ஹீரோ ,ஹீரோயின் 2 பேரும் பிளஸ் டூ படிக்கும் ஸ்டூடண்ட்ஸ், ரொம்ப அப்பாவிங்க . ஒரு டைம், எதார்த்தமா ஹீரோவோட சைக்கிள்ல முன்னால ( சைக்கிளோட ) ஹேண்ட்பார்ல உக்காந்துட்டு ஹீரோயின் மெயின் ரோட்ல போறதை பொண்ணோட அப்பா பார்த்துட்டு அப்பவே ஸ்கூல ல வந்து க்ளாஸ் ரூம்ல எல்லாருக்கும் முன்னால செருப்பாலயே 17 தடவை ஹீரோவை அடிச்சுடறாரு.18 வது தடவை அடிக்க ஓங்கும்போது பிரின்சிபால் ( ஹெச் எம்?) வந்து தடுத்துடறாரு.
இந்த சம்பவத்தால அதுவரை எதார்த்தமா பழகிட்டு இருந்த 2 பேரும் பதார்த்தமா பழக் ஆரம்பிச்சுடறாங்க .
ஹீரோவோட அப்பாவுக்கு என்ன ஒரு ஷாக்னா தான் டீன் ஏஜ் ல என்னென்ன பண்ணினோமோ அதே மாதிரி தன் பையனும் பண்ணிட்டு இருக்கானே அப்டின்னு , அவருக்கும் ஒரு டீன் ஏஜ் லவ் உண்டு . தன் அப்பா தன்னை கண்டிச்சு ஹிட்லர் மாதிரி வளர்த்த மாதிரி தானும் த்ன் பையனை வளர்த்தக்கூடாதுன்னு தோள் மேல கை போட்டு நட்பா பழகறாரு .
ஹீரோ ஹீரோயின் தோள் மேல , இடுப்பு மேல , முதுகு மேல எங்கெங்கே கேப் கிடைக்குதோ அங்கே எல்லாம் கை போட்டு லவ்வறாரு .
ஹீரோயின் வீட்டு மொட்டை மாடிக்கே போய் மீட் பண்றாரு எப்படி இந்தக்காதலர்கள் ஒண்ணு சேர்ந்தாங்களா? பிளஸ் டூ பாஸ் பண்ணாங்களா? என்பதை வெள்ளித்திரையில் காண்க
ஹீரோ கவியரசு கண்ணதசனின் பேரன் ஆதவ். கண்ணே ,கனியமுதே ரகுமான் மாதிரி முகச்சாயல், நடிப்பு சுமாரா வருது , காதல் நல்லாவே வருது . முதல் படம் என்ற வகையில் ஓக்கே
ஹீரோயின் காயத்ரி . நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் நாயகி . பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணாமயே இயற்கையாவே அழகிய புருவம் ( நீ போய் பார்த்தியாடா? ) லிப்ஸ்டிக்கில் நம்பிக்கை இல்லாமல் இயற்கை அழகில் நம்பிக்கை வைத்த உதட்டழகி. கண்ணியமான நடிப்பில் , உடை அமைப்பில் மட்டும் கவனமாக இல்லாமல் கோடம்பாக்கத்தின் தாராளமயமாக்கல் கொள்கைப்படி ஆங்காங்கே மின்னலாய் வந்து போகும் லோ ஹிப் , லோ கட் காட்சிகள் , ஸ்லோமோஷனில் ரன்னிங்க் காட்சிகள் , குதிக்கும் காட்சிகள் உண்டு இதுக்கும் மேல ஒரு தமிழ் சினிமா ஹீரோயின் கிட்டே என்ன எதிர்பார்க்க முடியும் ? ( அது எனக்கு எப்படித்தெரியும் ? )
ஹீரோவின் அப்பாவாக வரும் கிஷோர் கண்ணியம் காக்கும் பொறுப்பான அப்பாவாக அழகான நடிப்பு . இவரது கம்பீரம்தான் இவருக்கு பிளஸ்.
