Friday, September 27, 2013

ராஜா ராணி - சினிமா விமர்சனம்

தன் கண் முன்னால்   காதலி விபத்தில் இறந்ததைப்பார்த்த காதலன் ,  தன் காதலன் இறந்த செய்தியைக்கேட்டு  இடிந்த காதலி  இருவரும் அவரவர் பெற்றோர் விருப்பத்துக்காக திருமணம் செய்தால் என்ன ஆகும்? இதுதான் படத்தின் ஒன் லைன். ஆனால் மேக்கிங்க் ஸ்டைலில் புது இயக்குநர் அட்லி  ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார்  . அவருக்கு  ஒரு சபாஷ் 


மவுன ராகம் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் . அதில் சந்தேகம் இல்லை . ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லி மணிரத்னம் கதைக்கருவை எடுத்தது ஆச்சரியம் 


படத்தில்  அரை மணி நேரமே வந்தாலும் அட்டகாசமான அப்ளாஷ் அள்ளுபவர் ஜெய் தான் . இந்த மாதிரி  ஒரு பயந்தாங்கொள்ளி கேரக்டர்  கிடைத்தால் எல்லா பொண்ணுங்களுக்கும் கொண்டாட்டமே என்னும் சைக்காலஜியில் அந்த கேரக்டர் செம ஹிட் ஆகி விட்டு இருக்கிறது . பாடி லேங்குவேஜ் , டயலாக் டெலிவரி எல்லாவற்றிலும் ஜெய் அசத்தி உள்ளார் . ( ஜோடியாக அஞ்சலி வந்திருந்தால் இன்னும் கலக்கலா , நேச்சுரலா  இருந்திருக்கும் 




நயன்  தாரா  யாரடி  நீ மோகினி க்குப்பின்  முழுக்க முழுக்க ஸ்கோர் செய்யும் வாய்ப்புள்ள  கேரக்டர் . நல்லா பண்ணி  இருக்கார் . அவர் உதட்டில்  நடு மண்டலத்தில்  உள்ள அந்த மச்சம் செம கிக் .  மாடர்ன் டிரஸ் போட்டாலும் , சேலை கட்டினாலும்  ஒரே வித அழகுடன்  மிளிர்வது நயனின்  தனிச்சிறப்பு 


ஆர்யா . ஐ டி கம்ம்பெனியில் ஒர்க்  பண்ணும் ஆள் எப்படி  இருப்பாரோ அப்படியே கண்  முன் நிறுத்துகிறார் . அருமையான நடிப்பு , ஆனால்  அவர்  ஆடியன்ஸ் மனம் கவரும் அளவு பிரமாதப்படுத்தவில்லை 


நஸ்ரியாவின்  க்யூட்டான  முக பாவங்கள் அழகு , ஆனால் ஆங்காங்கே செயற்கை இழை தட்டுகிறது . ஆர்யா - நஸ்ரியா கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு 



சந்தானம் காமெடிக்கு , சொல்லவே வேணாம் . அவர் வரும் காட்சிகள் எல்லாம் படத்துக்கு பிளஸ்சே 


சத்யன் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் , சத்யராஜ் நயனின் அப்பாவாக வந்து  நிறைவான நடிப்பைத்தந்திருக்கிறார் 










இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  நயன் தாராவுக்கு அதிர்ச்சியான செய்தி கேட்கும்போது  வரும் காக்கா வலிப்பு மாதிரியான  நோய் கட்டத்தில் அவர் கண்கள் சொருகி மயங்கி துடிப்பது  இயல்பான நடிப்பு .


2. ஜெய் - நயன்  இடையே மலரும்   கஸ்டமர் கேர் லவ் ஸ்டோரி படத்துக்கு பெரிய  பூஸ்ட் அப் . ஆரவாரமான காட்சிகள் , பிரமாதமான  திரைக்கதை   ஏரியா 


3. நான் கடவுள்  வில்லனை காமெடியாகப்பயன் படுத்தி  இருப்பது  இயக்குநரின் சாமார்த்தியம் 


4. சந்தானத்தின்  காமெடி டிராக் படத்தின்  கதையோடு  ஒன்றி வருவது  


5.  நஸ்ரியாவுக்கு ஏற்படும் விபத்து படமாக்கப்பட்ட விதம் ஷங்க்ரை நினைவு படுத்துது , குட் ஒர்க் 


