Saturday, July 20, 2013

WHITE HOUSE DOWN -சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு முன்னாள் மிலிட்ரி மேன் . அவருக்கு ஒரு  பொண்ணு. அவர் கிட்டே கோவிச்சுக்கிட்டு  மூஞ்சியை இழுத்துட்டு இருக்கு . அவளை தாஜா பண்ண அமெரிக்க அதிபர் இருக்கும் வெள்ளை மாளிகையை சுத்திக்காட்ட  கூட்டிட்டு வர்றார்.. அப்போதான் வில்லன் க்ரூப் மாளிகையை அட்டாக் பண்ண  திடீர்னு ரவுண்ட் அப் பண்ணிடறாங்க .

அமெரிக்க அதிபர்னா சும்மாவா? ஏகப்பட்ட செக்யூரிட்டி இருக்குமே? ஆனா பாருங்க எல்லா ஊர்லயும் கூடவே இருந்து குழி பறிக்கும் ஒரு நாஞ்சில் சம்பத் இருப்பாங்க போல . ஒரு எட்டப்பன். அவன் தான் அதிபரின் பாதுகாப்புப்படைத்தலைவன் .அவனுக்கு ஒருஃபிளாஸ்பேக் கோபம் இருக்கு 


 அதாவது அவனோட பையன் மிலிட்ரில இருந்தப்ப ஒரு பிரச்சனையால அவனை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அதுக்கு பழிவாங்க அதிபரைபோட்டுத்தள்ள பிளான். 


மாளிகைல  டமால்னு ஒரு பாம் போட்டுடறாங்க . ஒரே களேபரம் .  இந்த  பரபரப்பான சூழல்ல ஹீரோவும் , அவர் மகளும்   வெவ்வேற இடத்துலமாட்டிக்கறாங்க 



 புலிக்குப்பிறந்ததுகுட்டிப்புலியாத்தானேஇருக்கும்? ( நன்றி - எம் சசிக்குமார் ) அந்த பாப்பா தன் கிட்டே இருக்கும் கேமரா மொபைல்ல  தீவிரவாதிங்க பேசிட்டு இருப்பதை  வீடியோ எடுத்து டக்னு  மீடியாவுல பரப்பிடுது 


 அதை வில்லன் குரூப்  பார்த்து செமகாண்ட் ஆகிடறாங்க /. அப்பவே அவளை போட்டுத்தள்ளிட்டா மேட்டர் ஓவர், ஆனா படம் சீக்கிரமாமுடிஞ்சுடும் . அதனால அவளை பணயக்கைதியா பிடிச்சு வெச்சுக்கிட்டு     அலப்பறை பண்றாரு வில்லன் . 


ஹீரோ அமெரிக்க  அதிபரை எப்படி காப்பாத்தறார்? என்பதே மிச்ச மீதி பர பர திரைக்கதை 


 ஒண்ணும் இல்ல , கேப்டன் விஜய்காந்த் நடிச்ச ஏவி எம்மின் மாநகரக்காவல், OLYMPUS HAS FALLEN இந்த 2 படங்களோட உல்டா தான்  படம் . ஆனாலும் பார்க்கலாம் . விறுவிறுப்பா இருக்கு 


ஹீரோ ஆல்ரெடி வெள்ளை மாளிகையில் பணிஆற்றியவர்தான்  என்பதைக்காட்டஒரு ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கலாம்


ஹீரோ ஜான் கேல் . இவர் கமல் , சரத்குமார், அர்ஜூன் மாதிரி டபக் டபக்னு சட்டையை கழட்டிடறார். அதுல என்ன தொழில் ரகசியம்னா எக்சசைஸ் பாடி மெயிண்ட்டெயின் பண்றவங்க தங்கள் உடல் அழகை காட்ட , ரசிகைகளை மயக்க , தக்க வெச்சுக்க அடிக்கடி சட்டையை கழட்டிடுவாங்க ( நல்ல வேளை )


 ஆள் அம்சமாஇருக்கார். மகளிடம் சமாதானம் பேசுவது , அதிபரிடம் மரியாதையா நடப்பது, வில்லனிடம் எகத்தாளமா பேசுவது   என கேப் கிடைக்குமிடம் எல்லாம் கிதார் வாசிக்கறார் (   கிடா வெட்றார்னுதான் சொல்லனும், ஆனா நான் சைவம் ஆச்சே? ) 


அவரோட மகளா வரும் பொண்ணுசெம சுட்டி . அப்பாவிடம் வாதம் பண்ணும்போதும்  , வீடியோ எடுக்கும்போதும் ரசிக்கவைக்கிறாள் 

 ஜான் கேல் கதாபாத்திரத்தில் சார்மிங் டாட்ரூம், அவனுடைய மகள் எமிலியாக ஜோகிங்கும், அமெரிக்க அதிபராக ஜாமி ஃபாக்ஸýம் நடித்துள்ளனர். 


