Friday, September 13, 2013

மூடர் கூடம் - சினிமா விமர்சனம்



படிப்பறிவே இல்லாத  3 இளைஞர்கள், படிச்ச  ஒரு ஆள் 4 பேரும்  சந்தர்ப்ப சூழ்நிலையால் திமுக காங்கிரஸ் மாதிரி கூட்டுக்களவாணி ஆகறாங்க , அவங்க கூட இருக்கும்  ஒருத்தனோட சொந்த  மாமா  வீட்லயே கன்னம் வைக்க பிளான் . ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி  வீட்ல  இருக்கறவங்களை எல்லாம் ஹால் ல உட்கார வெச்சு பணம் எங்கேன்னு தேடறாங்க , கிடைக்கலை .எல்லா சொத்து பத்துக்களையும் வேய்க்கானமா பதுக்கிட்டு வழக்கை சந்திக்க தயார் , ரெய்டுக்கு ரெடின்னு அறிக்கை விடும் அரசியல்வாதி போல் ஆட்டம் காட்டும் மாமா & குரூப் , அவங்களைத்தேடி வரும்  வெளி ஆட்கள் இதை வெச்சு ரெண்டரை மணி நேரம் சிச்சுவேஷன் காமெடி திரைக்கதை அமைச்சிருக்காங்க . பாராட்டத்தக்க  முயற்சி 


டாக்டர் ராஜசேகர் தம்பி செல்வா நடிச்சு சில வருடங்களுக்கு  முன் வந்த  கோல்மால் படக்கதையை பட்டி டிங்கரிங்க் பண்ணி கொஞ்சம் ஆங்காங்கே செண்ட்டிமெண்ட் டச் வெச்சு  காமெடி மெலோ  டிராமா ஆக்கி இருக்காங்க அந்தப்படமே  ஒரு ஹிந்திப்படத்தோட  ரீமேக் தான் .. கமல் -கிரேசி மோகன் காம்பினேஷன்ல வந்திருந்தா செம கலக்கு கலக்கி இருக்கலாம் 


நவீன் தான்  ஹீரோ , இயக்கம் , தயாரிப்பு  எல்லாம் . படிச்ச கம்ப்யூட்டர் இளைஞன் மாதிரி கன கச்சிதமான தோற்றம் . முக பாவனைகள் கை கொடுக்காட்டியும்  திரைக்கதை காப்பாத்திடுது




சென்றாயன் தான் 4 பேரில் கவனம் கவர்பவர் . மனுஷன் கலக்கிட்டார் . நல்ல வாய்ப்பு  கிடைச்சா  இவர் முன்னணி காமெடி  கம் குணச்சித்திர நடிகர் ஆவது  உறுதி 


நாயகி  ஓவியா. ஷாக் சர்ப்பரைஸ் . அதிக டிரஸ் சேஞ்ச் பண்ணவெல்லாம் வாய்ப்பில்லை . திரைக்கதைப்படி ஒரே  ஹாலில்  கதை பயணிப்பதால் படம் பூரா  ஒரே மாடர்ன் டிரசில் வர வேண்டிய சூழல். தன் பங்குக்கு  சிரசாசனம் செய்து  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி  செய்கிறார் 


ஜெயப்ரகாஷ் உட்பட படத்தில்  வரும் அனைத்து கேரக்டர்களும்  கதையின் சிச்சுவேஷன்  காமெடித்தன்மையை உணர்ந்து கலக்கி இருக்கிறார்கள் .  வெல்டன் 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 
 
 
 
1. படத்தோட  ஓப்பனிங்க்லயே கதைக்கு நேரடியா வந்தது . படத்தில் வரும் 4 இளைஞர்களுக்கும் டக் டக்னு ஒரு ஃபிளாஷ் பேக்  கொடுத்து   அதை அதிமுக அமைச்சர் பதவி காலகட்டம்  மாதிரி டக்னு சின்ன போர்ஷன்ல முடிச்சது . யாரும்  மொக்கை காமெடி என அசால்டா சொல்லிட  முடியாத படி ஆங்காங்கே செண்ட்டிமெண்ட் டச் பண்ணியது 
 
 
 
2. அந்த பொடிப்பையன் , வாண்டு தங்கச்சி சோ க்யூட் . முட்டாள்ப்பையன்னு அடிக்கடி  திட்டும் அப்பாவை சான்ஸ் கிடைச்சதும்  மிரட்டும்  இடத்தில் பையன் தூள் 
 
 

3.  பின்னணி  இசை எனப்படும் பி ஜி எம் மில்  இசை அமைப்பாளர்  தனி கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தின்  முதுகெலும்பே   பி ஜி எம் தான் , ஆனால் ஆங்காங்கே  நாடகத்தன இசை



4. கட்டிங்க்  , ஒட்டிங்க் எடிட்டிங்க்  ஒர்க் மிக சிரத்தை எடுத்து பண்ணி இருக்காங்க. சாதாரண பெஞ்ச்  ரசிகனுக்கும்  புரியும் வகையில்  குழப்பம்  இல்லாத  திரைக்கதை , கூடவே அந்த  4 பேருக்குமான ஃபிளாஷ் பேக்


