Saturday, October 06, 2012

ஈரோட்டில் கில்மா - சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரி லீலை - கிடாவெட்டு

ஈரோடு: ""சத்தியமங்கலத்தை, புலிகள் காப்பகமாக அறிவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டதால், என்னை பழி தீர்க்கும் முயற்சியில், இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ஈடுபட்டுள்ளார்,'' என, ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் அருண் தெரிவித்தார்.


நெய்வேலியைச் சேர்ந்த மலர்க்கொடி, 21, அந்தியூர், தவிட்டுப்பாளையத்தில் உள்ள, தன் அக்கா வீட்டில் தங்கி, கோபியில் உள்ள கல்லூரியில், எம்.சி.ஏ., முதலாமாண்டு பயில்கிறார். நெய்வேலி சென்றிருந்த மாணவி, நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தார். அப்போது, பஸ் ஸ்டாண்டுக்கு வந்த, ஈரோடு மண்டல வனப் பாதுகாவலர் அருண், 52, மாணவியிடம் பேச்சு கொடுத்தார். 


போதையில் இருந்த அவரைக் கண்டு பயந்து போன மாணவி, அங்கிருந்த மக்களுடன் சேர்ந்து நின்று கொண்டார். அதிகாலை, 3.40க்கு, அந்தியூர் சென்ற, "திருமகள்' பஸ்சில் ஏறிய மாணவியைப் பின் தொடர்ந்து, அருணும் ஏறினார். மாணவிக்கு அருகில் அமர்ந்து, மாணவிக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார். மாணவி கொடுத்த, எஸ்.எம்.எஸ்., தகவலால், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் தயாராக நின்றிருந்த மாணவியின் உறவினர்கள், அருணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து, அருண் ஐ.எப்.எஸ்., அதிகாரி என்பதால், வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்தனர். "சில்மிஷ' புகார் குறித்து விளக்கம் தெரிவிக்க, மண்டல வனப் பாதுகாவலர் அருண், நேற்று நிருபர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.





அவர் கூறியதாவது:


ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, மரக்கட்டைகள் அந்தியூருக்கு கடத்துவதாக தகவல் வந்தது. நான் மட்டும் தனியாக என் காரில், பஸ் ஸ்டாண்ட் சென்ற போது, அங்கே தனியாக நின்றிருந்த பெண்ணை, வாலிபர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களை விரட்டி விட்டு, அப்பெண்ணை விசாரிக்கையில், அவர் அந்தியூர் செல்வதாக தெரிவித்தார். "நானும், அந்தியூர் தான் செல்கிறேன் என்னுடன் வருகிறாயா?' என, கேட்டேன்; அவர் மறுத்தார். அதிகாலையில் செல்லும் முதல் பஸ்சில், மரக்கட்டைகள் கடத்தப்படலாம் என்ற நோக்கத்தில் தான், "திருமகள்' பஸ்சில் ஏறினேன்.




மற்றபடி என் சுண்டுவிரல் கூட, அப்பெண் மீது படவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் நான் தெரிவித்ததால், என்னை விடுவித்தனர். சத்தி வனப்பகுதியை, புலிகள் காப்பகமாக அறிவிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டதால், சில வனத்துறை அதிகாரிகளும், பவானிசாகர், இ.கம்யூ.,-எம்.எல்.ஏ., சுந்தரம் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் என் மீது வெறுப்பில் உள்ளனர்.


பெண்ணின் உறவினர்கள் சமாதானமாக செல்ல தயாராக உள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ., சுந்தரம் தான் விஷயத்தை பெரிதாக்கி, பெண்ணின் உறவினர்களை புகார் கொடுக்க வற்புறுத்துகிறார். அப்பெண்ணிடம் நான் தவறாக நடந்திருந்தால், அந்தியூர் வரும் வரை அப்பெண் காத்திருக்க தேவையில்லை. பஸ்சுக்குள் சத்தம் போட்டிருந்தாலே போதும்; என்ன நடந்தது என்பது இறைவனுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பெண் புகாரால் அவப்பெயர்:


