Saturday, November 02, 2013

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

a

 வழக்கம் போல வில்லன் ஒரு தாதா .ஹீரோவோட அண்ணன் ஒரு கல்குவாரி பிரச்சனைல வில்லனுக்கு குறுக்கே வர்றார் . தற்செயலா நடந்த விபத்து மாதிரி செட் பண்ணி  வில்லன் ஹீரோவோட அண்ணனை போட்டுத்தள்ளிடறாங்க . 


ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாத சிம்பு . ரொம்ப பயந்த சுபாவம் .ஆல்ரெடி தன் நண்பன் ஒருத்தன் கூட சேர்ந்து மறைமுகமா வில்லனை எதிர்த்தவர். நண்பனையும் வில்லன்  கொன்னுடறான் . இப்போ  ஹீரோ பழி வாங்கனும் . ஆனா  இவர் ஒரு சாதா ஆள் . அதனால பிளான் பண்ணி வில்லனைப்போட்டுத்தள்ள  முயற்சிக்கிறார். 

 ஹீரோவோட அப்பா  வீட்டுக்குத்தெரியாம ஒரு ரவுடியை செட் பண்ணி வில்லனை தீர்த்துக்கட்ட பிளான் போடறார். வில்லனுக்கு ஹீரோ அப்பாவை அடையாளம் தெரிஞ்சுடுது 





 இப்போ ஹீரோ தன் அப்பாவையும் காப்ப்பாத்தி , வில்லனயும் போட்டுத்தள்ளனும் . எப்படி செஞ்சார் என்பதே மிச்ச மீதிக்கதை



இந்த ஆக்சன் பிளாக் எல்லாம் லேடீஸ்க்கு ஒத்து வராது என்பதால் ஓப்பனிங்க் ல  ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள் .  


ஹீரோவா புரட்சித்தளபதி  விஷால். இது அவருக்கு சொந்தப்படம் , எஸ் . தயாரிப்பாளரும் இவரே . எல்லா விஷால் படங்களையும் போலவே  இதிலும்  இவர் பயந்த சுபாவம் உள்ள , அப்பாவியான  பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம் உள்ள ஆள் . பின் பாதியில் இவர் போடும் ஃபைட் காட்சிகள் பொறி பறக்குது .டாய் , டூய் என கத்தல்கள் ஏதும் இல்லாமல் , பஞ்ச் டயலாக்ஸ் ஏதும் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார். 


 ஹீரோயின் லட்சுமிமேனன் . ஹீரோவுடன் இவர் குறும்புப்பேச்சு பேசும் காட்சிகள் அழகு. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் செயற்கையான உற்சாகமும் , பொருந்தாத  குத்தாட்ட ஸ்டெப்பும் மைனஸ் . ஆனால் இவர்  தன் உடலைவெளிப்படுத்தாமல் அணியும்  உடைகள் , கேமரா கோணம் எப்படி வைத்தாலும் கண்ணீயம் மாறாத தோற்றம் தரும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரம் 


பாரதிராஜா ஜீன்ஸில் கம்பீரமாக வருபவர் கதாபாத்திரத்தின் தன்மை கருதி  இதில் சாதா நடுத்தர அப்பாவாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . . மகனின் இறப்புக்கு கதறும் காட்சியில் அழுகை நடிப்பு அற்புதம் 


வில்லனாக வருபவர் கவ்தம் வாசுதேவ் மேனன் மாதிரி இருக்கிறார் . மிரட்டலான தோற்றம் . விக்ராந்த் சில சீன்கள் வந்தாலும்  நல்லா பண்ணி இருக்கார் 

 புரோட்டா சூரி  ஹீரோவுக்கு நண்பனாக வந்து 6 காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. படத்தோட  ஓப்பனிங்க் சீன்லயே கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட்சை உடைப்பது மாதிரி ஒரு இழவு  வீட்டில் ஒப்பாரிப்பாட்டு . அதை அப்படியே குத்துப்பாட்டாக மாற்றி கலக்கல் டான்ஸ் .  ஏலே ஏலே மருது  பாட்டு , ஒத்தக்கடை என  3 பாட்டு  ஹிட் லிஸ்ட்டில் . வெறி கொண்ட நரி பாட்டு சுமார் 


