Thursday, September 06, 2012

காதலை மீட்ட சுந்தரபாண்டியன்! - எம் சசிகுமார் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZKe8vSnGj8XBY5pg9c_plJzlaDRlbLeR2Ozx4zpQzHwbZtnoahFTJac2ShuBKsB_xVNBqNRWdoq_w7Tmhk5U2Le5VeE6O5O5tdtciuyHZcjBkS_k7Jf0z5KPvr5NL81ZmeR16Wq4cZ98/s640/Sundarapandian_movie_new-stills+(7).jpgசசிகுமார் பேட்டி

காதலை மீட்ட சுந்தரபாண்டியன்!

ராகவ் குமார்
சசிகுமாரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றால் லேப்டாப்பில் மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். ‘சுந்தரபாண்டியன்ஸ்டில்ஸாக இருக்கும் என்று எட்டிப் பார்த்தால், ‘கரங்கள்வெப்சைட்.

சில மாதங்களுக்கு முன்னால் கும்பகோணம் அன்னை கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். அக்கல்லூரியில் மாணவர்கள் உண்டியல் மூலம், மற்ற மாணவர்களிடமிருந்து பணம் வசூல் செய்து, மாணவர்களைப் படிக்க வைக்கிறார்கள். இந்த விஷயம் என்னை மிகக் கவர்ந்து விட்டது.




 இனிமேல் ஏதாவது கல்லூரி விழாவுக்குச் சென்றால் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டேன். எனக்கு விழாவில் தரப்படும் தொகையையும் அக்கல்லூரியின் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்காகத் தந்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மாணவர்களுக்கும், உதவி செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கும் இணைப்புப் பாலம் வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் என்னோடகரங்கள்வெப்சைட்.

இது இயக்கமோ, டிரஸ்டோ அல்ல. இந்தக் கல்வியாண்டில் இதன் மூலமாக நூறு பேர் பயனடைந்துள்ளனர். நானும் என்னால் முடிந்த உதவி செய்கிறேன். கவுன்சிலிங்கில் சீட் கிடைத்து ஃபீஸ் கட்டிய பிறகு, ‘மெஸ் ஃபீஸ் கட்ட முடியலை, ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட முடியலை...’ என்று தகவல்கள் வரும். சாப்பாடும், தங்குமிடமும் கல்வி கற்றலின் அடிப்படை. இதற்கு உதவி செய்கிறோம். ஆனால், உதவி பெற்றவர்கள் என்ற வார்த்தையைக்கூட இந்த வெப்சைட்டில் பார்க்க முடியாது. ‘என் குடும்பம்என்றுதான் இருக்கும்."

 http://www.nakkheeran.in/AllImages/Gallerys/29894_1.jpg
பொதுவான விஷயங்களில் ஆர்வம் செலுத்துறீங்க? அடுத்தது அரசியல்தானே?
இதில் அரசியல் எண்ணம் துளியும் கிடையாது. அரசியல், மதம், இனம், மொழி இவையனைத்தையும் விட கல்விதான் ஒருவனுக்கு முக்கியம். கல்வி என்ற அடிப்படைத் தேவையைப் பெறச் செய்யும் சிறு முயற்சிதான்கரங்கள்’."


சுந்தரபாண்டியன்?

என்னிடம் அசிஸ்டென்ட்டாக இருப்பவர்கள் தனியாக படம் செய்ய என்னிடமே வாய்ப்புக் கேட்கக் கூடாது என்பது என் பாலிஸி. காரணம், என் அசோசியேட்ஸ் வெளியில் தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டு வெற்றிபெற்றால்தான் எனக்குப் பெருமை. எனது அசோசியேட் பிரபாகரன் ஒரு பிரபல தயாரிப்பாளரிடம் ஒரு கதையைச் சொல்லி .கே. ஆனது.



 சந்தர்ப்பச் சூழ்நிலையால் அந்தக் கதையைப் படமாக எடுக்க முடியவில்லை. பிரபாகரனின் இந்த முயற்சியும் தேடலும், என்னிடமே வந்து தயாரிக்கச் சொல்லி வற்புறுத்தாத தன்மையும் என்னைக் கவர்ந்தது. பிரபாகரனை அழைத்து எனக்காக ஒரு கதை சொல் என்றேன். சொன்னார்


 கதை பிடித்துப் போனது. எனது தயாரிப்பில், பிரபாகரன் இயக்கத்தில்சுந்தர பாண்டியன்வருகிறான். உசிலம்பட்டி, தேனி பக்கத்தில் கதைக்களம். காதலையும், காதலர்களையும் சேர்த்து வைக்கிற அனைவருக்கும் பிடிச்ச பையன் சுந்தரபாண்டியன். காதலுக்கு கும்கி ஹீரோயின் லக்ஷ்மிமேனன் இருக்காங்க."

 http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/08/sundarapandian-audio-launch.jpg
மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போல உங்க சுந்தரபாண்டியன் எதை மீட்கப் போறாரு?