கிஷோரின் மனைவியாக வரும் ஆண்ட்டியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு . இருவரும் ரொமாண்டிக்க்மாக வீட்டில் கொஞ்சிக்கொள்ளும் காட்சிகள் அழகு
ஹீரோயின் அப்பாவாக வரும் அருள் செம வில்லன் . ஆக்ரோஷமான நடிப்பு
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்துக்கான போஸ்டர் டிசைன்கள் , ஸ்டில்கள் எல்லாம் அழகு , ஒரு நல்ல காதல் கதைக்குத்தேவையான எல்லாமே இருக்கு , பார்ப்பவர்களை தியேட்டருக்கு இழுத்து வரும் வசீகரம் உண்டு . வெல்டன்
2. படத்தின் முக்கியமான பிளஸ் நாயகி காயத்ரி , கிஷோர் இருவரும் தான் . கச்சிதமான பங்களிப்பு
3. தாமரை , மதன் கார்க்கி இருவரின் பாடல் வரிகள் அழகு. குறிப்பாக அடிக்கடி முடி கலைத்திட அனுமதித்தாய் பாட்டு படமாக்கப்பட்ட விதம் பாடல் வரிகள் மனம் கவர்ந்தது . வாரக்கடைசியில் வந்தாய் வா தோழா , ஃபேஸ்புக்கில் ஹச்சுன்னு தும்மினா 1000 லைக்ஸ் , இரவுகளில் முதல் முறை என 4 பாடல்கள் கேட்கும் தரத்தில் . இசை சத்யா . ஓக்கே ரகம்
4. படத்தில் வரும் பெண் கேரக்டர்கள் எல்லாருமே மிக கண்ணியமாக உடை உடுத்தி வந்தது பெண்கள் ஆடியன்சை வசீகரிக்கும் , ஆண்களை வசீகரிக்கவும் காட்சிகள் உண்டு
5. வழக்கமான சாதா காதல் கதையில் கிஷோர் கேரக்டர் , க்ளைமாக்ஸ் மெசேஜ் பிளஸ்
6.ஹீரோவின் நண்பனின் அப்பாவாக வரும் தினந்தோறும் இயக்குநர் நாகராஜ் கலகலப்பான காமெடி போர்ஷன்
இயக்குநரிடம் சில கேள்விகள்:
1. படத்தோட ஓப்பனிங்கில் ஹீரோ ஆதவ்வா > அவர் நண்பனா என குழப்பம் ஏற்படும் வகையில் எதுக்கு தேவையில்லாம அந்த நண்பன் கேரக்டருக்கு அதீத முக்கியத்துவம் ? தேவையே இல்லை . முதல் 20 நிமிட காட்சியில் ஹீரோ அறிமுகம் தெளிவாக இருக்க வேணாமா? அதுவும் ஹீரோ ஒரு புது முகம் , அவர் முகத்தை ஆடியன்ஸ் மனதில் தங்க வைக்க வேணாமா?
2. ஹாலில் நியூஸ் பேப்பர் இருக்கும் டீப்பாய் மேல் கால் வைத்து அப்பாவின் முன்னிலையேலேயே ஹீரோ ஷூ போடும் காட்சி உறுத்துது . கண்டிப்பான அப்பா அதை கண்டிக்க மாட்டாரா?
3. ஹீரோ தன் வீட்டிலேயே ஃபோன் இருந்தும் ஏன் பி பி நெம்பர் தர்றார்? இந்தக்காலத்துல பொண்ணுங்களே வீட்டுக்கு பயப்படுவதில்லை . அப்பா கண்டிப்பானவர் இல்லை , அம்மா செம செல்லம் , பின் ஏன் ஹீரோ பம்மனும் ?
4. ஹீரோயின் வீட்டு லேண்ட் லைன் நெம்பர் என்ன? என கேட்டு செல் போனில் ஹீரோவின் அப்பா கால் பண்றார் . அப்போ எஸ் டி டி கோடு சேர்க்காமல் ஃபோன் நெம்பர் மட்டும் டயல் பண்றாரே? எப்படி?
5. இருமல் வந்தா வழக்கமா டானிக் தான் முதல் கட்டமா டாக்டரை கேட்காம குடுப்பாங்க . கிஷோர் தன் பையனுக்கு ஏதோ ஒரு மாத்திரையை தர்றாரே? அது எப்படி? டாக்டரை கன்சல்ட் பண்ணாம இவரா ஒரு டேப்லெட்டை தர்றாரே?
6. ஹீரோயின் , ஹீரோ 2 பேர் கிட்டேயும் செல் ஃபோன் வந்த பின்னால ஹீரோயின் அவசரமா ஊருக்குப்போக வேண்டி வருது . 2 நாள் கழிச்சுத்தான் வர்றா. சொல்லாம போய்ட்டாளே என ஹீரோவுக்கு கோபம் . ஊடலில் ஏன் இபடி சொல்லாம போய்ட்டே என்று கேட்டதும் ஹீரோயின் அர்ஜென்ட் ஒர்க் என்கிறார் , ஓக்கே ஒரு எஸ் எம் எஸ் கூட பண்ண மாட்டாரா? அதை ஏன் ஹீரோ கேட்கலை ?