அதிபரா வரும்   .  ஜாமி வசனங்களில் நக்கல் ஆங்காங்கே காப்பாற்றிவிடுது


"தி இன்டிபெண்டன்ஸ் டே', "டே ஆஃப்டர் டுமாரோ', "காட்ஸில்லா', "பேட்ரியாட்' போன்ற படங்களின் இயக்குநர்  ரோலண்ட் எமெரிக் தான் இந்தப்பட இயக்குநர் .


இப்படத்திற்காக வெள்ளை மாளிகையை செயற்கையான உருவாக்கினார் ஆர்ட் டைரக்டர் கிரிக்எம். பெர்ருஸிலி. சண்டை காட்சிகளை வடிவமைத்திருப்பவர் ஜான் ஸ்டோன்ஹம் ஜூனியர். ஒளிப்பதிவு ஜேஃபாரஸ்டர்




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷத்துல டேக் ஆஃப் ஆகுது , அதுக்குப்பின்  ஒன்ற்ரை மணி நேரம் போர் அடிக்காம திரைக்கதை சுவராஸ்யமான சம்பவங்களால் விறுவிறுப்பா அமைச்சது
2.  அப்பா  மகள் செண்ட்டிமெண்ட்   ஓவரா ஃபீல் பண்ணவைக்காம  நாசூக்கா போற போக்குல சொன்னது 


3. படம் ஃபுல்லா ஒரே பில்டிங்க்ல நடந்தாலும் சலிப்பு ஏற்படா வண்ணம் கேமராவை வித வித லொக்கேஷன்ல   வெச்சது 


4.   ஹீரோ  வில்லன் ஆக்‌ஷன் காட்சிகள் , சேசிங்க் சீன்கள் பர பரப்பு 






 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன்  குரூப் செக்யூரிட்டிகள் இருக்கும் ரூம் கதவை தட்டறாங்க . பிரச்சனையான அந்தசூழல்ல  சாவித்துவாரம் வழியா யார் வந்திருக்காங்க?ன்னு பார்க்காம யாராவதுகதவைத்திறப்பாங்களா? 
2. ஹீரோ தன் மக செல்லுக்கு  ஃபோன் பண்ணும்போது செல் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. அவர்  ஏன் மகளுக்கு அபாயத்தை   எஸ் எம் எஸ் பண்ணலை? அதே போல் மகள்கூட அப்பாவுக்கு தன் நிலை என்ன:? என்பதை எஸ் எம் எஸ்  பண்ணலாமே? பேசுனாத்தான் சத்தம் காட்டிக்குடுத்துடும் , எஸ் எம் எஸ் பண்ணா என்ன? சைலண்ட் மோடுல  வெச்சு பண்ணலாமே? 



3. அதிபரின் அத்தனை செக்யூரிட்டிஆட்களும்  அதிபருக்கு எதிராகத்திரும்ப  ஹீரோ ஒரே ஒரு ஆளா தனியா நின்னு எல்லாரையும் சமாளிக்கறது காதில் பூக்கூடை 



 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. ஒரு நல்ல அப்பாவா நடந்துக்க முயற்சி பண்ணிட்டு தான் இருக்கேன். எல்லா ஆண்களும் இப்படித்தான் சொல்றாங்க, ஆனா செயல்ல காட்றது இல்லை 



2. பொம்பளைங்க சீக்கிரமா முடிவு எடுக்கறதை உங்க வாழ்க்கைல எப்பவாவது பார்த்திருக்கீங்களா?


3.  எங்கப்பா ரொம்ப டேலண்ட்டான ஆள்


இதைச்சொல்ல என் கிட்டே லஞ்சம் வாங்கிக்கிட்டா 


4. மிஸ்டர் பிரசிடெண்ட் , எப்படி இருக்கீங்க? 

 இன்னும் உயிரோட தான் இருக்கேன் 


5. சின்ன வயசுல பொண்ணுங்க  தன் அப்பா மேல அபரிதமான அன்பு வெச்சிருப்பாங்க, நாளாக நாளாக அது குறைஞ்சுடும்

 




சி பி கமெண்ட்  -  படம் போர் அடிக்காம போகுது . பார்க்கலாம் ,. ஆக்‌ஷன் பட விரும்பிகள்  எல்லாரும் பார்க்கலாம், பெண்களும் பார்க்கும் விதத்தில் மிக கண்ணியமான படமாக்கம் 


ரேட்டிங்க்  -    3.5  /5 

ஈரோடு வி எஸ் பி  ல படம் பார்த்தேன்