Wednesday, September 25, 2013

GRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால் குஜால் சினிமா) 42 +

தினமலர் விமர்சனம்

இந்த வருடத்தின் மஹா மட்டமான படங்களில் முக்கிய அங்கம் வகிக்கும் படம் தான் கிராண்ட் மஸ்தி. பெண்ணின் தேகத்தை கருவாக்கி, அதற்கு நகைச்சுவை எனும் போலி முகமூடியை அரிதாரமாக்கி, திரையரங்கை கழிப்பறையாய் மாற்றியுள்ள ஒரு குப்பை தான் இப்படம்.

மூன்று பால்ய (பாலிய) சிநேகிதர்கள் ரிதேஷ் தேஷ்முக், விவேக் ஓப்ராய், அஃப்தப் சிவதசனி மூவருக்கும் கலவியன்றி வேறெதிலும் பற்று கிடையாது. திருமணமான இம்மூவருக்கும் தாம்பத்திய வாழ்வில் திருப்தி அடையாமல் போகிறது. காலேஜ் ரீயூனியனுக்காக கூடும் இம்மூவர் அங்கு என்ன கசமுசா செய்கிறார்கள்?? என்பதுதான் மீதிக் கதை.

நாகரீகம் கருதி இக்கதை பற்றி இவ்வளவு குறிப்பை மட்டுமே குறிப்பிடுகிறோம். இதற்கு மேல் விவாதித்தால் மூன்றாம் தர பிட்டுப்படக் கதையை விவரிப்பது போல் தோன்றும்.  இப்படத்தை எப்படி மெயின் ஸ்ட்ரீம் சினிமா வகையில் ஒப்புக் கொண்டார்களோ தெரியவில்லை. அடல்ட்ஸ் காமெடி என்ற பெயரில் அபத்தக் காமெடி. சகிக்க முடியாத அகோரக் கற்பனை திரைக்கதையில்.


விவேக் ஓப்ராய் போன்ற நடிகர் ஏன் இதைப் போன்ற படத்தை ஏற்றுக் கொண்டு நடித்தார் என்று தெரியவில்லை. சாத்தியா, ரத்தச் சரித்திரம், கம்பெனி, ஓம்காரா இப்படி பல படங்களில் ரசிக்க வைத்த விவேக் ஓப்ராயின் நடிப்பு இந்த ஒரே படத்தின் மூலம் சூன்யம் ஆகியுள்ளது.

சான்ஸ் கிடைக்கவில்லை என்பதற்காக இப்படியா!!!  ரிதேஷ், அஃப்தப், விவேக் ஓப்ராய் மூவரின் நடிப்பு, நடிப்பென்ற வார்த்தைக்கே இழிபாடு செய்துள்ளது. ஏதோ மூன்றாம் தர படத்து கதாபாத்திரம் போல் ஹான் ஹும் என்று சிணுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நெருடல்!!

நீலப்படம் எடுப்பது சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ள நம் நாட்டில் மெயின் ஸ்ட்ரீம் சினிமா என்ற போலி முகமூடி அணிந்து சினிமாவை கற்பழித்துள்ளனர். இந்தப் படம் வேறு 2100 திரையரங்குகளில் வெளிவந்து சக்கை போடு போடுவது பெரும் பீதியை வரவழைக்கிறது.


மொத்தத்தில்: ‘கிராண்டு மஸ்தி’ - ‘நாற்றம்’ - இழிபாடுள்ள ஒரு படைப்பு.
நன்றி - தினமலர்
  • நடிகர் : விவேக் ஓபுராய், ரிதேஷ் தேஷ்முக், அப்தப் சிவதசனி
  • நடிகை : ..
  • இயக்குனர் :இந்திர குமார்