Friday, September 07, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 7.9.2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEionVT9KIU4TGQEH1ewp7iN6-MW7WATvxRf2n9_CQ0paghhL2HekCwcaeTAteCPrSGXr0BlUwaLBHHTr8NvAdm_Xg7-FdkHHs0FL0cRApL_R4uAO36SJeoSENticOrZyexY0jyOPAqfYd1O/s1600/Paagan-Movie-New-Firstlook-Poster.jpg1.பாகன் - தமிழ் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு பாகன் படமும் ஒரு உதாரணம். புதுமுக இயக்குநர் அஸ்லாம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் நடித்து இன்று  வெளிவர உள்ள படம் பாகன். ஒரு யதார்த்தமான கதையை பொள்ளாச்சி பின்னணியில் ‌கதையாக்கி உள்ளார் இயக்குநர்.


 முதன்முறையாக ஸ்ரீகாந்த் அம்மாவாக கோவை சரளா நடித்துள்ளார். படத்தில் ஸ்ரீகாந்த், கோவை சரளா, பரோட்டா சூரி ஆகியோர் ஆடி பாடுவதாக ஒரு பாடலை தயார் செய்துள்ளார் இயக்குநர். ‌ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஒரு குத்து பாடலை மிக சரளமாக எழுதி உள்ளார் என்பது தான் ஆச்சர்யம். 


"சிம்பா சம்பா ரம்பா... ஏஞ்சலினா அவ லவ்வர்னா..." என்று ஏகத்துக்கும் வார்த்தைகளை கொட்டி எழுதி விட்டாராம். பாடல் வெளிவந்தால் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெரும் என்று இப்போதே படக்குழு உற்சாகமாகியுள்ளனர்.



ஸ்ரீகாந்த் – ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியது எஸ் மதனின் வேந்தர் மூவீஸ்.


ஸ்ரீகாந்த் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில். தமிழ் சினிமாவில் தனக்கு மிகப் பெரிய திருப்பு முனையை இந்தப் படம் தரும் என நம்புகிறார் ஸ்ரீகாந்த்.


அவருடன் பரோட்டா சூரி காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.


கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அஸ்லம். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஸ்வாய் யு லாட் மற்றும் வி புருஷோத்தமன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரிவியூ பார்த்த வேந்தர் மூவீஸ் எஸ் மதன், படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறி, அதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார். 


ஈரோடு ஆனூரில் ரிலீஸ்  -

பாகன் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html 



Kalla Parunthu Tamil Movie Spicy Stills


2. கள்ளப்பருந்து - பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் கள்ளப்பருந்து. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தணிக்கை குழு படத்தைப் பார்த்து விட்டு இது படு ஆபாசமாக இருக்கிறது. இதை திரையிடவே அனுமதிக்க முடியாது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. மறு ஆய்வுகுழுவிடம் மனுபோட்டடார் தயாரிப்பாளர். மறு ஆய்வுகுழுவும் பார்த்துவிட்டு அலறி அடித்து இது சமூகத்துக்கு ஆகாத படம் குப்பை என்று சொல்லிவிட்டது, உடனே தயாரிப்பாளர் டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு போனார்.


அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.

இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், ம-றுஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. "ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார். வெளியே விட்டால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார்.


 மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்க இணங்க வைக்கிறார். கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர். அனைவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.



இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டெல்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, அதனால எத்தனை பேர் தீக்குளிக்கப்போறாங்களோ தெரியலை


http://tamil.webdunia.com/articles/1208/30/images/img1120830012_1_2.jpg

3. RAAZ 3 - விக்ரம் பட் இயக்கத்தில் தயாராகும், ஆக்ஷனும், த்ரில்லரும் கலந்த, பரபரப்பான படம், ராஸ்-3. இம்ரான் ஹஸ்மி, பிபாஷா பாசு, இஷா குப்தா போன்றோர் நடிக்கின்றனர். இதில், பிரபலமான நடிகையாக பிபாஷா நடிக்கிறார். ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து, விருதுகளை குவிக்கும் பிபாஷாவுக்கும், பிரபல இயக்குனர் ஹஸ்மிக்கும், காதல் ஏற்படுகிறது.


 மிகவும், சந்தோஷமாக செல்லும் பிபாஷாவின் வாழ்க்கை, இஷா குப்தா என்ற, இளம் நடிகை, புதிதாக அறிமுகமானதும், தடம் புரளுகிறது. ஒட்டு மொத்த பாலிவுட்டும், பிபாஷாவை கைவிட்டு, இஷாவின் பின் செல்கிறது. ஹஸ்மியும், பிபாஷாவை கை கழுவி விட்டு, இஷாவின் பின் ஓடுகிறார். இழந்த, தன்னுடைய புகழையும், காதலரையும் திரும்ப பெறுவதற்காக, பிபாஷா எடுக்கும் முடிவு தான், இந்த படத்தின் கதை.


ராஸ்3 படத்தில் நிர்வாணக் காட்சியில் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும் ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கூச்சம் நீங்கி, துணிச்சலாக ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா கூடவே இருந்து உதவியதாகவும் கூறப்படுகிறது.


