Sunday, June 09, 2013

‘பெப்சி’ உமா வின் காதல் அனுபவம் , கடுப்பான விவேக்


பெப்சிஉமா

உமான்னு சொல்றதை விட, ‘பெப்சி உமா!’ன்னு சொன்னால் இன்னும் தெளிவா புரியும்!

ஒரே டீ.வி. சேனலில், ஒரே நிகழ்ச்சியில், ஒரே ஸ்பான்ஸர் கொண்டு பதினேழு வருடங்கள் நடத்தப்பட்ட ஒரே டயலிங் ஷோவின் ஒரே ஆங்கர் என்ற பெருமைக்குரிய ஒரே பெண் உமாதான்!

உமாவுக்கு ரசிகர்கள் குமுளியில் கோயில் கட்ட முயற்சித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முன்வந்தது. எல்லாமே க்ரேஸி - ரேஸியாகப் போய் கொண்டிருந்தபோது, மீடியாவிலிருந்து காணாமலே போனவர், இப்போது 3 வருட இடைவெளிக்குப் பிறகுஜெயாடீ.வி.யின்ஆல்பம்நிகழ்ச்சியில் தலைகாட்டத் துவங்கியுள்ளார்.


என்னாச்சு உமா? நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்?"


பிரமாதமா ஒண்ணுமில்லை! என்ன நடக்கணும்னு விதி இருந்ததோ, அதுபடி நடந்தது. யாம் ஃபேடலிஸ்ட்! ஊழ்வினை, கர்மபலன், விதி எல்லாவற்றையும் நூறு சதவிகிதம் நம்புபவள் நான்.


சன் டீ.வி.யை விட்டுட்டு, கலைஞர் டீ.வி.க்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்புறம் அங்கிருந்தும் விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. வேறு வழியில்லாமல் வருத்தத்துடன் விலகிட்டேன்.

இந்த இடைப்பட்ட மூன்று வருஷத்துல எங்க போனீங்க? என்ன செஞ்சீங்க?


When problems come, they don't come in single, they come in battallions என்பது ஷேக்ஸ்பியரின் வார்த்தை. எங்களுக்கும் அதுதான் நேர்ந்தது!


பொலிடிக்கலா ப்ரஷர், பிஸினெஸ்ல நிறைய பிரச்னை, ஆறு மாசம் படுத்த படுக்கையா ஆகிற மாதிரி படுத்தி எடுத்த நோய்... ரொம்பவே பட்டுட்டோம்.
லெப்டோ ஸ்பைரோஸிஸங்கிற எலிக் காய்ச்சலும், சிக்குன்குனியாவும் சேர்ந்து தாக்கியதில், நான் பிழைச்சதே பெரிய விஷயமாயிடுச்சு. என்னால நடக்கக் கூட முடியலை!


ஆனா ஒருவழியா அதுல இருந்தெல்லாம் மீண்டு வந்து, இப்ப முன்ன இருந்ததை விட தெளிவா, பல மடங்கு செல்வத்தோட வளமா இருக்கோம். அதுக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்!


மீடியாங்கிறது வசீகர புகழ் வட்டம். அதுல இருந்து மறைஞ்ச போது உங்களுக்கு வருத்தமாக இருந்ததா?


மீடியாவை விட்டு விலகியது வருத்தமே இல்லை! ஆனால், என் கூட இருந்த பெரிய ப்ரெண்ட்ஸ் கும்பல் அப்படியே காணாமல் போய் விட்டதுதான் வேதனையாக இருந்தது.


நான் செழிப்பா சிரிச்சுக்கிட்டு இருக்கும்போது, எத்தனை பேர் என்னைச் சுற்றியிருந்தாங்க. அதுவே கஷ்டப்படறோம்னு தெரிஞ்சதும் ஓடியே போய்ட்டாங்க! அப்பத்தான் எனக்கு உண்மையான ஞானமே வந்தது.


ஐயா, கண்ணதாசா! நீ பெரிய தீர்க்கதரிசி!"ன்னு அவரைப் போற்றாத நாளே இல்லை. குளத்துல நீருமில்ல; கொக்குமில்ல, மீனுமில்ல" என்ற வார்த்தைகள் எவ்வளவு உண்மை!


அந்தக் கஷ்டமான காலத்தில் எங்களோடு துணை நின்று, எங்களைப் பெரிய பள்ளத்திலிருந்து மீட்க கைகொடுத்து உதவிய இரண்டே ஜீவன்கள் எங்க அப்பா- அம்மாதான்.


இப்ப, நாங்க மறுபடி ஜோரா வலம்வர ஆரம்பிச்சதும், அதே கூட்டம் சுற்றிச் சுற்றி வருது. ஆனால் இப்பவும் நான் அவங்களை விரட்டலை. சுடுசொல் பேசலை. மனசுக்குள்ளேயே சிரிச்சுக்கிறேன். எதுக்குமே வேதனைப்படாம வேடிக்கை பார்க்கிற ஞானத்தை 37 வயசுலேயே கொடுத்துவிட்ட கடவுளுக்கு நன்றி பல!