7. மும்பை பாய் ஃபிரண்ட்டோட வரும் தோழி நண்பனிடம் எனக்கு ஒரு ரூம் அரேஞ்ச் பண்ணிக்குடுடா என கேட்பது செம காமெடி . மும்பைல இருந்து வர்றவன் ஹோட்டல்ல்ல ரூம் எடுக்கக்கூட தெரியாதவனாவா இருப்பான் . அதுவுமில்லாமல் இந்தக்கால பொண்னுங்க இப்படித்தான் தம்பட்டம் அடிப்பாங்களா? ஏய் , எல்லாரும், பார்த்துக்குங்க நான் என் பாய் ஃபிரண்ட்டோட ரூமுக்கு போறேன் ,ரூமுக்கு போறேன்
என ரோட்டில் கத்தாதுதான் பாக்கி . என்ன தான் காமெடி சீன் என்றாலும் குறைந்த பட்ச லாஜிக்காவது வேண்டாமா?
மனம் கவர்ந்த வசனங்கள்
1. ஏங்க .நம்ம பையன் இப்பவெல்லாம் வீட்ல பால் குடிக்கறதே இல்லைங்க. பீர் குடிக்கறவன் எல்லாம் பால் குடிக்க மாட்டாண்டி
1. ஏங்க .நம்ம பையன் இப்பவெல்லாம் வீட்ல பால் குடிக்கறதே இல்லைங்க. பீர் குடிக்கறவன் எல்லாம் பால் குடிக்க மாட்டாண்டி
2. சந்தர்ப்பம் கிடைச்சாலும்் பழைய காதலியை இப்போ பார்க்கக்கூடாது.நரை முடி ,சுருக்க முகம்.கொடுமை.16 வயசு நினைவுகள் அப்டியே இருக்கனும்
3. அம்மா , அந்தாள் கிட்டே 100 ரூபா வாங்கிக்குடும்மா
டேய் , அப்பான்னு சொன்னா குறைஞ்சுடுவியா?
4. வாடா வீட்டுக்கு , காப்பி சாப்ட்டுட்டு போலாம்
உங்கப்பா எங்களைக்கழுவிக்கழுவி ஊத்துவாரு , அதை நாங்க குடிக்கனுமா?
5. அப்போ எங்கப்பா என்னை அடிச்சது , இப்போ என் பையன்க்கு 18 வயசு ஆனப்ப எனக்கு வலிக்குது
6. பொண்ணு இருந்துட்டா போதும் , ஆளாளுக்கு அங்க்கிள்னு கூப்பிட்டு வந்துடுவானுங்க
7. புள்ளைங்க கிட்டே கொஞ்சம் சிரிச்சுப்பேசுனாத்தான் என்னவாம் ?
30 பவுன் நகை போடறதா சொன்ன உங்கப்பா 27 பவுன் தான் போட்டாரு , மீதி 3 பவுனை வாங்கிட்டு வா முதல்ல , எல்லார் கிட்டேயும் சிரிச்சு பேசறேன்
8/ எதுக்குப்பா எனக்கு இவ்ளோவ் பணம் ?
உனக்கு சின்ன சின்ன தேவைகள் இருக்கும் , எல்லாத்துக்கும் என் கிட்டே கேட்டுட்டு இருக்க முடியுமா?
9. ம்க்கும் , எல் கே ஜி பையன் கூட இப்போ ஏ டி எம் கர்ர்டோடதான் வெளிலயே வர்றான்
10. அவன் வீட்டில்யே அவனை திருடன் ஆக்கிடக்கூடாது
11 ., இந்தக்கால்த்துப்பசங்க கிட்டே வாயே குடுக்க முடியறதில்லை
சரி ஏன் குடுக்கறே?
12. உலகத்துல யாருமே பண்ணாத தப்பை நீ பண்ணலை . நான் சின்ன வயசுல பண்ணுனதை நீ இப்போ பண்றே
13. இந்த வயசுல எங்கப்பா எனக்கு அட்வைஸ் பண்ணுனப்போ எனக்கு பிடிக்கலை , அதே அட்வைஸ் என் பையனுக்கு மட்டும் எப்படிப்பிடிக்கும்னு எதிர்பார்க்க முடியும் ?
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்-40
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
ரேட்டிங் = 2.75 / 5
சி பி கமெண்ட்- சாதா காதல் கதை - காயத்ரி ,கிஷோர் + திரைக்கதை -
பி , சி செண்ட்டர்களில் சுமாரா போகும் , முதலீட்டுக்கு மோசம் வைக்காது , போட்ட காசை எடுத்துடுவாங்க