Thursday, August 01, 2013

தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank - 4

1.இளந்தென்றல்‏@Elanthenral
பல கோடி செலவழித்தும் போய் சேர வில்லை போலியோ விளம்பரம்... பைசா செலவில்லாமல் எல்லோரையும் சென்றடைகிறது வதந்தி #tsy20130731


2.ஞானக்குத்து‏@sambanths
முன்பெல்லாம் வதந்திகளைக் கண்டு ஏமாறாதிர்கள்னு சொல்லுவாங்க  இப்பெல்லாம் விளம்பரங்களைக் கண்டு எமாராதிர்கள்னு சொல்லவேண்டியிருக்கு #tsy20130731


3.G.R.Vijay‏@grvijai
வதந்திகள் மூலமும் சிலருக்கு கிடைக்கிறது விளம்பரம்! #tsy20130731


4.ஆல்தோட்டபூபதி‏@thoatta
திவ்யாவுக்கு கிடைச்சுதான்னு பரப்புனா விளம்பரம், திவ்யாவே கிடைச்சுட்டான்னு பரப்புறது வதந்தி :-)) #tsy20130731


5.தமிழ்ப்பறவை‏@Tparavai
நடிகைகள் பலரைக் காதலிப்பது வதந்தி...ஒருவரை மட்டும் காதலிப்பதாக சொல்வது விளம்பரம் #tsy20130731


6.அறுந்த வாலு‏@kavi_rrsk
வதந்தி உள்ளபோதே விளம்பரம் தேடிக்கொள் - சினிமாமொழி #tsy20130731


7.புகழ் ‏@MEKALAPUGAZH
நன்றாக விளம்பும் வரம் வேண்டும்  விளம்பரத்திற்கு.தீயைத் தடுக்கும்  திறம் வேண்டும் வதந்தியைநிறுத்த. #tsy20130731


8.குற்றாலத்தான்‏@bluefortfish
'விளம்பர' விரும்பிகளின் குறிக்கோள் அவர்கள் மேதாவி என்னும் 'வதந்தி' பரப்புவதே! #tsy20130731


9.தெய்வத் திருமகள்! :)‏@Vennila_
'வதந்தி' பற்றி கவலை கொள்வதில்லை என, 'விளம்பரம்' செய்து கொள்கிறார்கள். #tsy20130731


10.அசால்ட்டு ஆறுமுகம்‏@Bullet_Ram எல்லார்க்கும் தெரிஞ்சு நாலு செவதுக்குள்ள பண்ணுனா விளம்பரம் நாலு செவுதுகுள்ள பன்னுனதுகப்புரம் எல்லாருக்கும் தெரிஞ்சா அது வதந்தி  #tsy20130731


11.ஊர ஏமாத்துறவன்‏@trajuvel
அந்த கோவிலுக்கு சென்றால் உடனே திருமணம் நடக்கும் என்று வதந்தியை பரப்பி கடவுளுக்கும் விளம்பரம் செய்கின்றனர்!!!  #tsy20130731


12.திருநாவு‏@Thiru_navu வெளிச்சம் தேடி விளம்பரம் ஓட யத்தனிப்பதற்குள், வதந்தி பதக்கம் வாங்கிவிட்டு பறந்து விடுகிறது! #tsy20130731


13.ஞானக்குத்து‏@sambanths உச்சத்தில் இருக்கும் நடிகையின் காதல் வதந்தியே விளம்பரம்  நசிந்த பின் அவள் திருமணத்தின் விளம்பரம்  ஒரு வதந்தி போல #tsy20130731


14.N.ரஜினிராமச்சந்திரன்‏@
rajinirams வதந்தி சில சமயம் வியாபாரத்தை முடக்க வைக்கும்.விளம்பரம் எப்போதும் வியாபாரத்தை தழைக்க வைக்கும் #tsy20130731

15.திருநாவு‏@Thiru_navu விளம்பரம் தவழ்ந்து தவழ்ந்து நடப்பதற்குள், அற்ப ஆயுள் என்றாலும் அமர்க்களமாக வாழ்ந்து விடுகிறது வதந்தி! #tsy20130731

16.விதை ♦♦‏@kurumbuvivek வாந்தியும் வதந்தியும் ஒன்னு ,  வெளிய வரும்போது நாறிடும் !!!  #tsy20130731

17.அறிவு‏@arivucs பிள்ளையார் பால் குடிச்சார்னு சொன்னா வதந்தி.ஆரோக்யா பால் குடிச்சார்னு சொன்னா விளம்பரம்
#tsy20130731

18.naveen‏@naveenmadharas விளம்பரத்தால் ஒருவனை  தெரியப்படுத்தும்  வதந்தி ஒருவனை புண்படுத்தும்#tsy20130731

19.புருடா_ஜென்‏@kartikrz மன்மோகன் சிங் பேசுனா அது விளம்பரம், அவரே 1300 தடவ பேசினாருனா கண்டிப்பா அது வதந்தி #tsy20130731

20.செ.செந்தில்குமார்‏@SeSenthilkumar நிர்மா விளம்பரத்துல வரும் பாப்பா சுத்திகிட்டே விழுந்து இறந்து விட்டாள்னு ஒரு வதந்தி. #tsy20130731

21.வாலி !!‏@thalarockss விளம்பரம் பசி  மாதிரி அடிக்கடி வரும்!  வதந்தி வாந்தி மாதிரி எப்பையாவது தான் வரும்! #tsy20130731

22.செ.செந்தில்குமார்‏@SeSenthilkumar மாயன் படம் - விளம்பரம். மாயன் காலண்டர் - வதந்தி #tsy20130731

23.palani kumar ‏@palanikumar098 விளம்பர படுத்தனும் வதந்தி படுத்தும்#tsy20130731

24.ஆட்டோக்காரன் ‏@anna_tuty நாம் கேள்விப்பட்ட வதந்திக்கு,  பொட்டு வைத்து பூவைத்து, அழகுபடுத்தி அனுப்பிவிடுவது, நம் அறிவுத் திறனுக்கான ஒரு விளம்பரம்... #tsy20130731

25.திருநாவு‏@Thiru_navu விளம்பரத்திற்கு வெளிச்சம் போட வேண்டியிருக்கிறது! வதந்திக்கு வத்திக்குச்சி கூட தேவையில்லை! #tsy20130731

26.Mak Pandian‏@makpandian தும்மல் வந்ததும் 'அம்மா' என்று சரத்குமார் சொன்னால் அது 'விளம்பரம்'. அதுவே கலைஞர் சொன்னால் 'வதந்தி'. #tsy20130731

27.பரம்பொருள் ‏@paramporul மரித்துவிட்ட வ'தந்தி'யை, விளம்பரங்களிலாவது  வாழ வைக்கவேண்டும். 160 ஆண்டு கால வரலாறு அது. #tsy20130731

28.நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan கனகா: நேற்றைய வதந்தி... இன்றைய விளம்பரம்... #tsy20130731

29.Sushima Shekar‏@amas32 வதந்தி மட்டும் முயற்சி இன்றி தீயாக பரவி விடுகிறது, ஆனால் பாவம் எத்தனை விளம்பரம் செய்தும் சில பொருட்கள் விலை போவதில்லை  #tsy20130731