  வி.எம்.மோகன்
இனைதயாரிப்பு  -  ராபின்சன் 

படம் பற்றி இயக்குனர்   வி.எம்.மோகன் ….

பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்பார்கள்.இதைத் தான் கதைக் கருவாக வைத்திருக்கிறோம்.

படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

நான் இதுவரை சினிமாவில் எந்த துறையிலுமே  இருந்ததில்லை  சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை ஏன் ஷூட்டிங் கூட பார்த்ததில்லை ஆனால் ஒரு படத்தை இயக்கி தயாரித்து முடித்திருக்கிறேன்.

அதற்காக தமிழ்நாடு புக் ஆப் ரெகார்ட்ஸ் என்ற அமைப்பினர் என்னை கௌரவிக்கும் விதமாக விருது கொடுத்து கௌரவிக்க இருக்கிறார்கள் என்றார்.ஈரோடுசங்கீதா வில்  ரிலீஸ்
 
 
 
4. என் காதல் புதிது - கல்லூரி காதலையும், அந்த காதலர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் கருவாக வைத்து உருவாகி வரும் புதிய படம் என் காதல் புதிது. இந்த படத்தில் ராம்சத்யா கதாநாயகனாகவும், உமாஸ்ரீ, நமீதா பிரமோத் ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடிக்க, ஜி.எம்.குமார், பாண்டியராஜன், லொள்ளு சபா ஜீவா, அல்வா வாசு, பாய்ஸ் ராஜன், பாலாஜி, ஸ்ரீலதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.

புன்னகை வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சத்யதேவ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை மாரீஷ்குமார் கவனிக்கிறார். வீரா மூவீஸ் சார்பில் டி.விஜயகுமார், எஸ்.சரவணன் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி, கோத்தகிரி, கோவளம் மற்றும் கேரளாவில் இந்த படம் வளர்ந்து இருக்கிறது.

ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை
 
 
 
5. சார் வந்தாரா - கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கில் ரிலீசாகி ஹிட்டான படம் சரோசாரு. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். முக்கோண காதல் கதை. காதல் பெரிதா, கல்யாணம் பெரிதா என்பது ஸ்கிரீன்ப்ளே. ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த படம். காஜல் அகர்வாலுக்கும், ரிச்சாவுக்கும் நடிப்பிலும் கிளாமரிலும் செம போட்டி நடக்கிற படம். இப்போது இதனை தமிழில் சார் வந்தாரா என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள்.ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை
 
 
6 வாக்கிங்க் வித்  டினோசர்S - சர்வதேச அளவில் தலைசிறந்த நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிறவனமான பிபிசி குழுமத்தின் ஒரு அங்கமான பிபிசி எர்த் நிறுவனத்துடன் சர்வதேச தர 3டி பட தயாரிப்பில் கைகோர்க்கிறது ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதுகுறித்து, ரிலையன்ஸ் பிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சர்வதேச தரத்தில் 3டி படங்களை இரு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்க இருப்பதாகவும், அதனை உலகம் முழுவதிற்கும் ஒளிபரப்பும் விநியோகஸ்த பணியை தங்கள் நிறுவனம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அளவில், "வாக்கிங் வித் டினோசர்ஸ் 3டி", "ஆப்ரிக்கா 3டி",  மற்றும் "லைப்" படங்களை தயாரித்து உள்ளதாகவும், விரைவில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் பார்வைக்கு விருநதாக அமையவைக்க இருப்பதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை