Monday, September 17, 2012

திருச்செங்கோடு விவேகானந்தா காலேஜ் மாணவி கேங்க் ரேப் & மர்டர் , மறைக்கப்பட்ட உண்மைகள்

http://mmimages.maalaimalar.com/Articles/2012/Sep/86573ad0-bf78-4bae-b9db-e71f5c0ebd88_S_secvpf.gif 

 ஈரோட்டில் இருந்து 19 கிமீ  தொலைவில் உள்ளது திருச்செங்கோடு.அங்கிருந்து 7 கிமீ தொலைவில் எளையாம்பாளையம் என்னும் ஊர் உள்ளது. புகழ் பெற்ற  உலகப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்புக்கு முந்திய ஸ்டாப். அங்கே தான் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி . இருக்கிறது.

Address:

Elayampalayam,
Tiruchengode Tk,
Namakkal - 637205,
Tamil Nadu.





23000 மாணவிகள் படித்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கான கல்வி நிறுவனம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி .மிக நல்ல பெயர் கொண்ட காலேஜ். இங்கே கல்வித்தரம் மிகச்சிறப்பாக இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை இங்கே படிக்க வைக்க போட்டி போட்டு காலேஜில் சேர்க்கிறார்கள். 


கடந்த  2 வருடங்களில் இந்த காலேஜ் பல மர்ம மரணங்களின் தாயகமாக இருந்து வருகிறது.  தற்கொலை  செய்யும் மாணவிகள் பெருகி வருகிறார்கள்.அவை எல்லாம் நிஜமான தற்கொலையா? கொலை செய்து தற்கொலை நாடகமா என்பது விசாரனைக்குரியது.


இங்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவியை 7 மர்ம நபர்கள் கல்லூரிக்குள் வைத்து கற்பழித்துக் கொன்றுள்ளனர். இதனை மறைக்க கல்லூரி நிர்வாகம் ,மாணவியின் பெற்றோருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.



போலீசாரிடம் கல்லூரி நிர்வாகம் இது ஒரு தற்கொலை தான் என்று விசாரணையை மூடிவிட பேரம் பேசி உள்ளார்கள். . இதனை ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .இது போல்  சம்பவம் நடப்பது இது மூன்றாம் முறையாம்.



http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898184859200_medical.jpg




விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்  பல  மாணவிகள் ஃபேஸ்புக்கில் புலம்பி இருக்கிறார்கள். ஒரு மாணவி ட்விட்டரில் இருக்கும் பாடல் ஆசிரியர் விவேகாவிடம் இந்த தகவலை சொன்னார்கள்.
அவர்  ஜூனியர் விகடனுக்கு தகவல் சொல்லி இருக்கிறார். ஆனால் இது சம்பந்தமான உண்மையான தகவலோ , செய்தியோ எந்த ஒரு தமிழ் ஊடகத்திலும் வந்ததாகத்தெரியவில்லை.. நாளிதழ்களிலும் வரவில்லை.. வந்ததெல்லாம் தற்கொலை என்ற செய்தியே..


 தங்கள் மகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் கல்விநிலையத்தை நாடி வரும் பெற்றோர்களின் நிலை என்ன ?


கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் காயத்ரி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்த காலேஜிலேயே மிக அழகானவர் என்றும் பலர் கண் இவர் மேல் என்றும் சொல்லப்படுகிறது.


 கெமிஸ்ட்ரி லேப் அசிஸ்டென்ஸ் 4 பேர் , ஒரு ஆஃபிஸ் கிளார்க் , ஒரு லெக்சரர் ,மற்றும் ஒரு HOD  மொத்தம் 7 பேர் சேர்ந்து கல்லூரி வளாகத்துலேயே ரேப் செஞ்சிருக்காங்க.. பின் கொலைசெஞ்சிருக்காங்க 

 காயத்ரியிடம் ஒரு லெக்சரர் அடிக்கடி வழிந்ததாகவும், தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும்  மாணவிகள்  சொல்கிறார்கள்


பெண்ணின் பெற்றோரிடம் தூக்கு மாட்டிக்கிட்டு இறந்துடுச்சு என்று சொல்லி இருக்காங்க. 2 கோடி பேரம் பேசி இருக்காங்க.. போலீஸ்க்கு பணம் எவ்வளவு போச்சுன்னு தெரியல.. பாடி போஸ்ட்மார்ட்டமே பண்ணலை../ பின் பெற்றோரின் பிரஷருக்குப்பின் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மையாக நடந்தது என்பது தெரியவில்லை


பெண்ணின் உறவினர் நாமக்கல் கலெக்டராம். அவர் மூலம் பெண்ணின் பெற்றோர் நீதி கிடைக்க போராடி உள்ளனர்.. ஆனால் விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் திமுக முக்கியப்பெரும்புள்ளியாம்.. அதனால் பல மேலிட பிரஷர் வந்திருக்கு.  

 



 கல்லூரி நிர்வாகத்திடம் சில கேள்விகள் 


1. மடில கனம் இல்லைன்னா வழில  பயம் இல்லை. உங்க மேல தப்பில்லைன்னா  தன்னிலை விளக்கம் கொடுக்கலாமே? ஏன் தர்லை?கல்லூரி வளாகத்துக்குள் ஏன் மீடியாக்களை வர விடுவதில்லை? 




2. கல்லூரி பெயர் கெட்டுப்போயிடும் என்று சொல்கிறீர்கள், அப்போ இதே போல்  தொடர்ச்சியாக  மாணவிகள் கெட்டுப்போனால் பரவாயில்லையா? 


3. இது ஒண்ணும் எக்ஸாம் டைம் இல்லை. எக்சாம்ல ஃபெயில் , அரியர்ஸ் விழுந்துடுச்சு அதனால மனம் உடைந்து தற்கொலை செய்துட்டான்னு ரீல் விட.. 



4. குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஊழியர்களை அப்படியே பணியில் இருக்க அனுமதித்தால் அவர்கள்  ருசி கண்ட பூனைகள் ஆகி தங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள், நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு  நட்ட ஈடு கொடுத்துக்கொண்டே இருப்பீர்களா? 



5. இப்போது இருக்கும் களங்கத்தை போக்க அனைத்து ஆண் ஊழியர்களையும் நிறுத்தி விட்டு பெண் ஊழியர்களை நியமித்தால் தான் மாணவிகளின் பயம் போகும்.. அவர்கள் கோரிக்கையை ஏன் ஏற்கவில்லை?



6. சீல் வைக்கப்பட்டிருக்கும் காலேஜால் உங்களுக்கு நேரடி பாதிப்பு இப்போ இல்லை. ஆனா 20,000 மாணவர்கள் கதி என்ன? அவங்க எப்படி கல்வியை தொடருவாங்க?


இது பற்றி தினமணியில் வந்த செய்தி 


http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898023866917_hostel.jpg


நாமக்கல்லில் மாணவி தற்கொலை : மாணவிகள் போராட்டம், கல்லூரிக்கு விடுமுறை

First Published : 08 Sep 2012 01:59:02 PM IST


நாமக்கல், செப்., 08 : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி கல்லூரி விடுதியில், மாணவி காயத்ரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் இருப்பதாகக் கூறி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால், தேர்வில் தோல்வி அடைந்ததால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையில், கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மாலை மலர் செய்தி 

http://www.infinitecourses.com/admin/RelatedImages/Institutes/634733898312311423_mess.jpg
 திருச்செங்கோடு கல்லூரி மாணவி இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள காட்டேரி, வேப்பனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மகள் காயத்ரி (வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக்.ஐடி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த நிலையில் மாணவி காயத்ரி சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டது. டீன் வள்ளிநாயகம் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பரிசோதனை அறிக்கையை நேற்று மாலை மாணவியின் உறவினர்களிடமும் திருச்செங்கோடு ரூரல் போலீசாரிடமும் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளியநாயகம் வழங்கினார். அந்த அறிக்கையில் மாணவி காயத்ரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. மாணவியின் உடலில் ரத்தக் காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் மாணவியின் உடல் பாகங்கள் தடயவியல் சோதனைக்கும், ரசாயன பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் கிடைத்த பிறகு தான் மாணவி எப்படி இறந்தார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயத்ரி சாவுக்கு பிறகு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கல்லூரியை காலவரையின்றி மூடி உள்ளது. கல்லூரி திறக்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.



