Thursday, November 01, 2012

பீட்சா - PIZZA - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கலக்கல் பேட்டி @ கல்கி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidNW17YYj8xOMoxuXRtJHo-XKPRRq6aMygk__rZdinJUnNfCaiS_jMDHR_B9mYH2A8JdOAelRQy6ln7VpZNT2UfDqy3W8hrhGh7UYjPFHhHIUOG5gbtGV-kOY7UmbkurwwADouiCAdXGc/s400/PIZZA.jpgசினிமா

இயக்குனரிடம் வேலை பார்க்க வேண்டியதில்லை!

ராகவ்குமார்

தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பிடித்த ஃபேஷன் உணவானபிட்சாவின் பெயரைக் கேட்டால் நிறைய பேருக்குப் பயம் வருகிறது. காரணம்பிட்சாபடத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படமானபிட்சாவில் அமானுஷ்யம், பேய் பங்களா என பல திகில் சமாச்சாரங்களைக் காட்டி பயமுறுத்தி இருக்கிறார். சினிமாவில் இயக்குனராக வேண்டுமானால் பல ஆண்டுகள் அசிஸ்டென்டாக இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றி, எந்த ஒரு இயக்குனரிடத்திலும் உதவியாளராக இல்லாமல், ஜெயித்திருக்கிறார். அமுல் பேபி கன்னங்களுடன், கல்லூரி மாணவனைப் போலிருந்தும் இயக்குனர் நம்முடன் உரையாடியதிலிருந்து...
நான் மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் காலேஜில் படிச்சேன். மதுரைக் காரங்களுக்கு கோயில்களுக்கு அடுத்தபடியா இருக்கிற ஒரே பொழுதுபோக்கு சினிமா பார்க்கறதுதான். மதுரையில் நான் பார்த்த நிறைய சினிமாக்கள்தான் இன்ஜினியரிங் படிச்ச என்னை சினிமாவுக்குக் கொண்டு வந்தது.
நான் பெங்களூரில் வேலை பார்த்தபோது சஞ்சய் நம்பியார் என்பவரிடமிருந்து கத்துக்கிட்ட குறும்படப் பயிற்சிகள், சினிமாவில் ஒரு விஷுவலை எப்படி கையாளுணும்னு கத்துக் கொடுத்தது. பேயைப் பத்தி படம் எடுத்தாக்கூட பேய், பிசாசு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது.
என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண்மணிஜெகன்மோகினிபடம் பார்த்தாங்க. படத்தில் பேய்கள், வெறும் கையோடு கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு பலகாரம் செய்ற காட்சி வரும். படம் பார்த்த சமயம் தீபாவளிக்கு முந்தைய சில நாட்கள். படம் முடிந்து அந்தப் பெண்மணி நேர வீட்டுக்கு வந்தாங்க.
வீட்டில் தீபாவளிக்கு நிறைய பாட்டிகள், பட்சணங்கள் செய்றதைப் பார்த்திருக்காங்க. பாட்டிகள் உட்கார்ந்து பலகாரம் செய்றதைப் பார்த்த பெண்மணிக்கு, ‘ஜெகன்மோகனிபடத்தில் பேய்கள் பலகாரம் செய்றது ஞாபகத்தில் வந்து பயந்து போயிட்டாங்க. இந்தப் பயத்தால் பல வருடங்கள் திக் பிரமைப் பிடிச்சதுபோல் இருந்தாங்க.

இந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட பிரச்னையை உளவியல் மருத்துவத்தால் குணப்படுத்தாமல் பேய் விரட்டறது, மந்திரிக்கறதுன்னு, படாதபாடு படுத்திட்டாங்க.
காதால் கேட்கற, கண்ணால் பார்க்கற விஷயங்களுக்கு, நாமளா சில கற்பனைகளைச் சேர்த்து பேய், பிசாசுன்னு வடிவம் தருகிறோம். நம்பிக்கை வேறு, மூட நம்பிக்கை வேறு" என்று கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் தந்து கொண்டிருக்கும்போது, ‘பிட்சாஹீரோ விஜய்சேதுபதி என்ட்ரி ஆகி பேச ஆரம்பித்துவிட்டார்.
படத்தில் நீங்க பார்த்த பேய் பங்களாவில் சூட்டிங் நடந்த சமயம் நான் மட்டும் மேல்மாடியில் தனியா இருந்தேன். அந்தப் பங்களாவில் தனியா இருக்க ஒருவித பயம் இருந்தது. உடனே டைரக்டர்கிட்ட ஃபோன் செய்து, சார், தனியா இருக்கப் பயமாய் இருக்கு. யாராவது அசிஸ்டென்ட் இருந்தா அனுப்புங்க"ன்னு சொன்னேன். ஷூட்டிங் நடக்கிற நாட்களில், வீட்டிலும், வெளியிலும் இனம் புரியாத ஒருவித பயம் இருந்துகிட்டே இருந்தது."
யார்கிட்டையும் அசிஸ்டென்ட் டைரக்டராக இல்லாமல் டைரக்டராகிட்டீங்களே? இதுதான் இன்றைய சினிமா டிரெண்டா? என்று இயக்குனரிடம் மீண்டும் ஒரு கேள்வியைப் போட்டோம்.
சினிமாவில் டைரக்டராக பல வருடங்கள் உதவியாளராய் இருக்கணும்னு ஒரு வழிமுறை இப்பவரைக்கும் இருக்கு. ஆனா அது அவசியமில்லை. சாதாரண விலையில் கிடைக்கும் டிஜிட்டல் கேமிராக்கள், சில ஆயிரங்கள் செலவு செய்து குறும்படங்கள் செய்து தர வழிவகை செய்திருக்கு. இந்தக் குறும்படங்களை இணையத்திலும், தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைக்கும்போது, தயாரிப்பாளர்களை எளிதாக அணுக முடிகிறது. ஷங்கர், கௌதம்மேனன் போன்ற பெரிய இயக்குனர்கள் குறும்படங்களைப் பார்த்துதான் உதவியாளரைச் சேர்த்துக்கிறாங்க. இதை டிரெண்ட்ன்னு சொல்றதைவிட, இயக்குனராக இன்னொரு வழின்னு சொல்லலாம்."
அழகா இருக்கீங்களே... நடிக்கப் போயிடுவீங்களா?
எனக்கு டைரக்ஷன் மட்டும்தான் செய்ய தெரியும்."



நன்றி - கல்கி 
 இடம் இருந்து வலமாக இருப்பவர்தான் இயக்குநர் ( கறுப்பு சட்டைக்காரர், ஹிட்டடிப்பதில் கெட்டிக்காரர் ;-))

http://www.newsonweb.com/newsimages/September2012/60db90ec-c45d-4e7a-b7a3-c989446928a81.jpg