சரி, கொஞ்சம் பழைய கதை பேசுவோம்...
வெறும் உமா, பெப்ஸி உமா ஆனது எப்படி?


91-92 நான் ஸ்கூல் ஃபைனல்ல இருந்தேன். அப்ப, என் தோழியோட அண்ணா ஒருத்தர், தூர்தர்ஷன்ல இருந்தார். அவரு, ‘வாருங்கள் வாழ்த்துவோம்!’னு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்துத் தர முடியுமான்னு கூப்பிட்டார். வீட்டுல யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கும் கேமரா முன்னால நின்னு பேச கூச்சமாதான் இருந்தது. ஆனாலும், ரொம்ப வற்புறுத்தி அழைச்சதால, சும்மா ட்ரை பண்ணிப் பார்ப்போமேன்னு போனேன். அதைப் பார்த்த சன் டீ.விக்காரர்கள்டயலிங் ஷோவுக்கு அழைச்சாங்க! சும்மா ஜாலியா பேச ஆரம்பிச்சேன். நானே எதிர்பார்க்கலை. பெரிய ஃபேன் கிளப்பே உருவாயிடுச்சு. அது தானா வந்த கூட்டம். எதையும் எதிர்பார்க்காம, அன்பால் திரண்ட கூட்டம்!
கமல், ரஜினி கூட எல்லாம் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்துச்சு இல்லையா?


ஆமாங்க! பாரதிராஜா, மணிரத்னம், சுபாஷ் கய் போன்ற முன்னணி இயக்குநர்கள் கிட்ட இருந்தெல்லாம் அழைப்பு வந்தது. ஆனால் பேஸிக்கலா நான் கொஞ்சம் சோம்பேறி. நடிக்கிறதுக்கு ரொம்பப் பொறுமை வேணும். பாவம்... தமிழ் சினிமா... பிழைச்சுப் போகட்டும்னு விட்டுட்டேன்!



ஏகப்பட்ட காதல் கணைகள் உங்க மீது வீசப்பட்டிருக்கும். ஆனால் சுகேஷை காதல் கல்யாணம் செய்து கொண்டது எப்படி?


ட்ரூ... ட்ரூ! எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆன செய்தி கேட்டதும் பல பேர், யாருப்பா அந்த லக்கி மேன்?" என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். நடிகர் விவேக் கூட கலாய்த்தார். யாருங்க அது சுகேஷ்? எனக்கு அவரைக் கொஞ்சம் கூட பிடிக்கலைங்க! அகில இந்திய பெப்ஸி உமா ரசிகர் மன்றத் தலைவரா நான் இருக்கும் போது ரொம்ப அநியாயங்க!" என்று செல்லமாய் சண்டையே போட்டார்.


நானும், சுகேஷும் சேர்ந்து ஒரு விளம்பரப் படத்தில் நடிச்சோம். எட்டு மாதங்கள் குடும்ப நண்பர்களாகப் பழகிய பிறகு, அவர் ப்ரபோஸ் செய்தார். எனக்கும் அவரைப் பிடிச்சுருந்தது. ஆனா எங்க வீட்டுல பலத்த எதிர்ப்பு. ஆர்ப்பாட்டம் பண்ணலை; சீன் போடலை. பக்குவமா ஹேண்டில் பண்ணி, பெரியவங்களை கன்வின்ஸ் செய்து, கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.


அவர் பஞ்சாபி என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்ங்கிறதால, எந்தப் பிரச்னையும் இல்ல. சுகேஷ் நல்ல பக்திமான். அனந்த பத்மநாப சுவாமி கோயில், ஷீரடி பாபா கோயிலுக்கு தினசரி போய் கும்பிடும் பழக்கமுள்ளவர். நல்லவர், என்னைப் புரிந்தவர். எங்கள் மகன் விஷாலுக்கு ஒன்பது வயதாகிறது.

ஜெயா டீ.வி.யில் நடத்தி வரும்ஆல்பம்நிகழ்ச்சி பற்றி...

நடிகர் சிவக்குமார், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பிரபு, டைரக்டர் மகேந்திரன், முன்னாள் போலிஸ் கமிஷனர் நட்ராஜ் போன்ற வி..பி.கள் சில புகைப்படங்களைப் பார்த்து, தங்கள் அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சுவாரசியமான நிகழ்ச்சி அது. ‘லைஃப் ஜர்னி த்ரூ ஃபோட்டோஸ்னு வெச்சுக்குங்களேன்!

ஆல்பம்நிகழ்ச்சியில் நீங்க சந்திச்சுப் பேச விரும்பும் ஆண் வி..பி. யார்? பெண் வி..பி. யார்?


சோ, ஜெயலலிதாம்மா!"

ஓகே. வாழ்க்கையே ஒரு நம்பிக்கைதாங்க!

கீப் கோயிங்... கீப் ஆன் கோயிங் உமா!


நன்றி - கல்கி