Friday, June 14, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaxiyKaqNX92IP6Yoq5b8cPQYPrEFQKnes6LCLIi1xR586vHMe4MZuUVgn3pyuRhoQWPO2eahBqH-o6QOGPe4xU4OAdRxFeS9jctlQhURpfkrbjANcO-3qkI64-jhLPBlxnMOvRa8hsBO7/s1600/Theeya+Velai+Seiyyanum+Kumaru+Movie+Latest+Posters+cinesandadi+(2).jpg

உண்மையா லவ் பண்றவனை இந்தக்காலப்பொண்ணுங்க ஏத்துக்க மாட்டாங்க. பிளான் பண்ணி தில்லு முல்லு , கோல்மால் பண்ணி திட்டம் போட்டுக்கவுக்கறவங்களுக்குதான் காலம். இதுதான் படத்தோட  ஒன் லைன் . 

ஒரு கல் ஒரு கண்ணாடி கான்செப்ட் ல  வடிவேலுவின் தங்கச்சி பேக்கரி காமெடியை மிக்ஸ் பண்ணி ஒரு உல்டா திரைக்கதை அமைச்சா அதுதான் தீ வேசெகு.

ஹீரோ சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க எதுவும் செட் ஆகாம வளர்ந்தவன் ( கவனிங்க , ப்ளூரல்) பெரியவன் ஆனதும் ஒரு நல்ல ஃபிகரா கரெக்ட் பண்ண வீணாப்போன ஐடியா அய்யா சாமி கிட்டே ஐடியா கேட்டு கேட்டு லவ் பண்றாரு. ஆல்ரெடி வேற ஒரு கொலீக் லவ் பண்ற ஹீரோயினை பிளான் போட்டு தன் பக்கம் இழுக்கறாரு. 

 இந்த இடத்துலதான் ஒரு ட்விஸ்ட். அந்த ஐடியா கொடுத்த அய்யாசாமியோட தங்கச்சி தான் ஹீரோயின்.இப்போ அவர் ஹீரோவுக்கே வில்லன் ஆகறாரு. எப்படி கலாட்டாக்கள் நடக்குது என்பதுதான் காமெடி கலக்கல் திரைக்கதை, சுந்தர் சி ராக்ஸ். 

http://static.sify.com/cms/image/ndmsI2afegj_medium.jpg


படத்தோட ஹீரோ சித்தார்த் அப்டின்னா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையானு தீவிர சந்தானம் ரசிகர்கள் எல்லாம் கொலை பண்ண வந்துடுவாங்க, அதனால உண்மையை ஒத்துக்கறேன். ஹீரோ சந்தானம் தான். அவர் வரும் ஓப்பனிங்க் காட்சி ரஜினி , அஜித் , விஜய் ரேஞ்சுக்கு தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது. ஸ்லோ மோஷன்ல பைக்ல வர்ற முத சீன்ல இருந்து க்ளைமாக்ஸ் வரை அவரோட ஆட்சி தான். 

இந்தப்படத்துல சந்தானத்தின் சொந்த டயலாக்ஸ் கம்மி. சுந்தர் சி யின் ஸ்கிரிப்ட் ல என்ன இருக்கோ அதைத்தான் பெரும்பாலும் பேசி இருக்காரு. ரசிக்க வைக்குது. ஆங்காங்கே கவுண்டமணி மாதிரி கவுண்ட்டர் டயலாக்ஸ் அடிக்கவும் தவறவில்லை. வெல்டன் சந்தானம் . 


 இரண்டாவது ஹீரோ சித்தார்த். விளக்கெண்ணெய் வடியும் முகம். நல்ல பர்சனாலிட்டி என பெண்களால் கொண்டாடப்படும் இவர் ஏன் இப்படி உம்மனா முகமா வர்றார்னு தெரியலை . சந்தானத்துடன் காம்பினேஷன் காட்சிகள் வரும்போது இவர் டம்மியாகத்தெரிவது இவர் தவறல்ல . ஆனானப்பட்ட ஆர்யாவுக்கே நேர்ந்த கதிதான் ( பாஸ் எ  பாஸ்கரன்)

Hansika Motwani hot photos (29)


 பாடல் காட்சிகளில் , சின்ன சின்ன நடன அசைவுகளில் இவர் பம்மல் கே சம்பந்தம் கமல் மாதிரியும்  , இதய தாமரை கார்த்திக் மாதிரியும் இமிடேட் பண்ணி இருப்பது அப்பட்டமாதெரியுது .  இவர் சொந்த சரக்கே போதும், எதுக்கு இந்த எச்சுப்பண்ணாட்டு? 

