1. ரன்னிங் ரேஸ் ல ஓடாம எதுக்கு கதைபுக் படிச்சுட்டு இருந்தே ?
SLOW ,STUDY .AND WIN THE RACE னு சொன்னாங்ளே? அவ்வ.அது STEADYயா?்
------------------------
2. ஒரு பொண்ணு 2 கைலயும் 2 விளக்குமாறு ( சீமாறு) வெச்சு வாசல் கூட்டுது.ரொம்ப வசதியான இடம் போல
-----------------------
3. பக் வீட் ஆன்ட்டி நைட் கொல்லைப்பக்கம் படுத்திருந்தது.காலைல வாசல் திண்ணைல இருக்கு
பின் தூங்கி முன் எழும் பரம்பரை போல
-------------------------
4. வாக்கிங் வந்த் பிகரோட நாய் என் மேல தாவுச்சு.அதுக்கு பிகரு " ஏய்.ரோசி.இப்போதானே குளிச்சே? நாட்டி கேர்ள்" # அடங்கோ
----------------------------
5. மேத்ஸ் டீச்சர் ( மெத் மெத் ) - சைன் தீட்டா ன்னா என்ன ?
லொள் மாணவன் - தீட்டா சிம்பலை SIGN பன்றது
------------------------
6. கோயிலில் முத்தம் தரலாமா ? என காதலி கேட்டால் ",கடவுளுக்கும் தெரியட்டும்
்.தெய்வ சாட்சியாய் பயணிக்கட்டும் நம் காதல் என சமாளிக்கவும்
------------------------------
7. அன்பே! உன்னால் எனக்கு சலூன் போகும் வேலை மிச்சம்.மாசா மாசம் 1 ந்தேதி மொட்டை அடிச்சுடறியே?
-----------------------
8. என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு தருவீங்க? என்றாள் காதலி.என்னையே தருவேன் என்றேன் # 1,செலவில்ல.2 ஹி ஹி
---------------------------
9. பல ஆடை ஏற்றுமதி நிறுவனம் வந்திருக்கும் பன்னாடைத்தலைவருக்கு இந்த பொன்னாடை போர்த்துகிறோம்
----------------------
10. நல்ல நாள்லயே வேலை செய்ய மாட்டாங்க.இந்த பொண்டாட்டிங்க.உடம்பு சரி இல்லைன்னா கேட்கவே வேணாம் .ஒரு துரும்பைக்கூட கிள்ள மாட்டாங்க
---------------------------
11. தலைவி அலைபேசியில் - எனக்கு தலைவலி . # ஒரு தலைவலிக்கே தலைவலி வந்ததே அடடே
-------------------------
12. டேய்.நான் தான் கோபமா இருக்கேனே.எதுக்கு கிஸ் குடுத்தே?
என் கிட்டே இனி
பேசற வேலை வெச்சுக்காதேன்னு நீ தான் சொன்னே.அதான்.அடுத்த வேலையை ஹி ஹி
--------------------------
13. டாக்டர்.தொண்டை கட்டிக்குச்சு.என்ன பண்ணனும் ?
தொண தொணனு பேசாம இருக்கனும்
----------------------------
14. வேறு மாநில பிகரை லவ் பண்ணா ஒரு பயன் உண்டு.லவ் புட்டுக்கிட்டாலும் ஒரு புது மொழியை செலவில்லாம கத்துக்கிட்டிருப்போம்
------------------------
15. சில பொண்ணுங்களுக்கு காதை விட காதணி ,தொங்கட்டான் பெருசா இருக்கு
-----------------------
16. அன்பே! உன் உள்ளங்கை இவ்ளவ் மென்மையா இருக்கே எப்படி? ஏதாவது வீட்டு வேலை செஞ்சாத்தானே? ஹி ஹி
----------------------
17. இன்று ஒரு தகவல் - count down = இறுதி ஆயத்தம் ,எண்ணிறக்கம்
------------------------
18. பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்புடறான்னா பக்கோடா இருக்கறவன் என்ன சாப்புடுவான்?
---------------------------
19. கரிமேடு னு ஒரு கன்னட டப்பிங் படம்.போஸ்டர் ல கரடு முரடான படம்னு விளம்பரம்.திரையை தடவிப்பார்த்தா அப்டி 1 ம் தெரியல
------------------------
20. உங்க தோளைச்சுற்றி எப்பவும் ஒரு நடிகையின் கை இருக்கே.ஏன்?
லட்சுமி கரமா இருக்கட்டும்னுதான்.ஹி ஹி
----------------------------