Thursday, October 10, 2013

ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள்: முன்னாள் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்

ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நிகழ்ந்த மர்ம மரணங்கள்: முன்னாள் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம்
ஜோத்பூர், அக்.10-( lady pc  ushaar madam


குஜராத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. அவரது புகாரின் பேரில் சாமியார் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார். 



முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் சாமியார் ஆசாராம் பாபு, ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி மனோஜ் கே வியாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். 



தற்போது ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசாராமின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரது முன்னாள் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.




ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அஜய்குமார் என்பவர் 1995ம் ஆண்டு முதல் ஆசாராம் பாபுவின் சேவகராக (உதவியாளர்) அகமதாபாத்தில் உள்ள மோடேரா ஆசிரமத்தில் பணியாற்றி வந்தார்.



சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பணியில் இருந்து விலகி யாரிடமும் சொல்லாமல் ஆசிரமத்தை விட்டு தப்பியோடிய அஜய் குமார், ஜோத்பூர் மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நேற்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.





'ஆசாராம் பாபுவின் ஆசிரமங்களில் தொடர்ச்சியாகவும், மறைமுகமாகவும் பெண்களின் நடமாட்டம் இருக்கவே செய்தது. அங்கு வேலை செய்த ஒரு சமையல்காரரும், இன்னொருவரும் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.



இதைப்போன்ற குற்ற சம்பவங்கள் நடப்பதை கண்டு பதறிப்போன நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன். தற்போதைய செய்திகளை அறிந்த பின் அவரது ஆசிரமம் பற்றிய மாயையில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்க போலீசாருக்கு உதவிடும் வகையில் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளேன்' என்று கூறினார்.

thanx  - maalaimalar