5. ஜெயப்ரகாஷ் ஆபத்தான சூழலில்   ஹவுஸ் அரெஸ்ட் ஆனதும்   மத்தவங்க  ஏமாந்த தருணத்தில்  தன் நண்பனுக்கு  ஃபோன்  செய்வதும் அப்போ அந்தக்குழந்தை ஃபோனை எடுத்து அம்மா , அப்பா 2 பேரும் பாத்ரூம்ல குளிச்சுட்டு  இருக்காங்க , தொந்தரவு பண்ண வேணாம்னு சொல்லி இருக்காங்க என்பது  வெடிச்சிரிப்பு


6.  வில்லன்   ஒரு ஆளை சின்ன பேட்டை கையில்  கொடுத்து பால் அடிச்சுட்டே  இரு , பால் மிஸ் ஆச்சுன்னா உன்னை கொன்னுடுவாங்க என்று  மிரட்டுவதும் அவன்   2 நாட்களா  அப்படியே செய்வதும் , அதை  காட்டியே வந்தவர்களை  மிரட்டி வைப்பதும்  செம காமெடி


7. க்ளைமாக்ஸில்  கூட   ஒரு வெடிச்சிரிப்பு   காமெடி இருக்கு  ,  அருமை



இயக்குநரிடம்  சில  கேள்விகள் 




1,  ஜெயப்ரகாஷ்  கிட்டே செல்  ஃபோன்  கிடைக்குது , அவர் ஃபிரண்டுக்கு ஃபோன் பண்றார்.  அவர் எடுக்கலை , அவர்  ஒருவர் தான் நண்பரா? வேறு யாரையும்  ஏன் அவர்  ட்ரை பண்ணலை? ஃபோன் நெம்பர்  நினைவில்லைனு ஒரு சமாளிஃபிகேஷன் வசனம் வெச்சிருக்காங்க , டைரி , காலண்டர்னு எத்தனை இடத்துல  குறிச்சிருப்போம்? அதுல இருந்து  ட்ரை பண்ணக்கூடாதா? 



2. சரி  , ஃபோன் தான் பண்ண்லை, அட்லீஸ்ட்  நடந்தது என்ன?  என எஸ் எம் எஸ்  கூட வா பண்ண  முடியாது ? 



3. ஜெயப்ரகாஷின்  ஆள் 2 லட்சம்  ரூபாயை என்னமோ  கோடி ரூபா மாதிரி சூட்கேஸ்ல போட்டு கொண்டு வர்றாரு? 1000 ரூபா நோட்டுல 2 கட்டு எடுத்தா பேண்ட் பாக்கெட்லயே போட்டுக்கொண்டு வரலாமே? எதுக்கு  ரிஸ்க்? 



4. என்ன தான் காமெடிக்கு என்றாலும் அந்த காமெடி வில்லனுக்கு இங்க்லீஷ் சுத்தமாய்த்தெரியாது என்பது நம்ப முடியாத பூச்சுற்றல் . மொழிதான்  தெரியாது . அந்த வார்த்தை தலைகீழ் என்பது கூடவா தெரியாது ? பேப்பரில்  எழுதித்தரப்பட்ட ஆங்கில வார்த்தை  தலைகீழாக  இருக்கு என்பது கூடவா தெரியாது ?  




மனம் கவர்ந்த வசனங்கள்


1.தமிழ் தெரியாத இங்க்லீஷ்காரன் கிட்டே தமிழ் பேசுவியா? மாட்டே இல்ல.இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே மட்டும் ஏன் பீட்டர் இங்க்லீஷல பேசறே?



2. கோடி ரூபாய்க்கு ஒருத்தன் கடன் வாங்கறான்னா அவனுக்கு கோடிக்கு மேல வருமானம் வரப்போகுதுன்னு தான் அர்த்தம்


3. சீட்டுக்கம்பெனியால யாரும் வாழ்ந்ததா சரித்திரம் இல்ல.சீட்டுக்கம்பெனிதான் வாழ்ந்திருக்கு.மக்கள் இல்ல 



4. எவனோ ஒருத்தன் எழுதி வெச்ச வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டுப்போக நாம ஒண்ணும் கம்ப்யூட்டர் புரோகிராம் இல்லை


5. ஒருத்தன் எந்த அளவு அதிகமா கடன் வாங்கறானோ அந்த அளவு அதிக பணக்காரனா இருப்பான்.கோடில கடன் வாங்கறவன் கோடீஸ் வரனாதான் இருப்பான்


6. முதல் இரவுல பொண்டாட்டி கிட்டே சொல்லாத ரகசியத்தைக்கூட முத முத தன் கூட தண்ணி அடிக்கிற அறிமுகம் இல்லாத ஆள் கிட்டே சொல்லிடுவான்



