Saturday, October 05, 2013

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் பேட்டி @ ‘தி இந்து’ தமிழ்

தமிழருவி மணியன் 
 
 
காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்காக மதுரை வந்திருந்த தமிழருவி மணியன், தமிழகத்தில் பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.வைக் கொண்டு மாற்று அணியை அமைப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: 


மூன்றாவது அணி இல்லை 

 
தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என்ற தீமைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான மாற்று அணி. இதுவரையில் அமைந்த மூன்றாவது அணிகள் எல்லாம், தேர்தல் நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காமல், வெளியே தள்ளப்பட்டு, கடைசியில் வேறு வழியே இல்லாமல் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அணிகள். அந்த அணியின் மொத்த வாக்கு வங்கி 10 சதவீதம்கூட கிடையாது என்பதால், தமிழக மக்கள் அதை உதாசீனப்படுத்தி விட்டனர். 


இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க. அணிக்கு 30 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அணிகள் எல்லாம் சேர்த்தே 20 சதவீத வாக்கு வங்கிதான் இருக்கிறது. எனவே நான் அமைக்கிற மாற்று அணிக்கு குறைந்தது 30 சதவீத வாக்கு வங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். மோடி பிரதமராக வேண்டும் என்று 15 சதவீதம் பேர் விரும்புகின்றனர். மதுவுக்கு எதிரான நடைப்பயணத்துக்குப் பிறகு பெண்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால், ம.தி.மு.க.வுக்கு 10 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருப்பது ஏற்கெனவே நிரூபணமாகி உள்ளது. எனவே, இந்த அணியை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள். 


மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை 

 
நான் மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. ஊழலற்ற, நிர்வாகத் திறமையுள்ள ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை, மோடி என்ற பிம்பத்தை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறேன், அவ்வளவு தான். 



வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் அல்ல. மோடிக்கும் ராகுல் காந்திக்கும் அல்ல. மோடிக்கு போட்டி அவரேதான். மோடி வளர்ச்சியின் நாயகன் என்று பா.ஜ.க. சொல்கிறது. அவர் மதவெறி பிடித்தவர் என்று காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் சொல்கின்றனர். ஆக, நாயகனும் மோடிதான். வில்லனும் மோடிதான். இந்தியாவில் இப்படியொரு ஜனநாயகக்கூத்து நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. 53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாதது வேதனையாக இருக்கிறது. 



சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே அணி… 

 
இதே அணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது சாதாரண காரியம் அல்ல. தான்தான் முதல்வராக வேண்டும் என்று விஜயகாந்த் நினைப்பார். வைகோ முதல்வராக வேண்டும் என்று அவர் நினைக்காவிட்டாலும்கூட, நாங்கள் விரும்புவோம். இந்த மாற்று அணியின் செயல்பாடு, வைகோவை முதல்வராக்குவதை நோக்கியே இருக்கும் என்றார் தமிழருவி மணியன். 

 மக்கள் கருத்து

1. தமிழருவி மணியன் அவர்கள் நாட்டு நலனில் பற்றும் பாசமும் கொண்டவர் . அவரது கனவு நிறைவேற வேண்டுகிறேன்.