6 ஜார்ஜ் விலியம்சின் ஒளிப்பதிவு அழகு , ஜி வி பிரகாஷின் இசை  குட் , பின்னணி இசை ஆங்காங்கே அண்ணன் எங்கியோ சுட்டிருக்கிறார் என எண்ண வைக்கிறது 





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 



1. ஓப்பனிங்க் சீனில்  சர்ச்சில்  மணக்கோலத்தில்  வரும்  நயன்  மண்டைல அவ்ளவ் பெரிய கொண்டை எதுக்கு ? சகிக்கலை . மனதளவில் வெறுப்பு நிலையில்  இருப்பவர் லிப்ஸ்டிக் ,  கன்ன த்துக்கு என்ன என்னமோ தடவி வருவது  உறுத்தல் . அப்பா கட்டாயத்துக்காக திருமணத்துக்கு வேண்டா வெறுப்பா  வருபவர் மேக்கப் மட்டும்  அவ்வளவு சிரத்தையா செய்வாரா? 



2. ஆர்யா   திருமணக்காட்சிகளில்  சில இடங்களீல் லைட் தாடியுடனும்  , சில இடங்களீல்  நீட்  ஷேவிங்குடனும் வருவது கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் 



3. என்ன தான் ஆர்யா வுக்கு நயனைப்பிடிக்கலைன்னாலும் மேரேஜ் ஆகி 10 நாள் ஆகி அவர் பேரு , ஃபோன் நெம்பர் கூடத்தெரியாம  இருக்குமா? ஹாஸ்பிடலில்  நயன் பேரென்ன என டாக்டர் கேட்க  ஆர்யா  தெரியாது என்பது  கேலிக்கூத்து 



4. ஜெய்  ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வர்ரேன்னு சொல்லிட்டு வர்லை . 6 மணீக்கு ஆஃபீஸ்  முடியுது . அப்போ அப்பா சத்யராஜ் கார்ல வந்து  நயனை  ஜெய் வீட்டுக்கு  கூட்டிட்டுப்போறார் , அப்போ அவர் வாட்ச்ல மிட் நைட் 12 17  காட்டுது , அதுக்குள்ளே 6 மணீ நேரம் ஆகி இருக்குமா? மீறி மீறிப்போனா  8 மணி தான் ஆகி இருக்கும் , பேக்  கிரவுண்ட் ஷாட்டும் மிட் நைட் மாதிரியே கலரிங்க் 


5.  ஜெய் யின் அப்பா சாதா ஆள் . நயனின் அப்பா  லட்சாதிபதி , பின்  ஏன்  காதலுக்கு எதிர்ப்பு? அதில்  தெளிவில்லையே ? 





6. ஜெய்   ரெஜிஸ்டர் மேரேஜ் வரை ஓக்கே சொன்னவர்  பின் மனம் மாறுவதற்கு காட்சி ரீதியாக விளக்கம் வைத்திருக்கனும் . ஜஸ்ட்  ஒரு டயலாக்கில் அப்பா எதிர்த்தார் என்பது எல்லாம் பத்தாது 


7.  உங்க மனைவிக்கு மைனர் சர்ஜரி பண்ணி  இருக்கோம் என டாக்டர் ஆர்யாவுக்கு இன்ஃபார்ம் பண்றாங்க , மைனர் ஆபரேஷனா  இருந்தாலும் கணவர்ட்ட   சைன் வாங்க வேணாமா? 


8.  நயப் தாரா  தன் அப்பா மடியில் சாய்ந்து  கண்ணீர்  விடும்போது  கண்ணீர்  பச்சைக்கலரில் , நேவி  ப்ளூ கலரில் வருது . காட்சியின்  சீரியசை காமெடி ஆக்குது . அந்த  சோக சீனில் மட்டும்   மேக்கப்பை குறைச்சு கண்ணீரை  வெள்ளை ஆக்கி இருக்கலாம் 


9 நயன் தாராவுக்கு  புருவம் ட்ரிம் பண்ணி விட்டது  யாரோ ? பல க்ளோசப் காட்சிகளீல்  இடது புருவம் அடர்த்தியாவும் , வலது  புருவம்  மெல்லிசாவும்  இருக்கு ,ம் அதே போல் இடது புருவம்  வளைந்த மாதிரியும்  , வலது  புருவம் நேராகவும்   வரைஞ்ச மாதிரி செயற்கையா இருக்கு 


10  படம்  முழுக்க  கண்ணியமான்  உடையில்  வரும் நயன்  முக்கியமான சோக காட்சியில்    சிவப்புக்கலர்  புடவையில் அவ்வளவு  லோ ஹிப்பில் வர வேண்டுமா? 