7. இலக்கை அடைவதை விட  பயணம் சிறப்பா அமைவதே முக்கியம் - புத்தர்



8. பொழப்பு கெட்டவன் பொண்டாட்டி தலையை சிரைச்சானாம் 


9. மனுஷன் கண்டு பிடிச்சதுலயே சிறந்தது இந்த போதை வஸ்து தான் 


10  எனக்குன்னு  ஒரு ஜாப் எதிக்ஸ்  இருக்கு , இந்த பொம்மை எல்லாம்  திருட முடியாது




11. காரணங்கள் உணர்வுப்பூர்வமா  இருந்தா எவ்ளவ் சின்ன வேலையா  இருந்தாலும்  செய்வேன் 


12., எடுக்கறவன் தான்  திருடன்னு இல்லை , எடுக்க விடாம தடுக்கறவனும் திருடன் தான் 



13. திறமை இருக்கறவன் ஜெயிக்கறான் , இல்லாதவன் தோக்கறான், இதுசர்வைவல்



14. இங்க்லீஷ்ல  நீங்க  திட்டுனா மணக்கும் , தமிழ் ல நாங்க  திட்டுனா கசக்குமா? 



15. தயவு செஞ்சு  போலீசுக்கு மட்டும்  யாரும் போயிடாதீங்க 


 மிரட்டறான், ஆனா அதை நாசூக்கா செய்ய்றான்


16. நான்  எதையும்   திருடலை 

 ஏதாவது  இங்கே  இருந்தாத்தானே  திருடுவே? 



17. நான்  திருடன் தான் , ஆனா சக தொழிலாளி கிட்டே பொய் சொல்ல மாட்டேன் , ஜாப் எதிக்ஸ் 


18.  சாரி , செல் டெட் 

 என்னமோ   ரிலேஷன் டெட்ங்கற மாதிரி அசால்ட்டா சொல்றே? 



19  கற்பகவல்லி எங்கே?

 அவ  அவங்கக்கா மேரேஜ்க்கு போய்ட்டா

 அவளுக்கு அக்காவே  கிடையாதே? 


20 சாரி பாஸ், என் செல்ஃபோன்ல ஒன்லி இன் கமிங்க் , நோ அவுட் கோயிங்க் , ஜாப் எதிக்ஸ் 



21. ஒரு பொட்டலம் கஞ்சா 400 ரூபாயா? உங்கள கேக்க ஆளே இல்லையா?'


 'ரெண்டா ரூவா வித்த டீ இப்ப ஆறு ரூவா. அத கேக்கவே ஆள் இல்ல. இத 

யாரு கேப்பா?


22. இந்த நேரம் பாத்து எல்லைக்கு அப்பால தொடர்புல இருக்கானே


23  'ஒண்ணுக்கைக்கூட கன்ட்ரோல் பண்ணத் தெரியாதவன், ஒரு 

ஏரியாவையே எப்படிடா கன்ட்ரோல் பண்ணுவான்?’,


24.  'சுடுறதுக்குத்தான்டா துப்பாக்கி வேணும். சுட மாட்டேன்னு 

 சொல்றதுக்குக்கூடவா துப்பாக்கி வேணும்?’,


 25. 'இப்போ உங்களை யாரும் ஹீரோன்னு சொன்னாங்களா பாஸ்?



26. , 'வழி நம்ம முன்னாடிதான் இருக்கு... நாமதான் நடக்கணும்!’ 


27 நூறு மாம்பழம் இருக்கிற ஒரு மாமரத்துக்கு கீழ நூறு பேர் பசியோட நின்னா..அங்க ஆளுக்கு ஒரு பழம்கிறது இயற்கையோட நியதி..ஆனா அந்த நூறு பேர்ல உங்கள மாதிரி திறமையும்,பலமும் இருக்கிற அஞ்சு பேர் ஆளுக்கு அஞ்சு பேர் அஞ்சு பழம் எடுத்துட்டாங்கன்னா..இருபது பேர்க்கு பழம் இல்லாம பசியில வாடி..பிச்ச கேட்டு நிப்பாங்க..இப்ப அதிகமா பழம் வச்சிருக்கவன் அஞ்சு பழத்தை விதைச்சி,அஞ்சு மரத்தை வளர்க்க சொல்லி கட்டளை இட்டு ,அது ஒன்னொன்னும் நூறு மாங்கா காய்க்கும் பொழுது ,பசியோட இருக்கறவனுக்கு கூலியா ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடுப்பான்..
இதான் இங்க நடக்குறது...ஒருத்தன்கிட்ட இருந்து எடுக்குறது மட்டுமில்ல திருட்டுத்தனம்..இன்னொருத்தன எடுக்க விடாம பன்றதும் திருட்டுத்தனம் தான்








  


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  42



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  ஓக்கே

ரேட்டிங் =   3.25 / 5


சி பி கமெண்ட் 

மூடர் கூடம் - வித்தியாசமான சிச்சுவேஷன் காமெடி பிலிம். பெண்கள் , மாணவ மாணவிகள் , குழந்தைகள் உட்பட அனைவரும் பார்க்கலாம் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , தேசிங்கு ராஜா போன்ற மொக்கை காமெடி பட இயக்குநர்கள் இந்தப்படத்தைப்பார்த்து எப்படி  சீனில் காமெடி கொண்டுவருவது என்பதை கத்துக்கலாம்