Monday, September 03, 2012

ஆச்சரியங்கள் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiK1gtQiaenWvC6FQBOiLQdRgOgx6ylR6sMr1sCNPgKJMyT26qsSTpbXzfY7DClaR0hFPHELrqn6b_P6vazULZi92AvE72ulnHvpyq4gSD4PZAoBRzi5gI4CWhBiyePBU8aRiVNPjr8QE/s320/Aachariyangal+Movie+Posters+Mycineworld+Com+(1).jpg 

1997 இல் மைக்கேல் டக்ளஸ் நடிச்சு வெளிவந்த  THE GAME  ஹாலிவுட் படம், 2008இல் சல்மான் நடிச்சு வெளி வந்த HELLO  ஹிந்திப்படம்,  சேட்டன் பகத் எழுதுன  ONE NIGHT @ CALL CENTRE நாவல் இந்த மூணையும் மிக்ஸ் பண்ணி தமிழுக்குத்தக்கபடி திரைக்கதை அமைச்சா அதுதான் ஆச்சரியங்கள்.

மெக்கானிக்கல் வாழ்க்கை.. அதாவது ஒரே மாதிரி ரொட்டீன் லைஃப் வாழ்வதில் ஆர்வம் இல்லாதவர் ஹீரோ.. வாழ்க்கை த்ரில்லிங்கா இருக்கனும், ஒவ்வொரு நிமிஷமும் சவால் நிறைந்ததா இருக்கனும்னு நினைக்கறவர்.. அவர் அடிக்கடி கடவுள்கிட்டே அது பற்றி புலம்புவார்.. அவருக்கு ஒரு நாள் கடவுள் கிட்டே இருந்து ஒரு ஃபோன் கால் வருது.. 


 நீ கேட்டபடியே நாளை முதல் உன் லைஃப் அமையும்னு சொல்லுது .. அதுக்குப்பிறகு ஹீரோ வாழ்க்கைல ஏகப்பட்ட திருப்பங்கள்..  



http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/aishwaryaa1/aachariyangal-tamil-movie-heroine-aishwarya-stills-2-24.jpg


1. ஹீரோவோட அண்ணன்  பிஸ்னெஸ் லாஸ்ல  வில்லன் கிட்டே கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதை கட்ட முடியாம திணறிட்டு இருக்கான்.அவனுக்கு தன் தங்கை பொண்ணை கடிக்குடுக்கலாம்னு அப்பா நினைக்கறார். ஆனா அண்ணன் ஆல்ரெடி வேற ஒரு பொண்ணு கூட லிவ்விங்க் டுகெதரா வாழ்ந்துட்டு இருக்கார் கமல் கவுதமி மாதிரி.. கடன் தொல்லை தாங்க முடியாம  வீட்ல இருந்த அத்தை நகையை லவட்டிட்டு ஆள் எஸ் ஆகறார். ஒரு ஆக்சிடெண்ட்ல ஆள் அவுட்


2. ஹீரோவோட அத்தை பொண்ணு  க்கு ஃபாரீன் மாப்ளை கூட நிச்சயம் ஆகுது. அந்த விழாவில் கலந்துக்க கார்ல வர்றப்ப ஒரு விபத்து.. சகுனம் சரி இல்லைன்னு எல்லாம் கேன்சல். அதனால ராசி இல்லாத பொண்ணாகிடும் அவளை கட்டிக்க சொல்லி அப்பா பிரஷர் போடறாரு. ஹீரோ ஓக்கே சொல்றாரு


3. ஹீரோ ஆல்ரெடி ஒரு தலையா ஒரு ஃபிகரை லவ் பண்றாரு.. அந்த பொண்ணு ஆல்ரெடி ஒரு பையனை லவ் பண்ணி ஏமாந்த பொண்ணு .அதனால லவ்னாலே பிடிக்கலை.. ஒன்லி நட்புதான்கற  கண்டிஷனை ஆரம்பத்துலயே போட்டுடுது.


