மேட்ச்
ஃபிக்சிங்கில் ஈடுபட்டு பணத்துக்காக இந்திய நாட்டுக்குத்தீராத
அவமானத்தோல்வியைப்பெற்றுத்தரும் பிரபல கிரிக்கெட் வீரரை அவரோட கிளாஸ் மேட்
கம் இன்னொரு கிரிக்கெட் வீரர் திட்டம் போட்டு ரொம்ப ஹைட்டான சிக்சர்
அடிச்சு மேல் லோகம் அனுப்பறார்.
டெய்லி வறக்காப்பி ( பால் இல்லா வெறும் டிகாக்ஷன் )
குடிச்சாலும் தன் அபிமான ஹீரோ கட் அவுட்டுக்கு கடன் வாங்கியாவது பால்
அபிஷேகம் செய்யும் சினிமா ஹீரோவின் வெறித்தனமான ரசிகன் தியேட்டர்ல ரொம்ப
உயரமான இடத்துல இருந்து கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது
தவறி விழுந்து ஒரு காலை இழக்கிறார். வெளில ரசிகர்கள் தான் தன் தெய்வம் ,
அவங்களூக்காக உயிரைகுடுப்பேன் , தயிரைக்குடுப்பேன்னு பஞ்ச் டயலாக் பேசும்
சூப்பர் ஹீரோ ரசிகனுக்கு ஒரு ஆபத்துன்னுதம் கண்டுக்காம
மருத்துவசெலவுக்குக்கூட பண உதவி செய்யாம அவமானப்படுத்தி அனுப்பறார். அந்த
கோபத்துல அந்த ஹீரோவை சொர்க்கத்துல போய் டூயட் பாடிக்கோன்னு அனுப்பிடறார்
அந்த ரசிகர் .
இவங்களைப்பிடிக்கும் முயற்சியில் போலீஸ் கமிஷனரா வரும்
சரத்குமார் அருமையான பாடி லேங்குவேஜ் , டிரஸ்சிங்க் சென்ஸில் கலக்குகிறார்.
ஆனா அவர் வரும் காட்சிகள் ஜஸ்ட் 15 நிமிஷம் தான் . ஆனா போஸ்டர் பார்த்தா
அவரே மெயின் ஹீரோ மாதிரி ஒரு பில்டப் .
ஹீரோயின் வேணுமே என்பதற்காக 2 பேரு . சுமார் நடிப்பு .
ஹீரோ ஹீரோயின் பேச்சைக்கேட்காம வில்லனைப்பார்க்க ப்போய்ட்டார் என்பதற்காக
ஹீரோயின் தற்கொலை செய்வது எல்லாம் ஓவர். அச்சம் தவிர் = தெலுங்கு டப்பிங் படம் = தியேட்டரில் போய் படம் பார்ப்பதைத்தவிர் - மாமூல் மசாலா - ரேட்டிங் = 2 / 5 .சரத்குமார்் 15 நிமிடமே