1. எப்படி மனசுக்குள் வந்தாய் - எம்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனம் வழங்க ஸ்ரீதேவி மேக்கர்ஸ் சார்பில் ஜி.கிச்சா தயாரிக்கும் படம் எப்படி மனசுக்குள் வந்தாய். இதில் நாயகர்களாக விஷ்வா, இர்பான், நாயகியாக தன்வி வியாஸ் நடிக்கின்றனர். ரவிகாளே, சதீஷ், மகி, மகேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி பி.வி.பிரசாத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘காதலில் விழுந்தேன்’ படம் எப்படி வித்தியாசமான உணர்வை தந்ததோ அதே மாதிரி ஒரு உணர்வை ‘எப்படி மனசுக்குள் வந்தாய்’ கொடுக்கும்.
இந்த படமும் ஒரு இசை சூறாவளி போன்றதுதான். படப்பிடிப்பு முடிந்து தணிக்கையில் யு.ஏ. சான்றிதழ் பெற்றுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது என்றார்.
இசை: ஏ.ஜே.டேனியல், ஒளிப்பதிவு: விஜய் மில்டன், ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், எடிட்டிங்: வி.டி.விஜயன், நடனம்: ஸ்ரீதர், காயத்ரி ரகுராம், அருண்.

காதலுக்காக எதையும் செய்ய துணியும் இளைஞனின் கதை.
சீனு, ஷாம், மித்ரா ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். விஷ்வா&தன்வீயை காதலிக்கிறேன். மித்ரா அறைக்குள் நுழைந்து அவள் குளிப்பதை பார்த்துவிடுகிறான் சீனு. இதை தட்டி கேட்கும் ஷாமுடன் மோதல் ஏற்பட, அவனை கொன்று புதைத்துவிடுகிறான் சீனு. செய்த கொலையை மறைக்க தொடர்ந்து பல தவறுகளை செய்கிறான் சீனு. போலீஸ் பிடியில் சிக்குகிறான். அவனது நிலைமை என்னவாகிறது என்பதே திரைக்கதை.ஈரோடு ஸ்ரீ சண்டிகாவில் ரிலீஸ்- இதன் விமர்சனம் படிக்க -http://www.adrasaka.com/2012/ 08/blog-post_331.html
2. தில் தில் மனதில் - இது ஏதோ டப்பிங்க் படம் போல.. கூகுளில் எந்த விபரமும் கிடைக்கலை. மலையாளத்தில் வந்த புதிய முகம் என்ற படத்தின் டப்பிங்க்காம்.. பிருத்விராஜ்,பிரியாமணீ நடித்தது
3. பனித்துளி - டாக்டர் ஜெ நட்டி குமார் டைரக்ட் செஞ்ச படம்.. கணேஷ், கல்பனா, ஷோபனா என யார் யாரோ நடிச்சிருக்காங்க .ஈரோட்டில் ரிலீஸ் இல்லை
4. "பாளையங்கோட்டை"-வல்லரசு மகாராசனிடம் உதவி இயக்குநராக "அரசாட்சி", "ஆஞ்சநேயா" போன்ற படங்களில் வேலை பார்த்தவர் சேகர்.ஜி. இவர் இப்போது நடித்து இயக்கி வெளிவர உள்ளபடம் "பாளையங்கோட்டை". பாளையங்கோட்டையில் சுமார் 10வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்.
திருநெல்வேலி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தை படமாக்கி உள்ளார். படம்குறித்து சேகர்.ஜி செல்லும்போது, இந்த படத்தை வேறு ஒரு புதுமுகம் நடிக்க தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னேன். அவரோ இதில் நீங்களே ஹீரோவாக நடித்து விடுங்கள் என்று வற்புறுத்தி கேட்டு கொண்டார். அதனால் நானே ஹீரோவாக நடித்துவிட்டேன்.
படத்தில் பெரிய கதை என்று ஒன்றும் இல்லை, பெரிய பில்ட்-அப்பும் கிடையாது. தான் எப்படி போனாலும், மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஹீரோ நினைக்கும் படம் தான் பாளையங்கோட்டை. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறேன்.
அப்புறம் படத்தின் ஹீரோயின் இன்பநிலா பற்றி சொல்லனும். டைரக்டர் தங்கர்பச்சானின் கண்டுபிடிப்பு. களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்திருப்பவர். படம் வருவதற்கு முன்பே நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்தபடத்தில் நான் ஹீரோ என்ற நினைப்பில் படம் எடுக்கவில்லை. படத்தில் கதையின் தேவைக்கான நாயகன் அவ்வளவுதான்.
