ஹீரோ
ஒரு புகழ் பெற்ற வக்கீல் . இந்தியாவிலேயே மிக இளவயதில் ஜட்ஜ் ஆகப்பணி
புரிய பிரமோஷன் கிடைச்சவர் . அவருக்கு ஒரே ஒரு மனைவி , ஒரு மகன், மகள் ,
குடும்பத்தோட சந்தோஷமா இருக்கும்போது அவருக்கு ஒரு அநாமத்து ஃபோன் கால்
வருது . மிரட்டல் தான் . என்ன ஏதுன்னு தகவல் சொல்லாம அவன் பாட்டுக்கு
மிரட்டிட்டு இருக்கான்
போலீஸ் ஆஃபீசர் கம் நண்பர் உதவியோட அந்த ஃபோன் காலை ட்ரேஸ் அவுட்
பண்ண பிரம்மப்பிரயத்தனம் பண்ணி ஆளை நெருங்கும்போது விபத்துல அந்த ஆள்
இறந்துடறான் . இடைவேளை
இப்போ எப்படி கேஸ் மூவ் பண்ண ?
அந்த ஆளைப்பத்தி விசாரிச்சா ஆல்ரெடி வக்கீலா இருந்தப்ப நடந்த ஒரு
கொலை கம் ரேப் அட்டெம்ப்ட் கேஸ் கேஸ் ல சம்பந்தப்பட்ட 8 பேர் ல அந்த ஆள்
ஒருத்தன் .
கொலை செய்யப்பட்ட பொண்ணோட டெட் பாடி கிடைக்கல. ஆனா அந்த கேஸ் ல சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு மேட்டர் தான் மிரட்டலுக்குக்காரணம் .
கேஸ் சூடு பிடிக்குது , ஜட்ஜ் ஆக வேண்டியவர் டிடெக்டிவ் ஆகி அந்த கேசை விசாரிக்கறார் .
அந்த பொண்ணைக்கொலை செஞ்சது யார் ? டெட் பாடி என் ந ஆச்சு ? என்பதெல்லாம் சஸ்பென்ஸ்
மம்முட்டி அருமையான டிரஸ் கோடு , அடக்கி வாசிக்கும் அண்டர்ப்ளே ஆக்டிங்க் ,
நோ பஞ்ச் டயலாக்ஸ் , வயதில் முதிர்ச்சி தோற்றத்தில் தெரியாத அழகிய
ஒப்பனை , டூயட் எல்லாம் பாடி கஷ்டப்படுத்தாத திரைக்கதையை விட்டு விலகாத
நடிப்பு என பிரமாதப்படுத்துகிறார் .
போலீஸ் ஆஃபீசராக வருபவர் , கொலை செய்யப்பட்ட பெண்ணாக வருபவர் , அவர் கணவர் மூவரும் கச்சிதமான நடிப்பு .
படத்தின் முதல் பாதி பர பர என 60 நிமிடங்கள் பறந்தாலும் பொசுக் என இருக்கு . ஒண்ணுமே இல்லாம ஒப்பேத்திட்ட மாதிரி இருக்கு
பின் பாதி திரைக்கதையில் ரொம்பவே தடுமாறி இருக்கிறார் இயக்குநர் . பி சி செண்ட்டர் ரசிகர்களூக்குப்புரிவது சிரமமே .
மயக்கம் என்ன படத்தில் செலவ்ராகவன் எடுத்துக்கொடுத்த பை போலார் டிஸ் ஆர்டர் வியாதி படத்துக்கு ரொம்பவே உதவி இருக்கிறது
ஒளீப்பதிவு , எடிட்டிங்க் , வசனம் எல்லாம் கனகச்சிதம் , பின்னணி இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்
சைலன்ஸ் - மமுட்டியின் கம்பீர நடிப்பு + , பின் பாதி திரைக்கதை தெளிவு இல்லை -சுமாரான க்ரைம் த்ரில்லர் - ரேட்டிங்க் = 2.75 / 5