4. ஹீரோவோட அண்ணன் ஏமாத்திட்டு போன  30 லட்சம் ரூபா பணத்தை உடனே தந்தாகனும்னு வில்லன் மிரட்றான்.. கைல நயா பைசா  இல்லைன்னு சொன்னதும்  அட்லீஸ்ட் 3 மாசம் என் கிட்டே குருவியா ஒர்க் பண்ணுனு கேட்கறான் வில்லன்.. விஜய் நடிச்ச குருவியை பார்த்ததே போதும், மறுபடி குருவியா? முடியாதுன்னு ஹீரோ சொல்லி டறாரு


5. வில்லனுக்கு தர வேண்டிய பணத்தை  எப்படி சம்பாதிக்க? ஐடியா . இவர் ஒரு தலையா லவ் பண்ணுனாரே  அந்த பொண்ணு பணக்காரப்பொண்ணு..  அவளை கடத்தி அப்பாவை மிரட்டி பணம் பறிக்கலாம்னு ஐடியா தர்றா.. அதே மாதிரி செஞ்சு பணம் கைக்கு வர்றப்போ  அந்த பொண்ணு  பணத்தோட எஸ் ஆகிடுது.. பழி ஹீரோ மேல விழுது. 


மேலே சொன்ன முக்கியமான அஞ்சு திருப்பங்களும் நடந்து அதை எல்லாம் ஹீரோ கிராஸ் பண்ணின பிறகு  படத்துல ஒரு திருப்பம். இதுவரை நடந்ததெல்லாம் கனவு.. ஆனா இதெல்லாம் நடக்கப்போகுது... இ எஸ் பி பவர் மாதிரி..  ஹீரோ நடக்கப்போற எதையும் தடுக்க முடியாது, ஆனா வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.  


சில வருடங்கள்க்கு முன் அதிகம் பேரால் கவனிக்கப்டாமல் விட்ட கருணாஸ் நடிச்ச புலி வருது படத்தின் முதல் 4 ரீல் இதே போன்ற ஒரு சுவராஸ்ய முடிச்சுத்தான்..  


ஹீரோவாக தமன். எந்த வித ஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அடக்கி வாசித்திருப்பது ஆறுதல்.. தேறிடுவார்.. ஹீரோயின் ஐஸ்வர்யா ..பாதரசம் போல் பளபளக்கும் கண்கள் , கொழுக் மொழுக் கன்னம்  இவருக்கு பிளஸ்.. 60 மார்க் போடலாம்.. இவருக்கும் வாய்ப்பு இருக்கு.. 



 வில்லனாக மகாநதி சங்கர்.. இவரது கெட்டப் நாடக நடிகர் மாதிரி எடுபடலை.. நடிப்பி ஓக்கே.. ஒப்பனை தான் சரி இல்லை.. ஹீரோவோட ஒன் சைடு காதலி மங்கள் ஹீரோயினை விடவே நல்லா இருக்கார்.. அவருக்கு இன்னும் சில சீன்கள் ஐ மீன் காட்சிகள் சேர்த்திருக்கலாம்.. 


கமல் நடத்திய திரைக்கதை பட்டறையில் பயின்ற ஹர்ச வர்தன் என்பவர் தான் இயக்கம். நல்ல எதிர்காலம் இருக்கு..  இசை, பின்னணி இசை சுமார் ரகம்.. ஒளிப்பதிவு சராசரி.. 

http://chennai365.com/wp-content/uploads/movies/Aachariyangal/Aachariyangal-Stills3729Ee55.jpg



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1. இந்த மாதிரி விறு விறுப்பான திரைக்கதைக்கு முதல் எதிரி பாடல்கள் தான்././ அதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு  டூயட்டோ, தேவையற்ற பாடலோ வைக்காதது.. இத்தனைக்கும் 2 ஹீரோயின்கள்.. வைக்க வாய்ப்பு இருக்கு.. ஆனாலும் வைக்கலை.. குட் ஒன் 


2. ஹீரோயின்ஸ் செலக்‌ஷன்.. 2 பேருமே நல்ல தேர்வு..  ஆடை வடிவமைப்பு ரொம்பவே பாந்தம்..  ஹோம்லியா ஒரு ஹீரோயின், மாடர்னா ஒரு ஹீரோயின்னு 2 ஏரியாவையும் கவர் பண்ணி இருந்தாலும்  ரெண்டிலும் கண்ணியமோ கண்ணியம்.. வெல்டன்



3. திரைக்கதை, காட்சி அமைப்புகள் எல்லாம் பாராட்டும்படி விறு விறுப்பா இருக்கு.. அங்கங்கே மேடை நாடகம் வசனை அடிச்சாலும் இது நல்ல முயற்சி.. 



