ஒப்பிலியப்பன் நகை அரோகரா!
காரணமானவர்களைக் காப்பாற்றுகிறார்களா?
பலே திருட்டு அம்பலம்
ஒரு கோயில் கொள்ளை மெதுவாக மறக்கப்பட்டது. இப்போது மறைக்கப்படும் கொடுமை நடப்பதாகச் செய்திகள் வருகின்றன!
108 வைணவத் திருத்தலங்களில் புகழ்பெற்றது கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில். தொன்மையான இந்தக் கோயில் நகைகளைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, மோசடி செய்திருப்பதுதான் திடுக்.
கடந்த 2008-ம் ஆண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு இருப்பதுபோலவே மார்க்கண்டேயருக்கும் தங்கக் கவசம் செய்ய முடிவெடுத்தார்கள். அதற்காக கோயில் இருப்பில் இருந்த நகைகளோடு பாரம்பரியம் மிக்க அரிய வகையான தங்க, வைர நகைகளையும் சேர்த்து உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதாகக் கணக்குக் காட்டினார்கள்.

அதில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக அப்போது புகார் கிளம்பியது. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுவலர் விஜயகுமார், நகைகள் சரிபார்ப்புப் பிரிவின் மயிலாடுதுறை துணை ஆணையர் இளம்பரிதி, திருப் பணிகள் பிரிவின் சென்னை இணை ஆணையர் திருமதி ஹரிப்பிரியா ஆகியோர் மீது இப்போது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
எப்படி ஊழல் நடந்தது என்று அறநிலையத் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ''மார்க்கண்டேயருக்குத் தங்கக்கவசம் செய்ய அறங்காவலர் குழு முடிவு செய்ததும், அதற்காகக் கோயிலில் இருக்கும் தேவை இல்லாத நகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். அதில்தான் தங்கள் கைவரி சையைக் காட்டிவிட்டனர்.

தேவைஇல்லாத நகைகளோடு பெருமாளின் நித்யபடிக்கு என்று வைத்திருந்த அரிய, பழைமையான நகைகளையும் அதில் சேர்த்துவிட்டனர். இரட்டைவடச் சங்கிலி, பொன்சங்கிலி, ஒற்றைவட வரிமணிமாலை, திருமாங்கல்யம் குண்டு, சரடு, பொன் அரசலங்கை, மாங்கா மாலை, காசுமாலை, செண்பகப் பூ மாலை, பொன்லட்சுமி டாலர் ஆகிய மிக முக்கியமான திருவாபரணங்கள் அதில் சேர்க்கப்பட்டு வீணடிக்கப்பட்டன.
அடுத்து, அழுக்கு அரக்கு நீக்கி சுத்தம் செய்வதில் பெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். அதாவது, மொத்தம் உள்ள 7,191 கிராம் பொன்னை அழுக்கு அரக்கு நீக்கிய பின் 6,191 கிராம்தான் இருந்ததாக ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஒரு கிலோ தங்கம் இழப்பாகக் காட்டி இருக்கிறார்கள். அடுத்து, நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட கற்களிலும் மோசடி செய்தனர். அந்த நகைகளில் இருந்து எடுக்கப்பட்ட முத்து, வைரம் போன்ற விலை மதிப்புள்ள 1,895 கற்களையும் தரவாரியாகப் பிரித்து வகைப்படுத்தாமல் மொத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதில் விலை மதிப்புள்ள கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக போலியான தரம் குறைந்த கற்களை வைத்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். அடுத்து உருக்குவதற்காக மும்பை எடுத்துச் சென்றதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பது 7,251 கிராம் பொன். ஆனால் எடுத்துச்சென்றதோ 7,295 கிராம். ஆக அதில் 44 கிராம் தங்கத்தை மோசடி செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று ஆணையருக்கு அனுப்பி வைத்த நகைகள் பட்டியலில் இல்லாத 13.300 கிராம் எடையுள்ள வைரக்கற்கள் பதித்த பதக்கத்தையும் எடுத்துச் சென்று உருக்கியதாகக் கணக்குக் காட்டி இருக்கிறார்கள். அதற்கான அனுமதியைப் பின் தேதியிட்டு வாங்கி இருக்கிறார்கள். இவை எல்லாமே மயிலாடுதுறை நகைகள் சரிபார்ப்புத் துணை ஆணையர் இளம்பரிதிக்கும் சென்னை இணை ஆணையர் (திருப்பணி) ஹரிப்பிரியாவுக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது. அதனால் மூவர் மீதும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று விவரித்தார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.
செயல் அலுவலர் விஜயகுமார் மீது மொத்தம் 16 வகை குற்றச்சாட்டுகளும், துணை ஆணையர் இளம்பரிதி மீது 8 குற்றச்சாட்டுகளும், இணை ஆணையர் ஹரிப்பிரியா மீது 11 குற்றச்சாட்டுகளும், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகம் பதிவு செய்துள்ளது. 2008-ல் நடந்த இந்த மோசடி குறித்து 2011 மே மாதம் தான் விஷயம் தெரிந்து விசாரணை நடைபெற்றது. விஜயகுமார் மாறுதல் செய்யப்பட்டு செந்தில்குமார் என்பவர் அதிகாரியாக வந்த பிறகுதான், இதைக் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்லும் புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை ஜே.சி.கல்யாணி என்ற நகை சரிபார்ப்பு அதிகாரியை அனுப்பி உறுதிசெய்துகொண்ட பின்னர்தான் நடவடிக்கைகள் தொடங்கின.
இத்தகைய சூழ்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான காரியத்தை சிலர் தொடங்கி இருக்கிறார்களாம். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர் ராஜாராமை சந்தித்து நாம் விளக்கம் கேட்டோம். 'இதுபற்றி முழுமையாகத் தெரிந்தவர் இணை கமிஷனர் தனபால்தான். அவரிடம் கேளுங்கள்’ என்றார். தனபாலிடம் இதுதொடர்பாகக் கேட்டுக் காத் திருந்தோம். இரண்டு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் எத்தகைய அலட்சிய மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது என் பதைப் பாருங்கள்!

நன்றி - ஜூ வி