1.ராவண தேசம்’- இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள்
வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர்
கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’.
இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில்
இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு
செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும். அந்த நாடு அவர்களை
உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த
சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம்.
அஜெய்
என்பவர் டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்துள்ளார். ஜெனிபர் என்பவர் ஹீரோயின்.
படத்தில் நடித்திருக்கும் அனைவருமே சினிமாவுக்கு புதுமுகங்கள்.
"அகதியாக கடலில் திகில் பயணம் மேற்கொண்டு ஒருவரின் அனுபவத்தின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. "லைப் ஆப் பை" போல பெரும்பகுதி படம் நடுக்கடலில் நடக்கிறது. நிஜமாகவே கடலில் படமாக்கி இருக்கிறோம். உலகம் அறிந்திராத இலங்கை அகதிகளின் இன்னொரு வலியை பதிவு செய்திருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் அஜெய்.
2 பீட்சா 2 வில்லா -படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
கோலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியிருக்கும் படம்
’பீட்சா 2 வில்லா’ . இதன் நாயகனாக அஷோக் செல்வனும், நாயகியாக சஞ்சிதா
ஷெட்டியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தீபன் சக்கரவர்த்தி
இயக்கியுள்ளார்.
'ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, ‘திருக்குமரன்
என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். விரைவில் திரைக்கு
வரவிருக்கும் பீட்சா 2 வில்லா திரைப்படம் தணிக்கைக் குழுவின்
பரிந்துரைக்குச் சென்றது.
இதனை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
வழங்கியுள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி
ரசிகர்களிடையே நல்ல வர்வேற்பைப் பெற்றிருக்கிறது. பீட்சாவை போன்று அதன்
இரண்டாம் பாகமான பீட்சா 2 வில்லா திரைப்படமும் சஸ்பென்ஷ் மற்றும் திரில்லர்
படமாக உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதியால் 'வில்லா' படத்தின் வெளியீடு தள்ளிப்போய்யுள்ளது.
ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’
நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’. இதில்
’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும்
ஜோடியாக நடித்துள்ளனர். தீபன் சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்திற்கு
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்
திடீரென படத்தை தீபாவளிக்கு பிறகு வெளியிடப் போவதாக அறிவித்துவிட்டனர்.
காரணம், அக்டோபர் 2ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பாலகுமாரா' வெளியாகிறது. 'வில்லா' பட இயக்குனர் தீபன்
சக்ரவர்த்தியும் விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்கள். எனவேதான் வில்லா
படத்தின் வெளியீடு தள்ளிப் போய்யுள்ளது.
மேலும், அக்டோபர் 2வது வாரத்திலிருந்து தீபாவளி வரை வேறு சிறு படங்கள்
தியேட்டர்களை புக் செய்திருப்பதால் தீபாவளிக்கு பிறகு 'வில்லா' படத்தை
வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ‘பீட்சா' போல் ஒரு வீட்டுக்கு
முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள். ஒரு
வீட்டுக்குள் நடக்கும் சில முக்கிய சம்பவங்கள்தான் இதன் கதை.
அதோடு முதன் முறையாக இந்த படமானது டால்பி அட்மாஸ் என்ற நவீனதொழில்
நுட்பத்தில் ஒலி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாம். 'வில்லா'வில் விஜய்
சேதுபதிதான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக
அவரால் நடிக்க முடியவில்லை.
3 ஆப்பிள் பெண்ணே -ஆப்பிள் பெண்ணே' படத்தில் தம்பி ராமையா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி.பிலிம்ஸ் படநிறுவனம் தயாரித்துக்
கொண்டிருக்கும் படம் 'ஆப்பிள்பெண்ணே'. இதில் வத்சன் நாயகனாகவும்,
ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரோஜா,
தம்பிராமைய்யா ,கே.ஜி.பாண்டியன்,தேவா, சுசித்ரா, சுரேஷ், ஆகியோர்
நடிக்கிறார்கள். கலைமணி இயக்குகிறார்.
படத்தில் தம்பி ராமையாவுக்கு வில்லன் வேடமாம். இதுவரை குணச்சித்திரம்,
காமெடி கதாபாத்திரங்களுக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்த
இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்த இருக்கிறார். 'ஆப்பிள்
பெண்ணே' படத்தில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில்
நடிக்கிறார். எந்த பிரச்சனையையும் ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுமையாக முடித்து
விடும் கதாபாத்திரம்.
கே.ஜி.பாண்டியன் வழங்க கே.ஜி.பி. பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘ஆப்பிள்
பெண்ணே’. இதில் நாயகனாக வத்சன், நாயகியாக ஐஸ்வர்யாமேனன் நடிக்கின்றனர்.
ரோஜா, தம்பிராமையா, கே.ஜி.பாண்டியன், தேவா, சுசித்ரா, சுரேஷ் ஆகியோரும்
நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி ஆர்.கே.கலை மணி இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசபோராட்டமே கதை. மொத்தம் ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ், திரில்லராக தயாராகிறது. தம்பி ராமையா அமைதியான வில்லனாக வருகிறார். எந்த பிரச்சினையையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம்.