ட்விட்டர் நண்பர்


இந்த ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டவர்  கூறியது

Murugesan Vijayakumar அன்பின் நண்பர்களுக்கு, கடந்த மூன்று தினங்களாக திருச்செங்கோடு தனியார் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செல்போன்கள் வாயிலாகவும், இணையம் வாயிலாகவும் பரவி வருகிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையிலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்து விசாரித்து வருபவன் என்ற முறையிலும் சில விளக்கங்களை இங்கே தர கடமைப்பட்டுள்ளேன்.
 சில அரசியல் ஆதயம் தேடும் அமைப்புகளாலேயே இந்தபிரச்சனை தற்பொழுது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்பது எங்களது விசாரணையில் தெரியவந்தது.ஒவ்வொரு மீடியா நிறுவனங்களுக்கும் அனாமேதய போன் கால்கள் வந்தன. பேசுபவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இதில் எங்களுக்கு சந்தேகம் எழவே தீவிர விசாரணையில் இறங்கினோம். 
மாணவியின் உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பொழுது அவரது உடலை நேரில் பார்த்தேன்.இறந்த மாணவி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சில இயக்கங்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் உறவினர்களையும் சேர்த்துக் கொண்டு மருத்துவமனையின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 
 இதனையடுத்து மாணவி காயத்ரியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டீன் வள்ளிநாயகம் தலைமையில் மூன்று மருத்துவர்கள் இறந்து போன மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த பிரேத பரிசோதனை முழுமையும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று மாலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் நகல் மாணவியின் தாய் மாமா பழனிசாமியிடம் திருச்செங்கோடு ரூரல் போலீசார் ஒப்படைத்துள்ளனர். 
அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நானும் வாசித்தேன். அதில் மாணவியின் மரணம் சம்பவம் நடந்த அன்று (2.9.2012) 23-36 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம் என்றும், மாணவியின் மரணம் தூக்கிட்டு கொண்டதால் கழுத்து எழும்பு முறிவு ஏற்பட்டும், மூச்சுகுழாய் உடைந்தும் மரணம் ஏற்பட்டுள்ளது என்றும், மாணவியின் உடல் தூக்கில் தொங்கியதால் இரத்த ஓட்டம் நின்று அவரது கால் பகுதியில் ரத்தம் தேங்கி பாதங்கள் நீண்டு வளைந்துள்ளன என்றும், ரத்தம் ஆங்காங்கே நின்றதால் உடல் கறுத்து,தோல்களில் நிற மாறுதல் ஏற்பட்டுள்ளதாகவும் ,மாணவியின் உடலில் காயங்களோ, பலாத்காரத்திற்கான தடையங்களோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது முழுமையான தற்கொலை என முதல் கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. ##




டிஸ்கி - இந்த பதிவில் குறிப்பிட்ட கல்லூரி சம்பந்தப்பட மாணவிகள் யாராவது கமெண்ட் போட்டால்  உங்கள் உண்மையான பெயரை போட வேண்டாம். அது உங்கள் பாதுகாப்புக்கு ஏற்றது அல்ல



திருச்செங்கோடு வித்ய விகாஸ் பள்ளிக்கூடத்தில்  இதே போல் ஒரு மாணவி போன வாரம் , ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதை  தன் கையில் குத்திக்கொண்டார் என்று  ஒரு கேஸ் ஒன்றும் உள்ளதாகவும் ஒரு மாணவியின் பெற்றோர் என்னிடம் கூறினர். அது பற்றி விபரம் தெரிந்த  மாணவ மாணவிகள்   9842713441 , 94863 13441 செல்லிலோ  [email protected]  என்ற மெயிலிலோ விபரம் தெரிவிக்கவும்..