Thursday, September 19, 2013

ஆ ராசா பிரதமருக்கு பகிரங்க சவால் - மக்கள் கருத்து


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும், பிரதமரை நேரில் சந்தித்து, அவரது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பிறகே, 2007 மற்றும் 2008ம் ஆண்டில் நடந்தது. அதில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009ல், திரும்பவும், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஒதுக்கினார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், சுப்ரீம் கோர்ட் பார்வையில் விசாரிக்கப்படும் போது, மறுபக்கம் இது குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் (ஜே.பி.சி.,) வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் கூட்டுக்குழு தலைவர், சாக்கோ தயாரித்துள்ள, இறுதி அறிக்கை, நிறைவேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.கூட்டுக்குழுவுக்கு, கடந்த ஏப்ரல் மாதமே அந்த கடிதத்தை, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிக்கி உள்ள ராஜா அனுப்பியிருந்தாலும், அதை, இறுதி அறிக்கை தயாரித்து முடித்த பிறகு, சுற்றறிக்கையாக சாக்கோ அனுப்பியுள்ளார். அது ரகசிய ஆவணம் என்றாலும், அதில் இடம்பெற்ற கருத்துக்கள் குறித்து, டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தன்னை மட்டும் இந்த ஊழல் பிரச்னையில் மாட்டிவிடும் வகையில்ஜே .பி.சி., அறிக்கை வந்தால், அது அவரது எதிர்கால அரசியலை பாதிக்கும். தி.மு.க., - காங்கிரஸ் உறவில் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தும்.ஆகவே இந்த தகவல்கள் கசியவிடப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.



ராஜா எழுதிய கடித்தத்தில் உள்ள தகவல்களாக கூறப்படும் விஷயங்கள்:கடந்த 2007 நவ., 20ல், இரண்டு கடிதங்களை, பிரதமருக்கு அனுப்பியுள்ளேன். மேலும், டிச., 26, 2007; நவ., 7, 2008; ஏப்., 21, 2010ல், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். கடைசியாக, ஜூலை 21, 2011ல், பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.இதுமட்டுமல்லாது, பிரதமருடன், நான் தனிப்பட்ட முறையில், பல தடவை ஆலோசனை மேற்கொண்டிருக்கிறேன்.அதிகாரிகள் இல்லாமல், நாங்கள் இருவர் மட்டும் தனிப்பட்ட முறையிலும் பலமுறை பேசியிருக்கிறோம். இவை எல்லாவற்றுக்குமே ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றதற்கான நேர குறிப்புகள், ஆவணங்கள், கோப்புகள் என, பலவும், பிரதமர் அலுவலகத்தில் உள்ளன. அரசின் கொள்கை முடிவை, நடைமுறையில் இருந்து விலகி நின்று, அமல் செய்ததாக, என் மீது குற்றம்சாட்டப்படுவது முற்றிலும் தவறானது.



நான் செய்த தவறு என, ஒன்றை கூற வேண்டுமானால், "லெட்டர் ஆப் இன்டென்ட்' எனப்படும் உரிமத்திற்கான கடிதங்களை, அனைவருக்கும், ஒரே நேரத்தில், அனுப்பியதை வேண்டுமானால் கூறலாம். லைசென்ஸ் வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு, சம்பிரதாய நடைமுறையில், அனுப்பப்படும் அந்த கடிதங்களை கூட, பிரதமர் மன்மோகன் சிங்கின் முழு ஒப்புதலை பெற்று தான் அனுப்பினேன். அதன் பிறகே, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், முறைகேடுகளில் ஈடுபட்டு, இந்த குற்றங்களைச் செய்த, அதே ராஜாவான எனக்கு, 2009ம் ஆண்டு அமைந்த, மன்மோகன் சிங் தலைமையிலான புதிய அரசில், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஏன் ஒதுக்கீடு செய்ய வேண்டும்? இவ்வாறு, அந்த கடிதத்தில் ராஜா குறிப்பிட்டுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



- நமது டில்லி நிருபர் -


1. விளக்கெண்ணையை தடவிக்கொண்டு வீதியில் புரண்டு புரண்டு அழுதாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும் ...விதி வலியது அதையாரும் வெல்ல முடியாது ...அவனுக்கென்ன தூங்கி விட்டான் ...அகப்பட்டவன் நான் அல்லவோ மாட்டிக்கொண்டேன் ..பதவியை முடக்கிவிட்டான் ...தனியே இப்படி புலம்பவிட்டான்


