நாம் ஹாலிவுட்டில் பல வகையான திகில் படங்கள் பார்த்திருப்போம். அந்த வகைகளில் ZOMBIES படங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.( உ.ம். RESIDENT EVIL series, WORLD WAR Z, DAWN OF DEAD... )
இவை அனைத்தும் நம்மை மிரட்டின.ஆனால் சற்று வித்தியாசமாக திகிலுடன் சேர்ந்து சிரிக்கவும் வைத்துள்ளது இப்படம் . RESIDENT EVIL படத்தை கொஞ்சம் உல்டா பண்ணி சிறிது காதல்,காமெடி தூவினால் அதான் WARM BODIES.
இதெல்லாம் அந்தக்காலத்துல தெரிஞ்ச்சுக்கிட்ட பெரியவங்க்க தான் " சோம்பித்திரியெல்" சொல்லி இருக்கனும்
சும்மா சொல்லக்கூடாது ZOMBIES எனப்படும் ஜந்துவை வெச்சு சந்து கேப்பில் சிந்து பாடிவிட்டனர். இது வரை திகிலாக பார்த்து பழக்கப்பட்ட ZOMBIES-ஐ கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் அந்தக்காலத்துல தெரிஞ்ச்சுக்கிட்ட பெரியவங்க்க தான் " சோம்பித்திரியெல்" சொல்லி இருக்கனும்
சும்மா சொல்லக்கூடாது ZOMBIES எனப்படும் ஜந்துவை வெச்சு சந்து கேப்பில் சிந்து பாடிவிட்டனர். இது வரை திகிலாக பார்த்து பழக்கப்பட்ட ZOMBIES-ஐ கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.
உலகம் முழுக்க டி-வைரஸ் தாக்கி பலர் இறக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட இடங்களை தடுப்பு போட்டு தடுத்து பாதுகாப்பாக மனிதர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதை தயாரிக்க மூலப்பொருள் தேவை. அது தடுப்பிற்கு வெளில இருக்கு. அதாவது ZOMBIES வாழற பகுதில இருக்கு.
ஹீரோயின் தலைமை அதிகாரியோட பொண்ணு. சோ... தைரியமா பாப்பாவும் அவங்களோட அஞ்சு ஃப்ரெண்ட்ஸும் களத்துல இறங்கறாங்க. மாட்டிக்கறாங்க.. அஞ்சு பேர்ல மூணு பேர் ZOMBIES-க்கு இறை. மிச்சம் ஹீரோயினும் ஒரு உயிர்த்தோழியும்.
ஹீரோயின் தலைமை அதிகாரியோட பொண்ணு. சோ... தைரியமா பாப்பாவும் அவங்களோட அஞ்சு ஃப்ரெண்ட்ஸும் களத்துல இறங்கறாங்க. மாட்டிக்கறாங்க.. அஞ்சு பேர்ல மூணு பேர் ZOMBIES-க்கு இறை. மிச்சம் ஹீரோயினும் ஒரு உயிர்த்தோழியும்.
இப்பதான் ஹீரோ இன்ட்ரோ. இதுல ஹீரோ ஒரு ZOMBIE. ஹீரோயினை கண்டதும் லவ்வறார் (லவ் பண்ணும்போது இப்படிதான்... மிருகம் மனிதனாகும் அப்புறமா கல்யாணத்துக்குப்பின் மிருகமாய்டுவாங்க...).மத்த ZOMBIESகிட்ட இருந்து காப்பாத்தி தன் இடத்துக்கு கூட்டிட்டு போய்...கூட்டிட்டு போயி..
. வச்சி காப்பத்தறார்னு சொல்ல வந்தேன். அந்த தோழிய... மீட்புப்படை வந்து கூட்டிட்டு போறாங்க.ஆனா ஹீரோயினை தேடல.. அப்புறம் எப்படி படத்த ஓட்றதாம்...?
சரி ...படத்துல வில்லன் வேனுமே...டைரக்டர் அங்க தான் நிக்கறார். ZOMBIES-ல ரெண்டு கேங்கா பிரிச்சுட்டார். ஒண்ணு ஹீரோ மாதிரி கொஞ்சம் கொஞ்சமா குணமடைஞ்சுட்டு வர்ற குரூப்,( இது அதிமுக சம்பத் ,பரிதி இளம்வழுதி மாதிரி ஆரம்பக்கட்ட ஆபத்து ) இன்னோன்னு... வெறி முத்திப்போன குரூப் அவங்களுக்கு மேல் தோல் இருக்காது.பயங்கரமான தோற்றம். ( இது தி மு க அடி பொடிகள் மாதிரி முத்துன பார்ட்டி)
ரெண்டு பேரும் சேந்தாங்களா...? குணமடைஞ்சாங்களா? என்பது மிச்ச சொச்சம்.