ஹீரோயின் ஹன்சிகா மெத் மெத்வா நீ வாணி ( வாணி தேனி வா நீ! # கவித கவித ) கொழுக் மொழுக் சந்தன பொம்மை .சும்மா சும்மா குலுங்கி குலுங்கி நடப்பதும் , கெக்கே பிக்கே என சிரிப்பதும் தான் இவர் வேலை , அதுக்கே சம்பளம் 75 லட்சம் ரூபா. தொப்பை விழுந்துடுச்சுன்னு பக்கத்து சீட்காரர் சொன்னார். நான் கவனிக்கலை . பொண்ணுங்களை கழுத்துக்குக்கீழே நாங்க பார்க்கறது இல்லை . 


இவங்க 3  பேரைச்சுத்தித்தான் கதை நகருது என்பதால் ஆங்காங்கே ஓக்கே ஓக்கே சாயல் அடிப்பதை தவிர்க்க முடியலை . அது தெரிஞ்சே தான் சுந்தர் சி அந்த ஃபிளாஸ்பேக் சீன்ல சந்தானம் தங்கச்சி தான் ஹன்சிகா என்ற ட்விஸ்ட்டை வெச்சிருக்கார் போல . 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1. வீட்டோட மாப்ளையa வரும் பாஸ்கி ஓப்பனிங்க் சீன்ல  மனைவியை காரில் ஏற்றும் சஸ்பென்ஸ் காட்சி கலக்கல் காமெடி 


2. சித்தார்த்தின் பப்பி லவ் ஸ்டோரியில் அவரைப்போன்ற முகச்சாயலுடன் ஒரு பையனை அச்சு அசலாய்த்தேர்ந்து எடுத்தது 


3. டப்பா ஸ்கூட்டரில் ஹீரோவை ஏற்றிக்கொண்டு பாஸ்கி சொதப்பும் சீன் உழைப்பாளி ரஜினியின் காமெடியை சுட்டிருந்தாலும் ரசிக்கலாம் 


4. படம் முழுக்க அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும் சந்தானம் பிராண்ட் மொக்கை காமெடி வசனங்கள் . 64  ஜோக்ஸ் தேறுது . தியேட்டரில் 18 இடங்களில் செம அப்ளாஸ் . படம் நெடுக சிரிப்பலைகள் வந்துட்டே இருப்பது பெரிய பிளஸ் 


5. சந்தானம் ஃபிளாஸ்பேக் காட்சியில்  சிவாஜியை இமிடேட் செய்வதும் , அந்தக்கால பாட்டை பின்னணியில் ஒலிக்க விடுவதும் லொள்ளு சபாவில் ரசிக்க வைத்த டெக்னிக் , எடுபடுது , ஓக்கே 


6. சேட்டை பட விமர்சனத்தில் கிழி கிழி என கிழித்த ரேடியோ ஜாக்கியை சமார்த்தியமாக ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தது  ( அவர் விமர்ச்னத்துல இதை நல்லாலைன்னு சொல்ல முடியாது ) 

7. நட்புக்காகவோ , வேற எதுக்காகவோ மெழுகு ஃபிகர் சமந்தாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தது . விஷால் கூட ஒரு சீன்ல வர்ராருப்பா..