வேற எதை? தம் காதலியையும், காதலையும்தான்."

உங்க தாடியையும், காதல் கான்செப்ட்டையும் விடவே மாட்டீங்களா?

எதிர்காலத்தில் வேற வேற கேரக்டர்கள் பண்ணும்போது தாடி இருக்காது. காதலை விடறது கஷ்டம்தான். சுந்தரபாண்டியன் ஷூட்டிங்கில் கல்லூரி மாணவர்கள் பட்டாளம் என்னிடம் பேச வந்தார்கள்.

சார் எங்க ஃப்ரெண்ட் ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்றான். அவங்க வீட்ல ஏத்துக்க மாட்டேன்றாங்க. நாங்க ரெண்டு பேரையும் வீட்டை எதிர்த்துச் சேர்த்து வைக்கப் போறோம்னாங்க. ‘இப்படியெல்லாம் செய்யக் கூடாது தம்பிகளா. வீட்ல பெரியவங்ககிட்ட பேசுங்கஎன்று சொல்லி அனுப்பி வைத்தேன். ‘என்ன சார் நாடோடிகள் படத்தில் நண்பர்கள் லவ்வை சேர்த்து வெச்சீங்க. நீங்களா இப்படிப் பேசறதுன்னு கேட்டாங்க



தம்பி லவ்வைச் சேர்த்து வைச்சதுதான் உங்க கண்ணுக்குத் தெரியுதா? அதே படத்தில் லவ்வுக்காக நண்பர்கள் கால் இழந்து, காது செவிடாகிப் போனதெல்லாம் கவனிக்கலையா? இதெல்லாம் ரிஸ்க்என்றேன். ‘நீங்க இப்படிச் சொல்லக் கூடாது. நீங்க காதலைச் சேர்த்து வைக்கணும்ன்னு சொன்னாங்க. நானே வேணாம்ன்னு நினைச்சாலும் என் ஆடியன்ஸ் காதலை எதிர்பார்க்கிறாங்களே? என்ன செய்ய?"

சமுத்திரக்கனி இந்தப் படத்தில் இல்லையே?

கனியும், நானும் சேர்ந்து பண்ணா ஏன் இரண்டு பேரும் சேர்ந்தே பண்றீங்க, தனியா பண்ண மாட்டீங்களான்னு கேட்டீங்க. இப்ப சேர்ந்து ஏன் பண்ணலைன்னு கேட்கறீங்க. எங்களுக்குள்ள பிரச்னைன்னு சிலர் சொல்றாங்க. இதெல்லாம் எதுவும் இல்லை. எங்களின் நட்பு அப்படியே இருக்கு. ‘போராளிபடம் செய்யும்போதே இன்னும் இரண்டு படங்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து வொர்க் செய்ய வேண்டாம் எனப் பேசி வைத்துக்கொண்டோம்."

வாரிசு நடிகர்கள் அதிகளவில் கோடம்பாக்கத்தில் வருகிறார்கள். சினிமா பின்னணி இல்லாத புதுமுகங்கள் நிலைதான் என்ன?
சுப்பிரமணியபுரத்தில் நானும் புது முகம்தான். எனது படங்களில் ஒருசிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்தான். புதுமுகங்களை ஏற்றுக் கொள்வதும், அங்கீகரிப்பதும் ஆடியன்ஸ் கையில் உள்ளது. வாரிசு நடிகர்களுக்கு என்ட்ரி மட்டும்தான் சுலபம். தக்கவைக்கக்கூடிய போராட்டங்கள் இருவருக்கும் ஒன்றுதான். அஜித், விக்ரம் வாரிசு நடிகர்கள் இல்லையே. ஒரு இயக்குனராக நடிகர்களை அறிமுகம் மட்டும்தான் செய்ய முடியும். தொடர்ந்து தக்கவைப்பது தேர்ந்தெடுக்கும் கதைகளில்தான் உள்ளது."

பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்க ஆசையில்லையா?

ஆசை இருக்கு. அதற்கான ஸ்கிரிப்ட்டும், சூழலும் அமையட்டும்."

நன்றி - கல்கி, புலவர் தருமி

 http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/Sundarapandian.jpg