2. கருணாநிதியை நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் இந்த கதிதான். தானும் தன குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்வதில் இருந்த அவசரம் கூட்டாளியை காப்பாற்றுவதில் இல்லையே. இதுவே உங்களுக்கு ஆன படிப்பினை. உங்கள் பிரச்னையை நீங்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். பிரதமரை துணைக்கு அழைக்கும் ராஜா, கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் ஏன் அழைக்கவில்லை? தி மு க கட்சிதானே தன் தொண்டர்களை காப்பாற்றவேண்டும். ராஜாவை அது தன் தொண்டனாக ஏற்கவில்லையா? ராஜா ஒருவேளை தவறே செய்யாமல் இருந்தாலும் அவர் சேர்ந்துள்ள இடம் அவர் பக்கம் உள்ள நேர்மையை நம்ப மறுக்கிறது. நிச்சயம் ராஜா தவறு செய்திருப்பார் என்றே தோன்றுகிறது. சட்டம் என்ன செய்கிறது அல்லது சொல்கிறது என்று பார்ப்போம்.


3, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதும் பின்னர் அதனை வெளியுறவுத்துறை ஆட்சேபனையால் திரும்பபெற்றதும் ஏன்? அதன் பயனாளி தாவூத் இப்ராஹிம். அவரது பினாமியாக டைரெட்டராக சேர்ந்தவர் 'காய்கறிக் கடை'ஷாஹிது பலவா, கலைஞர் டிவி க்கு 2000000000அடமானமில்லாக் கடன் கொடுத்து புகழ் பெற்றவர் மற்ற பயனாளி நம்ம கீழக்கரை ETA Star சலாவுதீனின் மகன் அதாவது கருணாநிதிக்கு மிகவும் வேண்டியவர் தலைமை செலயகம், லைப்ரரி,காப்பீட்டுத் திட்டம் போன்ற பல கோடி ஒப்பந்தங்களை பெற்றவர் .நன்றிக் கடனாக கனிமொழியின் சென்னை சங்கமத்துக்கு 10000000 கொடுத்தவர் ..இந்த நிறுவனமே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்புள்ளது . நம் நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்துவிட்டு பழியை மன்மோகன் மீது போடுவது டகால்டி வேலை


4. கிராநைட் வழக்கில் தயாநிதி அழகிரி போலிசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தெறித்து ஓடி பதுங்கினார் ...இப்போது தி மு க மாவட்ட செயலாளர் கருப்பு சாமி பாண்டியன் பாலியல் புகாரில் தெறித்து ஓடி பதுங்கல் ...என்ன நடக்குது கட்சியில் ...இவர்களை பினப்ற்றி ஆ ராசாவும் தெறித்து ஓட வேண்டியதுதான் ..விடு ஜூட்


5. எல்லாமே மன்மோகன் தான் சொன்னார் நான் அதன்படி செய்தேன், என்று காது குத்தும் ராஜாவே, சாதிக் பாட்சா மூலம் 10 நாடுகளில் 2ஜீ ஊழல் பணம் போட சொன்னாரா? உறவினர்கள் மூலம்,Green House Promoters, Equaas, Kovai shelters, Sivakhamam முதலான பினாமி கம்பணிகள் ஆரம்பிக்க சொன்னாரா? உங்கள் மனைவி ராஜேஸ்வரியை பினாமி பாட்சா கம்பணியில் டைரக்டரா போட சொன்னாரா? 2ஜீ ஊழல் பணத்தை Green House Promoters கம்பணியில் முதலில் போட்டு பின் அதை மற்ற கம்பனிகளுக்கு மாற்ற சொன்னாரா? ஊழல் பணத்தை , உறவினர்கள் பெயரில் ரியல் எஸ்டேட்டிலும், வேறு சொத்துகளிலும் முதலீடு செய்ய சொன்னாரா? அமுலாக்க துறையும், வருமாண வரி துறையும் கட்டவிழ்த்து விடப்பட்டால், 2ஜீ யில் ஊழல் இல்லவே இல்லை என்று புழுகும் உங்கள் அனைவரின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறி விடும். இனிமேல் ஓட்டை பூட்டை ரொம்ப ஆட்டாதிங்க. புரியுதா இல்லையா.


6. இந்த பிரச்சினையை பிரதமர் சரியாக கையாளவில்லை. எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் நிர்ப்பந்தத்துக்கும் சொந்த கட்சியின் அரசியல் சூழ்ச்சிக்கும் இடம் கொடுத்ததால் வந்த வினை. சிறிய மனித தவறு இமாலய பெரிதாக்கப்பட்டு விட்டது

7. இந்த 2G குப் பின் நிலக்கரி,ரயில்,இன்னும் பல ஊழல் விசயங்கள் வெளியே வந்து விட்டன. அப்படியிருக்க இது ஒன்றை மட்டுமே பிரதானமாகப் பேசுவது ஒரே போராக இல்லையா?


