Wednesday, July 24, 2013

கர்ப்பக் காலத்தில் எப்படிச் சாப்பிடணும்..?



கர்ப்பக் காலத்தில் எப்படிச் சாப்பிடணும்..?



ஆஃபீசுக்கு நேரமாச்சேன்னு அவசரமா கிளம்பிக்கிட்டு இருக்கிற கர்ப்பிணிப் பெண்ணா நீங்க?

ஒரு நிமிஷம்....
பிரபல நியூட்ரீஷியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் என்ன சொல்றார்னு கேளுங்க..
முதல் மாசத்துலே இருந்தே அதிகம் சாப்பிடணுமா டாக்டர்..? என்ன சாப்பிடலாம்..?"
ரெண்டு பேருக்குச் சேர்த்து சாப்பிடணும்னு இல்ல. வழக்கமா உட்கொள்வதை விட 300-500 கலோரிகள் அதிகமா இருந்தால் போதும். மூன்று இட்லி சாப்பிடற வங்க ஒண்ணு கூட சாப்பிடலாம். ஒரு கப் பால் சாப்பிடணும். அதிலே புரோட்டீன், கால்ஷியம் நிறைவா இருக்கு. காலையிலே காஃபி குடிக்கிறப்ப கூட கொஞ்சம் பாலைச் சேர்க்கலாம்."
காலையில ப்ரேக் ஃபாஸ்ட் நிச்சயமா சாப்பிடணும். பதினொரு மணிக்கு கொஞ்சமா பழம், மோர், சுண்டல் இப்படி எடுத்துக்கலாம்."


லஞ்ச் ஹெவியா இருக்கணுமா..?"
வழக்கமா ஒரு கப் சாதம்னா, கர்ப்பமாய் இருக்கறப்ப, கூட அரை கப் சாப்பிடலாம். கண்டிப்பா பருப்பு இருக்கணும். முளைவிட்ட பருப்புகள், சுண்டல், சோயா பனீர் (டோஃபூ) இவற்றில் ஏதாவது அவசியம் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை சாப்பாட்டுல அவசியமா இருந்தே ஆகணும்.."
மதிய உணவுல பச்சை, ஆரஞ்ச், சிவப்புநிற காய்களான கீரை, பீன்ஸ், அவரை, கேரட், தக்காளி போன்றவை கண்டிப்பாக இருக்கணும். சில பெண்களுக்கு நீர் கோத்துக் கொண்டு கால் பாதங்கள் வீங்கி விடும். இவர்கள் பார்லி நீரைத் தொடர்ந்து அருந்திவர நிவாரணம் கிடைக்கும்."
இந்தியாவிலேயே முதல் முறையாகடைஜஸ்ட்என்ற பெயரில் உணவுக்கெனவே ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை உருவாக்கியுள்ளார் தாரிணி. அதன் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான உணவு மருத்துவர்களும் மாணவர்களும் பயன்பெற்று வருகிறார்கள்.


நன்றி-மங்கயர்மலர்