2  கரண்ட் கட் ஆனதும் எல்லோரும் மொட்டை மாடியில்  இருக்கும்போது  சும்மா பில்டப்புக்காக ஹீரோ செல் ஃபோனில் யாரிடமோ பேசி கரண்ட் இப்போ வந்தாகனும் என உதார் விடுவதும் , அப்போ கரண்ட் வருவதும் , ஒரு  தகர டப்பாத்தலையன் ஃபேஸ் புக் ல நான் தான் இதை அப்டேட் பண்ணினேன் அதான் கரண்ட் வந்துச்சு என்பதும் செம கலாய் 



3 படத்தின்  பின் பாதி  ஆக்‌ஷன் காட்சிகள்  அருமை . பாரதிராஜா வில்லனிடம் மாடி விடுவாரோ என பதை பதைப்பை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றி 



4 இது வழக்கமான ஒரு பழி வாங்கல் கதை தான் என யாரும் சொல்லி விடாத படி திரைக்கதையில் மெனக்கெட்டுஇருக்கிறார் இயக்குநர் , அவருக்கு  ஒரு சபாஷ்


5 ஹீரோ தான் தயாரிப்பாளர் என்றால் ஏகபப்ட்ட பஞ்ச் டயலாக்ஸ் இருக்கும் , தனி  நபர் துதிப்பாடல் இருக்கும் . இதெல்லாம் எதுவுமே இல்லாமல் பார்த்துக்கொண்டது இயக்குநரின் சாமார்த்தியம்  கம் தயாரிப்பாளர் விஷாலின் பெருந்தன்மை .  சபாஷ் 

 
   இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

1. முன் பின் பார்த்திராத  ஃபோனில் மட்டும் அறிமுகம் ஆன காதலியை  சூரி சந்திக்கப்போகிறார். பச்சைக்கலர் சட்டை போட்டுவருவதாகப்பேச்சு . ஆனா மொக்கை ஃபிகரா இருந்தா மாட்டிக்குவே என்று நண்பர்கள் சொன்னதால்  வெள்ளை சட்டை போட்டுட்டுப்போய் ஒரு கிளான்ஸ் பார்த்துட்டு வருவோம் என கிளம்பறாங்க . அங்கே போய் ஆள் நல்ல ஃபிகர் என்றதும் அடடா என ஆதங்கப்படுகிறார்கள் . இது சப்ப மேட்டர் , போகும்போதே கைல பச்சை சட்டை பார்சல் கொண்டு போய் இருந்தா ஃபிகர் லட்டு  ஃபிகரா இருந்தா பச்சை சட்டை போட்டிருக்கலாமே? 



2   ரவுடித்தொழிலும் , அரசாங்கத்துக்கு எதிரான  நிழல் வேலைகள் செய்யும்  ஆளான வில்லன் கேங்க் முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆள்  தரும் அந்த 5 செல் ஃபோனையும் வாங்கிக்குவதும் அவங்க பேசுவதை  ஹீரோ ஒட்டுக்கேட்பதும் காதில் பூ .  


3 ஆக்சன் பிளானில்  விஷால் ஒரு சுரங்கப்பாதையை காட்டி இந்த பாதை 5 கிமீஇருக்கும் இதை அரை மணி நேரத்தில் கடந்துடலாம் . இதே இடத்துக்கு மெயின் ரோட்டில் பைக்கில் போனால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என்கிறார் . பிளானில் இது முக்கியக்கட்டம். இதில் 2 லாஜிக் மிஸ்டேக் . 

a .  வேகமான நடையில் 25 வயசுப்பையன் நடந்தாலேஒரு கிமீ தூரத்தைக்கடக்க 10  நிமிடம்  ஆகும் , 5 கிமீ கடக்க 50 நிமிசத்துக்கும் மேல்  ஆகும் , ஏன்னா முதல் கிமீ கடந்த அதே வேகத்தில் 2,வது , 3 வது கிமீ கடக்க முடியாது , ஸ்பீடு குறையும் . எபப்டி அரை மணி நேரத்தில் கடக்க முடியு,ம் ? ஓடுனாக்கூட முடியாது 


b  மெயின்  ரோட்டில் பைக்கில் போனால் ஒன்றரை மணி நேரம் ஆகும் அளவு தூரம்னா 60 கிமீ வேகம்னே வெச்சுக்கிட்டாலும்  90 கிமீ தூரம் வருது . என்னதான் மெயின் ரோடு 90  கி மீ தூரத்திலிருந்தாலும் சுரங்கப்பாதை  கிட்டத்தட்ட 18 மடங்கு  கம்மி தூரம் எப்படி வரும் ?  பாதிக்குப்பாதி இருந்தாலே அபூர்வம்  