8  

அடிப்படையில் சில கேள்விகள் கேட்டாலே போதும் - 2G விவகாரம் தெளிவாக புரியும். (1) ஏன் ஏலம் திடீர் என்று முன்னதாகவே வைக்கப்பட்டது, (2) ஏன் லெட்டெர் பாட் நிறுவனங்கள் கூட ஏலத்தில் இடம்பெற முடிந்தது? (3) ஏன் அரசு உரிமத்தை ஒரு நிறுவனம் அடுத்த நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிகளுக்கு விற்ற பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யவில்லை? (4) பசி பற்றி ஏன் யாரும் பேச மட்டேன் என்கிறார்கள். அவரை விசாரணைக்கு அழைக்கக்கூட அரசு எதிர்ப்பு காட்டுகிறது. இதன் மர்மம் என்ன? (5) சிறிய சிறிய நிறுவனங்கள் முக வின் தொலைகாட்சி நிறுவனத்துக்கு கடன் கொடுக்க வேண்டியதன் ரகசியம் என்ன? அந்தக்கடனையும் கூட முக வின் தொலைகாட்சி நிறுவனம் ஏன் இந்த விஷயம் வெளிவந்தவுடன் வேறு யாருக்கோ திரும்பக்கொடுக்கிறது? யார் யாருக்கு கருப்பை வெள்ளையாக்க முக உதவினார்? தீவிரவாதிகள் போதைப்பொருள் விற்ப்பதன் மூலம் பணம் திரட்டியதை முக சிறுபிள்ளை போல வெள்ளையாக மாற்றிகொடுத்திருக்கிறாரா? (6) இராம் ஜெத்மலானி கூட இராஜாதான் நடந்தவற்றிக்கு பொறுப்பு என்று வாதாடிய பின்ன என்ன காரணத்துக்காக இராஜாவை வெளியே விட்டு வைத்திருக்கிறார்கள்? போட்டுத்தள்ளவா அல்லது வேறு காரணத்துக்காகவா? (7) எதற்க்கெடுத்தாலும் விசாரணை கமிஷம் வைக்கும் அரசு ஏன் 2G விவகாரத்துக்கு ஒரு விசாரணை கமிசன் வைக்கவில்லை? நீதிபதிகள் விசாரிக்க ஆரம்பித்தால் உண்மைகள் வந்து விடும் என்ற பயமா? (8) ஏன் JPC வீணாக பல வேலைகளை செய்து வருகிறது - நீதிமன்றம் போல செயல்பட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? எனக்கு என்னவோ இராஜாவை விட்டுவைத்திருப்பது சமயம் பார்த்து போட்டுதள்ளவே என்று தோன்றுகிறது. அரசின் மெத்தன போக்கும் அதை உறுதி செய்கிறது. அடுத்து வரும் அரசாவது பிரதமரையும், நிதியமைச்சரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். பணம் போன வந்த வழி சிதம்பரத்துக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வேண்டும்.


9. அரசாங்கத்தில் ,1000 நாற்காலிகள் வாங்க வேண்டும் என்றாலே நிதி அலுவலகத்தை கலந்து அலோசனை பெற வேண்டும். தகுதி ,தரம் ,வழங்கப்படும் நேரம் ,இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். ராஜா , ப சி யை ஆலோசனை செய்யவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. ப சி யும் ,குற்றவாளி தான். 2014 ஜூன் ல் தான் நடக்கும்.

10 2006 ல் , ரதன் டாட்டா ,மன்மோகன் சிங்க் க்கு,ஒரு கடிதம் எழுதினர் ,தினமலரின் ,முதல் பக்கத்தில் வந்தது.நாட்டின் விலை மதிப்பில்லாத SPECTRUM ,ஏலம் விட வேண்டும்.அவர் ஒரு உரிமத்திற்கு ,ருபி 15,000 கோடி தருகிறேன் என்றார். ஆனால் ராஜா 122 உரிமங்களையும் 9600 கோடிக்கு ,குடுத்தார்.மக்களே கணக்கு பார்த்துக் கொள்ளவும். மு க விற்கு சென்ற 2 உறைகள்,நிடா ராடிய ,கொடுத்தது என்ன ?


நன்றி - தினமலர்