8. சூது கவ்வும் இயக்குநர்  நலன் குமார சுவாமியை படத்தின் திரைக்கதை வசனத்தில் உதவி பெற்றது


9.  தக்காளி பாடல் காட்சியில் ஹன்சிகாவுக்கு  மேக்சிமம் கிளாமரை வர வைத்தது  


10 டி வி விளம்பரங்களில் , க்ளிப்பிங்குகளில் நல்ல புரோம்மோ குடுத்தது 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் ஹன்சிகாவிடம் முதன் முதலில் பிரப்போஸ் பண்ணும் ஆஃபீஸ் கொலீக்கின்  செல்ஃபோனை சந்தானம் திட்டப்படி ஆஃபீஸ் பொண்ணு வாங்கி அந்த ஃபோன்ல ஹன்சிகாவின் பெயரை டெலீட் பண்ணி ஃபிகர் நெம்பர் 6 அப்டினு மாத்திடுது . அது அந்த கொலீக்குக்கே தெரியாமல் போவது எப்படி? அடிக்கடி ஹன்சிகாவுக்கு அவர் ஃபோன் பண்ணும்போது மானிட்டரில் டி்ஸ்பிளே ஆகி இருக்குமே? 



2. ஹன்சிகா எதெச்சையாய் அவர் கிட்டே ஃபோனை வாங்கி தன் நெம்பருக்கு கால் பண்ணும்போது ஃபிகர் 6 என வருவதைப்பார்த்து வெறுப்பது நம்பவே முடியலை . அப்படி அவர் பண்ணி இருந்தா ஹன்சிகாவிடம் செல் ஃபோனை தருவாரா? தத்தி ஹீரோயின் யோசிக்கலையா? 


3. என் ஃபோனை காணோம் , உங்க செல்லுல இருந்து ரிங்க் விடுங்க என்றதும் பொதுவா நாம தான் ரிங்க் விடுவோம். இப்படி யாராவது தன் ஃபோனைக்குடுப்பாங்களா? 


4. முதல் காட்சியில் தனிமையில் ஆஃபீஸ் கொலீக் ஹன்சிகாவிடம் லவ் பிரப்போஸ் பண்ணும்போது ஹன்சிகா “ யோசிக்க டைம் வேணும்”கறார், அடுத்த காட்சியிலேயே ஒரு பார்ட்டியில் எல்லோர் முன்னும் லவ் பிரபோஸ் பண்ணும்போது ஓக்கே சொல்றார். எப்படி? நேத்துத்தானே சொன்னேன், டைம் வேணும்னு அப்டினு ஹீரோயின் ஏன் கேட்கலை? 

5. தன்னிடம் லவ் பிரப்போஸ் பண்ணின ஆஃபீஸ் கொலீக் நல்லவர், ஹீரோவின் சதியால் தான் அப்படி ஆச்சு என்றதும் ஹீரோயினுக்கு அவர் மேல் சிம்ப்பதியும் வர்லை , அவர் கிட்டே மன்னிப்பு கேட்கவும் தோணலை, ஏன்? 


6. அண்ணன் தங்கச்சி செண்ட்டிமெண்ட் காட்சியில் கூட ஹன்சிகாவுக்கு லோ கட் ஜாக்கெட்டில் குனியும் காட்சி , ஒரு ரசனையே இல்லாம 



 மனதில் நின்ற காமெடிகளில் நினைவில் நின்றவை 


1. இந்தக்காலத்துப்பொண்ணுங்களை காமெடியா ஏமாத்த முடியாது.சீரியசாத்தான் ஏமாத்தனும்



2. தட்டுல அல்வா விழுந்தாலும் ,ஐஸ்க்ரீம் விழுந்தாலும் யோசிக்காம நக்கிடனும்


3. காசு இருக்கற யார் வேணாலும் போட்டுடலாம் நிலத்துக்கான பட்டா. ஆனா எல்லாருக்கும் கிடைச்சுடாது இந்த துப்பட்டா


4. நாகூர் பிரியாணி உளுந்தூர்ப்பேட்டை நாய்க்குத்தான் கிடைக்கனும்னு இருந்தா யாராலும் அதை மாத்த முடியாது.லவ் பண்ற பொண்ணும் அப்டித்தான்


5. அவ கிட்டே எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல .


சந்தானம் - நான் வேணா 4 அய்யர்ங்களை அனுப்பறேன்.கணபதி ஹோமம பண்ணி ஆரம்பிச்சுடலாம்்


Hansika Motwani hot photos (27)


6. FREE TOP UP பண்ணி விடறேன்னு சொன்னா போதும்.பொண்ணுங்க தாழ்ப்பாளை உடைச்சுட்டு ஓடி வந்துடுவாங்க


7. பொண்ணுங்க கிட்டே லவ் அப்ரோச் பண்ண ஏண்டா தயங்கறீங்க? மீறி மீறிப்போனா ஒரு திட்டு .ஒரு பளார்.அவ்ளவ் தானே


8. பசங்க நல்லவன் மாதிரி நடிக்கக்காரணமே பொண்ணுங்க கிட்டே கேவலப்படக்கூடாதுன்னுதான்.ஒரு பொண்ணு கிட்டே அறை வாங்கிட்டா சரியாபோய்டும்


9. மேனேஜர் சார்.எதுக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றீங்க ? 


அப்போதான் வீட்டுக்குப்போகவே வெறுப்பா இருக்கும்.ஆபிசே கதினு வேலையைப்பார்ப்பீங்க


10. என் மேரேஜ்க்கு யாரும் வர மாட்டீங்ளா ஏன் ? 




என்னைக்கேட்டா நீயே உன் மேரேஜ்க்குப்போகாத.ஒரு பொண்ணோட வாழ்க்கையைக்காப்பாத்துன மாதிரி இருக்கும்



11. நோகாம நொங்கு திங்க முடியாது.கூசாம கிச்சு கிச்சு மூட்ட முடியாது


12. அழகான பையனை லவ் பண்றது ஆபத்துடி.மேரேஜ் ஆனவன்னு பார்க்க மாட்டாங்க.பொண்ணுங்க அவனையெ சுத்தி சுத்தி வருவாங்க



13. ஒயின்ஷாப் போகாத பசங்க கூட இருக்காங்க.ஆனா காபி ஷாப் போகாத பொண்ணுங்களே இல்ல


14. எதுக்காக எனக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புனீங்க ? மிஸ். பிடிக்கலைன்னா திருப்பி அனுப்பிடுங்க


15. தேங்கா வேணும்னா தென்னை மரத்துல ஏறித்தான் ஆகனும் குமாரு


16. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ஹேர் ஸ்டைலை மாத்தற மாதிரி மாசா மாசம் ஆளை மாத்திடறாங்க


17. அந்த ராஸ்கல் என்னை ஏமாத்திட்டாண்டி.


யாரு ராஜேஷா ? அது போன மாசம் .இது இந்த மாசம் .ரகு.ஹி ஹி


18. சுல்தானே காஞ்சு கிடக்கும்போது குதிரை குலோப்ஜாமூன் கேட்டுச்சாம்


19. டிராபிக் போலீஸ் - ஸ்கூட்டர்ல நெம்பர் பிளேட்டே இல்லையே?  


பாஸ்கி - அது இருந்தா ஆளாளுக்கு கேஸ் எழுதிடறாங்க சார்


20. பசங்களுக்கு காதல் வந்துட்டா மண்வாசனை காந்திமதி மாதிரி பொண்ணுங்க கூட கரீனாகபூர் மாதிரி தெரிவாங்க


Hansika Motwani hot photos (30)




சி பி கமெண்ட் - தீயா வேலை செய்யனும் குமாரு - ஹீரோ சந்தானத்தின் மொக்கை காமெடிக்காக - பார்க்கலாம். விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு வரி , சுந்தர் சி யின் ரெகுலர் டைப் காமெடி இதுல மிஸ்சிங்க் .கோஸ்ட் ரைட்டர் மாதிரி கோஸ்ட் டைரக்டர் ஒருத்தர் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சு மேற்பார்வை டைரக்‌ஷன் மட்டும் இவர் போல , எப்படியோ படம் ஹிட் தான்


விகடன் எதிர்பார்ப்பு மார்க் -41


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் - 3.25 / 5


diSki -

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/06/blog-post_15.html