4. போஸ்டர் டிசைன்,   அதுல வர்ற பஞ்ச் டயலாக் ஓக்கே. ரசிக்கற மாதிரி இருக்கு.ஆனா லோ பட்ஜெட்ங்கறதால ஈரோட்டில் 7 இடங்கள்ல மட்டும் தான் பார்க்க முடியுது.. சன் பிக்சர்ஸ் படம்னா 400 போஸ்டர்ஸ் ஒட்டுவாங்க. அட்லீஸ்ட்  50 போஸ்டராவது ஒரு  மாநகராட்சில ஒட்ட வேணாமா?


http://www.tamilnow.com/movies/gallery/aachariyangal/tamil-movie-aachariyangal-stills-7428.jpg


மனம் கவர்ந்த வசனங்கள் 


1 டேய், மேனகா  லவ்ஸ் யூ.. நீ ஏன்  அவளை   தவிர்க்கறே? ( ஒய் ஆர் யூ அவாய்டிங்க் ஹெர்?)


 ஒரு பொண்ணைப்பார்த்தா ஃபீலிங்க் வரனும், இவளைப்பார்த்தா எனக்கு அது வர்லையே?



2.  என்னென்னமோ கண்டு பிடிக்கறாங்க.. நைட் சரக்கு அடிச்சா காலைல ஃபிரெஷா எந்திரிக்கற மாதிரி ஒரு சரக்கு கண்டு பிடிக்கறாங்களா? 



3.  நீ எம் பி பி எஸ் படிக்கறது எல்லாருக்கும் தெரியனுமா? எதுக்கு வெள்ளைக்கோட்டை கைல மாட்டிக்கிட்டே திரியறே? உள்ளே வையேன்.. 



4. நீ நினைக்கற அளவுக்கு நான் நல்லவனா?ன்னு தெரியலையே?

 ஐ லைக் யுவர் ஹான்ஸ்டி ( உன் நேர்மையை மதிக்கறேன் ) - மேஜர் சுந்த்கர் ராஜன் பாறைகள் 



5. அவசரப்பட்ட முடிவுதான் இது. ஆனா தப்பான முடிவு அல்ல. 


6. போலீஸ்க்கு மெடல் எப்படியோ , திருடனுக்கு  அவன் மேல் போடப்படும் கேஸ் அதிகமாக அதிகமாக அவன் மதிப்பு அதிகரிக்கும்.. ( சஹானா கணவர்கள் மாதிரி ) 



7.  சரி சரி.. மச மசன்னு நிக்காம ஆகவேண்டியதைப்பாரு.. 


 இது கல்யாண வீடுகள்ல பெருசுங்க சொல்ற டயலாக்ஸ் ஆச்சே?




8. என்னடா பண்றே? 


 இவனுக்கு ஷூட் பண்ண ட்ரெயினிங்க் தர்றேன்.. 


 அவன் என்ன ஒலிம்பிக்ல போய் மெடலா வாங்கப்போறான்?



9. வாழ்க்கை எதிர்பாராத விதமா நம்மை பல விதமா தூக்கி அடிச்சுடுது



10.   ஹீரோ - எப்படியோ என்னை நீ கவுத்துட்டே.. 



ஹீரோயின் - நீ சொன்ன அந்த வார்த்தை எனக்கு பிடிக்குதோ இல்லையோ அந்த அர்த்தம் எனக்கு பிடிச்சிருக்கு.. ( குழப்பாதடி, கன்ஃபியூஸ் கொண்டைக்காரி )



http://www.tamilnow.com/movies/misc/aachariyangal-director-harshavardhan-meets-kamalhaasan/aachariyangal-director-harshavardhan-meets-kamalhaasan-3356.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1. திரைக்கதையின் நோக்கம் மூட நம்பிக்கையை வளர்த்தல் அல்ல என்றாலும் ஹீரோயின்  கேரக்டரைசேஷன்  அவ ஒரு ராசி இல்லாதவ, தொட்டது துலங்காது  அப்டிங்கற மாதிரி வருதே.. ஏன்?