மருந்தே உணவு என்பதை விளக்கி ரோஜா பாடும் பாடல் படத்தில் இடம் பெறுகிறது. ஒவ்வொரு காய்கறி பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதை அப்பாடலில் சொல்லி உள்ளோம். இது பாட்டாக மட்டுமின்றி எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும்.
ஒளிப்பதிவு: ஸ்டெடுகம் பிரபாகர், இசை: மணி சர்மா, பாடல்: யுகபாரதி, விவேகா, நடனம்: சுஜாதா, தினா, அமெய், விஜய், ஸ்டண்ட், குன்றத்தூர் பாபு, எடிட்டிங்: ஆண்டனி இணை தயாரிப்பு கே.எஸ்.மரியப்பா.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி ஆர்.கே.கலை மணி இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசபோராட்டமே கதை. மொத்தம் ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ், திரில்லராக தயாராகிறது. தம்பி ராமையா அமைதியான வில்லனாக வருகிறார். எந்த பிரச்சினையையும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம்.
மருந்தே உணவு என்பதை விளக்கி ரோஜா பாடும் பாடல் படத்தில் இடம் பெறுகிறது. ஒவ்வொரு காய்கறி பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதை அப்பாடலில் சொல்லி உள்ளோம். இது பாட்டாக மட்டுமின்றி எல்லோருக்கும் பாடமாகவும் இருக்கும்.
ஒளிப்பதிவு: ஸ்டெடுகம் பிரபாகர், இசை: மணி சர்மா, பாடல்: யுகபாரதி, விவேகா, நடனம்: சுஜாதா, தினா, அமெய், விஜய், ஸ்டண்ட், குன்றத்தூர் பாபு, எடிட்டிங்: ஆண்டனி இணை தயாரிப்பு கே.எஸ்.மரியப்பா.
4 ராம் லீலா -தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ராம் லீலா படத்தை
வரும் 15-ம் தேதி திரையிட ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. டிரெய்லர்
வெளியிடப்பட்டதில் இருந்தே இப்படம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.
இந்நிலையில், ராம் லீலா படத்தில் காமம், குரோதம் மற்றும் வன்முறை
காட்சிகள் இடம் பெற்றுள்ளன.ராம் லீலா என்ற பெயர் இந்துக்களின் கடவுளான
ராமரை குறிப்பதால் இந்த படம் ராமரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கும்
என்ற எதிர்பார்ப்பில் இந்த படத்தை பார்க்க வரும் இந்து மக்களின் மனதை
புண்படுத்தும் வகையில் இப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன.
எனவே,இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.ராமரின் வாழ்க்கையை
விவரிக்கும் எந்த காட்சிகளும் இடம்பெறாத இந்த படத்தை ராம்லீலா என்ற
பெயருடன் திரையிட அனுமதிக்க கூடாது என பிரபு சமாஜ் தர்மிக் ராம் லீலா
கமிட்டி மற்றும் மேலும் 5 பேர் சார்பில் டெல்லி கோர்ட்டில் பொதுநல வழக்கு
தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி
ஏ.எஸ்.ஜெயச்சந்த்ரா,மறு உத்தரவு வரும் வரையில் ராம்லீலா படத்தை திரையிடக்
கூடாது என தடை விதித்து உத்தரவிட்டார்.
5 THOR ( THE DARK WORLD) - உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவித்த Thor ஹாலிவுட் படத்தின் 3வது பாகத்தின் டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, வெளியான Thor திரைப்படம், உலகம் முழுவதும்
450 மில்லியன் டாலர்கள் வசூலை வாரிக் குவித்தது. அதற்கு அடுத்து வெளியான
The avengers திரைப்படத்திற்கும், ஒன்று புள்ளி 5 பில்லியன் டாலர்கள்
வசூலானது.
இந்த 2 படங்களுக்கும் கிடைத்த வரவேற்பை அடுத்து, Thor படத்தின் 3வது பாகம்
தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
Thor The dark world என்னும் பெயரில்
தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் நாளை திரைக்கு வருகின்றன.
அமெரிக்காவில் மட்டும் அடுத்த மாதம் 9ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.
முதல் 2 படங்களில், நாயகன் Thor, தனது சகோதரனும் வில்லனுமான லோகி
கதாபாத்திரத்துடன் மோதுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால்,
3வது பாகத்திலோ, சகோதரர்களான Thor-ம், லோகியும் பகையை மறந்து, கூட்டாக
சேர்ந்து, எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வெல்வது போன்று கதை
உருவாக்கப்பட்டிருக்கிறது.
தோர் படத்தின் முதல் 2 பாகங்களிலும், பிரமாண்ட
கிராபிக்ஸ் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
அதேபோன்று, 3வது பிரமிப்பூட்டும் காட்சிகள் பல இடம்பெற்றிருப்பதால்,
திரைப்பட ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி - தினமலர் , மாலை மலர் , அனைத்து இணைய தளங்கள்