  • Vai.Rajendran
    தமிழருவி மணியன் அவர்கள் நாட்டு நலனில் பற்றும் பாசமும் கொண்டவர் . அவரது கனவு நிறைவேற வேண்டுகிறேன்.
    about 16 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • K.SILAMBARASAN
    வைகோவை முதல்வராக்கு
    about 18 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • kupendran
    முகவரி அற்றவர்களுக்கு இன்னொரு முகவரியற்ற RSS ன் முகமூடியான மோடி கிடைத்துள்ளார் . இந்த மோடியை பாமர மக்கள் அறிய மாட்டார்கள். இந்த மோடியை எந்த நியாயவானும் ஆதரிக்க மாட்டான். இவர் நடத்திய போலி என்கவுண்டர்களை எவரும் மறக்க வில்லை. பிரதமர் பதவி என்பது புனிதமானது. அது கொலை கரை படிந்ததாக இருக்க கூடாது. பாரத மாதா மன்னிக்க மாட்டாள் . மக்கள் அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புகிர்ரர்கள். மயான அமைதியை அல்ல.
    about 18 hours ago · Up Vote (2) ·  Down Vote (2)
  • SRIHARAN
    ரியல் எஸ்டேட் ப்ரோகர போனாலாவது கொஞ்சம் காசு கிடைக்கும்.இல்லை என்றால் பவர் ப்ரோக்கரா போகலாம்.கூட்டணி ப்ரோக்கரா போனா?
    about 18 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • INDIAN
    Mr. Sinivasan, don"t just look ahmedabad, as per CAG report gujarat is least developed state, our tamil nadu is far better than gujarat, your cheated by ornament buildings in ahmedabad, did u know the story of dubai, it is attractive architecture than modi" development ahmedabad. it is all media hype. do not under estimate congress performance, nation has developed in many aspects. don"t just look buildings of ahmedabad and victim of that.
    about 19 hours ago · Up Vote (2) ·  Down Vote (0)
  • srinivasan
    நீங்க மதவாதம் நு எதய சொல்றீங்க அய்யா.பொன்னைஅய தயவு செஞ்சு குஜராத் பக்கம் பொய் பாத்துட்டு வாங்க.3 டைம் முதல்வர்ன சும்மா இல்ல..மக்கள் ஒன்னும் முட்டாள் இல்ல..சரி காங்கிரஸ் என்ன பண்ணுச்சு 53 வருஷத்து
    about 20 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Krishnakumar Govindarajan at United Parcel Service
    M . G . R தன் படத்தில் சொன்னது " நீ உன்னை அறிந்தல், நீ உன்னை அறிந்தல் , இந்த உலகத்தில் போராடலாம் " - There is no short cut in life , no matter it takes time , All Political Parties got to earn the support of people . Don " t undermine வைகோ, விஜயகாந்த், even பா.ம.க with this Kind of CHEAP alliance games.
    about 20 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • Ravi
    வைக்கோவை பரிந்துரைப்பது மிக சரியான முடிவு, இப்போதுள்ள அரசியல்வாதிகழில் அவர் தேர்வுக்குரியவர். சிறந்த அறிவாளி, நேர்மை , அவரின் பலம் இளஞ்சர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது
    about 22 hours ago · Up Vote (3) ·  Down Vote (4)
  • Mohamed Haneefa
    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இளைஞர்களை, இந்தியாவை வல்லரசு ஆக்குவதற்காக கனவு காணச்சொன்னர்.. இப்படி குட்டிச்சுவரான தமிழருவி மணியனை அல்ல. ஏன் என்று சொன்னால், காந்தியம் பேசும் இவர் எந்த கட்ச்சியிலாவது நிலையாக இருந்தாரா. குற்றம் கான்கில் சுற்றம் இல்லை என்பதுபோல, பொறுமையில்லாமல் கட்சி தாவும் நிலைப்பாடு உள்ளவர். தற்பொழுது மோடியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு சிலாஹிக்கிறார். பி.ஜே.பி., ம.தி.மு.க., தே.மு.தி.