4  படம்  முழுக்க பல இடங்கள் ல  ஹீரோ அல்லது  ஹீரோவின் நண்பர்கள்  தங்கள் அடையாளத்தைக்காட்டிக்காமல்  வில்லனின் அடியாளை அடிக்க  முகத்தில் கர்ச்சீப் கட்டி வாய் , மூக்கை மறைச்சு ஃபைட் போடறாங்க  இது எப்படி ? ஃபைட் போடும்போது கர்ச்சீப் கழண்டுக்கும்னு தெரியாதா? ஹெல்மெட் போட்டு ஃபைட் போடலாம் , அல்லது வில்லனின் அடியாள் முகத்தை சாக்குப்பையால் மூடி அடிக்கலாம் ( தடையறத்தாக்க வில் வருவது போல் ) , அல்லது இவன் வேற மாதிரி  பட  ஹீரோ மாதிரி முழு முகத்தையும் பெரிய சாக்சால்  மூடி ஃபைட் போட்டிருக்கலாம் 


5  விகராந்த் தைக்கொலை பண்ணும் வில்லனின் ஆட்கள் எதுக்கு அந்த விதவையின் எதிரில் பண்ணனும் ? அப்டியே பண்ணினாலும் நேரடி சாட்சியான அந்தப்பொண்ணை ஏன்  விட்டு வைக்கனும் ? 

6  மாட்டு தாவணி பஸ்ஸ்டாண்டில் பாரதிராஜாவால் நியமிக்கப்பட்ட கூலிக்கு கொலை செய்யும் ஆள் அவரை காட்டிகொடுப்பதற்காக செல்லும்போது ஏன் 30 lakhs பணப்பையை எடுத்து செல்ல வேண்டும். அவர்தான் சாகபோகிறார் என்று உறுதியாக அந்த ஆளுக்கு தெரியுமே. வெறும் பணப்பையை மட்டும் எடுத்து சென்றாலே போதும் சுற்றிலும் நிற்கும் வில்லன் ஆட்கள் உடனடியாக மடக்கி விடலாமே. மேலும் 30 லட்சம் பணத்தை வில்லன் ஆட்கள் அவ்வளவு சுலபமாக இன்னொருவன் கையில் கொடுத்து நடக்கவே முடியாத முதியவரை பிடிக்க முயற்சி செய்ய தேவையில்லை. 

 

 

7 . விஷாலின் நெருங்கிய நண்பர் விக்ராந்த் பல நாட்களுக்கு முன்பே இறந்து விட்டாலும் அதை அவரின் காதலி விஷாலுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை. இத்தனைக்கும் விஷால் குடிஇருக்கும் தெருவுக்கு பக்கத்தில்தான் இருக்கிறது அவர் வீடு.



மனம் கவர்ந்த வசனங்கள்


1.  பயத்துக்கும் ,பாதுகாப்புக்கும் நூல் அளவு தான் வித்தியாசம்


2 சூரி - என்னது? 11 வருசமா ஒரே செல்போனை யூஸ் பண்றீங்களா? இந்தக்காலத்துல பொண்டாட்டி கூடவே யாரும் அத்தனை நாள் குடும்பம் நடத்தறதில்லை



3 மிஸ்! யார் இவன்? 



என் பிரதர் .


 அடியே.பிரதர் கூட புதர்க்குள்ளே என்ன வேலை? # சூரி ராக்ஸ் 



4  சீக்கிரமா பெரிய ஆள் ஆகனும்னு நினைச்சவன் எல்லாம் சீக்கிரமா காணாம போய் இருக்கான்


5 மிஸ் ! என் பேரு சிவக்குமார்.உங்க.., 


சாரி.ஆல்ரெடி ஐ ஆம் கமிட்டட் .ட்ரை அதர்ஸ் 



6  என்னை டிராப் பண்ணிடறீங்களா?


 ஒரு பிகரை பிக்கப் பன்றதுக்கு முன்னேயே டிராப் பண்ற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் ? 


7 மிஸ்! பர்ஸ்ட் டைம் உங்களைப்பார்க்கும்போதே பர்ஸ்ட் நைட் நினைவு வருதே ஏன் ?


 யோவ் !!! 