அருண், 1984ல் நடந்த, ஐ.எப்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். நாகர்கோவிலில் ரப்பர் நல வாரியத்தில் மேலாளராக பணியாற்றினார். 2010 அக்டோபர் 14ம் தேதி, ஈரோடு மண்டல வனப் பாதுகாவலராக பணியில் சேர்ந்தார். பணி ரீதியாக, கண்டிப்பான அதிகாரியாக இருந்த அருண், பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே, அதிரடி நடவடிக்கையால், பல வனத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளின் வெறுப்பை சம்பாதித்தார். பல வனக் குற்றங்களை கண்டறிந்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தார்.


அருணின் நடவடிக்கையால், ஒரு சில வன அலுவலர்களுக்கு, "கிம்பளம்' இல்லாமல் போனது. இதனால், அருணுக்கும், சக அதிகாரிகளுக்கும், பனிப்போர் நடந்து வந்தது. இவரது முயற்சியால் தான், சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால், சில வன அதிகாரிகள், பவானிசாகர், இ.கம்யூ.,-எம்.எல்.ஏ., சுந்தரம் ஆகியோரின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். அருணை இடமாற்றம் செய்ய, பலரும் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கண்டிப்பான அதிகாரியாக இருந்த அருண், "சில்மிஷ' புகாரில் சிக்கியதால், அவப்பெயர் அடைந்துள்ளார். குடும்பம்: அருணுக்கு, திருமணமாகி மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி பிரிஷில்லா, 46, வீட்டில் உள்ளார். அவரது மகன், மகள் இருவரும் கோவை கல்லூரியில் பயில்வதால், அவர்கள் கோவையில் உள்ளனர். அருண் மட்டும் ஈரோட்டில் வனத்துறை குடியிருப்பில் தங்கியுள்ளார்.

மாணவி "பல்டி':


நேற்று முன்தினம் இரவு, மாணவி மலர்க்கொடி, தன் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். "பஸ்சில், தன் அருகில் அருண் அமர்ந்திருந்த போதும், அவர் தன்னை தொடவில்லை. மேலும், அவர் உயர் அதிகாரி என்பது தெரிய வந்ததால், புகாரை வாபஸ் பெறுகிறேன்' என, மாணவி கூறியதாக, அந்தியூர் போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து 
1. கட்டையை கடத்துறாங்கன்னு பஸ்ல எறுனாய், அது ஒகே. ஆனா அந்த பொண்ணு பக்கத்துலதான் உட்காரனுமா ராசா ?? புலிகளை காப்பாத்திட்டு பொண்ணுங்களை வேட்டையாடுரியா, அது தப்பாச்சே... உன் பொண்ணை நினைச்சு பாரு 
 2.ஏங்க அருண் தெரியாமதான் கேக்குறேன், பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கிரான்னா, வேறொரு சீட்ல ஒக்கார வேண்டியது தான, அதிகாலை செல்லும் பஸ்ஸில் அப்படி கூட்டம் இருந்துச்சா?, உன்னோட பொண்டாட்டி பஸ்சுல போவாளா? அவ பக்கத்துல நான் போயி உக்காரட்டுமா? 
3. நல்ல வேல போன ஆட்சியால தான் இந்த சம்பவமே நடந்ததுன்னு சொல்லாம விட்டாரே அது வரைக்கும் பரவால 
4.ஒரு நல்ல அதிகாரி "கண்ணி" வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஆனால், தேவையில்லாமல் மாணவி எதற்கு உறவினரை அழைக்கின்றார்? அவர்கள் ஏன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்? அவருக்கும் சேர்த்து, இந்த அதிகாரியே பேருந்து கட்டணம் செலுத்தியபோது, மாணவி அதை மறுக்கவில்லை. அவர் தனக்கென தனியாகப் பயணச்சீட்டு பெறவில்லை என்பது ஏன்? இரண்டு பக்கமுமே மறைக்கப்பட்ட உண்மைகள் சில இருப்பதாகவே படுகின்றது.