11 பாடல் காட்சிகளில்  இன்னும்  மணிரத்னத்தனம் வேண்டும்  , சுமார்தான் 



12 படத்தின்  கடைசி  30  நிமிடங்கள்  இழுவை , எடிட் பண்ணி  ட்ரிம் பண் நனும்


13 க்ளைமாக்ஸில் இறந்ததா சொல்லப்படும்  ஜெய்   உயிரோடு வருவது  திரைக்கதைக்குத்தேவை  இல்லாத ஒன்று 


14  ஜெய் விபத்தில் இறந்ததாக சத்யன் சொன்னதும் நயன் மயக்கம் போட்டு விழுந்தார்  ஓக்கே , அப்பா சத்யராஜ் ஏன் டெட் பாடியைப்பார்க்கப்போகவில்ல்லை, இது ஒரு டிராமா என்பதை அவரால் ஏன் யூகிக்க முடியவ்வில்லை ? 

15  ராஜா ராணி நஸ்ரியா ஓப்பனிங் சீன் முக பாவனைகள் ஆசை சுவலட்சுமி யின் முகபாவனை சாயல்





மனம் கவர்ந்த வசனங்கள்

சந்தானத்தின் காமெடி டயலாக்ஸ் படத்தில் மொத்தம் 53 இடங்களீல் வருது , அது தனிப்பதிவாக பின்னர்  வரும் 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =  3 / 5


சி பி கமெண்ட் - காத்லர்கள்  , நஸ்ரியா  நயன்  ரசிகர்கள்   என இளைஞர்களுக்குப்பிடிக்கும் , படம் போர் அடிக்காம போகுது . பெண்களையும்  இது கவரும்  , க்டைசி 30  நிமிடங்கள் மட்டும்  கொஞ்சம் போர் , ஏ , பி செண்ட்டர்களீல்  ஹிட் ஆகிடும் , சி செண்ட்டர்களீல்  சுமாராத்தான் போகும் 





ராஜா ராணி படம் பார்த்து பின் நான் ட்வீட்டியது

படத்தால் அட்லீ சாதித்தது- இனி ஊர்ல ஒரு பிகரும் யாரையும் அண்ணானு கூப்ட்டு வெறுப்பேத்த முடியாது # வெச்சாரில்ல ஆப்பு.டாப்பு

ஒவ்வொரு காதல் தோல்விக்குப்பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கு.ஒவ்வொரு வாழ்க்கையிலும் காதல் தோல்வி இருக்கு

அட்லியிடம் நான் கற்றுக்கொண்டது = பொண்ணு நம்மை அண்ணானு கூப்ட்டா நம்மை வெறுப்பேத்த ட்ரை பண்றானு அர்த்தம்.பிட்டைப்போட


ராஜா ராணி - ஜாலி லவ் ஸ்டோரி - ஏ பி செண்ட்டர்களில் ஓடிடும் - விகடன் மார்க் - 42 - ரேட்டிங்க் 3 /5 , ஜெய்யின் கலக்கல் நடிப்பு +


மவுன ராகம் மோகன் அளவு ஆர்யாவால் ஸ்கோர் பண்ண முடியாததற்கு ஆர்யா காரணம் அல்ல


அட்லீ ஷங்கரின் அசிஸ்டெண்ட்டாக இருந்தாலும் ரத்தத்தில் மணிரத்னக்குறும்பு ஓடுகிறது !இளமைத்துள்ளாட்டம்

ராஜாராணி யில் ஜெய் ன் நடிப்பு ம்வுன ராகம் கார்த்திக் க்கிற்கு இணையான கலக்கல் நடிப்பு.தியேட்டரில் ஆரவாரம் இன்னும் அடங்கலை







டிஸ்கி -

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/09/blog-post_28.html