அனைவருக்கும் அன்பு வணக்கம்.,
இது என்னோட இரண்டாவது அத்தியாயம், முதல் அத்தியாயத்தில் எனக்கு ஆதரவு தந்த அணைத்து உள்ளங்களும் எனக்கு இந்த முறையும் ஆதரவு தரவேண்டும் , முதல் அத்தியாயத்தை போலவே இதிலும் ஒரு கருப்பொருளை (theme) மையமாக வைத்து ஆரம்பித்திருக்கிறேன்.
முதல் அத்தியாயத்தின் கருப்பொருள் “காப்பி பேஸ்ட்”.
“காப்பி பேஸ்ட்” ஏன் செய்கிறார்கள்,எதற்கு செய்கிறார்கள் என்று யோசித்து
போது அது அங்கீகாரம் (RT) பெறுவதற்காகவும் பாலோவர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்திக்கொள்ளவும் செயப்படுகிறது என தெரிய வந்தது.
ஆனால்
அவர்களுக்கு தெரியாது இங்கே அனைவரும் ஆரம்பத்தில் ஏதோ தங்களுக்கு தெரிந்ததை
எழுதி பின் சிலரின் எழுத்துக்களை படித்து அதிலிருந்து கற்றுக்கொண்டு எழுத
ஆரம்பித்தவர்கள் என்று. காப்பி பேஸ்ட் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் கற்பனை
திறனும் யோசிக்கும் திறனும் இருக்கும் இல்லையெனில் காப்பி பேஸ்ட் செய்து
RT & Followers பெறமுடியும் என யோசித்திருக்க முடியாது. இப்பொழுது
அவர்களை குற்றம்சாட்டவில்லை உதாரணமாக சொன்னேன்.
சரி இனி இந்த அத்தியாயத்தின் கருப்பொருளை சொல்கிறேன்., “ட்வீட் செய்ய யோசி” இதுதான் தலைப்பு. ஒரு சில நேரங்களில் டைம் லைனை கவனித்தால் ஏதாவது ஒரு தலைப்பை வைத்தே கீச்சுக்கள் கீச்சப்படுகின்றன அது போல நாமும் ஒரு தலைப்பை கொடுத்து அதற்காக கீச்சப்படும் கீச்சுகளில் சிறந்த கீச்சுக்களை தேர்வு செய்து அன்றைய தினத்தின் சிறந்த கீச்சாக அறிவித்தால் யோசித்து கீச்சும் ஆர்வம் அதிகரிக்கும் எழுதும் ஆர்வமும் அதிகரிக்கும் என்பது என் எண்ணம்.
இதுபோல ஏற்கனவே சிலர் செய்திருந்தாலும் என்னுடைய புதிய முயற்சிக்கு ஆதரவு
தருமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறந்த கீசுக்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள்
யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கபடுவார்கள்.
நன்றி.