க. இவற்றிற்கு ஒரிங்கினைப்பாளர் பதவியை தானே ஏற்படுத்திக் கொண்டார். இவர்களெல்லாம் என்ன உத்தமர்களா அல்லது உத்தமர்களின் புத்திரர்களா. சுய லாபத்திற்காகவே அரசியல் நடத்தும் அறிவீனர்கள். காலத்தின் கட்டாயமாக தற்பொழுது NOTA (None of the above) அறிமுகப்படுத்தப் படவுள்ளது. இந்த நேரத்தில் "நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாசமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி" என்ற கதையாக இவருடைய ஞானோதையம் காலம் கடந்து விட்டது. இனி புரையோடிய அரசியல் கட்சிகளை தரையோடு புதைத்துவிட NOTA ஒன்று போதும்.
    about 22 hours ago · Up Vote (8) ·  Down Vote (5)
  • muttal
    மோடி பிரதமர் என்பது சரி ஆனால் வை கோ முதல்வர் என்பது நல்ல தமாஷ்! கனவு காணவும் ஒரு அளவு வேண்டாமா? தமிழகத்தில் ம.தி.மு.க எங்கே இருக்கிறது ?அது லெட்டெர் பேடு கட்சியாகி ரொம்ப நாளாகி விட்டது இதை விட தமிழருவி முதல்வர் என்பதே பரவாயில்லை..
    about 23 hours ago · Up Vote (0) ·  Down Vote (4)
  • Krishnakumar Govindarajan at United Parcel Service
    "ஜோகர்" அல்லது "கேம் சேங்ச்சேர்" - வைகோக்கும் and விஜயகாந்துக்கும் முந்தையா தி.மு.க.,, அ.தி.மு.க தமிழகத்தில் , தந்த முடுவு : "ஜோகர்". இந்தமுறை தேசிய அளவில் பா.ஜ.க . : முடுவு : ? அ.தி.மு.க / பா.ஜ.க தேசிய அளவில் சப்போர்ட் - மோடி தன் கூட்டத்தில் தேர்வித்துள்ளர். மாற்று அணி பின் காரணம் விஜயகாந்து - NO காங்கிரஸ், அ.தி.மு.க தி.மு.க - NO பா.ஜ.க வைகோ - NO காங்கிரஸ், NO தி.மு.க
    about 24 hours ago · Up Vote  (0) ·  Down Vote (0) ·  reply (0)
  • Rahul
    கனவு காணுங்கள் - அப்துல் கலாம். கனவு காண ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு
    about 24 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • parthi
    இது நல்ல முயச்சி . வைகோ நல்ல முதல்வர்
    about 24 hours ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Ganesan
    விஜயகாந்தும் வைகோவும் திமுக அஇஅதிமுகவுக்கு மாற்றாம். தமிழருவி மணியன் சொல்கிறார் நம்புங்கள். இந்தியாவின் ராஜபக்ஷே மோடியை, பிஜேபி கும்பலை ஆதரிக்கும் காந்திய இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் - புரிந்து கொள்ளுங்கள்
    a day ago · Up Vote (0) ·  Down Vote (0)
  • Ponniah Rajamanickam
    காந்தி மக்கள் இயக்கம் எனப் பேர் வைத்துக் கொண்டு நரேந்திர (வேட்டை) மோடிக்கு ஆதரவு தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. வளர்ச்சி என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு மதவாதம் வருகிறது என்பது கூடத் தெரியாத தமிழருவி மணியன் அறிவு ஜீவி என்ற அடையாளத்தை இழந்துவிட்டர். ஒரு இடைத்தரகர் அளவில் கீழ் இறங்கி விட்டார்.
    a day ago · Up Vote  (1) ·  Down Vote (2) ·  reply (0)
    Ponniah Rajamanickam  Down Voted Ponniah Rajamanickam\"s comment
  • Muttal
    என்னமோ சொல்வாங்களே ! நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று ??????
    a day ago · Up Vote (0) ·  Down Vote (4)
  • andal
    எதிர்பார்ப்பு தவறில்லை. மோடியை நகர மக்கள் அறிந்துருபதுபோல் கிராம மக்கள் அறிவார்களா என்பதனை உறுதிசெய்ய வேண்டும். நகர மக்கள் மனது அடிக்கடி மாறுபடும்.. ஆனால் கிராம மக்கள் அப்படிஇல்லை. பா.ஜ. கட்சி கிராம மக்கள் மனதில் இடம் பெறவேண்டும் இதற்கு ஏற்ற திட்டம் தேவை.
    a day ago · Up Vote (0) ·  Down Vote (0)
 நன்றி -  ‘தி இந்து’ தமிழ்