8 என் நாக்குக்கு ஸ்பீடு பிரேக்கர் போடனும் னு நினைக்கறேன் .உங்களைப்பார்க்கும்போது மட்டும் அது முடியல.எதாவது உளறிடறேன்



9 உன் சட்டையை நீயே ஏண்டா கிழிச்சுக்கறே? 



விடுடா,சண்டை ல கிழியாத சட்டை எங்கே இருக்கு ? # விஷால் ராக்ஸ்


10 நாம செய்யற தொழில் ல நமக்கு முன்னால நடக்கறவனை எப்பவும் விட்டு வைக்கக்கூடாது


11   டேய் , நீ எப்போ இங்கே வந்தே? 

 நான் வந்து 6 மாசம் ஆச்சு , கோரிப்பாளையத்தில் இருந்து வந்தேன்

 டேய் நான் கேட்டது இவகூட மொட்டை மாடிக்கு எப்போ வந்தே? 


12  ஒரு லவ் மேட்டரிருக்கு , இன்னும் செட் ஆகலை , ஆனதும் சொல்றேன் 


 சொல் , செட் பண்ணிடலாம் 


 நீ எனக்கு அண்ணனா? மாமாவா? 



13  அட , அவளா / இதுக்கெல்லாம் எதுக்கு பில்டப் , இவளெல்லாம் கூப்ட்டாலே வந்துட மாட்டா? 

 அப்டியா ? கொஞ்சம் திரும்பிப்பாரு கண்ணா , உன் பின்னால தான் நிக்கறா . கூப்பிடு , வருவாளா பார்ப்போம் 


14  உன் கிட்டே பிரச்சனை பண்ண பையன் கிட்டே நான் தான் உன் வீட்டுக்காரன்னு சொன்னியா? 

 வாட் ?

 ஐ மீன்  ஹவுஸ் ஓனர்



 


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1. மினிமம் 25 பேர் இருந்தாத்தான் ஷோ போடுவாங்களாம்.இன்னும் 18 பேர் வரனும் ;-))



2 ஓப்பனிங் நல்ல சகுனம்.இழவு வீட்டில் ஒப்பாரி சாங். # பா நாடு


3 ஹீரோயின் கோயில் ல பிச்சை போடுது.அந்த குணத்தைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்துடுது.உடனே பாட்டு.அபாரம்யா


4 உலக சினிமாக்களில் இதுவரை வராத லொக்கேசன்.மதுரை.ஹீரோ பயந்த சுபாவம். தாதா தான் வில்லன் .ஆஹா அசத்தல் யா 


5 ஒரு பெரிய புதுமை.மதுரை ல கதை நடக்குது.ஆனா புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் கோயில் ல ஷுட்டிங் .இந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லிடாதீங்க



6 விஷால் - லட்சுமி மேனன் ரொமான்ஸ் காட்சிகள் அழகு.சுசீந்தரன் டச்.கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் # லட்சுமிமேனன் வாழ்க
 



பின்னால் முடிச்சு போட்ட இஸ்பேட் மாடல் ஓப்பன் ஜாக்கெட் டிசைன் ஒளிப்பதிவாளருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு போல.எப்பவும் கேமரா முதுகில்


8  பாண்டிய நாடு @ இடைவேளை.பார்த்த வரை ஓக்கே .பழைய கதை தான்.திரைக்கதை ஓக்கே .சுசீந்தரன் ராக்ஸ்

9 விஷால் ன் அண்டர் ப்ளே ஆக்டிங் குட்.சூரி மொக்கை போடாமல் இருப்பதும் ஒரு பிளஸ்.

10 ராஜபாட்டை யில் சறுக்கியவர் இதில் எழுந்துடுவார்னு தோணுது # சுசீந்தரன் ( ஆதலால் காதல் செய்வீர் ல சுதாரிச்சுட்டார்)

11  பாடல் காட்சிகளில் லட்சுமி மேனன் ன் கண்ணியமான ஆடைகள் ஆச்சரியம்.நஸ்ரியா வுக்கு அக்கா போல நற நற


12  ஒரு தயாரிப்பாளராக விஷாலுக்கு இது ஒரு வெற்றிப்படமே! ஆனால் ஒரு நடிகராக சராசரிப்படம் தான்.




சி பி கமெண்ட் -பாண்டியநாடு - அண்ணனைக்கொன்ற ரவுடியைப்பழி வாங்கும் மாமூல் கதை. முன் பாதி சுமார் , பின் பாதி ஸ்பீடு , பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு . ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-41


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 2.75   / 5