படத்துல ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் (ஐ ஜாலி..) . ஆனா திரைக்கதை அதை மறைச்சுடுது.வசனங்கள் அனைத்தும் தேவையான அளவே உள்ளன. இயல்பாகவே உள்ளன.வசனங்கள் மிக மிக கம்மி. சில காட்சிகளில் தட்டு தடுமாறி பேசும் ஹீரோவின் வசனங்கள் கேட்கவே இல்லை.
ஷுட்டிங்க் டைமில் எடுத்தது
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் :
1.கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதம்.
2.படத்தின் நீளம்.1.30மணி மட்டுமே.கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் வைத்தது.
3.படத்தின் ஹீரோ ஆரம்பக்காட்சி...உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது ஹீரோயினைப் பார்த்து ஸ்லோ மோஷனில் லவ்வுவது. ( எந்த மோஷன்லயும் அண்ணன் லவ் தான் )
4.பின்னணி இசை. காமெடிக்கும்,திகிலுக்கும் ஏற்றவாறு மாற்றி மாற்றி அமைத்தது.
5.கதைக் களத்திற்கு ஏற்ற செட் அமைப்பு. ஆர்ட் டைரக்சன் கன கச்சிதம்
6.கடைசி அரை மணி நேர பர பர காட்சிகள்.
7.ஹீரோவிற்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் காட்சி, கூலிங்கிளாஸ் மாட்டி நையாண்டி செய்யும் சில காட்சிகள்.
8.போதுமான அளவு கிராஃபிக்ஸ்.மொத்தத்தில் எல்லாம் அளவிற்கு மிகாமல்.திகட்டத வண்ணம் இருக்கு.
ஹிரொயின் தன்னம்பிக்கையை ஹிரொ செக் பண்ணும் காட்சி
இயக்குநரிடம் சில கேள்விகள்:
1.ஹீரோயினைப் பார்க்கும் போது மட்டும் எப்படி லவ் வந்துச்சு. இதுக்கு முன்னாடி எந்த பொண்ணையும் பார்த்தது இல்லையா?அந்த அளவு பெரிய ஃபிகர் இல்லையெ?
2.ZOMBIES-க்கு யோசிக்கற சக்தி இருக்கா? மனுஷனால கூட அது முடியல
3.ஏன் இடையிடயே பிட்டு பிட்டா ஹீரோயினோட பழைய காதல் கதை.அவன் தான் முதல் சீன்லையே பூட்டானே...1.30 மணி நேரம் ஓட்டவா? அந்த லவ் ஃபிளாஸ்பெக்கில் கூட கிளு கிளுப்பு கம்மி )
4.தடுப்பு சுவரை விட்டு வெளில போக ஹீரோயினுக்கு மட்டும் எப்படி இரகசிய வழி தெரிகிறது? மோப்ப சக்தி இருக்கற ZOMBIESஆல கூட கண்டுபிடிக்க முடியல.
5. படம் பூரா ஹீரோ ஹீரோயின் ராஜ்ஜியம்தான்.ஒரு வேளை அவுங்கதான் புரொட்யுசர்ஸா?
6. ஹீரொயினை பார்த்த உடனே ஹீரோ மனுஷனா மாற ஆரம்பிக்கறார். மருந்துக்குகூட மருந்த பத்தி காட்லையே....
8.ஹீரோயினுக்கு ZOMBIE மேல லவ் வர்றதுக்கு சரியா காரணம் சொல்லல.இந்தக்காலப்பொண்ணுங்க்க மனுஷனைக்கூட நம்பாம அப்பப்ப டெஸ்ட் வைக்கறாங்க்க
பின்குறிப்பு: ஹீரொயினைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.மெய் பார்த்து மெய் மறந்துட்டன்
ஹாலிவுட் பட விரும்பிகள், வித்தியாசமான திகில் பட விரும்பிகள் பார்க்கலாம். பெண்களும் பார்க்கும் விதத்தில்தான் இருக்கு.
ரேட்டிங் = 3.25 / 5
இன்னொரு பெண் குறிப்பு சாரி பின் குறிப்பு - இந்த விமர்சனத்தை உங்களுக்கு வழங்கியவர் அட்ரா சக்க பொதுக்குழுவின் முக்கிய உறுப்பினரான என் அக்கா பையன் கார்த்திக் . எடிட்டிங்க்க் டைரக்சன் MALE பார்வை மட்டும் நான் , ஹி ஹி