2. ஹீரோயின் மனசுல என்ன இருக்கு?னு திட்டவட்டமா சொல்லவே இல்லையே? ஃபாரீன் மாப்ளை நிச்சயம் ஆனப்பவும் அதுக்கு ஓக்கே.. அந்த மேரேஜ் நின்னு ஹீரோவோட அண்ணனுக்கு மேரேஜ் பேச்சு நடந்தப்ப அதுக்கும் ஓக்கே,  அவன் ஓடிப்போனதும் ஹீரோ கூட நிச்சயம்னு சொன்னதும் அதுக்கும் ஓக்கே, நிச்சயம் கேன்சல் பண்ணின ஃபாரீன் மாப்ளை மறுபடி வந்து மன்னிப்பு கேட்டு மேரேஜ் பண்ணிக்கறேன்னு சொன்னா அதுக்கும் ஓக்கே. சஹானாவை விட, நயன் தாராவை விட இவங்க கேரக்டர் குழப்பமா இருக்கே..  உன்னை நினைத்து லைலா கேரக்டர் மாதிரியா? எது கிடைச்சாலும் சரி?



3. ஹீரோவோட சிஸ்டர் வில்லனால் கிட்நாப் பண்ணப்படறார்.. அதுக்கு முந்தின ஷாட்ல இன்ஸ்பெக்டர் ஹீரோ கிட்டே அவர் ஃபோன் நெம்பர் குடுத்து “ ஏதாவது உதவி வேணும்னா பர்சனலா கால் பண்ணுங்கன்னு நெம்பர் தர்றார்.. ஹீரோ ஏன் அவருக்கு ஃபோன் பண்ணி “ சார், இந்த மாதிரி ஒரு ரவுடி என் தங்கயை கடத்திட்டான், ஆனா எஃப் ஐ ஆர் எல்லாம் போட வேணாம். மறைமுகமா நீங்க இதுல உதவி செய்யனும்னு ஐடியா கேட்கல? 



4. அண்ணன் இறந்துடறார், டெட்பாடியை வாங்க தம்பி மறுக்கறார் அதுக்கு அவர் சொல்லும்  ரீசன் வீட்ல பெற்றோருக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க.. அவன் ஓடிப்போனவனாவே இருக்கட்டும். இது கேனத்தனமா இருக்கு.. அப்போ அண்ணன் அனாதைப்பொணமா  இருக்கனுமா? ஏன் தம்பி போய் அந்த பாடியை வாங்கி சுடுகாட்ல சத்தம் இல்லாம அடக்கம் பண்ணிட்டு வர மாட்டாரோ? 


5. ஹீரோ ஒரு தலையா ஒருத்தியை லவ் பண்றாரு.. அப்பா சொன்னதுக்காக அத்தை பொண்ணுக்கு ஓக்கே சொல்றாரு..  அந்த மேட்டரை ஏன் தன் ஒன் சைடு லவ்வர் கிட்டே சொல்லலை? அது பற்றி குற்ற உணர்வே அவர் முகத்துல இல்லையே?

6. ஹீரோ நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும் சீன்கள் எல்லத்துலயும் அவன் தண்ணி அடிச்சுட்டே தான் இருப்பானா? சமீப காலமா இது அதிகரிச்சுட்டு வருது./. சரக்கு அடிக்காதவங்க, பெண்கள் ( ஐ மீன் சரக்கு அடிக்காத பெண்கள் ) பார்த்தா என்னமோ மாதிரி இருக்கு.. ஒரு சீன் 2 சீன் வெச்சா தேவலை.. 


7. இந்தப்படத்துக்கு அழகிய தமிழ் மகன் மாதிரி திரைக்கதை அமைச்சிருக்கலாம்னு தோணுது.. அதாவது ஹீரோவுக்கு அடுத்து என்ன நடக்கும்னு தெரியும், ஆடியன்ஸுக்கும் தெரியும், அப்போ அவன் என்ன பண்ணப்போறான்.. இது இன்னும் டெம்போ ஏத்தும்னு நினைக்கறேன். 



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 41


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓ கே


சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்களை ரசிப்பவர்கள் பார்க்கலாம். உடனே பார்த்துடுங்க.. சீக்கிரம் எடுத்துடுவாங்க.. பெண்களும் பார்க்கும் தரத்தில் மிக கண்ணியமான நெறியாள்கை .  ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி- இணை உலகில் புரட்சி -



http://puradsifm.com/
-