ஜன்னத் 2 படத்தில் அறிமுகமானவர் ஈஷா குப்தா. இந்த நிலையில் அவரது 2வது படம்தான் ராஸ் 3. இதில் அவர் துணிகரமான நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே நிர்வாணத்திற்குப் போய் விட்ட அவரைப் பாற்றி பாலிவுட்டில் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.


ஆனால் படப்பிடிப்பின்போது அவருக்கு கூச்சம் நீங்கி, தைரியமாக நடிக்க படத்தின் நாயகியான பிபாஷா பாசுதான் ரொம்ப ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின்போது பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும், ஈஷா குப்தா படபடப்பின்றி, தைரியமாக நடிக்க நிறைய டிப்ஸ் கொடுத்து கூடவே இருந்தனராம். இந்தக் காட்சியில் ஈஷா நடித்தபோது கூடவே ஏகப்பட்ட பூச்சிகளும் அவரை சுற்றிச் சுற்றி கடிப்பது போல காட்டியுள்ளனராம்.



இப்படத்தில் பிபாஷாவும், ஈஷாவும் எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். இருந்தாலும் ஈஷாவுக்கு, பிபாஷா ரொம்பவே உதவியாக இருந்து நடித்தாராம்.


இப்படியே எல்லோரும் இருந்துட்டா, டைரக்டர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..



ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் -பட விமர்சனம் படிக்க
http://www.adrasaka.com/2012/09/raaz-3-18.html

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9AZAv40G6mDw1dUN3p6_ZuiNUwnbcvMlhH6YwjtT1t1-Ny4SaDjQ0n3BW42CiF4Iwl-n_Mwa7J7bMlU5-volmtKN2FToINtaFkrXjShJEg-QSadQIPmrQ0tUr2TZ2w2mynUg4g5qtO45N/s640/Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3).jpg

4. மன்னாரு  - தேசிய விருது பெற்ற அப்புக் குட்டி இப்போது மீண்டும் நாயகனாக படிக்கும் புதிய படம் "மன்னாரு".இதில் ஒரு சாமானிய மனிதனாக நடிக்கிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் சுவாதி நடிக்கிறார்.இவர்களோடு பாண்டிய ராஜன்,தம்பி ராமையா, போன்றோர் நடிக்கின்றனர்..


          உதயன் இசையமைக்க பாடல்களையும் வசனத்தையும் தம்பி ராமையா எழுதுகிறார்.இவரும் "மைனா"படத்துக்காக தேசிய விருது வாங்கிய நடிகர் என்பது குறிப்பிடப்பட்டது.கதை திரக்கதை எழுதி இயக்குகிறார் ஜெய்சங்கர்.


          சமூகத்தில் சாதாரண மனிதனுக்கு மரியாதை கிடைப்பதில்லை..எனவே அவன் எப்படி தனக்கான மரியாதையை பெற்றுக்கொள்கிறான் என்பதே படத்தின் மூலக்கதை.


          திருச்சி, கொடைக்கானல் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு சென்ற வாரம் முடிவடைந்தது.

ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ் 
 http://www.tamilula.eu/pix/movie/535.jpg

 5. சிறுத்தைப்புலி - ராம்சரண் தேஜா நடிச்ச தெலுங்கு மெகா ஹிட் சிறுத்தா படத்தோட டப்பிங்க் தான் இந்த சிறுத்தை புலி . வில்லன் நம்ம ஊரு பிரகாஷ்ராஜ். ஜோடி நேஹா சர்மா . ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் 


http://cdn1.supergoodmovies.com/FilesFive/arakkonam-38d1550f.jpg


6. அரக்கோணம் - காயத்ரி டாக்கீஸ் ரமணா குடிபாட்டி தயாரிப்பில் சிங்கம் சுதாகர் இயக்கியிருக்கும் படம். இசை – அர்ஜுன். ஸ்ரீமன், பிராச்சி தேசாய், பொன்னம்பலம், சுமன் ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


7. கோகுலம் -ஷ்ர்வானந்த் நடித்த டப்பிங்க் படம்.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


 http://ia.media-imdb.com/images/M/MV5BMjE1ODM3MTI5MF5BMl5BanBnXkFtZTcwNjc3MDcxNQ@@._V1._SY317_CR5,0,214,317_.jpg

8.  TEKKEN - மார்ஷியல் ஆர்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அடி தடி ரகளை படம்..  2039 இல் கதை நடக்குது.. இது ஆல்ரெடி ஃபாரீன்ல  2010லயே ரிலீஸ் ஆகிடுச்சு  ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ் 



http://mimg.sulekha.com/telugu/shirdi-sai-ram/events/shirdi-sai-ram/shirdi-sai-ram-stills017.jpg
9. shirdi sai  - நாகார்ஜூனா நடிச்ச தெலுங்கு படம். நேத்தே ரிலீஸ் ஆகிடுச்சு..  ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

 

10 - THE WORDS  - இது நம்ம ஊர் மிஷ்கின் சுய சரிதை. அதாவது அடுத்தவன் கதையை தன் கதை மாதிரி பில்டப் தர்ற ஒரு நாவல் ஆசிரியர் தன் மனைவியையே அப்படி நம்ப வைக்கிறார். அதனால ஏற்படும் பின் விளைவுகள் தான் கதை..   ஈரோட்டில் ரிலீஸ் இல்லை