டான்ஸ், சண்டை என்று எல்லாவற்றையும் முறைப்படி பயிற்சி எடுத்து, உயிர் கொடுத்து உழைத்திருக்கிறேன். சென்சாரில் சில காட்சிகளை மாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டதால், அதற்கு மட்டும் புதிதாக பத்து நாட்கள் ஷூட்டிங் செய்தோம். இனி படத்தை பற்றி ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்றார் டைரக்டரும், நடிகருமான ஜி.சேகர்.
5. அதிசய உலகம் 3டி -படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் தயாராகியிருக்கும் முதல் டைனோசர் படம் அதிசய உலகம் 3டி. இந்த படம் தமிழில் தயாராகியிருக்கிறது. தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
படத்தை பற்றி அதன் டைரக்டர் ஷக்தி ஸ்காட்ச் அளித்துள்ள பேட்டியில், இது, ஒன்றரை மணி நேரம் ஓடுகிற படம். படத்தில், 15 டைனோசர்கள் வருகின்றன. பேசும் நாயும் வருகிறது. 80 சதவீத காட்சிகள், கம்ப்நட்டர் கிராபிக்சில் உருவாக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளையும், பெரியவர்களையும் கவரும் விதமாக படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. விஞ்ஞானி ஒருவர் கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார். அவருடைய பேரக்குழந்தைகள் தவறுதலாக அதை இயக்கி, டைனோசர்கள் காலத்துக்கு போய் விடுகிறார்கள். அவர்களை, அந்த விஞ்ஞானி எப்படி மீட்டு கொண்டு வருகிறார்? என்பதே கதை.
தாத்தாவாக லிவிஸ்டன், பேரக்குழந்தைகளாக ஸ்ரீலட்சுமி, பிருத்வி ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.பானுசித்ரா தயாரித்துள்ள இந்த படத்துக்கு, அனைவரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், "யு" சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.
ஈரோடு தேவி அபிராமியில் ரிலீஸ்
6.கொருக்குப்பேட்டை கூலி -கன்னடத்தில் ரிலீசான ‘கூலி’, தமிழில் ‘கொருக்குப்பேட்டை கூலி’ பெயரில் டப் ஆகிறது. ராஜஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் பி.அஜெய்குமார் தயாரிக்கிறார். சுதீப், மம்தா, கிஷோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.எல்.ரவி. இசை, அனூப் சீலின். வசனம்: டி.எஸ்.ஆர்.முருகன், சி.சரவன். இயக்கம், பி.என்.சத்யா.
படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘கூலிப்படைக்கு தலைமை தாங்கி, பணத்துக்காக கொலை செய்யும் தாதா சுதீப், மம்தாவின் காதல் வலையில் சிக்குகிறார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று புரிந்துகொண்ட அவர், கத்தியை போட்டுவிட்டு, காதலியை மணக்கப் போராடுகிறார். அது நிறைவேறியதா என்பது கதை’’ என்றார்.ஈரோடு அண்ணாவில் ரிலீஸ்
7. JULAYI -அல்லு அர்ஜூன், இலியானா, பிரம்மானந்தம் நடிச்ச இந்த தெலுங்கு ப்டம் நேத்து ரிலீஸ் ஆச்சு. ஜாலி பொழுதுபோக்கு படம்.. ஈரோடு ஸ்டாஎஇல் ரிலீஸ். இந்தப்பட விமர்சனம படிக்க-http://www.adrasaka.com/2012/ 08/julayi.html
8. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் -175 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் பற்றிய டாக்குமெண்ட்ரி படம் ரிலீஸ் ஆகுது, ஆனா ஈரோட்ல ரிலீஸ் இல்லை.. தியேட்டர் கிடைக்கலையாம்.. ஆனா தண்டமா 4 கில்மா குப்பை ரிலீஸ் ஆகுது.
9. Andala Rakshasi -நான் ஈ புகழ் ராஜ்மவுலி படம்.அந்தால ராக்ஷஷி.. Naveen Chandra,Rahul Ravindran,Lavanya Tripathi தெலுங்கு படம்
10. .The Bourne Legacy -Fourth installment of the Bourne franchise based on an original story. As writer/director Tony Gilroy explains, "This is not a reboot or a recast or a prequel. No one’s replacing Matt Damon. There will be a whole new hero, a whole new chapter…this is a stand-alone project." Jason Bourne will not be featured in the film; Jeremy Renner will play another assassin trained in the same program as Bourne.

Directed by: | Tony Gilroy | |||
---|---|---|---|---|
Starring: more credits | Jeremy Renner ... Aaron Cross Rachel Weisz Edward Norton ... Villain Oscar Isaac ... Number 3 Villain Joan Allen ... Pam Landy Albert Finney ... Dr. Albert Hirsch |